Sunday, May 29, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 11

_________________________________________________________

1. திருக்குறளும் சேக்கிழாரும்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. The Historicity of 63 Tamil Saivite Saints - அறுபத்து மூவர் காலம்
K. சோமசுந்தரம்
[சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தைக் கொண்டு ஆராய்ந்தால், கிபி 690-710 காலத்தில்  வாழ்ந்த இரண்டாம் நரசிங்கவர்மன்(/ இராசசிங்கவர்மன் ) சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், திருநின்றவூர் பூசலார் நாயனார் ஆகியோர் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள்.  இதன் அடிப்படையில் 63 நாயன்மார்களும் கிபி  8 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் கூன் பாண்டியனது   (கிபி 600 களிள்) காலம், சமணம் மறைந்த காலமாகும். கிபி. 630 சமணம் தமிழகத்தில் வழக்கொழிந்தது என்பது போன்ற தகவல்களைக் கட்டுரை ஆசிரியர் வரலாற்றுச் செய்திகள் மூலம் முன்வைக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

3. ஒலியும் எழுத்தும்
K. P. சந்தோஷம்
[உணர்வுகளின் வெளிப்பாடாக எழும் ஒலி, அந்த உணர்வுகள்  விளக்கமுறுவதற்கே பேச்சாக  மாற்றமடைந்து உதவுகிறது, மொழியின் வளர்ச்சி, எழுத்து  வடிவில் உருப்பெறும் மொழியின் ஒலி, இலக்கணம் எனத்  தொடர்ச்சியாக ஒலி எழுத்தாக வளர்ச்சியுற்றது விவரிக்கப்படுகிறது]

4. கண்ணப்பர் கண்ட அன்பு
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் செய்திகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் விழா, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்தும் கட்டுரைப்போட்டி, தேர்வுப் பரிசுகள்,  பர்மாவில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் ஆதரவில் வெளிவரும் 'தனவணிகன்' என்ற வாரப்பத்திரிக்கையின் மேல் மதிப்புரை ஆகியவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவில் தலைமை தாங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்  தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்களின் படம் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது.





________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment