Thursday, May 26, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 8

_________________________________________________________

1. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற  நெடுஞ்செழியன் எனக் கருத தக்கச் சான்றுகள் இல்லை என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. இது ஒரு தொடர் கட்டுரை]

2. புவியின் புராதனம்
பா. நடராசன்
[ஆராய்ச்சி மாணவர் ஒருவர் எழுதியது. சைவ சித்தாந்த வேதாந்தத் தத்துவங்கள், சமண கிறித்துவ மதங்கள்  புவியின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளின் தொகுப்பிற்குப் பிறகு; அறிவியல் கருத்துக்களையும், அறிவியல் வழி புவியின் வயது கணக்கிடப்பட்ட முறைகளைப் பற்றிய கருத்துக்களையும்  முன்வைக்கும் கட்டுரை.

3. துறையூரில்  நடைபெற்ற  'தமிழ் ஆர்வலர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த கா. சுப்பிரமணிய பிள்ளை  அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
கா. சுப்பிரமணிய பிள்ளை

4. திருக்குறளும் கம்பரும் (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் 51 இடங்களில் எடுத்தாண்டதைப்  பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இத் தொடர் கட்டுரை நிறைவுற்றது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment