Saturday, May 14, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 7

________________________________________________

1. வேழக் கரும்பு
அ. கந்தசாமிப் பிள்ளை
[இலக்கண நூல்களில் 'இருபெயரொட்டுப் பண்புத்தொகை'க்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் 'வேழக் கரும்பு' நீர்வளமுடைய நிலங்களில் வளரும், கரும்பின் தோற்றத்தை  ஒத்த ஒரு செடி. உட்புறம் புழையுடைதாக மூங்கில் போன்றதொரு தாவரம். தமிழிலக்கியம் காட்டும் 'வேழக் கரும்பு' குறிப்புகள் பற்றிய தொகுப்பு]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள்...  தொடர்கின்றன]

3. கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்த இடம் கோவிந்தபுத்தூர்.  இங்குள்ள சிவன் கோவில் திருவிசயமங்கை என அழைக்கப்படுகிறது. சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்ற திருத்தலம். இங்குக் காணப்படும் 7 கல்வெட்டுகளும் அவை வழங்கும் செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 உத்தமசோழனான (பொ. ஆ.970-985) மதுராந்தக சோழன் காலத்து கல்வெட்டுகள். இம்மன்னனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரும் இருந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது]

4. ஆழ்ந்த நோக்கம் யாண்டையது
R. வேங்கடாசலம் பிள்ளை
முனைவர் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியாரின்  தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மீது மற்றுமொரு விமர்சனம் வைகிறார் R. வேங்கடாசலம் பிள்ளை.  16, 17  ஆம் சூத்திர விளக்கங்கள் மீது சாத்திரியார் வைத்த  குறிப்புரை ஆராயப்படுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment