Sunday, May 8, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 11 & 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 11 & 12
________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 900 ஆம் ஆண்டிற்குப்  பின்னர் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் இயற்றிய  நன்னன் பற்றிய பாடல்கள், நன்னனின் படைத்தலைவன் மிஞிலி, "இகலடு கற்பின் மிஞிலி" என்பதினால் இவன் வீரத்துடன் கல்வியிலும் சிறப்புற்றவன்  என அறிகிறோம், திதியன், எவ்வி, எயினன், அதியமான் நெடுமான் அஞ்சி,  எழினி, ஓரி, காரி,  ஆய் அண்டிரன், வேள் எவ்வி, நள்ளி என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தொல்காப்பியர் கல்விப்பெருமையும் நூலமைப்புத் திறனும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[சூத்திரத்தின் இயல்பு, அவற்றில் சிலவற்றுக்கான விளக்கங்களும், கொடுக்கப்பட்டுள்ளன]

4. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா?  அல்லது துறவியின் இலக்கணமா?  சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை"   குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை.  அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்"  ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன  என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.]

5. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  உடலை ஓம்புதல், பல உடற்பயிற்சி செய்யும் முறைகள், அவற்றின் பலன்கள் ஆகியன   பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன]

6. தமிழ் நிகழ்ச்சிகள்
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[கல்வியமைச்சர் S. குமாரசாமி இரெட்டியார் அவர்கள் சங்கத்திற்கு வருகை தந்த பொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் வாழ்த்துரை, மற்றும் சில சங்கம்  சார்ந்த செய்திகள், S. K. கோவிந்தசாமி வழங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் செய்திகள் ]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment