Monday, November 30, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 1 அன்று வெளிவந்த முதலாவது இதழ் (மலர் 4, இதழ் 19) மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- பா. பி. இரத்தினபாண்டியர் அவர்கள் எழுதிய 'சௌந்தரகாந்தி' என்ற பாண்டிய வரலாற்றைக் கூறும் வரலாற்று நாவல், நாடார்குல மித்திரன் புத்தகசாலை, மல்லிகா ஆயில் கூந்தல் தைலம், 'ஆநந்தமகிளா நூல்', ஃபோட்டோ படங்கள், மூன்று மாதங்களில் ஆங்கிலம் கற்க 'புதிய இங்லீஷ் சம்பாஷணைப் புத்தகம்', தூத்துக்குடி 'நவீன சுகபோஜன சாலை' உணவு விடுதி ஆகியவற்றிற்கான விளம்பரங்கள்.

2 ஆம் பக்கம்:
- எஸ். வி எம். பாண்டியன் அவர்களின் "வாய்மை" என்ற கட்டுரை வாய்மையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறது.
- ஸர் சதாசிவ ஐயரின் பிரசங்கம்: "சமூக ஊழியமும் தீண்டாமையும்" என்ற கட்டுரை, உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயர் ஆந்திராவில் ஆற்றிய உரையில் தீண்டத்தகாதவர்களை கோயிலில் அனுமதிக்காத செயலைக் கண்டிக்கிறது.
- கொழும்பு ஞா. பா. வேதநாயக நாடார் அவர்களின் "நமது கைத்தொழில் நிலைமை" என்ற கட்டுரை பங்குகள் விற்று மூலதனம் சேர்த்து கூட்டுக் கம்பெனிகள் நடத்தும் அயல்நாட்டு வணிகமுறையை நம்நாட்டினரும் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனையை வழங்குகிறது.
- இலங்கை வர்த்தமானம் பகுதி அங்கு நடக்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும், திருவாங்கூர் வர்த்தமானம் பகுதி நாகர்கோவில் நடப்புகளையும் விவரிக்கிறது.

3 ஆம் பக்கம்:
- 'நாடார் மகாஜனசங்கமும் பிரசாரமும்' பகுதி சங்கத்தின் செயல்பாடுகளைக் குறிப்பிடுகிறது.
- 'காலப்போக்கு' என்ற முருகதாசன் எழுதும் பத்தி அயல்நாட்டுத் துணுக்குகளையும் உள்நாட்டுத் துணுக்குகளையும் கொடுக்கிறது. ஐரோப்பிய செய்திகளுடன், பர்மா இந்தியாவை விட்டுப் பிரியப்போகிறது என்ற கவலையையும், சித்தரஞ்சன் தாஸ் வங்கத்திலும், ராஜகோபாலாச்சாரியார் சென்னையிலும் ஆங்கில அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதையும் கூறுகிறது.

4 ஆம் பக்கம்:
- தலையங்கம் பகுதி, கயாவில் கூடிய அகில இந்திய ஹிந்து மகாசபை மாநாட்டில் பண்டிதர் மதன்மோகன மாளவியா அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்களையும், உரையையும் அறியத்தருகிறது. இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்று கூறினாலும், இந்துக்கள் காலம் காலமாக அயல்நாட்டில் இருந்து உட்புகுந்த பிற மதத்தினரால் துன்புறுத்தப்படுவதாகவும், முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வரவேண்டும் (அந்தக்கால 'ஹோம் கம்மிங்') போன்ற கருத்துகளும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.
- 'குறிப்புகள்' பகுதி அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும், சட்டசபை நடவடிக்கைகளையும் அலசுகிறது.

5 ஆம் பக்கம்:
- "லஞ்சாய நாம:" என்ற பகுதி அக்கால அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் "பாதகாணிக்கை" பெற்றுக்கொண்டு லஞ்சலாவண்யம் தலைவிரித்தாட உடன் போவதையும், ஏழை மக்களை லஞ்சம் காரணமாக வாடுவதையும், இதை எப்படி ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையினர் அறியாமலிருக்கும் விந்தையையும் கண்டு வியக்கிறது. "குலைக்கும் நாய்க்குக் கொஞ்சம் கருப்பட்டி (இக்காலத்தில் பிஸ்கோத்து ?) போட்டால் அது வாலை ஆட்டுவது போல, கொஞ்சம் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தால் மக்கள் குழைந்து குழைந்து பணிவதைக் குறிப்பிடுவது 'பி.டிஆர். மேனிநாதன்' அவர்களின் கட்டுரை (சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழகத்தில் இதே கதிதானா?)
- 'சுதந்திரம்' பகுதி ஆத்ம சுதந்திரம், மத சுதந்திரம், தேச சுதந்திரம், நாடார்கள் சுதந்திரம் ஆகியவற்றை அலசுகிறது.

6 ஆம் பக்கம்:
- 'குலவர்த்தமானம்' பகுதி நாடார்குல நடவடிக்கைகள் பற்றிய செய்தித் துணுக்குகள் பலவற்றைத் தொகுத்தளிக்கிறது.

7 ஆம் பக்கம்:
- "நாம் பூமியில் பிறந்து வந்ததின் வேலை என்ன?" என்ற மனவளக்கட்டுரை இடம் பெறுகிறது. ஆசைகளைத் தவிர்த்து, பந்தபாசங்களை அறுத்து முக்தி பெற அறிவுரை கூறுகிறது. 'சந்திரனை மேகம் மறைப்பது போல மனிதர்களைப் பந்த பாசம் மறைப்பதால்' அவர்கள் வந்த வேலையை மறந்துவிடுகிறார்களாம்.
"மாணிக்க முத்து வயிர அணி பூண்டு,
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் நமன் கட்டியே கைப்பிடித்தால்
கானிப்பொன் கூட வரக்காண்வதில்லை நெஞ்சமே"
எனவே புளியம்பழமும் அதன் ஓடும் போல உலக வாழ்வைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது.
- நாடார் குலமித்திரனின் கௌரவ மேனேஜர் கருப்பையா பிள்ளைக்கு பர்மா நாடார் சங்கம் வாசித்தளித்த வரவேற்புரையும், நாடார் குல மித்திரனின் 'போஷகப் பிரபுக்கள்' பட்டியலும் இடம் பெறுகிறது.

8 ஆம் பக்கம்:
- இக்கடைசி பக்கம் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டு லேகியம், நாடார் வங்கியின் பங்கு விற்பனை, 'நமது குலத் தொழில் யாது? மற்றும் 'நாடார் மகாஜன சங்கச் சங்கீத மஞ்சரி' என்ற நூல்கள், பெஸ்ட் இந்தியன் பிஸ்கட் ஃபாக்டரி, குற்றால தங்கும் விடுதியின் (உணவு உட்பட வசதி கொண்ட விடுதியின்) விளம்பரம் (இரண்டு மாதம் தங்க ரூபாய் 60, ஒரு வாரத்திற்கு 10 ரூபாய், நாளொன்றுக்கு 1.80 ரூபாய் கட்டணம்), 'விவேகானந்தம்', 'நாடார் நண்பன்' மாதாந்திர தமிழ்ப் பத்திரிக்கைகள் ஆகிய விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.

நன்றி: திலகபாமா மின்னிதழாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Thursday, September 24, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 3 வது இதழ்வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 18)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.

பக்கம் 2:
தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன் (10 ஆவது பாகம்)

ஆத்மானந்த யோகீஸ்வரரான சுவாமி இராமதீர்த்தர், "கல்வி அபிவிருத்திக்கு பத்திரிக்கையே சிறந்த சாதனம்"  என்று உரைத்த ஆழ்ந்த கருத்துள்ள உபதேசம்  என்ற பகுதி; அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில்  பள்ளி செல்லாதவர்கள் கூட இந்தியக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளைவிட  அதிக பொது அறிவுள்ளவர்களாக இருப்பதற்கு அந்நாட்டில் வெளியாகும் தினசரிப் பத்திரிக்கைகளே காரணம் என்கிறது (இந்தியா சுதந்திரம் பெற்றதற்கும், சமுதாய முன்நேற்றதிற்கும்  பத்திரிக்கை வழி எழுச்சியூட்டும் கருத்துகள் பரவியதே காரணம் என்பதை நாமும் அறிவோம் அல்லவா?). உரையாற்றிவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தனது உரையில் பெண்கல்வியை வலியுறுத்துகிறார்.

கிரிஷ்ணலீலை (தொடர் ...)


பக்கம் 3:

செய்தித்திரட்டு
கடிதங்கள்
ரசத்திரட்டு


பக்கம் 4:
தலையங்கம்: இந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
(சென்னை மாகாண சட்டசபையில் பரிசீலனையில் இருக்கும் மசோதாவைப் பற்றிய மிக விரிவான கருத்து அலசல் இடம் பெறுகிறது)


பக்கம் 5:
ஐரோப்பிய வர்த்தமானம்: பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமான எல்லைத்தகராறு விவகாரம், பாரீஸ் மகாநாடு, பிரான்சின் பிடிவாதம், பிரான்சின் படையெடுப்பு, ரூர் பிரதேசத்தின் நிலைமை   ஆகியவற்றைப் பற்றிய செய்தி இடம்பெறுகிறது.

மிதவாதி, குக வேளாளர் பத்திரிக்கைகள் பற்றிய மதிப்புரைகள்


பக்கம் 6:
பர்மா வர்த்தமானம்: கல்வி அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டம் பற்றிய செய்தி 

நாடார்குல சங்கங்கள் பற்றிய செய்திகள்


பக்கம் 7:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)

பர்மா பயணத்தில் பத்திரிக்கை ஆசிரியருக்கு பர்மாவில் வழங்கப்பட்ட வரவேற்புரை

.......... ஆகியவை இடம் பெற்றுள்ளன.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்


Wednesday, September 9, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 2 வது இதழ்
வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 11  வெளிவந்த இரண்டாவது   இதழ் (மலர் 4, இதழ் 17)  மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில் ...

பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.

பக்கம் 2:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)
கிரிஷ்ணலீலை (தொடர் ...)
கைத்தொழிலே செல்வம் (கட்டுரை)

பக்கம் 3:
பர்மா வர்த்தமானம்
கடிதங்கள்
செய்தித்திரட்டு

பக்கம் 4:
தலையங்கம்: அங்கும் இங்கும் எங்கும் உள்ள மனோபாவங்கள்
குறிப்புகள்

பக்கம் 5:
நூல் பத்திரிக்கை மதிப்புரைகள்
ஹிந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
ஐரோப்பிய வர்த்தமானம்: யுத்த முஸ்தீப்புகள், சமாதன மகாநாடு முறிந்துவிட்டது

பக்கம் 6:
உபாத்திமைத் தொழிலும் சில உயர் இலட்சியங்களும் (கட்டுரை)
நாடார் மகாமண சங்கமும் பிரசாரமும்சிற்சில தமிழக செய்திகள்

பக்கம் 7:
கல்வி (தொடர் ...)
குடும்பமும் அதன் பயனும் (கட்டுரை)
விடாமுயற்சி (கட்டுரை)

ஆகியவை இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Thursday, August 20, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணப் பட்டியல் 19


1372 விருத்தாசல புராணம்
1373 நடுநாட்டு சைவத்திருத்தலங்கள்
1374 திங்களூர் திருத்தல வரலாறு
1375 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு
1376 மருதவன புராணம்
1377 தஞ்சாவூர்
1378 திருவாரூர் புராணம்
1379 திருமயிலை சென்று பார்ப்போம்
1380 சிதம்பரம்
1381 செப்பறை அழகிய கூத்தர்
1382 திரைலோக்கிய சுந்தரம் திருத்தலவரலாறு
1383 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1384 சேயாற்றின் மகிமை தரிசனம்
1385 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
1386 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
1387 மண்ணிப்படிக்கரை ஸ்தல மஹாத்மியம்
1388 ராஜராஜேச்வரி சூச்ரம ஸ்தலவரலாறு
1389 திருவாலங்காடு வடவாரன்யேசுவர சுவாமி திருக்கோயில் தலவரலாறு
1390 பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் தலவரலாறு (திருவெற்றியூர்)
1391 திருவையாறு தென்கையிலாய அற்புதங்கள்
1392 அருள்மிகு முல்லைவனநாதர் அந்தாதி
1393 இரத்தினகிரி வரலாறு
1394 திருபுனவாயிற் புராணம்
1395 திருவெண்காட்டுத் தலவரலாறு
1396 திருப்பெருந்துறை தலவரலாறு
1395 திருப்பெருந்துறை தலவரலாறு
1396 திருவீழிமிழலை தலவரலாறு
1397 திருவிடைமருதூர் தலவரலாறு
1398 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1399 காஞ்சிபுராணம்
1400 ஸ்ரீ மத்யார்ஜுன க்ஷேத்ர மாஹாத்யம்
1401 முக்கிய திருத்தலங்களின் சிறப்புத் தொகுப்பு
1402 றபத்துமூவர் அவதாரத் திருத்தலங்கள்
1403 -
1404 -
1405 அருச்சுனை காத்த அய்யனார்
1406 திருப்பனசைப் புராணம்
1407 திருமழுவாடிப் புராணம்
1408 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1409 களந்தைப் புராணம்
1410 திருக்களந்தைத் தலபுராண வசனம்
1411 காஞ்சிப்புராணம் ஓர் ஆய்வு - சாமிஐயா - 4
1412 திருப்பனந்தாள் தல புராணம் -  தருமபுர ஆதீனம்
1413 சிவபுரி புராணம்
1414 திருவிடைக்கழி தல வரலாறு
1415 திருப்புடைமருதூர்ப் புராணம்
1416 அம்பலவாணனேந்தல் தல புராணம்
1417 திருமலை - திருப்பதி தல புராணம்
1418 வாரணாசி தலச்சிறப்பு
1419 திருவாதவூர்த்தல புராணம்
1420 திருப்பனசைப் புராணம்
1421 திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தல வரலாறு
1422 திருவாவடுதுறைப் புராணம் - மாதவன்

Tuesday, July 21, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் 18

1311 வரலாற்றில் வளவனூர்
1312 வேலூர் கோட்டை - ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு
1313 திருப்புகலூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
1314 வேலூர் - ஸ்ரீ ஜலகண்டேஸ்வ விஜயம் (ஒரு நினைவுச்சின்னத்தின் இரகசியம்)
1315 பொன்னூர் சிவத்தலவரலாறு
1316 அம்பலவாணனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தலபுராணம்
1317 ஜோதிர் லிங்கத் தலங்கள்
1318 Census of India (தஞ்சாவூர் - கோயில்கள்)
1319 அம்பைத் தலபுராணம் - மூலமும், வசனச் சுருக்கமும்
1320 திருப்புத்தூர்ப் புராணம்
1321 சூதவன புராணம்
1322 திருத்துருத்திப்புராணம்
1323 திராமங்கலம்
1324 புதுவைத் தலவரலாறு
1325 சூரியனார்கோயில் - தலவரலாற்றுச் சுருக்கம்
1326 திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் வரலாறு
1327 ஸ்ரீ பயறணீச்சுரர் தலபுராணம்
1328 திருக்களர்ப் புராணம்
1329 கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
1330 திருமுறைத்தலங்கள்
1331 திருவலிவலம் அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்
1332 நகுலேஸ்வரம்
1333 திருக்குராவடி அழகன் (திருவிடைக்கழி தலவரலாறு)
1334 அருள்தரும் பிட்டாபுரத்தம்மை திருக்கோயில் வரலாறு
1335 திருக்கோயில் வழிபாடு (திருவாரூர் தலவரலாறு)
1336 ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - திருவாஞ்சியம் தலவரலாறு
1337 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
1338 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
1339 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1340 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
1341 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
1342 கிரிவலங்களத் தலபுராணம்
1343 மண்ணிப்படிக்கரை ஸ்தலமஜாத்மியம்
1344 நவக்கிரக தோஷ பரிகார தலங்கள்
1345 மாசிமகமும் மங்கலநீர் விழாவும்
1346 திரிமூர்த்திமலை புராண வசனம்
1347 பொன்னூர் சிவத்தல வரலாறு
1348 ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி
1349 வேனுவனப் புராணம்
1350 திங்களூர் திருத்தல வரலாறு
1351 கதிராமங்களம் ஸ்ரீ வரதுர்க்காமரமேஸ்வரி
1352 பாவநாசத் தலபுராணம்
1353 பாவநாசத் தலபுராணம்
1354 நேரிசையாச்சிரியப்பா
1355 திருவீழிமிழலை திருத்தல மகிமை
1356 தணிகை புராணம்
1357 தேவாரத் தலங்கள்
1358 திருக்கழுக்குன்றம்
1359 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
1360 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
1361 வெள்ளைவேம்பு மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
1362 வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்
1363 திருக்கோட்டியூர் தலவரலாறு
1364 அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
1365 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
1366 திருமயிலை சென்று பார்ப்போம்
1367 ஸ்ரீ வில்லிபுத்தூர் மடவார்வறளாகம் புதுவை தலவரலாறு
1368 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு
-. சேயாற்றின் மகிமை, தரிசனம்
- இளமையாக்கினார் திருக்கோயில் திருப்புலீச்சுரம்
1369 துருவலிவலத் தலவரலாறு
1370 ஏழூர் தலங்கள் வரலாறு
1371 திருவாவடுதுறை புராணம் (அ) துறைசை புராணம்


தட்டச்சியவர் திரு அன்புஜெயா!

அளித்தவர் சுபாஷிணி

Friday, July 3, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 17


1281 அருள்மிகு தியகராஜசுவாமி திருக்கோயில் -  திருவாரூர் தலவரலாறும் திருப்பதிகங்களும்
1282 தூத்துக்குடி - சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு 
1283 துவோ எங்கள் கோவை
1284 2004 மகாமகம் பழம்பெருமை வாய்ந்த 108 சிவ ஸ்தலங்கள்
1285 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
1286 திருஎருக்கத்தம்புலியூர் தலவரலாறு
1287 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
1288 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)
1289 ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ சாரதா தேவி திருக்கோயில் கூறைநாடு
1290 அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு 
1291 காரைநகர் - மணற்காடு - கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் 2ம் நாள் உற்சவ மலர்
1292 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
1293 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
1294 தஞ்சாவூர் மாவட்ட நவக்கிரகத் தலங்களும் நவக்கிரகங்களின் வரலாறும்
1295 தேவி தபோவனம் என்கிற அம்மன்குடி கைலாச நாதசுவாமி திருக்கோயில்
1296 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
1297 மகாமகம் 2004
1298 மகாமகம் 2004
1299 திருக்குறுக்கை தலவரலாறு
1300 திருக்கோயில் வழிபாடு - திருவாரூர் தலவரலாறு
1301 திருந்துதேவன்குடித் தலவரலாறு
1302 குமரமலை தலவரலாறு பாமாலை 
1303 திருபாம்புரம் - பாம்புநாதர் திருக்கோயில் தலவரலாறு
1304 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
1305 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
1306 திருஆப்பனூர் தலவரலாறு
1307 மயிலாடுதுறை ஐயாறப்பர் - அய்யாற்று பதிகங்கள்
1308 நாகம் பூசித்த ஸ்ரீ நாகபூஷணி அம்மன்
1309 பிள்ளையார்பட்டி வரலாறு
1310 12 ஜோதிர் லிங்கங்களின் கதை


சுபா

தட்டச்சி அளிப்பவர் திரு அன்பு ஜெயா

Thursday, June 25, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 16

254 திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்
1255 தக்ஷிணகைலாசபுராணம் பகுதி - 2 இலங்கை
1256 முத்திநகர் காஞ்சியின் மூர்த்தித்தலம் தீர்த்தங்கள் ஏகாம்பரநாதர் ஆலயமும் சிவகங்கையும்
1257 காசி க்ஷேத்திர மகிமை
1258 பாபநாசத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் தெய்வீக வரலாறு நூல் தஞ்சை மாவட்டம்
1259 அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேசுவரப் பெருமான் திருக்கோயில் வரலாறு
1260 திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள காவிர் - வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1261 மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவ்ர் திருக்கோயில் வரலாறு
1262 இந்து சமய வார வழிபாட்டு மன்ற 28ம் ஆண்டு விழா மலர்
1263 திருவையாறு தென்கயிலாய அற்புதங்கள்
1264 திருப்பனசைப்புராணம்
1265 மட்டக்களப்புச் சைவக்கோயில்கள் கொழும்பு
1266 சிவகாசி நகர் வரலாறு
1267 திருவானைக்காபுராணம் - ஞானஉபதேசப் படலம்
1268 தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள் 32
1269 திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிரமேசுவரப்பெருமான் திருக்கோயில் வரலாறு
1270 காஞ்சியின் கவின்மிகு கோயில்க்ள
1271 திருக்கேதீஸ்வரம் (சிறு குறிப்பு)
1272 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
1273 நவக்கிரகத் திருக்கோயில்கள்
1274 உத்தரமேரூர்
1275 திருப்பெருந்துறை தலவரலாறு
1276 கங்கை கொண்டசோனேச்சமும் கருவூர்த்தேவரும்
1277 திருக்கழுக்குன்றம்
1278 திருக்குடந்தைத் திருமுறைத் தலங்களும் சைவ சமயக் கட்டுரைகளும்
1279 அறையணி நல்லூர் - ஸ்ரீ அதுல்யநாதேச்வரர் திருக்கோயில் (அரகண்ட நல்லூர் மகாகும்பாபிஷேக மலர்)
1280 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)

சுபா

தட்டச்சு செய்து அளித்தவர் திரு அன்பு ஜெயா அவர்கள்

Wednesday, June 17, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4, இதழ் 16)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.


பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிருஷ்ணலீலை" என்ற தொடரில் தமிழ் வார்த்தைகளுக்குப் பஞ்சமோ பஞ்சம்.  இக்கால 'பண்ணி' தமிழ், 'செய்து' தமிழ் போல சென்ற நூற்றாண்டில் இதே காலக்கட்டத்தில் 'கொண்டு' தமிழ் என்றொரு கொடுமை இருந்திருக்கிறது.

"ஸ்ரீ பலராமகேசவ மூர்த்திகள் கோபால பாலவேஷஸ்வரூடர்களாய் சந்தோஷாதிசயமான மனோற்சாகங்களுடன்சகல பந்துக்களால் செய்யப்பட்ட ஸ்துதிகளைப் பெற்றுக்'கொண்டு' அளவிறந்த பசுக்களை சமரட்சணம் பண்ணிக்'கொண்டு' விளையாடிக்'கொண்டி'ருந்தார்கள்"

பரமன்குறிச்சி பாடசாலை கட்டட நிதிக்காக 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பலர் நன்கொடை வழங்கிய விவரம் உள்ளது.

"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஒன்பதாம்  பாகமும், இலங்கை நாடர் சங்க நிகழ்வு பற்றிய செய்தியும் இப்பக்கத்தில் இடம் பிடிக்கின்றன.


பக்கம் 3:
இப்பக்கத்தில்  நாடார்குல "சங்க விஷயங்கள்" பல இடம் பெறுகின்றன.

பக்கம் 4:
இலங்கை நாடார்குல சங்க செய்திகள் இப்பக்கத்தில்  இடம் பெறுகின்றன.

பக்கம் 5:
பத்திரிக்கை ஆசிரியர் முத்து நாடாரின்  பர்மா சுற்றுப்பயணம் பற்றியும், அங்கு நடைபெற்ற விழா, வரவேற்பு போன்ற தகவல்களும்,  செய்திகள், வாசகர் கடிதங்களும் இப்பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 6:
உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் மற்றும் சுவையான தகவல்களுக்காக ஒதுக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள சில தகவல்கள் ...
 • சுவிட்சர்லாந்தில் சீட்டாட்டம் (சூதாட்டம்), பரிசுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
 • இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிக்கைகளின் தகவலும் அவற்றின் வாசகர்களின் எண்ணிகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் குறைந்தது 7 இலட்சம் முதல் அதிகப்படியாக 18 இலட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் எந்த ஒரு பத்திரிக்கைக்கும் ஒரு இலட்சம் வாசகரகள்  கூடக் கிடையாது
 • உலகின் பல நிலநடுக்கங்களும்  அவற்றில் ஏற்பட்ட  உயிரழப்புகளும் அடங்கிய   தகவல் ஒன்றில், 1737 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தி ஒன்றரை இலட்சம் மக்கள் உயரிழந்ததாகத்  தகவல் இடம் பெற்றுள்ளது.
 • மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, நாடார்குல மக்களை பனை மற்றும் கள் விற்பனை தொழிலைக் கைவிட்டு உழவு, கைத்தொழில் மேற்கொள்ளும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பக்கம் 7:
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றினை கே. கந்தசாமி என்ற கல்லூரி மாணவர் எழுதியிருக்கிறார்.  இது தொடராக வரும் என்ற குறிப்புள்ளது.  திருமங்கலம்,கல்லுப்பட்டி நாடார் வித்யாசாலைக்கு லோயர் செகண்டரி தேரிய ஆசிரியரோ, ஆசிரியையோ தேவை என்றும் குடும்பத்துடன் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  நாடார்குல மக்கள் அளித்த நன்கொடை விவரங்களும் "போஷகப்பிரபுக்கள்" ஆகிய நன்கொடையாளர்கள் பற்றிய தகவலும் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:


Friday, June 5, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 15)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன
(இவை யாவும் சென்ற இதழிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றவையே).

பக்கம் 2:
"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் எட்டாம் பாகமும், "நம்பிக்கை" என்ற மனவளக்கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

விஜயதுரைசாமிக்கிராமணி எழுதிய"குலத்தொழில் யாது?" என்ற (விலை 5 அணா, 64 பக்கம்) நூல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  அதில் நாடார்களின் பூர்வீகத் தொழில் என்ன என்று வேத கால, சங்க கால இலக்கியப் பதிவுகள் காட்டுவதென்ன என்ற ஆய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனவும்; பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதியில் சாணன் = சான்றோன், ஒரு சாதிப்பிரிவு என்று பதிவான விவரம், பிற்பாடு இருபதாம் நூற்றாண்டு அகராதியில் சாணான் = மரமேறி, கள் விற்பவர் என்று குறிப்பிடும்  அளவிற்கு சாதீய எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது என அந்த நூல் விளக்குவதாகவும் தெரிகிறது. அத்துடன் கம்பராமாயணம், சுந்தரகாண்டம், ஊர் தேடும் படலத்தில் 110* செய்யுளின் துவசர் என்பதற்கு  சாணார் என்ற பொருளை உரைநூல் அளிப்பதாகவும், அவ்வாறு முற்கால உரைகளில் இல்லையென்றும், இவ்வாறு இல்லாத பொருளைத் திணிப்பது புராணப் புரட்டு என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110


பக்கம் 3 மற்றும் 4:
நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இப்பக்கங்களில்   பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாநாடு நிகழ்வுகள்,  1921 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் 'மீள்பதிவும்' ஆகியவை  இடம் பெற்றுள்ளன.

பக்கம் 5 மற்றும் 6:
வழக்கமான 'பழமொழித்திரட்டு' பகுதி, நாட்டுநடப்பு விவரங்களை பழமொழிகளுடன் இணைத்து வழங்குகிறது. துணுக்குகள் மற்றும்  சங்கச்செய்திகளும் அறிவிப்புகளும் இப்பங்களிலும் தொடர்கின்றன.

பக்கம் 7
இப்பக்கத்தில்  இடம் பெறுவது உலக நடப்புகள் பற்றிய தகவல்கள், குடும்பத்திற்குப் பொதுவான மருத்துவக் குறிப்புகள் சில, நன்கொடை வழங்கியோர் (போஷகப் பிரபுக்கள்) தகவல்கள், எண்ணெய் வித்து வணிகத்தின் தகவல்கள். 

இந்த இதழில் தலையங்கம் எதுவும்  இடம் பெறவில்லை, அத்துடன், தமிழக, இந்திய அரசியல் செய்திகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக்  குறைவு. வழக்கமான  சில தொடர்களும் இந்த இதழில் இடம் பெறவில்லை.  இதற்குக் காரணம் இதழின் ஆசிரியர் அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் எனவும் கருத வாய்ப்புள்ளது.

குறிப்பு: * இதழ் 112 என்று குறிக்கிறது.

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Wednesday, May 27, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 2 வது இதழ்


வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 11  வெளிவந்த இரண்டாவது  இதழ் (மலர் 4, இதழ் 14)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல், அமரர் புராணம் நூல், ஆநந்தமகிளா, நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன

பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிரிஷ்ணலீலை" என்ற தொடரும், சுதேசபரிபாலினி எழுதிய "மனமும் எண்ணமும்" என்ற மனவளக்கட்டுரையும்  இரண்டாம் பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 3:
நாடார்குல மித்திரனின் தலையங்கம் மூன்றாம் பக்கத்தில்; அன்றைய ஜாதிக்கலவர நிகழ்வொன்றை விவரித்து கண்டனத்தைப் பதிவு செய்கிறது.  தனது கனவில் முருகன் கூறியதால் அக்கினிக்காவடி எடுத்து தென்திருவிதாங்கூரில் உள்ள குமாரக்கோயில் என்ற கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் நாடார் இன மக்களில் ஒருவர்.  இது வதந்தியாகப் பரவி, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தும் கலவரம் வெடித்து, நாடார்குலமக்கள் பலமாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர்.  பலர் பலத்த காயங்களுடன், ஆடைகள் இழந்து அவமானப்பட்டு, உயிர்தப்பிக்க நீர்நிலைகளில் குதித்து நீந்தி தப்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

"அக்கினிக் காவடியும் அடிபிடியும்" என்ற தலைப்பில் இத்தாக்குதலைக் கண்டித்த "லெட்சுமணப் பிள்ளையின் வீரமொழி" என்று அவர் ஜாதித்துவேஷப் போலிகளுக்கு விடுத்த எச்சரிக்கை பாராட்டப்பட்டுள்ளது.

பரமசிவன் பார்வதிக்கிடையில் நடைபெறும் கற்பனை உரையாடலில், உமையவள் சிவனிடம் பிச்சை எடுக்கவேண்டாம் தொழில் புரியலாம் என வேண்டுகோள் வைக்கிறார் என்ற பதிவும் இப்பக்கத்தில் உண்டு.

பக்கம் 4 மற்றும் 5:
அயல்நாட்டு  நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் இப்பக்கங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பக்கம் 6:
இப்பக்கத்தில்  இடம் பெறும் "செய்தித்திரட்டு" பத்திகள் இந்தியச் செய்திகள், நாடார்சங்கச் செய்திகள், வாசகர் கடிதங்கள், மாநாடுகளின் அறிவிப்புகள், துணுக்குகள் ஆகியவற்றைத் தாங்கி வந்துள்ளன.

பக்கம் 7:
"வித்யாதானமே சிறந்தது" என்ற கல்வியின் மேன்மை கூறும் கட்டுரை ஒன்றும், "தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஏழாம் பாகமும், நன்கொடையாளர்களின் பட்டியலையும் இப்பக்கத்தில் காணலாம்.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:

Sunday, May 10, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல்! 15


1221 வேதாரண்யம் புராணம்
1222 திருக்கோயில் தலவரலாறு
1223 சிவதிருப்பதிகங்கள்
1224 திருத்தல வழிகாட்டி
1225 திருப்பரம்பரம் வரலாறு
1226 வனதுர்க்காதேவி வரலாறு கதிரை
1227 திருவாமாத்தூர் தலவரலாறு
1228 திருக்கழிப்பாலைப்புராணம்
1229 இந்தியத் திருக்கோயில் தர்சனம்
1230 ண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில்
1231 ஆபத்து நிவாரண கணபதி கோயில் நெய்வேலி (ஆங்கிலம்)
1232 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1233 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1234 ஸ்ரீ ஜெய்சந்தோஷிமாதா திருக்கோயில் திருவெறும்பூர் கும்பாபிஷேகமலர்
1235 சேந்தங்குடி படைவெட்டிமாரியம்மன் கும்பாபிஷேகமலர்
1236 திருநெடுங்களநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1237 குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1238 Maha Kumbabisegam Malar - Hindu Sankarar Sri Kamatchi Ampal Temple
1239 திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வ்ர் திருக்கோயில் தலவரலாறு
1240 ஐயப்ப தரிசனம் இலங்கை
1241 பினாங்கு கொடிமலை - ஸ்ரீ அருளொளி திருமுருகன் கோயில் கும்பாபிஷேகமலர்
1242 குருமண்காடு - வவுனியா - கொழும்பு - காளியம்மன் தேவஸ்தானம் கும்பாபிஷேகமலர்
1243 திருவானைக்கா புராணம் - ஞானஉபதேசம் - உரை
1244 கண்டி - ஸ்ரீ செல்வவிநாயகர் - மீனாட்சி சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1245 பர்வதவர்த்தினி அம்மன் கோயில் தளவாய்சுவாமி கோயில் - ரெட்டியார்பட்டி
1246 பழனி - தண்டாயுதபாணிகோயில் (கும்பாபிஷேகமலர்)
1247 சித்திர திருவிளையாடல் புராணம்
1248 சித்திர திருவிளையாடல் புராணம்
1249 மகாமகம் - குறிஞ்சிமலர் (பல கோயில் வரலாறு)
1250 ஹிந்துமித்திரன் - தமிழத்திருக்கோயில் திருவிழாக்கள் சிறப்பு மலர்
1251 சதுர கிரித்தலபுராணம்
1252 சதுர கிரித்தலபுராணம்
1253 சதுர கிரித்தலபுராணம்

சுபா

Sunday, April 19, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 14

1186 அருள்மிகு விக்ன விநாயகர் ஆலயம் தியாகராஜநகர்
1187 திரு ஓங்கு திருச்சிராப்பள்ளி, செவ்வந்திப்புராணம்
1188 தில்லைநாயகன் திருநடராஜன் (சிதம்பரம் வரலாறு)
1189 திருப்பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வரலாறு
1190 THIRUKETHEESWARAM
1191 திருகேதீஸ்வரம்
1192 சிவபெருமான் வழிபாடு
1193 கும்பாபிஷேகம்
1194 கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம்
1195 யமபயம் இல்லா திருக்கோடிக்காவல்
1196 திருப்பாலைத்துறை தலவரலாறு
1197 திருப்பாலைத்துறை தலவரலாறு
1198 ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய தரிசனம்
1199 பருத்தியூர் தலவரலாறு
1200 கரவந்தீஸ்வரசுவாமி உடையார்கோயில்
1201 ஆச்சாள்புரம் திருப்பதிகங்கள்
1202 திருநெய்தானம் திருத்தல முழு வரலாறு மற்றும் திருப்பெரும்புலியூர் தலவரலாறு
1203 திருப்புள்ளமங்கை திருத்தல பெருமை
1204 திருமாந்துறை அட்சயநாதசுவாமி தலவரலாறு
1205 திருவாவடுதுறை ஆதீன வரலாறு (Short Notes)
1206 சப்தவிட ஸ்தலவரலாறு
1207 வரலாற்றில் திருவிடைமருதூர்
1208 தவத்திரு சிவசம்புசுவாமிகள் வரலாறு
1209 நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே
1210 அன்பிலாந்துறை, திருமாந்துறை பதிகங்கள்
1211 திருநல்லம் தலவரலாறு
1212 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1213 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1214 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1215 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1216 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1217 சோழபுரம் ஒருவரலாற்றுப் பார்வை
1218 திருவாலங்காடு பதிகம்
1219 காவிரி வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1220 கவின்மிகு கோயில்கள் காஞ்சியில்

Sunday, April 12, 2015

நாடார் குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்வி மற்றும் பெண்கல்வி பற்றிய  புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155) கணக்கெடுப்புப்படி  (ஜனசங்கை) படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்.  மேலும் விரிவான நாடார்குல  மக்கள் பற்றிய புள்ளிவிவரங்களை  இந்தப் பதிவில் காணலாம்.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
இரங்கூன்  வி. ஏ. வேல் ஜோசப் நாடார் என்பவர் பர்மா சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மக்களிடம்  ராமன்  ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால்  என்ன என்ற மனப்பான்மை அதிகம் என்ற கூறி; மது, சாதிபேதம், தீண்டாமை ஒழித்தால் மூன்று மாதங்களில் சுதந்திரம்  வாங்கிவிடலாம் என காந்தி சொன்னார். ஆனால் நம்  மக்களுக்கு அந்த அக்கறையில்லை. சுதந்திரத்திற்காகப் போராடும் காந்தி இப்பொழுது சிறையில் இருக்கிறார் என்ற செய்தி அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்லும் பழமொழித் திரட்டு பகுதியில்  தரப்படுகிறது. 

நாடார்சங்கச் செய்திகள்:
நாடார் சங்கக் கமிட்டிகள் அசட்டையாக வேலை செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.

நாடார் சங்க உறுப்பினர் என்று கூறி பண வசூல் செய்யும் மோசடி ஒன்று நடந்து வருகிறது  என மக்களிடம் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

நன்கொடை அளித்த இலங்கை நாடார்களின் பட்டியலில், இலங்கை முகத்துவாரம்  பகுதி நாடார் உறுப்பினர்கள் எனக் குறிப்பிடும்  தகவல்களின் வாயிலாக  அங்கு வசிக்கும் நாடார்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்களாக இருப்பது தெரிகிறது.

கார்த்திகை விளக்கு விழா நாளை விடுமுறை நாளாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கையும், நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன

நல்ல நினைவாற்றலுக்கும், குயிலைப்போல இனிய குரலைப் பெறவும்   நாட்டு  வைத்தியமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

தொடர்கள்: 
 • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை பலராமர் தேனுகாசுரனைக் கொன்றது விவரிக்கப்படுகிறது.
 • மனனமாலை (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்),
 • நல்லூர் நண்பன் எழுதிய, மனானந்த மஞ்சரி, "வெள்ளியங்கிரி கோர்ட் விசாரணை ...மதம் மாறியகேஸ் கேஸ்" என்ற நாடகத் தொடரில்,  முருகன் வள்ளியிடம் சென்றுவிட்டதால் தெய்வானை  நீதிமன்றம் சென்று ஜீவனாம்ச வழக்கு தொடுப்பதாக ஒரு கற்பனை, அவரது வழக்கறிஞர் விஷ்ணு.  இது ஒரு தொடர் நாடகம், படிக்க சுவையான ஒரு நகைச்சுவை நாடகம்
 • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஆறாம்   பாகம் இடம் பெற்றுள்ளது
விளம்பரங்கள்:
சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும், தேசானுகூலன்  பத்திரிகைக்கான விளம்பரங்களும்,

பிரிட்டிஷ் இராணுவத்தில் பணிபுரிந்த வீரர், 105 ஆங்கிலேய போர் வீர்களுக்குத் தலைவராக இருந்த, போர்களில் வெற்றி பல  கண்டு வீரப்பட்டம் பெற்ற "அசாரியா நாடார்" என்பவரின்  படம் விற்பனைக்கு, விலை  4 அணா. என்ற விளம்பரமும்,

விளம்பரப்பகுதியில் பரமன்குறிச்சி பள்ளிக்கு நன்கொடை  கோரப்படுவதும், தூத்துக்குடியில் விருதுப்பட்டி நாடார் குலத்தவர் நடத்தும் "நவீன சுக போஜன சாலை" (உணவு மற்றும் தங்கும் விடுதி) விளம்பரங்களும் அக்கால நடப்பை விளம்பரம் என்பதன் வழியாக பெறும் வரலாற்றுத் தகவல்களாக அறிய உதவுகின்றன.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Sunday, April 5, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1922ம் ஆண்டு டிசம்பர் 21  வெளிவந்த இதழ் (மலர் 4 - இதழ் 12)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

பாரதியார்     "தமிழருக்கு" என்ற தலைப்பில் எழுதிய எழுச்சியூட்டும் கட்டுரை இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இக்கட்டுரையை மின்தமிழின் இந்தப்பதிவில் படிக்கலாம்

'நாடார்களும் கோயிலும்' என்ற தலைப்பில் ஆரணியில் இருந்து வெளிவந்த 'சகோதயம்' என்ற பத்திரிக்கையில் "தேசாபிமானி" என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவர்,  திருப்பூரில் நடந்த நாடார்குல மாநாட்டில் எழுப்பப்பட்ட ஆலய நுழைவு பிரச்சனை, கலந்துரையாடல், வரையப்பட்ட தீர்மானங்கள் என்பவனவற்றை விவரித்து எழுதிய  கட்டுரையை நாடார் குலமித்திரன் பத்திரிக்கை தனது மூன்றாம் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ளது. கோயிலுக்குள் நுழைய காங்கிரஸ் உதவாவிட்டால் நாடார்கள் தாங்களே தங்களுக்கு கோயில் கட்டிக் கொள்ள வேண்டும், அதற்காக "தாயதிகளிடம் ஏற்பட்ட சண்டையால் தகப்பனின் சிரார்த்தத்தைக் கைவிடுவது போல" காங்கிரசைப் புறக்கணிக்கக் கூடாது. நாட்டு நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என அக்கட்டுரையில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

இதை "நயவஞ்சக யோசனை" என்றும் , "போலித் தேசாபிமானம்" என்றும் தனது இதழின் ஐந்து மற்றும் ஆறாம் பக்கங்களில்  மற்றொறு நீண்ட கட்டுரை ஒன்றின்  மூலம் நாடார் குலமித்திரன் பதிலடி கொடுத்திருக்கிறது.  ஆக, அக்காலத்தில் கோயில் நுழைவு என்பது  மிகப் பெரும் பிரச்சனையாக நாடார் குலத்தின்பால் இருந்தது தெரிகிறது. அத்துடன் கட்டுரையாளர்
"தேசாபிமானி" 'தானே கேள்விகள்  கேட்டு தானே பதில்கள்  சொல்லிக் கொண்டிருப்பதையும்' "கொட்டை எழுத்தில்" பதிவிட்டுள்ளது  நாடார் குலமித்திரன்.

சாஸ்திரி ஆஸ்திரேலியா சென்று அங்கு வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை வேண்டும்  என்று போராடமுயன்றபொழுது, ஒரு  நியூசிலாந்துக்காரர் முதலில்
சாஸ்திரி தனது  நாட்டு மக்களிடம் சமத்துவம் கிடைக்க உழைக்கட்டும் என்று  இடித்துரைத்ததையும் சுட்டிக்காட்டி காந்கிரசின் மெத்தனத்தை தேசாபிமானி புரிந்து கொள்ளட்டும்  என்று சூடான மறுமொழியும் அளித்திருக்கிறது.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
 • சட்டசபையும் நாடார்களும் பகுதியில்  சௌந்தர பாண்டிய நாடாருக்கு  சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுக்கப்படுகிறது.
 • திலகரின் சுயராஜ்ய  நிதி நிர்வாகத்தின் சீர்கேட்டை ஓழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்  வைக்கப்பட்டுள்ளது.
 • அன்றைய நாடார்குல மக்கள் தொகை 10 இலட்சம், ஆனால் நாடார் குல சங்கத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
 • மாசிலாமணி நாடாரின் "நாலடியார்" நூலுக்கும் "நமது குலத் தொழில் யாது" என்ற விஜயதுரைசாமி கிராமணி எழுதிய நூலுக்கும் மதிப்புரை என்ற பெயரில் நூலறிமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அந்நூல்களின்  விலை முறையே எட்டணா, மற்றும்  ஆறணா. 

தொடர்கள்: 
 • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை கன்றுகளைக் கவர்ந்தது விவரிக்கப்படுகிறது.
 • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஐந்தாம்  பாகம் இடம் பெற்றுள்ளது.
 • மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்) என்ற தொடரும் உண்டு.
 • சில இதழ்களில் அவ்வப்பொழுது தோன்றும் "பழமொழித் திரட்டு" என்ற பகுதி இவ்விதழிலும் உண்டு. இப்பகுதி  வழக்கம் போல அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்கிறது. "அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பந்தியில் இருந்தால் என்ன, கடைப்பந்தியில் இருந்தால் என்ன", "சுவர்க்கத்திற்குப் போகிற பொது கக்கத்தில் மூட்டை", "பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா"  "பெயர் பொன்னப்பன்தான் கையில் காசுகூடக் கிடையாது", பொன்னாபரணத்தைகாட்டிலும் புகழாபரணம் பெரிது" ஆகியவை இம்முறை வெளிவந்திருக்கும் பழமொழிகள்.  இப்பகுதியும் பொன்மொழி ஆர்வலர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆர்வமூட்டும் ஒரு பகுதி.  பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா என்ற பழமொழி கலால்  வருமானம் வருகிறது என்பதற்காக மதுக்கடைகளை அனுமதிப்பதா?  ***அமெரிக்காவே மதுவை ஒழித்துவிட்டது, இந்திய அரசாங்கமும் மதுவைத் தடை செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. 

விளம்பரங்கள்:
 • வழக்கம் போல முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் விளம்பரப்பக்கங்களாக உள்ளன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும்;
 • தேசானுகூலன்  பத்திரிகை, ** தத்துவ இஸ்லாம், தேசோபகாரி  பத்திரிக்கைக்கான விளம்பரங்களும் உண்டு.

*** Prohibition in the United States was a nationwide constitutional ban on the sale, production, importation, and transportation of alcoholic beverages that remained in place from 1920 to 1933 (from wiki)

** 1919ம் ஆண்டில் "தத்துவ இஸ்லாம்" என்ற பெயரில் வெளிவந்த இந்த இதழ் சனவரி 1923 இல் "தாருல் இஸ்லாம்" என பெயர் மாற்றப்பட்டுள்ளது. (from wiki)

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:தமிழ் மரபு நூலகத்தில்Thursday, March 26, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 2 வது இதழ்வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

 • காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்க கால செய்தியொன்று, புதிதாய் வந்த சட்ட சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாத காரணத்தினால் சட்டசபையைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் புறக்கணிப்பினால் விளையக்கூடிய நன்மை தீமைகளை ஒரு கட்டுரை ஆராய்கிறது.
 • கடைசிபக்கக் கட்டுரை ஒன்றில் மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆலயப்பிரவேசம் பற்றிய விவாதங்களில் "தமிழ்நாடு" பத்திரிக்கையின் வரதராஜுலு நாயுடு  அவர்கள் அதிகம் கண்டிக்கப்பட்டதில், அவர் அதை மறுத்து, உண்மை தெரியாமல் சில  பத்திரிக்கைகள் தவறான கருத்துகளை ஒரு  சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன என்று குறிப்பிட்டு அவ்வாறு  எழுதுவதை நிறுத்தும்படி கண்டனம் தெரிவித்து, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவற்றில் நாடார் குல மித்திரனும் ஒன்று. சாதிச்சண்டைகள்  வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  தமிழ்நாடு பத்திரிகையில் அவர் எழுதிய மறுப்புச் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
 • "நன்மை கடைபிடி" என்ற கட்டுரை   குடியினால் விளையும் தீமைகளைக் கருத்தில் கொண்டு நாடார்களை பனைமரக்கள்  இறக்கும் தொழிலை கைவிட வேண்டுகிறது. மாற்றாக, பதநீர் அல்லது பனைவெல்லம் தொழிலோ அல்லது மாற்றுத் தொழில் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டுகிறது.  சாத்தூரில் கூடிய நாடார்குல ஏழாவது மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தையும்  நினைவுறுத்துகிறது
 • சென்ற இதழில் குறிப்பிடப்பட்ட பொறியாளர் தேவாரம் நாடார் அவர்களைச்  சந்தித்து "நாடார் மேனுபாக்ச்சரிங் கம்பெனி" ஒன்றை இரண்டு லட்சம் செலவில் தொடங்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்டுவது தெரிகிறது.  நாடார் குலத்திற்கு மாற்றுத் தொழில் வழிகாட்ட இந்த முனைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் குல மக்களின் வாழ்வாதாரத்திற்கென பத்திரிக்கை ஆசிரியர் காட்டும் அக்கறை பராட்டிற்குரியதாகக் கருதப்பட வேண்டியதொன்று. இது போன்ற தொழில் தகவல்கள மூன்று நான்கு கட்டுரைகளில் இடம்பெறுகின்றன.
 • சங்கச் செய்திகள்: நாடார்கள் பள்ளிகள் துவக்கினால் நாடார்குல சங்கம் பொருளுதவி செய்ய முடிவு செய்துள்ள தகவலும், மேலும் பல சங்க நடவடிக்கைகளும் வழக்கம் போல கொடுக்கப்பட்டுள்ளன.
 • கவனத்தைக் கவரும் துணுக்குகள் சில: டிசம்பர்  1, 1922 கனத்த மழையினால் வைகையில் வெள்ளம் ஏற்பட்டு மதுரை வெள்ள சேதத்தை அடைந்திருக்கிறது. இதில் உயிர்ச் சேதங்களும் அடங்கும்.
 • மூளையின் நிறைக்கேற்ப புத்திசாலித்தனம் என்று கூறுவார் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களின் மூளை நிறையை பட்டியலிடும் துணுக்கு  ஒன்றில் ஸ்காட்லான்ட் நாட்டினர் 50 அவுன்ஸ் மூளை நிறையுடன் முன்னணியிலும்,  எஸ்கிமோ மக்கள் 44 அவுன்ஸ் நிறை கொண்ட மூளையுடன் கடைசியிலும் உள்ளனர். இந்துக்களின் மூளை நிறை 45  அவுன்ஸ் என்றும் 12 இனத்தவர்கள் இடம் பெற்ற  பட்டியலில் இந்துக்கள்  9 ஆம் இடத்தில் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.  மேலும், கடைசி பக்கத்தின் "உலக விநோதங்கள்" பகுதி மேலும் பல சுவையான தகவல்களைக் கொண்டுள்ளன
 • மகளிர் பற்றிய தகவல்கள்: லண்டனில் மகளிர்  9 பேர் வழக்கறிஞர் தொழிலில் முதன் முதலில் நுழைந்துள்ளனர். சென்னை  சைதாப்பேட்டையில் லக்ஷ்மண அய்யர் என்ற பேராசிரியரின் மனைவி சுப்புலக்ஷ்மியும், சாரங்கபாணி நாயுடு என்ற வணிகரின் மனைவி கிருஷ்ணம்மாளும் முனிசிபல் கமிஷனர்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆளுநர் ஆணையின் படி  பதவியேற்றனர்.
 • தொடர்கள்:  ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது. தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் நான்காம் பாகம் இடம் பெற்றுள்ளது.
 • விளம்பரங்கள்: வழக்கத்தைவிட  விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இந்த இதழில் காணப்படுகின்றன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல்  என்ற நூல்களுக்கும்; தேசானுகூலன்  பத்திரிகை, பத்திரிக்கைக்கனா விளம்பரங்களும் உண்டு.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Tuesday, March 24, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 13


1151 திருநெல்வேலி பகுதி சிறுதெய்வ வழிபாடு
1152 திருத்தலங்கள் வரலாறு
1153 திருத்தலங்கள் வரலாறு
1154 தில்லைத் திருக்கோயில்
1155 திருநள்ளாறு சனீஸ்வ்ர்
1156 திருநறையூர் சித்தநாதசுவாமி கோயில்
1157 திருவெண்காட்டுத் தலபுராணம்
1158 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
1159 திருக்காளத்தி புராணம்
1160 திருமுருகன் பூண்டித்தலவரலாறு
1161 தமிழில் தலபுராணங்கள் Vol - 1
1162 தமிழில் தலபுராணங்கள் Vol - 2
1163 தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள்
1164 மேலச்சிதம்பர ரகசியம்
1165 நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத்திரட்டு
1166 பாவநாசத் தலபுராணம்
1167 தஞ்சை கோயிற் பாடல்கள்
1168 பஞ்சபூதத்தலங்கள்
1169 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
1170 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
1171 மீனாட்சி அம்மன் திருப்புகழ்
1172 சூலக்கல் அருள்மிகு மாரியம்மன், விநாயகர் திருக்கோயில்
1173 திருப்புன்கூர் தலவரலாறு
1174 அண்ணாமலையும் என்னும் நிலையும்
1175 அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோயில் கோவில்பட்டி
1176 இரட்டைமணி மாலை
1177 திருநல்லத் தலவரலாறு
1178 திருநல்லத் தலவரலாறு
1179 கல்லுக்குழி செல்வ விநாயகர்
1180 திருப்பரங்குன்ற தலவரலாறு
1181 அருள்மிகு உமாமஹேஸ்வரர் திருக்கோயில்
1182 அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி கோயில் திருக்குட விழாமலர்
1183 கொளஞ்சியப்பர் அருள்வரலாறு
1184 திருக்கேதீச்சரமாண்மியம்
1185 அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கருகாவூர்

தொடரும்
சுபா

Tuesday, March 17, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் 1 வது இதழ்வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று
1922ம் ஆண்டு டிசம்பர் 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4 - இதழ் 10)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.

இச்சஞ்சிகையின் அன்றைய விலை 2 அணா.

இந்த இதழில்:
 • "தன் சரீரமே தனக்கு உதவி" என்ற ஆசிரம போதினியின் நிருபர் கட்டுரை உடலைப் பேணுவதின் தேவையை வலியுறுத்துகிறது.
 • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் மூன்றாம் பாகம் இடம் பெற்றுள்ளது.
 • லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரையொன்றில் சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் காணப்படும் சுவையான தகவல்கள்  தனிக்கட்டுரையாக  சற்றே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 • ஜெர்மனிக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான போரில் நாட்டிற்கு உதவும் பொருட்டு படையில் சேர வேண்டும் என்ற  கோரிக்கை ஒன்று நாடார் குல மக்கள் முன் வைக்கப்படுகிறது.
 • இங்கிலாந்து அரசின் பிரதம மந்திரிகள் பட்டியலும், அக்கால அமைச்சர்களின் வருமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது
 • கோவையில் நடந்த நாடர்குல தமிழ் மாகாண மாநாட்டில் சாஸ்திரங்களை மாற்ற இயலாது என்று கூறி நாடர்கள் கோவில் செல்வதற்கு தடைகள் கூறிய மேல்குடியினர் எனத் தங்களைக் கருதிக்கொள்வோர் பலரின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டுள்ளன.  தங்களிடம் ஆதரவு எதிர்பார்க்கும் காங்கிரஸ் நாடார்குலத்தின்  கோரிக்கையை நிராகரிப்பதைப் பற்றிய அதிருப்தியும், திரு. வி. க (மிஸ்டர் முதலியார்), ஈ.வெ.ரா ஆகியோரின் தீண்டாமை ஒழிப்பு உரைகள் பயனற்றுப் போனதும் குறிப்பிடப்படுகிறது. காங்கிரசுடன் கொண்ட உறவு பற்றியும், அதன் அரசியல் நடவடிக்கைகள் நாடார்குலத்திற்கு ஆதரவாக இல்லை என்ற கருத்தும் வெவ்வேறு பக்கங்களில், வெவ்வேறு பத்திகளாக, வெவ்வேறு எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் தகவல் நிறைந்த இப்பத்திகள் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு அக்கால சமூகவியலைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
 • வாரத்திரட்டு என்ற செய்திகள் தொகுப்பு, குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன.
 • வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  கைத்தொழில் போதினி  என்ற நூல்களுக்கும் தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை, தேசோபகாரி  பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

Tuesday, March 10, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 21  வெளிவந்த 3 வது இதழ் (மலர் 4 - இதழ் 9).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தில் மூன்றாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில்: 
வீரமாமுனி எழுதிய  ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் மரத்திடை தவழ்ந்த  கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (2 ஆவது பக்கம்)

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையை எழுதுபவர் ஒரு கல்லூரி மாணவன் என்பதாகத் தெரிகிறது. 

இங்கிலாந்தின் தற்கால நிலை என்ற கட்டுரை உலக அரசியலை, இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை, இங்கிலாந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் கொண்ட உறவை, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் அதன் தாக்கத்தை இரு பத்திகளில் அலசுகிறது.


நாடார் கைத்தொழில் அபிவிருத்தி என்ற கட்டுரை இயந்திரமயமாக்கலால் கைத்தொழில்கள் நசித்துப் போனதுடன், கைத்தொழில் என்றாலே வியப்புடன் பார்க்கப்படும் நிலைமை ஒரு  நூறாண்டுக்கு  முன்னரே இந்தியாவில் ஏற்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறது. பத்துகஜம் நீளத்துணியும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் வகை நெய்யப்படும் சிறப்பு மிக்க "டாக்கா மஸ்லீன்" போன்றவற்றை உருவாக்கிய நெசவுத் தொழில்  புறக்கணிக்கப்பட்டு, ஒரு சிறு குண்டூசியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும்  அளவிற்கு இங்கிலாந்து அரசு இந்திய பொருளாதார  நிலைமையில் மாற்றம் செய்துவிட்டது  சுட்டிக்காட்டப்படுகிறது. இயந்திரங்களால் குறைந்தவிலையில் பொருட்களை தயாரிக்கும் வண்ணம்நிலைமை மாறியதும்,   தொழிற்புரட்சியில் இந்தியா பின்தங்கியதும் இதற்குக் காரணமாகக் காட்டப் படுகிறது.  இலங்கையின் ராஜா தேவாரம் நாடார் என்ற பொறியியல் படித்தவருக்கு உதவி செய்து அவருடன் இணைந்து தொழிசாலைகள் அமைத்து, அதில் 90%  நாடார் குல மக்கள் பங்கு பெற்று தொழில் செய்து, அக்குல மாணவர்களை அயல்நாட்டிற்கு பொறியியல் கல்வி பயிலவும், இந்திய அரசு ஆட்சியின் ICS சிவில் பட்டங்கள் பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,   தென்னாட்டில் நாடார் முயற்சி வடநாட்டின் டாடா போல இருக்க வேண்டும்  என்ற திட்டங்கள் முன்வைக்கப் படுகிறது.  ராஜா தேவாரம் நாடாரின் தொழிற்திறமை பற்றிய தனிக்கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜாஜியின் தலைமையில் சென்னை சட்டசபை நடப்பதும், சென்னை சட்டசபைக்கு திருநெல்வேலிக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் லஞ்ச ஊழல் நடந்ததெனவும்,  டெல்லியில் பூகம்பம், கொழும்புவில் வெள்ளம், பஞ்சாபில் அகாலிகள் தாங்கள் நடத்திய மதப் போராட்டத்தில் வெற்றி, காங்கிரசில் உள்ள பிளவு நேர் செய்யப்பட்டது நாக்பூரில்  காங்கிரஸ் மாநாடு நடந்தது.  ஜான்சியில் கணவரின் மறைவுக்குப் பின்னர் உடன்கட்டை ஏறிய 19  வயது பெண் ...
அந்நாளில் சென்னை மாகாண மக்கட்தொகை விவரம்:
மொத்த மக்கதொகை     42,794,155
இந்துக்கள்                            37,942,191
இஸ்லாமியர்கள்              2,865,235
கிறிஸ்துவர்கள்                 1,390,672
போன்ற  தகவல்கள் இந்த இதழில்  கிடைக்கின்றன.


குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்காக கட்டணம் கட்டுவதில் உதவி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன.
சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

Saturday, March 7, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 2 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 11  வெளிவந்த 2 வது இதழ் (மலர் 4 - இதழ் 8).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் இரண்டாவது  இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழின் சிறப்பு:  பெரியாருடன் ஒரு நேர் காணல் - அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்காக வந்திருந்த காங்கிரஸ் கட்சியுன் செயலாளரான ஈ. வெ . ரா வுடன் நாடார்குல மக்களின் நேர்காணல்
(இந்த நேர்காணல் கருத்துகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது)

குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற வழக்கமான பகுதிகள் தொடர்கின்றன.

பிரிட்டிஷ் கவர்ன்மெண்டில் மாறுதல் - "நமது"*** மாஜி பிரதம மந்திரி என்று பிரிட்டிஷ் பிரதமர் "லாயிட் ஜார்ஜ்" அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீமைப்பதிரிக்கைகள் பகுதி (6 ஆம்  பக்கத் தகவல் தரும் செய்தி), அக்காலத்திலும் ஆங்கில பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் அதிக விற்பனையாகும் பொழுது தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு இல்லாதிருந்திருப்பது தெரிய வருகிறது.  ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஆசிரியர் தரும் கருத்து இன்றைய தமிழக நூல் விற்பனை நிலையையும் ஒத்திருப்பது, தமிழர்கள் எக்காலத்திலும் படிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்களல்ல என்பதையே காட்டுகிறது.

வழக்கமான ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் யசோதையால்  கயிற்றால் கட்டப்படும்   கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (7 ஆவது பக்கம்).

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதை துவங்கியுள்ளது, ஆனால் ஆசிரியர் யார் என்ற குறிப்பு இல்லை.


விளம்பரங்கள்:
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன. 

சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களும் உண்டு.

பள்ளி இறுதி வகுப்பு /VI பாரம் முடித்த, ஆங்கிலம் படித்துள்ள 23 வயது வேளாளசைவ மணமகனுக்கு "அழகும் சொத்தும்" உள்ள எந்த இனத்தைச் சார்ந்த பெண்ணானாலும் தேவை என்றும், சொத்துள்ளவர்கள் 'மட்டும்' தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


லேகிய  விற்பனை விளபரங்களுமுண்டு, ஊர்க்குருவி லேகிய விளம்பரம்  'வெண்பா' பாடலாகவும்  எழுதப்பட்டுள்ளது.
நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்


*** [தனிப்பட்ட கருத்து...இங்கிலாந்து பிரதமரை நமது பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளதைப் படிப்பது  சுதந்திர இந்தியாவில் பிறந்த வளர்ந்த காரணத்தினால் படிப்தற்கு  வேதனை தருவதாக  இருக்கிறது]

Friday, March 6, 2015

பெரியாரின் குடி அரசு மின்னூல்கள்தமஅ வெளியீடு # 221   
குடி அரசு - 1925-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (அறிமுகம்)   
Kudiy-Arasu- 1925-1 : Periyarin Ezhuthum Paechum  (Preface)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_preface.pdf

தமஅ வெளியீடு # 222   
குடி அரசு - 1925-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 1)   
Kudiy-Arasu- 1925-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  1)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_part1.pdf

தமஅ வெளியீடு # 223   
குடி அரசு - 1926-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 2)   
Kudiy-Arasu- 1926-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  2)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-1part2.pdf

தமஅ வெளியீடு # 224   
குடி அரசு - 1926-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 3)   
Kudiy-Arasu- 1926-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  3)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-2part3.pdf

தமஅ வெளியீடு # 225   
குடி அரசு - 1927-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 4)   
Kudiy-Arasu- 1927-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  4)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-1part4.pdf

தமஅ வெளியீடு # 226   
குடி அரசு - 1927-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 5)   
Kudiy-Arasu- 1927-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  5)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-2part5.pdf

தமஅ வெளியீடு # 227   
குடி அரசு - 1928-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 6)   
Kudiy-Arasu- 1928-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  6)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-1part6.pdf

தமஅ வெளியீடு # 228   
குடி அரசு - 1928-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 7)   
Kudiy-Arasu- 1928-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  7)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-2part7.pdf

தமஅ வெளியீடு # 229   
குடி அரசு - 1929-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 8)   
Kudiy-Arasu- 1929-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  8)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-1part8.pdf

தமஅ வெளியீடு # 230   
குடி அரசு - 1929-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 9)   
Kudiy-Arasu- 1929-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  9)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-2part9.pdf

தமஅ வெளியீடு # 231   
குடி அரசு - 1930-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 10)   
Kudiy-Arasu- 1930-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  10)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-1part10.pdf

தமஅ வெளியீடு # 232   
குடி அரசு - 1930-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 11)   
Kudiy-Arasu- 1930-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  11)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-2part11.pdf

தமஅ வெளியீடு # 233   
குடி அரசு - 1931-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 12)   
Kudiy-Arasu- 1931-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  12)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_part12.pdf

தமஅ வெளியீடு # 234   
குடி அரசு - 1931-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 13)   
Kudiy-Arasu- 1931-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  13)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_2part13.pdf

தமஅ வெளியீடு # 235   
குடி அரசு - 1932-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 14)   
Kudiy-Arasu- 1932-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  14)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932_1part14.pdf

தமஅ வெளியீடு # 236   
குடி அரசு - 1932-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 15)   
Kudiy-Arasu- 1932-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  15)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932-2part15.pdf

தமஅ வெளியீடு # 237   
குடி அரசு - 1933-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 16)   
Kudiy-Arasu- 1933-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  16)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_1part16.pdf

தமஅ வெளியீடு # 238   
குடி அரசு - 1933-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 17)   
Kudiy-Arasu- 1933-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  17)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_2part17.pdf

தமஅ வெளியீடு # 239   
குடி அரசு - 1934-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 18)   
Kudiy-Arasu- 1934-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  18)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_1part18.pdf

தமஅ வெளியீடு # 240   
குடி அரசு - 1934-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 19)   
Kudiy-Arasu- 1934-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  19)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_2part19.pdf

தமஅ வெளியீடு # 242   
குடி அரசு - 1935-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 21)   
Kudiy-Arasu- 1935-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  21)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1935_2part21.pdf

தமஅ வெளியீடு # 243   
குடி அரசு - 1936-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 22)   
Kudiy-Arasu- 1936-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  22)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_1part22.pdf

தமஅ வெளியீடு # 244   
குடி அரசு - 1936-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 23)   
Kudiy-Arasu- 1936-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  23)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_2part23.pdf