Tuesday, May 31, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 1

_________________________________________________________

1. புத்தாண்டு வாழ்த்து
அ. வரதநஞ்சைய பிள்ளை
[நேரிசை ஆசிரியப்பாவில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. புத்தாண்டு வாழ்த்து
C. M. இராமச்சந்திர செட்டியார் 
[மற்றொரு  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

3. கோளறு திருப்பதிகம் மயக்கமின்மை
அ. கந்தசாமிப்பிள்ளை
[இப்பதிவின் காலத்திற்குச் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர், தமிழ்ப் பொழிலில் விவாதிக்கப்பட்ட "ஒன்பதொ டொன்றோடேழு பதினெட்டொறுரும் உடனாய நாள்கள் அவைதாம்" என்னும் அடிக்குப் பொருள்  விளக்கம்  தரப்படுகிறது.  அத்துடன் ஆதிசங்கரரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும், சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், நாயனார் காலத்தில் அசுவனியே முதல் நாளாக எண்ணப்பட்டது(கார்த்திகை முதல் நாளாக எண்ணப்படவில்லை) என்றும் விளக்கம் தருகிறார் கந்தசாமிப்பிள்ளை]

4. துவார சமுத்திரத்து ஓய்சால வள்ளலார் I (கிபி. 11 - 14 ஆம் நூற்றாண்டு வரை)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[மேலைச் சாளுக்கியர்களுக்கும், தலைக்கோட்டையை  ஆண்ட கங்க மன்னர்களுக்கும் சிற்றரசாக திரை செலுத்தி வாழ்ந்த சிற்றரசர்கள் ஓய்சால வள்ளலார்கள் (ஹொய்சாளர்கள்) ஆவார்கள். அந்த அரசுகள் வலிமை குன்றியவுடன் கர்நாடகாவின் தென் பகுதியில் துவார சமுத்திரத்தையும், விக்கிரமபுரியையும்  தலைநகராகக் கொண்டு வலுவுள்ள ஓர் அரசாக ஹொய்சாளர்கள் மாறினார்கள். சுமார் 3 நூற்றாண்டுகளுக்குச் சிறப்புடன் ஆட்சி செய்து தமிழக மூவேந்தர்களையும் வென்றனர். இவர்களது  வரலாறு, இராமாநுஜருக்கு சோழனிடம் இருந்து ஹொய்சாளர்கள் அடைக்கலம் கொடுத்தது, அவரது தாக்கத்தால் சமண சமய ஹொய்சாள மன்னன் வைணவத்தைத் தழுவி  'விஷ்ணுவர்த்தனனாக' (கிபி 1116 இல்) மதம் மாறியது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது ]

5. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்  (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது என்பதனை கட்டுரை ஆசிரியர் இப்பகுதியில் மிக விரிவாக விளக்குகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

6. தம்பிரான்றோழர் தேவாரம்
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[தம்பிரான் தோழர் என அறியப்படுபவர், நம்பியாரூரனான சுந்தரமூர்த்தி நாயனார். திருவெண்ணெய் நல்லூரில் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், திருவாரூரில் சுந்தரரிடம் 'உனக்கு நம்மைத் தோழமையாகத் தந்தனம்' என்று அருளினார். எனவே சுந்தரர் தம்பிரான் தோழரானார். சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களின் (தேவாரம் - ஏழாம் திருமுறை) மீது அடியார், திருமால், நஞ்சு, மறை, தேவாரச் சிறப்பு என ஐந்து தலைப்புகளில்  இலக்கிய ஆய்வு நிகழ்த்துகிறார் இக்கட்டுரையின்  ஆசிரியர், கட்டுரையின் இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7.பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 37 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த புத்தாண்டு விழா, அப்பர் திருநாள் விழா, சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒப்பந்தக் காலம் முடிந்ததால் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்திகளும்,  யாழ்ப்பாணத்துக் கலாநிலைய சங்கத்தார் வெளியிடும் "ஞாயிறு" என்று தமிழில் வெளியாகும் மாத இதழின் மீது மதிப்புரை, ஆகியவை  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment