வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம் ஆண்டு: (1932-1933) துணர்: 8 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
திரு. L. உலகநாத பிள்ளை

எட்டாம் ஆண்டு: (1932-1933)
துணர்: 8 - மலர்: 3

1. 21 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்து நிறைவு விழாவில் அவைத்தலைவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களது உரை
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[கல்வியின் அருமை பெருமை, தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை பற்றி குறிக்கும் சிறப்புரை, தமிழின் இ(அ)ன்றைய நிலை குறித்தும், வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துகள் இடம் பெறுகின்றன]
2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டு விழாவின் அவையோர் எடுத்த முடிவுகள்
[சென்னைப் பல்கலைக்கழகம் உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும், இராஜா சர் அண்ணாமலைச் செட்டியாருக்கும் 'முதுபுலவர்' (முறையே Doctor of Literature & Doctor of Laws) பட்டம் வழங்கவிருக்கும் செய்தியும் அதற்காக பல்கலைக்கழகத்தைப் பாராட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மன்னரையும் தமிழ்ப் பல்கலைக்கழகமொன்றைத் துவக்கவும், தமிழகக் கோவில்களில் கிடைக்கும் அதிகப்படி வருமானத்தை தமிழ்க் கல்விக்கு வழங்கவும் வேண்டுகோள்கள் எனத் தமிழ் வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன]
3. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கண்ட சில செய்திகள்
வை. சுந்தரேச வாண்டையார்
[தமிழக வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியம் ஊரில் உள்ள கோவில் மிகவும் பழமையான கோயிலாகவும் நான்கு சைவக்குரவர்களாலும் பாடப்பட்ட தேவாரத் தலமாகும். இங்குள்ள ஆதித்தேச்சுரம் கோவில் சிலப்பதிகாரத்தில் காணப்படும் "வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள்" எனக் குறிப்பிடப்படும் நிகழ்வைக் குறிப்பதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ஒரு ஆலயம். இங்கு முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் விசயநகர வேந்தன் காலம் வரை சுமார் நூறு கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன]
4. பரணர் (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[கரிகால் வளவன், வளவனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகியோர் மேல் பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன]
5. ஐயவினா
மி. பொ. இராமநாதன் செட்டியார்
[புறப்பொருள் வெண்பாமாலை, 'உழிஞைத்திணையுள் உழுவித்திடுதல்' துறைக்கான பாடலில் காணப்படும் 'வெள்வரகு கொள் வித்திடினும்', 'துண்ணா வரகொடு கொள்வித்தின்று" ஆகிய வரிகளில் வரும் 'வரகு, கொள்' ஆகியவற்றின் மேல் எழுந்த ஐயத்திற்கு விளக்கம் கோருகிறார் இராமநாதன் செட்டியார்.
6. மதிப்புரை
'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்' அவர்களின் நூலான 'தமிழ்ச்சொற் பிறப்பராய்ச்சி' நூலின் மீது மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment