Monday, May 30, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 12

_________________________________________________________

1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்கிய உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆற்றிய  உரை
சுவாமி விபுலாநந்தர்
[கற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நூல்கள் எவை, கற்றறிந்தோர் கடமை யாது? 960/1000 என்ற அளவில் தமிழர் கல்வியறிவின்றி அறியாமையால்  சூழ்ந்திருக்க, புண்ணியம் என்ற எண்ணத்தில், தானம் என்ற பெயரில் உதவி தேவையற்றோருக்கே  கைப்பொருள் செலவிடப்படுகிறது என அந்நாளின் தமிழக நிலையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்]

2. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டமையால் , அதிக காலம் இல்லாத காரணத்தால், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  ஆய்வை விரைந்து முடிக்க வேண்டுகோள் வைக்கிறார்  ஒளவை சு. துரைசாமி பிள்ளை அவர்கள். மேலும், தனது பங்கிற்கு இவரும் பற்பலப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய பின்னர், இந்த நூலை எவ்வாறு பல்கலைக்கழகம் பாடநூலாகத் தேர்வு செய்தது என்றும் வியக்கிறார்]

3. கண்ணப்பர் கண்ட அன்பு (தொடர்ச்சி...)
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது]

4. ஞாயிற்றின் வழிபாடு
வை. சுந்தரேச வாண்டையார்
[ஞாயிற்றை வழிபடுவது வரலாறு அறியாத காலத்திற்கும் முற்பட்ட  பண்டைய வழிபாட்டு முறை என்பது தொல்காப்பியம் மூலம் தெரிய வருகிறது. நற்றிணை,  சிலப்பதிகாரம், தேவாரம்  ஆகியவற்றிலும் ஞாயிறு போற்றப்பட்ட செய்திகள் உள. உண்மை இவ்வாறிருக்க, ஞாயிற்றின் வழிபாடு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் தோன்றியது என தமிழகக் கல்வெட்டுத் துறை வெளியிட்ட நூலொன்று கூறுவது   பிழையான கருத்தாகும் என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

5.தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கம்பர் திருநாள் விழா, குளித்தலை செந்தமிழ்ச் சங்கம் கொணர்ந்த தீர்மானங்கள்.  இதுவரை, முன்  7 துணர்களில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல்  ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment