வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு: (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 1)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
** 3 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் ' முதல் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை

ஆறாம் ஆண்டு: (1930 -1931)
துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 1)

1. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[மக்கட்பிறவியின் அருமை பற்றியும், ஒரறிவு - ஆறறிவு கொண்ட உயிர்களின் தன்மை பற்றியும் இலக்கிய வழியாக விளக்கப்பட்டுள்ளது ]
2. பரணர்
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணரின் புலமையின் சிறப்பு, அவரது பாடல்களின் சிறப்பு, மிக விரிவானா கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரையும் கூட ]
3. குடமூக்கிற் பகவர்
அ. கந்தசாமிப் பிள்ளை
[யாப்பருங்கல விருத்தியில் செய்யுளின் இறுதியில் காணப்படும் "குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம்" பற்றி விளக்கும் மு. இராகவையங்கார், இங்குப் பகவர் எனப்படுபவர் திருமழிசை ஆழ்வார் என எழுதியுள்ள உரையின் மீது ஒரு மீளாய்வு. இங்குக் குறிப்பிடப்படும் மு. இராகவையங்கார் எழுதிய 'ஆழ்வார்கள் காலநிலை' என்ற நூல் இளங்கலை பட்டப்படிப்பின் தமிழ் மாணாக்கருக்குப் பாடநூலாக அமைந்துள்ளது. பகவனின் பன்மையே பகவர் என்பதும், பகவர் எனக் குறிப்பிடப்படுவது திருமழிசை ஆழ்வார் அல்ல என்பதும், பகவர் என்பது பொதுவாக முனிவரைக் குறிப்பது என்பதும் இக்கட்டுரையாசிரியரின் கருத்து. ]
4. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, பதினோராவது அத்தியாயம், முடிவுரை, உடலை ஓம்பும் முறை. வியாதியின் மூலங்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும் இடம் பெறுகின்றன ]
5. கபீரடியாரும் கடவுள் வழிபாடும்
E.R. அங்கப்பா
[கபீர்தாசர் யார்? அவர் வரலாறு யாது? சீர்திருத்தப் பெரியாரான கபீர்தாசர் பிறந்த இடம் மற்றும் மறைந்த இடம் ஆகியன பற்றி அறியப்படும் உறுதியான தகவலைத் தவிர்த்து அவர் வாழ்வைப் பற்றி கட்டுக்கதைகள் பலவுள்ளன என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு]
6. நன்னூன் முன்னூற்பா (தொடர்ச்சி...)
நாராயணசாமி
[முகவுரை பற்றிய பொருள் விளக்கம் தொடர்கிறது]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment