Tuesday, May 3, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4 & 5 (பகுதி 2)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 3, 4  & 5 (பகுதி 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்  ' இரண்டாம்  பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 3, 4  & 5 (பகுதி 2)

________________________________________________

1.  "தொழுதெழுவாள்" "தொழுதெழுவார்" என்னும் தொடர்மொழிகளின் பொருளும் இலக்கண முடிபும் 
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
["தெய்வந் தொழாஅள்" என்ற குறளிலும், "துணைமலர் கொய்து தொழுதெழுவார்" எனத் திருக்கோவையாரிலும் காணப்படும் 'தொழுதெழுதலுக்கு' ஆசிரியர்கள் பலர் அளிக்கும் உரைகள் குறித்து விளக்கம்]

2. திருத்தக்கதேவரும் கம்பநாடரும்  (தொடர்ச்சி...)
வரதநஞ்சைய பிள்ளை
[சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவற்றில், நெடுநாள் விரும்பிய ஒன்றைப் பெறுபவர், அதனால்  மகிழும் நிலைக் காட்டப்படும்  விதம் ஒப்பிடப்படுகிறது]

3. பட்டமதன வித்தாரமாலை
நாராயணசாமி
[கடிகைமுத்துப் புலவரின் வெளிவராத படைப்பொன்று சுவடியில் இருந்து எடுத்து தமிழ்ப்பொழிலில் பதிவிடப்படுகிறது]

4. நன்னூன் முன்னூற்பா
நாராயணசாமி
['முகவுரை' என்பதை  எவ்வாறு வெவ்வேறு ஆசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர் என்பதனை விளக்கும் கட்டுரை. முகவுரை, பதிகம், அணிந்துரை, புறவுரை, தந்துரை, புனைந்துரை ஆகியன பற்றிய விளக்கங்கள். இது ஒரு தொடர் கட்டுரை]

5.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    பதினோராவது அத்தியாயம், முடிவுரை, உடலை ஓம்பும் முறை.  அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
அறிவிப்புகள்
[சங்கச் செய்திகள், உறுப்பினர் பற்றிய தகவல்கள்]


________________________________________________


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment