Tuesday, May 31, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 1

_________________________________________________________

1. புத்தாண்டு வாழ்த்து
அ. வரதநஞ்சைய பிள்ளை
[நேரிசை ஆசிரியப்பாவில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. புத்தாண்டு வாழ்த்து
C. M. இராமச்சந்திர செட்டியார் 
[மற்றொரு  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

3. கோளறு திருப்பதிகம் மயக்கமின்மை
அ. கந்தசாமிப்பிள்ளை
[இப்பதிவின் காலத்திற்குச் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர், தமிழ்ப் பொழிலில் விவாதிக்கப்பட்ட "ஒன்பதொ டொன்றோடேழு பதினெட்டொறுரும் உடனாய நாள்கள் அவைதாம்" என்னும் அடிக்குப் பொருள்  விளக்கம்  தரப்படுகிறது.  அத்துடன் ஆதிசங்கரரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும், சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், நாயனார் காலத்தில் அசுவனியே முதல் நாளாக எண்ணப்பட்டது(கார்த்திகை முதல் நாளாக எண்ணப்படவில்லை) என்றும் விளக்கம் தருகிறார் கந்தசாமிப்பிள்ளை]

4. துவார சமுத்திரத்து ஓய்சால வள்ளலார் I (கிபி. 11 - 14 ஆம் நூற்றாண்டு வரை)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[மேலைச் சாளுக்கியர்களுக்கும், தலைக்கோட்டையை  ஆண்ட கங்க மன்னர்களுக்கும் சிற்றரசாக திரை செலுத்தி வாழ்ந்த சிற்றரசர்கள் ஓய்சால வள்ளலார்கள் (ஹொய்சாளர்கள்) ஆவார்கள். அந்த அரசுகள் வலிமை குன்றியவுடன் கர்நாடகாவின் தென் பகுதியில் துவார சமுத்திரத்தையும், விக்கிரமபுரியையும்  தலைநகராகக் கொண்டு வலுவுள்ள ஓர் அரசாக ஹொய்சாளர்கள் மாறினார்கள். சுமார் 3 நூற்றாண்டுகளுக்குச் சிறப்புடன் ஆட்சி செய்து தமிழக மூவேந்தர்களையும் வென்றனர். இவர்களது  வரலாறு, இராமாநுஜருக்கு சோழனிடம் இருந்து ஹொய்சாளர்கள் அடைக்கலம் கொடுத்தது, அவரது தாக்கத்தால் சமண சமய ஹொய்சாள மன்னன் வைணவத்தைத் தழுவி  'விஷ்ணுவர்த்தனனாக' (கிபி 1116 இல்) மதம் மாறியது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது ]

5. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்  (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது என்பதனை கட்டுரை ஆசிரியர் இப்பகுதியில் மிக விரிவாக விளக்குகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

6. தம்பிரான்றோழர் தேவாரம்
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[தம்பிரான் தோழர் என அறியப்படுபவர், நம்பியாரூரனான சுந்தரமூர்த்தி நாயனார். திருவெண்ணெய் நல்லூரில் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், திருவாரூரில் சுந்தரரிடம் 'உனக்கு நம்மைத் தோழமையாகத் தந்தனம்' என்று அருளினார். எனவே சுந்தரர் தம்பிரான் தோழரானார். சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களின் (தேவாரம் - ஏழாம் திருமுறை) மீது அடியார், திருமால், நஞ்சு, மறை, தேவாரச் சிறப்பு என ஐந்து தலைப்புகளில்  இலக்கிய ஆய்வு நிகழ்த்துகிறார் இக்கட்டுரையின்  ஆசிரியர், கட்டுரையின் இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7.பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 37 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த புத்தாண்டு விழா, அப்பர் திருநாள் விழா, சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒப்பந்தக் காலம் முடிந்ததால் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்திகளும்,  யாழ்ப்பாணத்துக் கலாநிலைய சங்கத்தார் வெளியிடும் "ஞாயிறு" என்று தமிழில் வெளியாகும் மாத இதழின் மீது மதிப்புரை, ஆகியவை  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, May 30, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 12

_________________________________________________________

1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்கிய உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆற்றிய  உரை
சுவாமி விபுலாநந்தர்
[கற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நூல்கள் எவை, கற்றறிந்தோர் கடமை யாது? 960/1000 என்ற அளவில் தமிழர் கல்வியறிவின்றி அறியாமையால்  சூழ்ந்திருக்க, புண்ணியம் என்ற எண்ணத்தில், தானம் என்ற பெயரில் உதவி தேவையற்றோருக்கே  கைப்பொருள் செலவிடப்படுகிறது என அந்நாளின் தமிழக நிலையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்]

2. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டமையால் , அதிக காலம் இல்லாத காரணத்தால், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  ஆய்வை விரைந்து முடிக்க வேண்டுகோள் வைக்கிறார்  ஒளவை சு. துரைசாமி பிள்ளை அவர்கள். மேலும், தனது பங்கிற்கு இவரும் பற்பலப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய பின்னர், இந்த நூலை எவ்வாறு பல்கலைக்கழகம் பாடநூலாகத் தேர்வு செய்தது என்றும் வியக்கிறார்]

3. கண்ணப்பர் கண்ட அன்பு (தொடர்ச்சி...)
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது]

4. ஞாயிற்றின் வழிபாடு
வை. சுந்தரேச வாண்டையார்
[ஞாயிற்றை வழிபடுவது வரலாறு அறியாத காலத்திற்கும் முற்பட்ட  பண்டைய வழிபாட்டு முறை என்பது தொல்காப்பியம் மூலம் தெரிய வருகிறது. நற்றிணை,  சிலப்பதிகாரம், தேவாரம்  ஆகியவற்றிலும் ஞாயிறு போற்றப்பட்ட செய்திகள் உள. உண்மை இவ்வாறிருக்க, ஞாயிற்றின் வழிபாடு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் தோன்றியது என தமிழகக் கல்வெட்டுத் துறை வெளியிட்ட நூலொன்று கூறுவது   பிழையான கருத்தாகும் என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

5.தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கம்பர் திருநாள் விழா, குளித்தலை செந்தமிழ்ச் சங்கம் கொணர்ந்த தீர்மானங்கள்.  இதுவரை, முன்  7 துணர்களில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல்  ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 29, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 11

_________________________________________________________

1. திருக்குறளும் சேக்கிழாரும்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. The Historicity of 63 Tamil Saivite Saints - அறுபத்து மூவர் காலம்
K. சோமசுந்தரம்
[சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தைக் கொண்டு ஆராய்ந்தால், கிபி 690-710 காலத்தில்  வாழ்ந்த இரண்டாம் நரசிங்கவர்மன்(/ இராசசிங்கவர்மன் ) சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், திருநின்றவூர் பூசலார் நாயனார் ஆகியோர் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள்.  இதன் அடிப்படையில் 63 நாயன்மார்களும் கிபி  8 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் கூன் பாண்டியனது   (கிபி 600 களிள்) காலம், சமணம் மறைந்த காலமாகும். கிபி. 630 சமணம் தமிழகத்தில் வழக்கொழிந்தது என்பது போன்ற தகவல்களைக் கட்டுரை ஆசிரியர் வரலாற்றுச் செய்திகள் மூலம் முன்வைக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

3. ஒலியும் எழுத்தும்
K. P. சந்தோஷம்
[உணர்வுகளின் வெளிப்பாடாக எழும் ஒலி, அந்த உணர்வுகள்  விளக்கமுறுவதற்கே பேச்சாக  மாற்றமடைந்து உதவுகிறது, மொழியின் வளர்ச்சி, எழுத்து  வடிவில் உருப்பெறும் மொழியின் ஒலி, இலக்கணம் எனத்  தொடர்ச்சியாக ஒலி எழுத்தாக வளர்ச்சியுற்றது விவரிக்கப்படுகிறது]

4. கண்ணப்பர் கண்ட அன்பு
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் செய்திகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் விழா, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்தும் கட்டுரைப்போட்டி, தேர்வுப் பரிசுகள்,  பர்மாவில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் ஆதரவில் வெளிவரும் 'தனவணிகன்' என்ற வாரப்பத்திரிக்கையின் மேல் மதிப்புரை ஆகியவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவில் தலைமை தாங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்  தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்களின் படம் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 28, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 10

_________________________________________________________

1. ஓர் இந்தியப் பேரறிஞர்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
['ஆசியா' என்ற பத்திரிக்கையில் முன்னர் வெளிவந்த, ஜகதீச சந்திரபோஸ் அவர்களைப் பற்றி  நடுநிலையுடன் எழுதப்பட்ட கட்டுரையொன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு தொடர் கட்டுரை]

2. புத்தக நிலையம்
க. சம்பந்தம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு விழாவில் S. R. அரங்கநாதம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.  நூல் நிலையத்தின் இன்றியமையாமை, நூல்நிலைய செயல்முறைகளில் மேம்பாடு, பயனர்களிடம் விழிப்புணர்வு உருவாக்குதல் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வு]

3. பழைய காலத்தின் இரு பெருங் கிணறுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருச்சிக்கு அருகிருக்கும்  திருவெள்ளறையில் உள்ள 'மாற்பிடுகு பெருங்கிணறு'  என்ற கிணற்றில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம்  அக்காலத்தில் கிணறுகளுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  மால்+பிடுகு = 'பேரிடி' என்பது  பொருள்; தெள்ளாறெறிரிந்த நந்திவர்மனின் தந்தை தந்திவர்வமனே (கி.பி. 780-830) 'மாற்பிடுகு' என்ற பட்டம் பெற்றவன். அதனால் தந்திவர்மன் மன்னன் காலத்தில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் இக்கிணறு வெட்டப்பட்டது என்பது புலனாகிறது. மேலும், கம்பன் என்னும் பெயர் எட்டாம் நூற்றாண்டில் இயற்பெயராக வழங்கி வந்துள்ளமையும் தெரிய வருகிறது. 

மாமண்டூருக்கு அருகில் உள்ள உக்கல்  என்ற ஊரின் 'இராசராசன் கிணறு' என்றழைக்கப்படும் கிணற்றின் கல்வெட்டுத் தகவல்படி;  கண்ணன் ஆவூரன் என்ற தலைவன், தனது அரசன் இராஜராஜன் பெயரால் கிணறு வெட்டுவித்து, தண்ணீர் இறைத்த பணியாளருக்கு நாளொன்றுக்கு  'அருமொழிதேவன் மரக்கால்' (அரசாங்க முத்திரையிடப்பட்ட மரக்கால்களுக்கு இராசகேசரி, அருமொழிதேவன், ஆடவல்லான் (தஞ்சைக் கோயில்) என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன, இவையாவும் ஒரே அளவைக் கொண்டவை) என்ற அளவில் இரண்டு மரக்கால் நெல் கூலி கொடுப்பித்ததைக்  கூறுகிறது.  இது அக்காலப் பெருவழியில் இருந்த கிணறு எனவும்  தெரிகிறது ]

4. திருக்குறளும் சேக்கிழாரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[ஜனவரி 1933 இல்  அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்க விழா சிறப்புடன் நடைபெற்றது.

நூல் மதிப்புரை: சுவாமி கேதாரீசுவரா நந்தர் எழுதிய, 'பாலபோத விவேகாநந்த சரிதம்' நூல்; மற்றும், S.P.Y. சுரேந்திரநாத் வாயிகிலி ஆரியா எழுதிய, தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த "Temple Chimes" நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, May 27, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 9

_________________________________________________________

1. இன்ப நிலை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொறிகளுக்கு எட்டாது, உணர்விடையே நிகழும் தன்மையான இன்பநிலை பற்றியும், ஐம்புலன்களால் பெறப்படும் இன்பநிலை பற்றியும்,  தமிழிலக்கியங்களில் இன்பம், துன்பம் ஆகியன பற்றி கொடுக்கப்படும் கருத்துக்களையும் ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர்]

2. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

3.  தஞ்சை - திருச்சி ஜில்லா, தமிழர் மகாநாடு, துறையூர்
இதழாசிரியர்

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, May 26, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 8

_________________________________________________________

1. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற  நெடுஞ்செழியன் எனக் கருத தக்கச் சான்றுகள் இல்லை என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. இது ஒரு தொடர் கட்டுரை]

2. புவியின் புராதனம்
பா. நடராசன்
[ஆராய்ச்சி மாணவர் ஒருவர் எழுதியது. சைவ சித்தாந்த வேதாந்தத் தத்துவங்கள், சமண கிறித்துவ மதங்கள்  புவியின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளின் தொகுப்பிற்குப் பிறகு; அறிவியல் கருத்துக்களையும், அறிவியல் வழி புவியின் வயது கணக்கிடப்பட்ட முறைகளைப் பற்றிய கருத்துக்களையும்  முன்வைக்கும் கட்டுரை.

3. துறையூரில்  நடைபெற்ற  'தமிழ் ஆர்வலர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த கா. சுப்பிரமணிய பிள்ளை  அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
கா. சுப்பிரமணிய பிள்ளை

4. திருக்குறளும் கம்பரும் (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் 51 இடங்களில் எடுத்தாண்டதைப்  பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இத் தொடர் கட்டுரை நிறைவுற்றது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, May 25, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 7

_________________________________________________________

1. மண்ணுலகம்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[புவியின் தோற்றம், உருவம், கால மாறுதல், பருவ மாறுதல், அண்டம் ஆகியன பற்றிய அறிவியல் செய்திகள் வரலாற்றுப் பார்வையுடன் கொடுக்கப்படுகிறது]

2. தாய் மொழித் தொண்டு - சிவப்பிரகாசம் பிள்ளையின் சொற்பொழிவிலிருந்து
சிவப்பிரகாசம் பிள்ளை
[செய்யுள் - தமிழ்த் தொண்டு புரிய வேண்டுகோள் விடுத்த உரை செய்யுள் வடிவில் .. ]

3. மனோன்மணீயமும் மதுரமொழிகளும்
எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
[மனோன்மணீயத்தில் இடம் பெற்ற, நூற்றைம்பதுக்கும்  மேற்பட்ட அரும் பெரும் பழமொழிகளும், பொருண்மொழிகளும், உவமங்களும், மதுர மொழிகளும் இடம் பெற்ற   வரிகள்  பட்டியலிடப்பட்டு  இலக்கிய நயம் பாராட்டப்படுகிறது.

4. மறுப்பு முறை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு, சோமசுந்தரம் பிள்ளை சார்புநிலையின்றி நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆராய முற்படும் பொழுது வேதாலசய்யர் இடையிடுவது முறையன்று; அது தருக்க நெறிக்கு ஒவ்வாத செயல். அத்துடன், சாத்திரியாரின் உரைநடையை விமர்சிப்பது சரியல்ல என்று கூறுவதும் பொருத்தமல்ல; இலக்கண ஆராய்ச்சிக்கு எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணை அறிவு தனது ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதிலும் தேவை. நூலாசிரியரான  சாத்திரியாரின் கருத்தறியாது  வேதாலசய்யர் மறுப்பெழுதத் துவங்குவதும் சரியல்ல  எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்]

5. தமிழ்ச் செய்திகள்
[தமிழ் வித்துவான் தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு தமிழ்ப்பரிசு, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி விழா செய்திகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையின் ஒரு பகுதி என அக்கால நடப்புச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, May 24, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 6

_________________________________________________________

1. ஒளியும் வண்ணமும்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? ஒளியலைகள் என்ற கட்டுரைகளைத்  தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை நியூட்டனின் முப்பட்டைக் கண்ணாடி ஒளிக்கற்றை சோதனை,  ஒளிக்கற்றையின் நிறக்கூட்டுப் பண்புகள் ஆகியவற்றை  விளக்குகிறது]

2. சிறியன இகழேல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[இது, "Little Things" என்ற தலைப்புடன் "ஜஸ்டிஸ்" இதழில் ஜூன் 13,  1932 அன்று வெளிவந்த ஆங்கிலக் கவிதையைத் தழுவி எழுதப்பட்டது]

3. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு  (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளின் மீது  சோமசுந்தரம் பிள்ளை தரும்   விளக்கம் ... இக்கட்டுரையுடன் முடிவுறுகிறது]

4.  துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில், மாநாட்டிற்குத் தலைமையேற்ற திரு. வி. கலியாணசுந்தர முதலியார்  அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
வி. கலியாணசுந்தர முதலியார்
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, May 23, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 5

________________________________________________________________

1. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்ப்புலவர்' மாநாட்டில்,  மாநாட்டிற்குத் தலைமை வகித்த  கா. நமச்சிவாய முதலியார்  அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
கா. நமச்சிவாய முதலியார்

2. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்'  மாநாட்டில்,  மாநாட்டிற்கு வரவேற்புத் தலைமை வகித்த K.C.M. வெங்கடாசல ரெட்டியார் அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
K.C.M. வெங்கடாசல ரெட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த C.M. இராமச்சந்திர  செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
C.M. இராமச்சந்திர  செட்டியார்

4. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு  (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்புகளுக்கு விளக்கம் இக்கட்டுரையில் தொடர்கிறது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 22, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 4

________________________________________________________________

1. துறையூர் மாநாடுகள்
த.வே. உமாமகேசுவரன்
கா. நமச்சிவாய முதலியார், வி. கலியாணசுந்தர முதலியார், S. குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் முறையே; தமிழ்ப்புலவர், தமிழ் மாணவர், தமிழ் ஆர்வலர் மாநாடுகளுக்குத் தலைமை வகிக்க துறையூரில் தமிழ்  மாநாடுகள் (ஆகஸ்ட் 6, 1932) நடைபெற்றன. மாநாட்டில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி, தமிழைப் பயிற்றுமொழியாக்கல், பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படல், தமிழில் பயிற்றுவிக்க அதிக மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழில் எழுத வேண்டுதல், பெண் கல்வி  என இன்றும் கோரப்படும் வேண்டுகோள்களை  அன்றும் '6' தீர்மானங்களாக  மாநாட்டில் கொண்டு வந்துள்ளனர்]

2. துறையூரில்  நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கப் பேருரை
மு. கதிரேசச் செட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில்,  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
 ந. மு. வேங்கடசாமி நாட்டார்

4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 33-34 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

5. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்பு 1 இன் விளக்கம் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 21, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
தமிழ்ப் பொழில்

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 3

________________________________________________

1. 21 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்து நிறைவு விழாவில் அவைத்தலைவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களது உரை
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[கல்வியின் அருமை பெருமை, தாய்மொழிக் கல்வியின்  இன்றியமையாமை பற்றி குறிக்கும் சிறப்புரை, தமிழின் இ(அ)ன்றைய நிலை குறித்தும், வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துகள் இடம் பெறுகின்றன]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டு  விழாவின் அவையோர் எடுத்த முடிவுகள்
[சென்னைப் பல்கலைக்கழகம் உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும், இராஜா  சர் அண்ணாமலைச் செட்டியாருக்கும் 'முதுபுலவர்' (முறையே Doctor of Literature & Doctor of Laws) பட்டம் வழங்கவிருக்கும் செய்தியும் அதற்காக பல்கலைக்கழகத்தைப் பாராட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மன்னரையும் தமிழ்ப் பல்கலைக்கழகமொன்றைத்  துவக்கவும்,  தமிழகக் கோவில்களில் கிடைக்கும் அதிகப்படி வருமானத்தை தமிழ்க் கல்விக்கு வழங்கவும் வேண்டுகோள்கள் எனத் தமிழ் வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன]

3. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கண்ட சில செய்திகள்
வை. சுந்தரேச வாண்டையார்
[தமிழக வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியம் ஊரில் உள்ள கோவில் மிகவும் பழமையான கோயிலாகவும் நான்கு சைவக்குரவர்களாலும்  பாடப்பட்ட தேவாரத் தலமாகும்.  இங்குள்ள ஆதித்தேச்சுரம் கோவில் சிலப்பதிகாரத்தில் காணப்படும் "வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள்" எனக் குறிப்பிடப்படும் நிகழ்வைக் குறிப்பதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ஒரு ஆலயம்.  இங்கு முதலாம் ஆதித்த சோழன்  காலம் முதல் விசயநகர வேந்தன் காலம் வரை சுமார் நூறு  கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன]

4. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[கரிகால் வளவன், வளவனின் தந்தை உருவப்பஃறேர்  இளஞ்சேட் சென்னி ஆகியோர்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன]

5. ஐயவினா
மி. பொ. இராமநாதன் செட்டியார்
[புறப்பொருள் வெண்பாமாலை, 'உழிஞைத்திணையுள் உழுவித்திடுதல்' துறைக்கான  பாடலில் காணப்படும் 'வெள்வரகு கொள் வித்திடினும்', 'துண்ணா  வரகொடு கொள்வித்தின்று" ஆகிய வரிகளில் வரும் 'வரகு, கொள்' ஆகியவற்றின் மேல் எழுந்த ஐயத்திற்கு விளக்கம் கோருகிறார் இராமநாதன் செட்டியார்.

6. மதிப்புரை
'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்'  அவர்களின் நூலான 'தமிழ்ச்சொற் பிறப்பராய்ச்சி' நூலின் மீது மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, May 20, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 1 & 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
தமிழ்ப் பொழில்

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 1 & 2

________________________________________________

1. பொழிலின் புத்துயிர்
R. வேங்கடாசலம்
[எட்டாம் ஆண்டில் தமிழ்ப்பொழில்.  பொழிற்றொண்டர்களில் ஒருவரான திரு. R. வேங்கடாசலம் அவர்கள் ஊர் மாற்றலால் விடை பெறுகின்றார்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து 21 ஆம் ஆண்டு நிறைவு விழா
இதழாசிரியர்
[விழாவில் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு சங்கத்தார் கூறிய வரவேற்பு வாழ்த்துப்பாடல்; ஆண்டறிக்கை ; தமிழ்ப்பொழிலுக்கு இணையாக வெளிவரும் மாற்றிதழ்கள்: செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், ஆனந்த போதினி, யதார்த்தவசனி, அரிசமய திவாகரம், சித்தாந்தம், பாரத தர்மம், முன்னேற்றம், பாரதி,  யாதவ மித்திரன், கலைமகள், சன்மார்க்கம் என 13 இதழ்களின் பெயர்கள் சுட்டப்படுகின்றன]

3. திருக்குறள் அமைப்பு
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளுக்கு முன்னும் பின்னும் தோன்றிய நூல்கள் பல மறைந்து போனாலும், திருக்குறள் அழியாது இன்றும் மக்களால் போற்றப்படுவதன் காரணம் அதன் அமைப்பே எனவும், எண் ஆரூட (நியூமராலஜி) முறை போன்ற விளக்கமும் கொடுக்கப்படுகின்றது]

4. கோளறுபதிகம் - விளக்க மயக்கம்
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த  விளக்கம் தனக்குப் புரியவில்லை  என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை  முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை... இது இக்கட்டுரையின்  முற்பகுதி ]

5. தமிழ்நாட்டு வரலாறு
நீ.  கந்தசாமிப்பிள்ளை
[தமிழகத்தின் வரலாறு; சங்ககால மன்னர்கள், மூவேந்தர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் முதற்கொண்டு  நாயக்கர் காலம், நடந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தின் வரலாறு சுருக்கமாகக் கூறப்படுகிறது]

6. முற்காலத்தில் நாட்டுப்புற ஊர் (கிராம) வாழ்க்கை
நீ.  கந்தசாமிப்பிள்ளை
[பழங்காலத்தில் இயற்கையுடன் இயைந்த கிராமப்புற வாழ்க்கையையும், அதன் சிறப்பையும், அக்காலத்து தொழில்கள் பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் சுருக்கமாக விவரிக்கும் ஒரு கட்டுரை]

7. கோளறுபதிகம் - விளக்க மயக்கம் (இதே இதழின் கட்டுரையின் பிற்பகுதி இங்கு தொடர்கிறது)
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த  விளக்கம் தனக்குப் புரியவில்லை  என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை  முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை]

8. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு இக்கட்டுரையில் தொடர்கிறது ... ]

9. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு, இனி வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்க எண்ணியுள்ளதாக கட்டுரை ஆசிரியர் கூறுகிறார்; சுப்பிரமணிய சாத்திரியாரும் வேதாலசய்யரும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதாக (அரசியல் செய்வதாக) சோமசுந்தரம் பிள்ளை கருதுகிறார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, May 19, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 12

________________________________________________

1. கரிய அன்னப்பறவை (The Black Swan)
அ. கந்தசாமிப் பிள்ளை
[கச்சியப்ப முனிவரின் பேரூர்ப் புராணத்தில், 'பையரா வகலல்குற் காரன்னம் படர்தலொடும்' என்பது வயலில் கருப்பு அன்னங்கள் புகுதலும், அங்கிருந்த வெள்ளையன்னங்கள் வெளியேறின என்பதைச் சொல்கிறது. இங்குக் கருப்பு அன்னம் என்பது யாரைக் குறிக்கிறது என ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்பாடலுக்கும் முதல் பாடலில் இருந்து பொருள் கொண்டால், அது காரன்னம் என்பது 'கடைசியர்' அல்லது பள்ளர் மகளிர்களையே குறிக்கிறது. எனவே எதற்கு அம்மகளிருக்குக் காரன்னம் என்ற உவமை கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பதை விளக்கும் கட்டுரை. காரன்னம் 1. கருமூக்கு அன்னம், 2. கருங்கழுத்து அன்னம், 3. கறுப்பு அன்னம் என மூவகைப்படும். எனவே காரன்னம் என்பது இல்பொருளன்று; உள்பொருளே என்கிறார்  கந்தசாமிப் பிள்ளை]

2.காளமேகப்புலவரது காலம்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
['ஆசுகவியால் அகிலவுலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்' எனப் புகழப்பட்ட காளமேகப்புலவர் வாழ்ந்த காலத்தினை ஆராயும் முயற்சி. மன்னர் திருமலைராயன் என்பவன் வறுமையில் வாடியத் தனக்குதவியதை காளமேகம் தமது பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.  இம்மன்னனுக்கு விதரணராமன் என்றொரு பெயரும் உண்டு. முடிகொண்டான் ஆற்றுக்கும் அரிசிலாற்றுக்கும் இடையில் திருமலைராசன் என்ற ஆறு இவனது காலத்தில் வெட்டப்பட்டது.  காரைக்காலுக்கு தெற்கே உள்ள திருமலைராசன் பட்டணமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டது. இவனது கல்வெட்டுகள் பாபநாசம், தஞ்சை, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவன் வழங்கிய கொடை பற்றிக் கூறும் தஞ்சைக் கல்வெட்டு தரும் தகவலின்படி இவனது காலம்  கி.பி. 1455 ஆம் ஆண்டு. இவன் விசயநகர மன்னனான மல்லிகார்ச்சுனராயர் விரூபாஷராயர்  பிரதிநிதியாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவன். எனவே, காளமேகம்  15 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர்]

3. கம்பர் உவமக்கவின்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

4. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன:  இந்நாட்களில் கோயில் திருவிழாக்கள் 10 நாட்கள் கொண்டாடப்பட்டாலும், மூவேந்தர் ஆண்ட காலங்களில் ஏழு நாட்களே அவை கொண்டாடப்பட்டதாக மூன்று கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின்படி தெரிகிறது.
2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்:  குண்டூர் மாவட்ட 'ஆதங்கி' என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டில் தெலுங்கு  செய்யுள் ஒன்று  காணப்படுகிறது. இதில் கி.பி. 845 பற்றிய செய்திகள் உள்ளன, அத்துடன் செய்யுளும் உள்ளது. இதற்கு முந்தைய தெலுங்கு  செய்யுள் எதுவும் இதுவரை கிடைக்காததால், தெலுங்கு செய்யுளின் துவக்கத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் எனக் கொள்ளலாம். பதினொன்றாம் நூற்றாண்டில், கீழைச் சாளுக்கிய முதல் இராசராசனின் அவைப்புலவராக இருந்த நன்னயப்பட்டர் என்பவர் மகாபாரதத்தைத்  தெலுங்கு செய்யுள்களாக எழுதினர். எனவே பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முதல் தெலுங்கு செய்யுள் நூல் எழுதப்பட்டது. 
3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு: பாண்டியநாட்டுக் கல்வெட்டு ஒன்றில் மட்டுமே 'சேனாவரையர்' என்றொரு குறிப்புள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சில பெயர்கள் வழக்கத்தில் இருக்கும் என்பதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.
4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப்  பட்டது என்பது கல்வெட்டுகள் பலவற்றின் மூலம்  தெரியவரும்  செய்தி, உத்தம சோழன்  செப்பேடு ஒன்றும் இத்தகவலைத் தருகிறது... இது ஒரு தொடர் கட்டுரை] 

5. கல்வி நிலை (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, மிக விரிவாகக் கல்வி கற்பதன் சிறப்பை எடுத்துரைக்கும் கட்டுரை]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

7. ஐயம்
தி. அ. முத்துசாமிக் கோனார்
[" கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"
என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, May 18, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 11

________________________________________________

1. திருக்குறளும் கம்பரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் எடுத்தாண்ட செய்யுள்களை எடுத்துக்காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர், இக்கட்டுரையில் 34 திருக்குறள்களின் கருத்துகள் கம்பரால் தனது செய்யுள்களில் எடுத்தாளப்பட்டதைப் பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இது ஒரு தொடர்கட்டுரை]

2. ஒளியலைகள்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? என்ற கட்டுரையைத் தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை காந்த அலைகள், மின்காந்த அலைகள், மின்சாரம் ஆகியவற்றின்  அறிவியல் பண்புகளை  விளக்குகிறது]

3. சிதம்பரம் கல்வெட்டுகள்
S. K. கோவிந்தசாமி
[அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர், சிதம்பரம் நடராசர் கோவிலில் காணப்படும் 3 கல்வெட்டுகளின் தகவல்களைத் தருகிறார் ]

4. "சைவமும் தமிழிலக்கியமும்" என்னும் கட்டுரையின் ஐயவுரை
G. சுப்பையா
['துணர்: 7  -  மலர்: 8' இல் வெளியான 'வை. சுந்தரேச வாண்டையார்'  அவர்களின் 'சைவமும் தமிழிலக்கியமும்' என்ற கட்டுரை, தலைப்பிற்கேற்ற செய்திகளைக் கூறவில்லை என்பது ஐயவுரை எழுதியுள்ள சுப்பையா அவர்களின் கருத்து, சுந்தரேச வாண்டையாரின் கட்டுரை மீது விமர்சனங்கள் வைக்கிறார்]

5.  கல்வி நிலை  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இளமைக் காலத்திலேயே கற்பதன் அருமை, ஆசிரியர் உதவியுடன் கற்கவேண்டியதன் தேவை, மாணவர்களின் பண்பு, கற்கக் கூடிய பாடங்களின் வகைகள், அவற்றைக் கற்க வேண்டிய சரியான காலப் பொழுது ஆகியன விளக்கப் படுகின்றன]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மறுப்பின் மறுப்பு
P. S. வேதாசலய்யர்
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது மறுப்புரைகளைப் பதிவு செய்து வருகிறார்  ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள்.  சோமசுந்தரம் பிள்ளை  எழுதிவரும் இத்தொடர்  கட்டுரையின் மீது  தனது மறுப்புரைகளைப் பதிவு செய்கிறார்  P. S. வேதாசலய்யர் அவர்கள்.  கூறப்படும் மறுப்புரைகள் பெரும்பாலும்  சாத்திரியாரின் உரைநடையைப் பற்றியக் கண்டனங்களாகவே உள்ளனவே, இக்கட்டுரை கற்போருக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா என்பது வேதாசலய்யர் முன் வைக்கும் கேள்வி, மறுப்புகளுக்கு மறுப்பு என்னும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை  ... ]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  35 - 36 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, May 17, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 10

________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  32 - 33 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. அழுமூஞ்சி செல்லையா
R. வேங்கடாசலம் பிள்ளை
[பள்ளிக்கூட மாணவர்கள் பக்கங்கள், தஞ்சை பேதுரு பள்ளியின் Petrinian என்ற இதழுக்காக எழுதப்பட்டது. இரக்கம் மிகுந்த மாணவன் ஒருவனை 'அழுமூஞ்சி செல்லையா' என வகுப்பில் உடன்பயிலும் மாணவர்கள் பகடி செய்ய, அதனைத் தொடர்ந்து ஆசிரியர் இரக்கக் குணத்தின் மேன்மையை உணர்த்தக் கதைகள் பல சொல்லி மாணவர்களுக்கு விளங்க வைக்கும் முயற்சி. இக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, May 16, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 9

________________________________________________

1. கல்வி நிலை
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, தமிழகத்தில் பண்டைக்காலம் முதல்  தமிழுடன் புழக்கத்தில் இருந்த பிற மொழிகளைப்  பற்றியும் ஒப்பிட்டு ஆராய்கிறது]

2. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1190-1310  ஆம் ஆண்டு வரை  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. கோளறு திருப்பதிகம்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்ற அடிக்கும், அத்துடன்  திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும்  விளக்கம் அறிய விரும்பி முன்வைத்த வேண்டுகோளினை ஏற்று (பார்க்க ஏழாம் துணர், மூன்றாம் மலர்) விளக்கம் கொடுக்கப்படுகிறது.   'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்பது நாள்கள் அனைத்தையும் குறிக்கவில்லை. அவற்றுள் ஆகாதனவற்றையே குறிக்கின்றது, அவையும் அசுவனியை  முதலாகக்  கொண்டு  எண்ணப்பட்டவை என்று கொள்வதே கால ஆராய்ச்சிக்கும் ஒத்ததென்றும் கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்]

4. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

5. மிருச்சகடி
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[மகத நாட்டின், உச்சயினிபுரம் என்ற நகரில் வாழ்ந்த சாருதத்தன் அவனது மனைவி தூதாதேவி ஆகியோரைப் பாத்திரங்களாகக் கொண்ட ஒரு சிறுகதை, "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு" என்ற   நீதியைக் கூறும் கதை]

6. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர், அதியமான்-ஔவை, நெடுஞ்செழியன்-பேரெயின் முறுவலார் ஆகிய அரசர்-புலவர்  உறவுகளும், நல்லிசைப்புலமை நங்கையர், காவலரின் மனப்பாங்கு, காவலரின் நன்கு மதிப்புப் பெற்ற பாவலர்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன, இது ஒரு தொடர் கட்டுரை]

7. பொங்கற் புதுமலர்
பொழிற்றொண்டர்
[பொங்கல் வாழ்த்துப் பாடல்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 15, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 8

________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  26 - 31 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. பையன்
T.S. கந்தசாமி முதலியார்
[சொல்லாராய்ச்சி - பையில் புத்தகத்தைச் சுமந்து சென்றதால் சிறுவனைப் பையன் என்று அழைத்தனர்  எனவும்; ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் வளரும் பருவங்களைக் குறிப்பிடும்பொழுது புத்தகப்பையை முதுகிலிட்டு தளர்நடையிட்டுச் செல்லும் சிறுவன் எனக் குறிப்பிடுகிறார் எனவும் சொல்லாராய்ச்சியாளர் ஒருவர் முன் வைத்த கருத்தினை கட்டுரை ஆசிரியர் ஆராய்கிறார். ஆங்கிலமொழி 'Boy' க்கும் தமிழ்ப் 'பையனு'க்கும் யாதொரு தொடர்புமில்லை. அச்சொற்களுக்குள் காணப்படும் ஒலியொற்றுமை போலி என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. பசுமை என்னும் பண்புப்பெயர் 'அன்' என்னும் ஆண்பாற் பெயர் விகுதியோடு புணர்ந்து 'பையன்' என்றானது என விளக்குகிறார்]

3. பொருண்மொழி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொருண்மொழி  என்பது பழமொழியைப்போல் நுண்பொருளை உள்ளடக்கியதொரு நன்மொழி. தமிழ்நூல்களில் பொருளுரை என்றும் பொருண்மொழிக் காஞ்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. சொல் சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டமையும் பொருண்மொழி புலவர்களால் விரும்பப்படுவது. இவற்றால் நாம் பெறும் அறிவின் இயல்பு விளக்கப்பட்டு, மக்கள் நாள்தோறும் செய்யும் குற்றங்களையும், நலன்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்கவும் போற்றவும் உதவும் வண்ணம் பொருண்மொழிகள் அமைந்த நூல்கள் நமக்குத்  தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, சில ஆங்கிலப் பொருண்மொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன]

4. சைவமும் தமிழிலக்கியமும்
வை. சுந்தரேச வாண்டையார்
[இதுநாள் வரை தோன்றிய சிறந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்தால், சைவசமயம் சார்ந்தவையே அதிகமிருக்கும் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. தமிழும் சைவமும் நாட்டுக்கு உடலும் உயிரும் போன்று ஒன்றுக்கொன்று இன்றியமையாதவாறு அமைந்தது போல அமைந்திருந்தன என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, May 14, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 7

________________________________________________

1. வேழக் கரும்பு
அ. கந்தசாமிப் பிள்ளை
[இலக்கண நூல்களில் 'இருபெயரொட்டுப் பண்புத்தொகை'க்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் 'வேழக் கரும்பு' நீர்வளமுடைய நிலங்களில் வளரும், கரும்பின் தோற்றத்தை  ஒத்த ஒரு செடி. உட்புறம் புழையுடைதாக மூங்கில் போன்றதொரு தாவரம். தமிழிலக்கியம் காட்டும் 'வேழக் கரும்பு' குறிப்புகள் பற்றிய தொகுப்பு]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள்...  தொடர்கின்றன]

3. கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்த இடம் கோவிந்தபுத்தூர்.  இங்குள்ள சிவன் கோவில் திருவிசயமங்கை என அழைக்கப்படுகிறது. சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்ற திருத்தலம். இங்குக் காணப்படும் 7 கல்வெட்டுகளும் அவை வழங்கும் செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 உத்தமசோழனான (பொ. ஆ.970-985) மதுராந்தக சோழன் காலத்து கல்வெட்டுகள். இம்மன்னனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரும் இருந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது]

4. ஆழ்ந்த நோக்கம் யாண்டையது
R. வேங்கடாசலம் பிள்ளை
முனைவர் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியாரின்  தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மீது மற்றுமொரு விமர்சனம் வைகிறார் R. வேங்கடாசலம் பிள்ளை.  16, 17  ஆம் சூத்திர விளக்கங்கள் மீது சாத்திரியார் வைத்த  குறிப்புரை ஆராயப்படுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, May 13, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 6

________________________________________________

1. நான்மொழி நாடு
அ. கந்தசாமிப் பிள்ளை
[சேலம் மாவட்டம் 'நாமக்கல்' பகுதியே 'நான்மொழிக் கோசர் நாடு' என அழைக்கப்பட்ட 'நாமக்கல் நாடு', என்பதாக 'மு. இராகவையங்கார்' எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' நூல் இரண்டாம் பதிப்பின், பக்கம் 108-9 இல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகவல் "பிழையானது" நாமக்கல்லுக்கும், நான்மொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகேந்திர பல்லவனால் உருவாக்கப்பட்ட இந்தக் குடைவரை திருமால் கோயில் 'அதிகேந்திர விண்ணகரம்' என்பதாகும். மலையில் நாமங்கள் தீட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதன் பழைய பெயர் 'திருஅறைக்கல்'  (அறை = பாறை, கல்=குன்று). கல்வெட்டுத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மதுரைக் காஞ்சி' குறிக்கும்  'நான்மொழிக் கோசர் நாடு'  இதுவன்று ]

2. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  பாவலரின் அறவுரைகள், பாவலர்கள் உற்றுழியதவும் அருஞ்செயல்கள், இது ஒரு தொடர் கட்டுரை]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு  25 -  கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெறுகிறது ... ]

4. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் காணப்படுகின்றன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, May 12, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 5

________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  21 - 22 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. ஒளியென்பது யாது?
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியைப் பற்றிய இயற்பியல் கட்டுரை, நியூட்டன், யங் அறிவியல் கொள்கைகளை விளக்குகிறது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[இதே இதழில் மீண்டும் ... தொடர்கிறது...  மறுப்புக்கள் 23 - 24]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, May 11, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 4

________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் உள்ளது என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார்.
நூலாசிரியருக்குத் தமிழிலக்கணத்தில் ஆழ்ந்த பயிற்சியும், வடமொழி இலக்கணத்தில் பயிற்சியும் இல்லை என்பதையே அவரது நூல் காட்டுகிறது, அவரது எழுத்துகூட சரியான தமிழின் நடையில்  காணப்படவில்லை என்பதோடு, ஆங்கில நடையுடனும் எழுதுகிறார் என்பது  இக்கட்டுரை ஆசிரியரான சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  கருத்து.
மறுப்புக்கள்  1 - 20 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ஆனால் இந்த மறுப்புக்கள் கட்டுரை மேலும் தொடரப்போவதாகத் தெரிகிறது.  குறிப்பாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் பெரியோர்களில்  பலர்  இக்கட்டுரை ஆசிரியர் இக்கட்டுரையை எழுதுவதற்கு ஆதரவும் வேண்டுகோள்களும் வைத்துள்ள குறிப்பும் கட்டுரையின் முன்னுரையில் காணப்படுகிறது. இந்த இதழில் 48 பக்கங்களுக்கு இந்த ஒரு கட்டுரை மட்டுமே அமைந்துள்ளது.  இது ஒரு தொடர் கட்டுரை]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, May 10, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:2&3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்:2&3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்:2&3
________________________________________________

1. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[நான்மறைகள், தமிழ் மறைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.  நான்மறைகள் இயற்றியமைக்கும் தேவாரம் முதலாகிய தமிழ் மறைகள் இயற்றப்பட்டமைக்கும் காணப்படும் ஒற்றுமைகளின் மீது ஆய்வு]

2. ஓர் வழக்கீடு (தொடர்ச்சி...)
அ. கந்தசாமிப் பிள்ளை
[ரா. இராகவையங்கார் அவர்களுக்கு மறுப்பு.  தமிழ்மகனார் என்ற வழக்குத் தொடுப்பவர், வடமொழியாளர்  என்ற எதிரி மீது தொடுத்த வழக்கின் மீது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் கற்பனையான வழக்காடுமன்ற நாடகம்.  இதில், திருக்குறள் வடமொழியில் இருந்து வந்ததென்று கூறும் வடமொழியாளருடன் சான்றுகளோடு வழக்காடுகின்றார் தமிழ்மகனார்.     திருமால் மீதான வடமொழிப் பாடலை வள்ளுவர் குறளில் எடுத்தாண்டார் என்ற சேது சமஸ்தான ரா. இராகவையங்கார் அவர்களின் கூற்றை முன்வைத்து அதற்கு சுதேசமித்திரன்  (அக்டோபர் 27, 1930) இதழில் காணப்பட்ட விளக்கத்தைச் சான்றாக வைக்கிறார் ஒரு வடமொழிப் புலவர் ....  அதற்கு மறுப்பும் எழுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரம் முரண்கள் நிறைந்ததாகக் காட்டப்படுகிறது.  "வடமொழியாளர் குற்றவாளி" என்பது அவைத்தலைவரின் தீர்ப்பு ]

3. தொடக்கக் கல்வி
க. சம்பந்தம் பிள்ளை
[தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்க வேண்டியதன் இன்றியமை பற்றி விளக்கும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

4. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது வயதிற்கேற்ற சரியான உடல் எடை காட்டும் அட்டவணைகள், முதலுதவி மருத்துவம், பற்றிய தகவல்கள் தொடர்கின்றது, இறுதியில் அறிவியல் கலைச்சொற்கள் யாவும் பட்டியலிடப் பட்டுள்ளன.  இத்தொடர் நிறைவு பெறுகிறது, அடுத்து இது படங்களுடன் தொகுக்கப்பட்ட ஒரு நூலாக வெளிவரவிருக்கிறது]

5. சோழர் பேரரசு  (தொடர்ச்சி...)
S. K. கோவிந்தசாமி
[இரண்டாம்  அதிகாரம் - கொங்கு தொண்டை மண்டலங்களை அடிப்படுத்துதல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், ஆதித்த சோழனின் ஆட்சியும், அவனது ஆட்சியில் சோழப்பேரரசின் எல்லைகளும்]

6. கோளறு பதிகம்
மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை
[சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்ற அடிக்கும், அத்துடன்  திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும்  விளக்கம் அறிய விரும்பி ஒரு  வேண்டுகோள்] 

7. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[தித்தன், தழும்பன், கழுவுள், மத்தி  என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது]

8. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[கட்டுரையின் பிற்பகுதி தொடர்கிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, May 9, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்:1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்:1

________________________________________________

1. முன்னுரை
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப் பொழில் எதிர்கொள்ளும் நிலைகள்]

2. சோழர் பேரரசு
S. K. கோவிந்தசாமி
[முதலாம் அதிகாரம் - அடிகோலல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், சோழர் பேரரசு (கி.பி. 970 முதல் கி.பி. 1268  ஆண்டுவரை). திருப்புறம்பியப் போருக்குப்பின்னர், விஜயாலயன் மறைவிற்குப் பின்னர் கி. பி. 881 இல் சோழ அரசு பேரரசானது, இது ஒரு தொடர் கட்டுரை]

3. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[ஆறறிவு கொண்ட உயிர்கள் எவ்வாறு வேறுபடுகின்றன, எங்ஙனம் அவை சிறப்புப் பெற்றவை என்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது ].

4. பண்டைக்காலப் பாவலரும் காவலரும்
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  ஒரு நாட்டின் பெருமைக்கும் சிறுமைக்கும் அடிகோலுபவர் கற்றறிந்தோரே, அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை, இது ஒரு தொடர் கட்டுரை]

5. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வையாவிக் கோப் பெரும் பேகன் பற்றியும், பேகனையும் அவன் மனைவி கண்ணகியையும் இணைத்து வைக்க  கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் செய்த முயற்சி பற்றிய குறிப்புகள்]

6. மதிப்புரைகள்
[காசிவாசி சாமிநாத சாமி அவர்களின்  'மதுரைச் சொக்கநாதர் உலா',   செகவீரபாண்டியக் கவிராயர் அவர்களின் 'திருக்குறட் குமரேச வெண்பா' ஆகிய நூல்களின் மீதான மதிப்புரைகள்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, May 8, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 11 & 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 11 & 12
________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 900 ஆம் ஆண்டிற்குப்  பின்னர் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் இயற்றிய  நன்னன் பற்றிய பாடல்கள், நன்னனின் படைத்தலைவன் மிஞிலி, "இகலடு கற்பின் மிஞிலி" என்பதினால் இவன் வீரத்துடன் கல்வியிலும் சிறப்புற்றவன்  என அறிகிறோம், திதியன், எவ்வி, எயினன், அதியமான் நெடுமான் அஞ்சி,  எழினி, ஓரி, காரி,  ஆய் அண்டிரன், வேள் எவ்வி, நள்ளி என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தொல்காப்பியர் கல்விப்பெருமையும் நூலமைப்புத் திறனும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[சூத்திரத்தின் இயல்பு, அவற்றில் சிலவற்றுக்கான விளக்கங்களும், கொடுக்கப்பட்டுள்ளன]

4. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா?  அல்லது துறவியின் இலக்கணமா?  சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை"   குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை.  அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்"  ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன  என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.]

5. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  உடலை ஓம்புதல், பல உடற்பயிற்சி செய்யும் முறைகள், அவற்றின் பலன்கள் ஆகியன   பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன]

6. தமிழ் நிகழ்ச்சிகள்
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[கல்வியமைச்சர் S. குமாரசாமி இரெட்டியார் அவர்கள் சங்கத்திற்கு வருகை தந்த பொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் வாழ்த்துரை, மற்றும் சில சங்கம்  சார்ந்த செய்திகள், S. K. கோவிந்தசாமி வழங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் செய்திகள் ]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]