வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு: (1931-1932) துணர்: 7 - மலர்:2&3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________
ஏழாம் ஆண்டு: (1931-1932)
துணர்: 7 - மலர்:2&3
________________________________________________
சாமி. வேலாயுதம் பிள்ளை
[நான்மறைகள், தமிழ் மறைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை. நான்மறைகள் இயற்றியமைக்கும் தேவாரம் முதலாகிய தமிழ் மறைகள் இயற்றப்பட்டமைக்கும் காணப்படும் ஒற்றுமைகளின் மீது ஆய்வு]
2. ஓர் வழக்கீடு (தொடர்ச்சி...)
அ. கந்தசாமிப் பிள்ளை
[ரா. இராகவையங்கார் அவர்களுக்கு மறுப்பு. தமிழ்மகனார் என்ற வழக்குத் தொடுப்பவர், வடமொழியாளர் என்ற எதிரி மீது தொடுத்த வழக்கின் மீது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் கற்பனையான வழக்காடுமன்ற நாடகம். இதில், திருக்குறள் வடமொழியில் இருந்து வந்ததென்று கூறும் வடமொழியாளருடன் சான்றுகளோடு வழக்காடுகின்றார் தமிழ்மகனார். திருமால் மீதான வடமொழிப் பாடலை வள்ளுவர் குறளில் எடுத்தாண்டார் என்ற சேது சமஸ்தான ரா. இராகவையங்கார் அவர்களின் கூற்றை முன்வைத்து அதற்கு சுதேசமித்திரன் (அக்டோபர் 27, 1930) இதழில் காணப்பட்ட விளக்கத்தைச் சான்றாக வைக்கிறார் ஒரு வடமொழிப் புலவர் .... அதற்கு மறுப்பும் எழுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரம் முரண்கள் நிறைந்ததாகக் காட்டப்படுகிறது. "வடமொழியாளர் குற்றவாளி" என்பது அவைத்தலைவரின் தீர்ப்பு ]
3. தொடக்கக் கல்வி
க. சம்பந்தம் பிள்ளை
[தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்க வேண்டியதன் இன்றியமை பற்றி விளக்கும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]
4. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது வயதிற்கேற்ற சரியான உடல் எடை காட்டும் அட்டவணைகள், முதலுதவி மருத்துவம், பற்றிய தகவல்கள் தொடர்கின்றது, இறுதியில் அறிவியல் கலைச்சொற்கள் யாவும் பட்டியலிடப் பட்டுள்ளன. இத்தொடர் நிறைவு பெறுகிறது, அடுத்து இது படங்களுடன் தொகுக்கப்பட்ட ஒரு நூலாக வெளிவரவிருக்கிறது]
5. சோழர் பேரரசு (தொடர்ச்சி...)
S. K. கோவிந்தசாமி
[இரண்டாம் அதிகாரம் - கொங்கு தொண்டை மண்டலங்களை அடிப்படுத்துதல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், ஆதித்த சோழனின் ஆட்சியும், அவனது ஆட்சியில் சோழப்பேரரசின் எல்லைகளும்]
6. கோளறு பதிகம்
மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை
[சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்' என்ற அடிக்கும், அத்துடன் திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும் விளக்கம் அறிய விரும்பி ஒரு வேண்டுகோள்]
7. பரணர் (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[தித்தன், தழும்பன், கழுவுள், மத்தி என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது]
8. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[கட்டுரையின் பிற்பகுதி தொடர்கிறது]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
No comments:
Post a Comment