Monday, May 16, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 9

________________________________________________

1. கல்வி நிலை
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, தமிழகத்தில் பண்டைக்காலம் முதல்  தமிழுடன் புழக்கத்தில் இருந்த பிற மொழிகளைப்  பற்றியும் ஒப்பிட்டு ஆராய்கிறது]

2. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1190-1310  ஆம் ஆண்டு வரை  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. கோளறு திருப்பதிகம்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்ற அடிக்கும், அத்துடன்  திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும்  விளக்கம் அறிய விரும்பி முன்வைத்த வேண்டுகோளினை ஏற்று (பார்க்க ஏழாம் துணர், மூன்றாம் மலர்) விளக்கம் கொடுக்கப்படுகிறது.   'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்பது நாள்கள் அனைத்தையும் குறிக்கவில்லை. அவற்றுள் ஆகாதனவற்றையே குறிக்கின்றது, அவையும் அசுவனியை  முதலாகக்  கொண்டு  எண்ணப்பட்டவை என்று கொள்வதே கால ஆராய்ச்சிக்கும் ஒத்ததென்றும் கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்]

4. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

5. மிருச்சகடி
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[மகத நாட்டின், உச்சயினிபுரம் என்ற நகரில் வாழ்ந்த சாருதத்தன் அவனது மனைவி தூதாதேவி ஆகியோரைப் பாத்திரங்களாகக் கொண்ட ஒரு சிறுகதை, "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு" என்ற   நீதியைக் கூறும் கதை]

6. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர், அதியமான்-ஔவை, நெடுஞ்செழியன்-பேரெயின் முறுவலார் ஆகிய அரசர்-புலவர்  உறவுகளும், நல்லிசைப்புலமை நங்கையர், காவலரின் மனப்பாங்கு, காவலரின் நன்கு மதிப்புப் பெற்ற பாவலர்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன, இது ஒரு தொடர் கட்டுரை]

7. பொங்கற் புதுமலர்
பொழிற்றொண்டர்
[பொங்கல் வாழ்த்துப் பாடல்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment