வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம் ஆண்டு: (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
திரு. L. உலகநாத பிள்ளை

எட்டாம் ஆண்டு: (1932-1933)
துணர்: 8 - மலர்: 1 & 2

1. பொழிலின் புத்துயிர்
R. வேங்கடாசலம்
[எட்டாம் ஆண்டில் தமிழ்ப்பொழில். பொழிற்றொண்டர்களில் ஒருவரான திரு. R. வேங்கடாசலம் அவர்கள் ஊர் மாற்றலால் விடை பெறுகின்றார்]
2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து 21 ஆம் ஆண்டு நிறைவு விழா
இதழாசிரியர்
[விழாவில் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு சங்கத்தார் கூறிய வரவேற்பு வாழ்த்துப்பாடல்; ஆண்டறிக்கை ; தமிழ்ப்பொழிலுக்கு இணையாக வெளிவரும் மாற்றிதழ்கள்: செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், ஆனந்த போதினி, யதார்த்தவசனி, அரிசமய திவாகரம், சித்தாந்தம், பாரத தர்மம், முன்னேற்றம், பாரதி, யாதவ மித்திரன், கலைமகள், சன்மார்க்கம் என 13 இதழ்களின் பெயர்கள் சுட்டப்படுகின்றன]
3. திருக்குறள் அமைப்பு
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளுக்கு முன்னும் பின்னும் தோன்றிய நூல்கள் பல மறைந்து போனாலும், திருக்குறள் அழியாது இன்றும் மக்களால் போற்றப்படுவதன் காரணம் அதன் அமைப்பே எனவும், எண் ஆரூட (நியூமராலஜி) முறை போன்ற விளக்கமும் கொடுக்கப்படுகின்றது]
4. கோளறுபதிகம் - விளக்க மயக்கம்
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த விளக்கம் தனக்குப் புரியவில்லை என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை... இது இக்கட்டுரையின் முற்பகுதி ]
5. தமிழ்நாட்டு வரலாறு
நீ. கந்தசாமிப்பிள்ளை
[தமிழகத்தின் வரலாறு; சங்ககால மன்னர்கள், மூவேந்தர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் முதற்கொண்டு நாயக்கர் காலம், நடந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தின் வரலாறு சுருக்கமாகக் கூறப்படுகிறது]
6. முற்காலத்தில் நாட்டுப்புற ஊர் (கிராம) வாழ்க்கை
நீ. கந்தசாமிப்பிள்ளை
[பழங்காலத்தில் இயற்கையுடன் இயைந்த கிராமப்புற வாழ்க்கையையும், அதன் சிறப்பையும், அக்காலத்து தொழில்கள் பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் சுருக்கமாக விவரிக்கும் ஒரு கட்டுரை]
7. கோளறுபதிகம் - விளக்க மயக்கம் (இதே இதழின் கட்டுரையின் பிற்பகுதி இங்கு தொடர்கிறது)
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த விளக்கம் தனக்குப் புரியவில்லை என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை]
8. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில் சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான மறுப்பு இக்கட்டுரையில் தொடர்கிறது ... ]
9. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த மறுப்புகளைக் குறிப்பிட்டு, இனி வேதாலசய்யர் முன் வைத்த மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்க எண்ணியுள்ளதாக கட்டுரை ஆசிரியர் கூறுகிறார்; சுப்பிரமணிய சாத்திரியாரும் வேதாலசய்யரும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதாக (அரசியல் செய்வதாக) சோமசுந்தரம் பிள்ளை கருதுகிறார்]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment