Saturday, May 28, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 10

_________________________________________________________

1. ஓர் இந்தியப் பேரறிஞர்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
['ஆசியா' என்ற பத்திரிக்கையில் முன்னர் வெளிவந்த, ஜகதீச சந்திரபோஸ் அவர்களைப் பற்றி  நடுநிலையுடன் எழுதப்பட்ட கட்டுரையொன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு தொடர் கட்டுரை]

2. புத்தக நிலையம்
க. சம்பந்தம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு விழாவில் S. R. அரங்கநாதம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.  நூல் நிலையத்தின் இன்றியமையாமை, நூல்நிலைய செயல்முறைகளில் மேம்பாடு, பயனர்களிடம் விழிப்புணர்வு உருவாக்குதல் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வு]

3. பழைய காலத்தின் இரு பெருங் கிணறுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருச்சிக்கு அருகிருக்கும்  திருவெள்ளறையில் உள்ள 'மாற்பிடுகு பெருங்கிணறு'  என்ற கிணற்றில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம்  அக்காலத்தில் கிணறுகளுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  மால்+பிடுகு = 'பேரிடி' என்பது  பொருள்; தெள்ளாறெறிரிந்த நந்திவர்மனின் தந்தை தந்திவர்வமனே (கி.பி. 780-830) 'மாற்பிடுகு' என்ற பட்டம் பெற்றவன். அதனால் தந்திவர்மன் மன்னன் காலத்தில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் இக்கிணறு வெட்டப்பட்டது என்பது புலனாகிறது. மேலும், கம்பன் என்னும் பெயர் எட்டாம் நூற்றாண்டில் இயற்பெயராக வழங்கி வந்துள்ளமையும் தெரிய வருகிறது. 

மாமண்டூருக்கு அருகில் உள்ள உக்கல்  என்ற ஊரின் 'இராசராசன் கிணறு' என்றழைக்கப்படும் கிணற்றின் கல்வெட்டுத் தகவல்படி;  கண்ணன் ஆவூரன் என்ற தலைவன், தனது அரசன் இராஜராஜன் பெயரால் கிணறு வெட்டுவித்து, தண்ணீர் இறைத்த பணியாளருக்கு நாளொன்றுக்கு  'அருமொழிதேவன் மரக்கால்' (அரசாங்க முத்திரையிடப்பட்ட மரக்கால்களுக்கு இராசகேசரி, அருமொழிதேவன், ஆடவல்லான் (தஞ்சைக் கோயில்) என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன, இவையாவும் ஒரே அளவைக் கொண்டவை) என்ற அளவில் இரண்டு மரக்கால் நெல் கூலி கொடுப்பித்ததைக்  கூறுகிறது.  இது அக்காலப் பெருவழியில் இருந்த கிணறு எனவும்  தெரிகிறது ]

4. திருக்குறளும் சேக்கிழாரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[ஜனவரி 1933 இல்  அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்க விழா சிறப்புடன் நடைபெற்றது.

நூல் மதிப்புரை: சுவாமி கேதாரீசுவரா நந்தர் எழுதிய, 'பாலபோத விவேகாநந்த சரிதம்' நூல்; மற்றும், S.P.Y. சுரேந்திரநாத் வாயிகிலி ஆரியா எழுதிய, தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த "Temple Chimes" நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment