வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு: (1931-1932) துணர்: 7 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை

ஏழாம் ஆண்டு: (1931-1932)
துணர்: 7 - மலர்: 8

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில் சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான மறுப்புக்கள் 26 - 31 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]
2. பையன்
T.S. கந்தசாமி முதலியார்
[சொல்லாராய்ச்சி - பையில் புத்தகத்தைச் சுமந்து சென்றதால் சிறுவனைப் பையன் என்று அழைத்தனர் எனவும்; ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் வளரும் பருவங்களைக் குறிப்பிடும்பொழுது புத்தகப்பையை முதுகிலிட்டு தளர்நடையிட்டுச் செல்லும் சிறுவன் எனக் குறிப்பிடுகிறார் எனவும் சொல்லாராய்ச்சியாளர் ஒருவர் முன் வைத்த கருத்தினை கட்டுரை ஆசிரியர் ஆராய்கிறார். ஆங்கிலமொழி 'Boy' க்கும் தமிழ்ப் 'பையனு'க்கும் யாதொரு தொடர்புமில்லை. அச்சொற்களுக்குள் காணப்படும் ஒலியொற்றுமை போலி என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. பசுமை என்னும் பண்புப்பெயர் 'அன்' என்னும் ஆண்பாற் பெயர் விகுதியோடு புணர்ந்து 'பையன்' என்றானது என விளக்குகிறார்]
3. பொருண்மொழி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொருண்மொழி என்பது பழமொழியைப்போல் நுண்பொருளை உள்ளடக்கியதொரு நன்மொழி. தமிழ்நூல்களில் பொருளுரை என்றும் பொருண்மொழிக் காஞ்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. சொல் சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டமையும் பொருண்மொழி புலவர்களால் விரும்பப்படுவது. இவற்றால் நாம் பெறும் அறிவின் இயல்பு விளக்கப்பட்டு, மக்கள் நாள்தோறும் செய்யும் குற்றங்களையும், நலன்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்கவும் போற்றவும் உதவும் வண்ணம் பொருண்மொழிகள் அமைந்த நூல்கள் நமக்குத் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, சில ஆங்கிலப் பொருண்மொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன]
4. சைவமும் தமிழிலக்கியமும்
வை. சுந்தரேச வாண்டையார்
[இதுநாள் வரை தோன்றிய சிறந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்தால், சைவசமயம் சார்ந்தவையே அதிகமிருக்கும் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. தமிழும் சைவமும் நாட்டுக்கு உடலும் உயிரும் போன்று ஒன்றுக்கொன்று இன்றியமையாதவாறு அமைந்தது போல அமைந்திருந்தன என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment