Thursday, June 30, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 7

_________________________________________________________

1. உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர் (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம அய்யங்கார்
[தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி விவாதத்தை ஒட்டி, நரசிம்ம அய்யங்கார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து விளக்குகிறார்.
இப்பகுதியில்; 'தொல்காப்பிய உரையாசிரியர்களில்' இருவர் 'பேராசிரியர்' எனக்குறிப்பிடப்பட்டனர் என்று கூறுகிறார். மேலும் உரையாசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்ட பிற புலவர்களின் தகவல்களின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்த காலத்தை 11 - 14 நூற்றாண்டுவரை  காலக்கோட்டில்  (பக்கம் #250  இல்) வழங்குகிறார்  நரசிம்ம அய்யங்கார்]

2. அணி நலன்கள்
அ. சிதம்பரநாதஞ்  செட்டியார்
[பொன்னாலும் மணியாலும் ஆகிய அணிகள் சிறந்த அணிகள் அன்று;  பணிவுடைமை, இன்சொல்லுடைமை, கண்ணோட்டமுடைமை, நாணுடைமை, குணநலமுடைமை, நுண்மாணுழை புலமுடைமை ஆகியவையும், இவைபோன்ற மற்ற  பிற சிறந்த பண்புகளுமே அணிநலன் எனத்தக்கன என்பதையே வள்ளுவம் காட்டுகிறது என்கிறார் சிதம்பரநாதஞ்  செட்டியார்]

3. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  6  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. இயைபு நூல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
1. பொருளின் மாற்றங்கள் - என்ற அத்தியாயத்தில், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அவற்றின் பண்புகள், அவற்றின் நிலைமாற்றம்,  இயன்மாற்றம்,  மூலப்பொருட்கள், கூட்டுப் பொருள்கள்,  பொருட் பண்புகள் அவற்றை அறிய உதவும் ஆய்வகச் சோதனைகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்
சி.கு. நாராயணசாமி முதலியார்
[கண்ணுக்கு விருந்தாகும் கவின்மிகு சிற்பங்கள் நிறைந்த, ஹோய்சள அரசர்கள் தோற்றுவித்த 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்' இருக்கும் இடம்,  திருப்பணி செய்த மன்னன், இறைவனின் பெயர், ஆலய அமைப்பு, கோவிலின் அளவு, மதில், சுவர் ஆகியவை தாங்கி நிற்கும் ஓவியங்கள், மண்டபத் தூண்கள் என விரிவாக விவரிக்கிறார் நாராயணசாமி முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள 'அம்பறாத்தூணி', அகராதியில் கொடுக்கப்படாத  'அம்புறாத்தூணி',  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது.
சொற்களின் பொருள் விளக்கம் தரும் இக்கட்டுரை தொடர்கிறது]

7. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியாரின் அறிவாற்றலின்  காரணமாக  அமைச்சர் பதவி அவரைத் தேடி வருகிறது  என்பது குறிப்பிடப்படுகிறது]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை
இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, June 29, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 6

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  5  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  இனியவை கூறல் குறித்தும், தீய எண்ணங்களை வெளிப்படுத்தும்  தீமை பயப்பனவாகிய தீய சொற்களை அறவே ஒழிப்பது இன்றியமையாதது, என  வள்ளுவர் கூறியவை  விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியில்; கண் நோய்கள் குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டு விட்டமையால் , ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும், மாணவர்கள்  சாத்திரியார் நூலை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் ஆய்ந்து படித்து உண்மையை அறிய  உதவும் நோக்கில் தானும் ஒரு  கட்டுரை எழுதி வருகிறார். கட்டுரையின் இப்பகுதியில் தொல்காப்பியச்  சூத்திரங்களுக்கான  விளக்கவுரைகளை ஆராய்வதைத் தொடர்கிறார்  ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

5. உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்
E.R. நரசிம்ம அய்யங்கார்
[தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி விவாதத்தை ஒட்டி, நரசிம்ம அய்யங்கார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து விளக்குகிறார். இப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டினரான குணவீர பண்டிதர் இயற்றிய இலக்கண நூலான  நேமிநாதம், நேமிநாதம் நூலின் பெருமை, நேமிநாத உரையாசிரியர் பெருமை ஆகியன  குறித்தும் விரிவாக உரைக்கிறார்.  இக்கட்டுரை தொடர்கிறது]

6. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; சிவனை நோக்கி அருந்தவம் மேற்கொண்ட வரருசியார், சிவனின் அருளால் பாணினி இயற்றிய நூலின் பொருள் தெளிவாக அறிந்து, ஊர் திரும்பி, தனது ஆசிரியருக்கும்  அதனைத் தெரிவித்து, பாணினியின் நூலுக்கு ஒட்டியும் வெட்டியும்  'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதினார் என்பது குறிப்பிடப்படுகிறது]

7. இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்
 பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, June 28, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 5

_________________________________________________________

1. திருப்பூந்துருத்தி சிவன்கோயில் கல்வெட்டுக்கள்
வை. சுந்தரேச வாண்டையார்
[திருப்பூந்துருத்தி, தஞ்சைக்கு வடக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள சிற்றூர்.  அப்பரால் பாடப்பெற்ற பழமையான சிவன்கோவில் உள்ள தலம்.  இக்கோவிலில் உள்ள  சுமார் 30 கல்வெட்டுக்கள் தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூலில் இடம்பெறாத 2 கல்வெட்டுக்களைப் படிஎடுத்து வந்து தமிழ்ப்பொழிலில் அனைவருக்கும் பயனளிக்கும் வண்ணம் பகிர்ந்து கொள்கிறார் சுந்தரேச வாண்டையார்.
இக்கல்வெட்டுக்கள் முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-948) காலத்தியவை. இக்கல்வெட்டுக்களில் ஊரின் பெயர் 'திருத்துருத்தி' என்றே பொறிக்கப் பட்டுள்ளது. பிற்காலத்தில் பாண்டிய  மன்னன் கல்வெட்டிலேயே இவ்வூர் 'திருப்பூந்துருத்தி' என அழைக்கப்படுகிறது.  நற்றிணை, குறுந்தொகை ஆகிய சங்க நூல்களில் குறிப்பிடப்படும்  'அழிசி'  என்ற வள்ளல் வாழ்ந்த  ஊராகவும், பிற்கால சோழர்களின் ஆர்க்காட்டு கூற்றத்திற்குத்  தலைமை இடமாகவும் அமைந்திருந்த திருப்பூந்துருத்தி இக்காலத்தில் ஒரு சிறு கிராமம் ஆக விளங்குகிறது.
குறிப்பு: தஞ்சை மயிலாடுதுறை அருகே, காவிரியின் தென்கரையில்  மற்றொரு 'திருத்துருத்தி'   என்ற ஊரும் உள்ளது. அதுவும் அப்பரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமே]

2. கம்பர் பாராட்டிய பழந்தமிழ் நூல்கள் (தொடர்ச்சி ...)
ஆ. சிவசுப்பிரமணியன்
[கல்வியிற் பெரியார் கம்பர் தமது பாடல்களில் எடுத்தாண்ட பழந்தமிழ்நூல் கருத்துக்கள் குறித்து தொகுத்தளிக்கும் கட்டுரையை  வழங்குகிறார் சிவசுப்பிரமணியன். கம்பர் தமது பாடல்களில் பாராட்டிய நூல்கள் திருக்குறளும், சங்கக் காப்பியங்களும், கொங்கு வேளிர் செய்த உதயணன் கதையுமாகும் எனக் குறிப்பிடும்  ஆசிரியர் கட்டுரையின் இப்பகுதியில் கம்பர் பயன் படுத்திய திருக்குறள் மற்றும் சங்கக் காப்பியக் கருத்துக்களை வழங்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார் பாணினி போல அறிவுத்திறம் பெறவிரும்பி தவம் மேற்கொள்ளச் சென்றுவிட,  அவரது மனைவி  உபகோசையின் அறிவுத்திறம் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியில்; கண்ணைப் பராமரிக்கும் முறை குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, ஆராய்ச்சி முறையாக வகுத்தல், பெயரீடு, அளவைப் பிரித்தல், பிரித்தலுக்கும் வகுத்தலுக்கும் உள்ள வேற்றுமை, மாறுகோட்  பிரித்தல்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. சகுந்தலை கதை  (தொடர்ச்சி ...)
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை!   உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு. கட்டுரையின்  இப்பகுதியில், துருவாச முனிவரின் வருகையை அறியாத அளவிற்கு துஷ்யந்தனின் நினைவில்  மூழ்கியிருந்த சகுந்தலை முனிவரால் சபிக்கப்படும் காட்சி இடம் பெறுகிறது.  இக்கட்டுரை தொடர்கிறது]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[அமெரிக்கன் கல்லூரியின்  'பொலிடிகல் எக்கானமி' பேராசிரியர் J.S. பொன்னையா அவர்கள் தமிழில் எழுதிய "இந்தியாவின் கிராமப் பொருள் நிலை'", "நாணயம்", "நாணயமாற்று"  ஆகிய மூன்று நூல்களுக்காகவும் பெரிதும் பாராட்டப்படுகிறார்.  தமிழ்வழி பயிற்றுவிக்கும் பாடநூல்களாக இந்நூல்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரை  கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்த, கிமு 320 களில் வாழ்ந்த  கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் நூலைத் தமிழில் "யவனமஞ்சரி" என மொழி பெயர்த்து வெளியிட்ட யாழ்ப்பாணத்து தா. இராமநாத பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது]

8.தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[சென்ற இதழில் வெளியான 'ஏறு தழுவுதல்' (தொழுமாடு பிடித்தல்) என்ற V.S. குழந்தைசாமி அவர்களின் கட்டுரை, முன்னர் தமிழ்ப்பொழில் இதழாசிரியராகப் பணியாற்றிய R. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பொழிலில் எழுதிய  கட்டுரையின் நகல் என்று அறியப்பட்டதாகவும்,  இவ்வாறு ஒருவர் படி எடுத்து அனுப்புவார் என்று எதிர்பார்க்காததால் அதனை வெளியிட நேர்ந்த பிழைக்கு  இதழாசிரியர் வருத்தம் தெரிவிக்கின்றார்.
இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்
 பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.
சென்னைப் பல்கலைக்கழகம் மறைமலையடிகளின் 'அறிவுரைக்கொத்து' என்ற நூலைப் பாடநூலாகத் தேர்வுசெய்தமைக்கு பல்கலைக்  கழகத்திற்குப்  பாராட்டுகளும்; தேர்வுக்குழு பாடநூலாக அறிவித்த நூலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்குக் கண்டனமும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் மறைமலையடிகளின் நூலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
கரந்தைக் கல்லூரியில் ஊதியமின்றி தன்னார்வத் தொண்டராக ஆசிரியப் பணியேற்ற பணி ஓய்வு பெற்ற செங்கரையூர் அ. பொன்னண்ணா களத்தில் வென்றார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் கூறப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, June 27, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 4

_________________________________________________________

1. தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[துணர்: 8  -  மலர்: 12 இல் வெளியான கட்டுரையின்  தொடர்ச்சி இது. 'பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டு விட்டமையால் , ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும், மாணவர்கள்  சாத்திரியார் நூலை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் ஆய்ந்து படித்து உண்மையை அறிய  உதவும் நோக்கில் தானும் ஒரு  கட்டுரை எழுதி வருகிறார். சென்ற பகுதியில் கொடுத்த முதல் சூத்திரத்திற்கான விளக்கவுரையைத் தொடர்ந்து, இப்பகுதியில் இரண்டாம் சூத்திரம் முதலாக ஆராய்கிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

2. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார். 
இப்பகுதியில்; சிவனின் அருளால் அஷ்டாத்யாயீ இயற்றுகிறார் பாணினி.  பாணினியுடன் இலக்கண விவாதத்தில் ஈடுபட்ட (அவரது ஆசிரியர் தகுதியில்  இருந்த) வரருசியார் பாணினியிடம் தோல்வியுறுகிறார்.  அதுவரை சிறப்புடன்  வழக்கில் இருந்த இலக்கண நூலாகிய ஐந்திரம் இதனால் தனது பெருமை குன்றி மறக்கப்படுகிறது.  இந்நிகழ்ச்சி தொன்மக் கதையின் பாணியில் விவரிக்கப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை. 
கட்டுரையின் இப்பகுதியில்; வெள்ளெழுத்து, கிட்டெழுத்து போன்ற பார்வைக் குறைபாடுகள்,  கண் நோய்கள், அவற்றைத் தவிர்க்க அறிவுரைகள், கண்ணைப் பராமரிக்கும் முறை போன்றவை விளக்கப்படுகிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள். 
அவர்களின் பிரதிநிதிகளாக தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாக அச்சுத தேவராயர் (கிபி 1529-1542)  மறைவுக்குப் பிறகு, தஞ்சையை மீட்க முயன்ற சோழர்குல வீரசேகர சோழன்  தஞ்சையைக் கைப்பற்றினான் என்றும்; 
மறைந்த அச்சுததேவராயரின் பட்டத்தரசியின் இளைய சகோதரியை மணமுடித்து,  வீரசேகர சோழனை வென்று தஞ்சையை  அவனிடம் இருந்து  கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்த சேவப்ப நாயக்கர் குறித்தும், இம்மன்னர்களின் கல்வெட்டுகள் தரும் செய்திகள் குறித்தும், இவர்களது இறைப்பணிகள் குறித்தும், இவர்களால் தஞ்சை பெரிய கோவில் கட்டமைப்பில் ஏற்பட்ட சேர்க்கைகள், மாற்றங்கள் குறித்தும் அறியலாம்.
தஞ்சையை மீட்க முயன்று தோல்வியுற்று, அதனை நாயக்கர் வசம் இழந்த சோழர்குல வீரசேகர சோழன் மதுரை சென்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த சந்திரசேகர பாண்டியனை வென்று 1559 இல்  மதுரையில்  ஆட்சி அமைத்தான். விரட்டப்பட்ட  சந்திரசேகர பாண்டியன் தஞ்சை நாயக்கரிடம் முறையிட்டு உதவி கோர, தானைத் தலைவர் நாகம நாயக்கன்  என்பவர்  சோழனிடம் இருந்து மதுரையை மீட்கப் படையுடன் அனுப்பப்பட்டார். சோழனிடம் இருந்து மதுரையை மீட்டாலும் அதனைப் பாண்டியனிடமும் கொடுக்காமல் நாயக்கர் தங்கள் ஆட்சியை அங்கும் நிறுவினர் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

5. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  3  மற்றும் 4  ஆம் பாடல்களுக்கு தனது சிற்றுரைகளை  வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. கம்பர் பாராட்டிய பழந்தமிழ் நூல்கள்
ஆ. சிவசுப்பிரமணியன்
[கல்வியிற் பெரியார் கம்பர் தமது பாடல்களில் எடுத்தாண்ட பழந்தமிழ்நூல் கருத்துக்கள் குறித்து தொகுத்தளிக்கும் கட்டுரையை  வழங்குகிறார் சிவசுப்பிரமணியன். கம்பர் தமது பாடல்களில் பாராட்டிய நூல்கள் திருக்குறளும், சங்கக் காப்பியங்களும், கொங்கு வேளிர் செய்த உதயணன் கதையுமாகும் எனக் குறிப்பிடும்  ஆசிரியர் கட்டுரையின் இப்பகுதியில் கம்பர் பயன் படுத்திய திருக்குறள் கருத்துக்களை வழங்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ்ச் செய்திகள்
சிவ. குப்புசாமி
[தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், செந்தமிழ்ப் புரவலரும், வழக்கறிஞரும், தமிழ்த் தொண்டரும்,   தமிழ்ப் பொழிலின் ஆசிரியருமான  த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களுக்கும், தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகத் தலைவர் ஐ. குமாரசாமிப் பிள்ளை அவர்களுக்கும் தமிழக அரசு அவர்களது தொண்டுகளைப் பாராட்டி  'அரசர் வெள்ளிவிழாப் பதக்கத்தையும்', 'இராவ்சாகிப் பட்டத்தையும்' அளித்துச் சிறப்பித்த  செய்தி வழங்கப்பட்டு அன்னாருக்குப் பாராட்டுகள் கூறப்பட்டுள்ளது.]

8.மதிப்புரை
இதழாசிரியர்
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தமிழ்மொழிபெயர்ப்பின் தொகுப்பை  'இராஜயோகம்' என்ற தலைப்பில் மிகச்சிறந்த பதிப்பாகவும்,  மலிவுப்பதிப்பாகவும்  (340 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ஒன்றேகால் ரூபாய்) இராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள   முயற்சி  பாராட்டப்பட்டு, மொழிபெயர்த்தவரின் திறமை போற்றப்பட்டுள்ளது.  பதஞ்சலி  யோகசூதிரங்களின் மூலமும், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் பயன்தரும் வகையில் இந்நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது  இதன் சிறப்பு]

9. இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பட்டியல்
[நன்கொடை  அளித்தவர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு,அவர்களுக்கு நன்றி நவிலல்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 26, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 3

_________________________________________________________

1. சகுந்தலை கதை
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை!   உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு. கட்டுரையின் முதல் பகுதியில் துஷ்யந்தனும் சகுந்தலையும் சந்தித்ததைத் தொடர்ந்து, கட்டுரையின் இப்பகுதியில் இயற்கை மணம் செய்து கொள்கிறார்கள். "என் அன்புருபி! என் மனைவிகளில் நீ என் மனக்கினிய குலக்கொடியாவாய், இது சரதம்" என்று வாக்களித்துப் பிரிகிறான் துஷ்யந்தன். இக்கட்டுரை தொடர்கிறது]

2. நெடுந் தொகைக் குறும்பொருள்
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்ற முத்திறம் கொண்டவையாக  அகநானூற்றுப் பாடல்களை தொகுத்த மதுரை உப்பூரிகுடி கிழாரின்மகன் உருத்திரசன்மனார்  திறன்; ஐந்திணைப் பாடல்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட எண் அடிப்படையில்  தொகுக்கப் பட்டதால், பாடல் எண் குறிப்பிட்டாலே பாடலின் திணை கூற இயலும் அமைப்பு; பாடல்கள் இயற்றிய 145 நல்லிசைப் புலவர்கள்; தொகுப்பித்த பாண்டியன்  உக்கிரப் பெருவழுதியின் புலமை; ஆகியவற்றை விவரித்து, கடவுள் வாழ்த்துப் பாடல் துவங்கி, முதல் இரண்டு பாடல்களுக்கும்  தனது சிற்றுரைகளை  வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3.கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, வரைவிலக்கண விதிகள், அப்பியாசம்,  பொருள் விகற்பங்கள், வகுத்தல், இயற்கை வகுப்பு செயற்கை வகுப்பு ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. வரருசி கதை
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.  முதல் மூன்று அத்தியாயங்கள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. நயன நூல் நவநீதம்
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த விரிவான விளக்கக் கட்டுரை.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[கட்டணமின்றி கல்வி கற்றுவிக்கப்படும் கரந்தைக் கல்வி நிலையத்தில் திக்கற்ற மாணவர்களுக்கும் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றுடன் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.  கல்விநிலையத்தின் பணி தொடரும் வண்ணம்  நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றி நவிலப்பட்டுள்ளது]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[திருநெல்வேலி தமிழ்ச் சங்கத்தின் முத்திங்கள் வெளியீடான 'தமிழ்த்தாய்' இதழின் சிறப்பினைக் குறிப்பிட்டு மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, June 25, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 2

_________________________________________________________

1. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[இயற்பியல் மற்றும் வேதியியல் பதிவுகளைத் தமிழ்ப்பொழிலில் தொடர்ந்து எழுதிவருகிறார் தமிழறிஞர் அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்.  பொருளின் அமைப்பு என்ற தலைப்பில் அவர் வழங்கும் தொடர்கட்டுரையின் இப்பகுதியில், கூட்டுப் பொருள்கள், பொருட் பண்புகள்   ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை நிறைவுறுகிறது]

2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
V.S. குழந்தைசாமி
[பண்டைக் காலத்து முல்லை நிலத்து  வீரவிளையாட்டான  ஏறுதழுவுதல் குறித்து முல்லைக்கலி, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் கூறுகின்றன.  'நல்லினத்தாயார்', 'இருந்குடியாயர்'  என்று கூறப்படும்  யாதவக் குடியின் மகளிருக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்யும் முறையாக,  அப்பெண்ணின் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரனுக்கே மணமுடித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்று குறிப்பிடுகிறார்  கட்டுரை ஆசிரியர். தொடர்ந்து ஏறுதழுவும் நிகழ்வினை விளக்குகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

3. தஞ்சை ஸ்ரீபிரகதீசுவரர் - பெருவுடையார்கோயில் என்ற பெரிய கோயில்
ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை
[தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு, கோவிலின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக இக்கட்டுரையில் விளக்குகிறார்; கட்டுரையின் இப்பகுதியில், கோவிலில் நடக்கும் விழாக்கள், விழாக்களின் கலைநிகழ்ச்சிகள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இடம் பெறுகின்றன. இக்கட்டுரை நிறைவுற்றது]

4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

5. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பயனிலை விகற்பங்களும் வகுத்தல் முறைகளும், வரை விலக்கணம், பண்பு, கிழமை/உரிமை, இனம், வேற்றுமை, வரைவிலக்கணமும் விரித்துரைத்தலும், வரைவிலக்கண ஆராய்ச்சி ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. சகுந்தலை கதை
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை!   உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு.  இக்கட்டுரை தொடர்கிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, June 24, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 1

_________________________________________________________

1. திருக்குறட் பாக்கள் சிலவற்றைச் சைவப்பெரியார் சிலர் ஆண்டுள்ள முறைமை
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
[திருக்குறள் கருத்துக்கள் சைவ இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டதற்கான மேற்கோள்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பியாரூரர் பாடிய திருநெல்வாயில் அறத்துரைப் பதிகங்கள்; உய்யவந்த  தேவநாயனாரின் திருக்களிற்றுப்படியார் நூலின் பாடல்கள் ஆகியவற்றில்  இடம் பெறும் திருக்குறள் கருத்துக்கள் ஆகியவற்றை மேற்கோள்களாகக் காட்டி விளக்குகிறார் வேங்கடசாமி நாட்டார்]

2. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[மதுரைக்கருகில் இருக்கும் வேம்பத்தூர் என்ற பழமையான ஊரில்  வாழ்ந்த மணியன் என்பவரின் மகனான நாராயணன் என்னும் புலவர்  'சிராமலை அந்தாதி' என்ற நூலை இயற்றினார். இந்நூல் சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட 102 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது, சிராமலையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரான சிவனின் மீது பாடப்பட்ட பக்திச்சுவை நிரம்பிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டமைந்துள்ளது.  இப்பாடல்கள் யாவுமே திருச்சி மலைக்கோட்டையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  இப்பாடல்கள் படி எடுக்கப்பட்டு தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 15 பாடல்கள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன]

3. சேக்கிழாரும் கம்பரும்  (தொடர்ச்சி ...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[சேக்கிழார் மற்றும் கம்பரின் இலக்கியத் திறனை ஒப்பிட்டும், அவர்களது படைப்புகளான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்களில் காணப்படும் 16 ஒற்றுமைகளை விளக்கும்  ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரையை வழங்குகிறார்  அமிர்தலிங்கம் பிள்ளை. இக்கட்டுரை  நிறைவுற்றது]

4. தஞ்சை ஸ்ரீபிரகதீசுவரர் - பெருவுடையார்கோயில் என்ற பெரிய கோயில்
ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை
[தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு, கோவிலின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக இக்கட்டுரையில் விளக்குகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

6. வையகத்தே வானகம்
A. சிதம்பரநாதஞ் செட்டியார்
[இவ்வுலகில் இல்லறக் கடன்களை செவ்வனே ஆற்றி வாழும் ஒருவர் வானகம்  தரும் எனச் சொல்லப்படுகின்ற  இன்ப வாழ்வை இந்த வையகத்திலேயே அடையலாம்  என்றக் கருத்தை "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்" குறள் முதற்கொண்டு, மேலும் பல திருக்குறள்களின் உதவியுடன் விளக்கும் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, June 23, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 12

_________________________________________________________

1. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
[இயற்பியல் மற்றும் வேதியியல் பதிவுகளைத் தமிழ்ப்பொழிலில் தொடர்ந்து எழுதிவருகிறார் தமிழறிஞர் அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்.  பொருளின் அமைப்பு என்ற தலைப்பில் அவர் வழங்கும் தொடர்கட்டுரையின் இப்பகுதியில், அணுக்களின் அமைப்பு, தனிமங்களின் அணுவெண், தனிமங்களின்  அணுவின் பலஅடுக்கங்களில் அமைந்திருக்கும் மின்னுருக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், தகவலின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் கட்டுரை]

2. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்   (தொடர்ச்சி ...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளைச் சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  நிறைவுற்றது]

3. தமிழ்மொழி அம்மானை
[பத்து வரிகள் கொண்ட பாடலொன்று, எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை]

4. சேக்கிழாரும் கம்பரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[முன்னர் கம்பராமாயணத்தின் உவமைகளைப் பாராட்டி எழுதிய R. P. அமிர்தலிங்கம் பிள்ளை, இம்முறை சேக்கிழார் மற்றும் கம்பரின் இலக்கியத் திறனை ஒப்பிட்டும், அவர்களது படைப்புகளான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்களில் காணப்படும் ஒற்றுமைகளைக் குறித்தும்  ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை வழங்கியுள்ளார். 
தாங்கள் எடுத்துக்கொண்ட  கதைக்கேற்றவாறு கதையின் பாத்திரங்களின் வழியாக அடியார் உள்ளத்தின் ஆண்டானடிமை திறத்தையும், மக்கள் உள்ளத்தின் நல்லொழுக்கத்தையும் உணர்த்திய இருவரும் சிறந்த புலவர்கள்  எனக் கூறுகிறார் அமிர்தலிங்கம் பிள்ளை. 
இருவரின் கடவுள் வாழ்த்துப் பாடல்களும் 'உலகம்'  (உலகெலாம் உணர்ந்து, உலகம் யாவையும்) என்ற மங்கல மொழியால் தொடங்கும்  நாற்சீரடி நான்கு கலிவிருத்தமாக அமைந்திருப்பது; இருவரும் தங்கள் படைப்பை  'மாக்கதை' எனக் கூறியிருத்தல்; திருமுனைப்பாடி, மிதிலை நகரின் சிறப்புக்களை கூறிய விதம் எனப் பல ஒற்றுமைகளைக் காட்டி தன் கருத்துக்களை முன்வைக்கிறார்]

5. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழக மன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், பெரியோர்கள் வாழ்த்த,  நாங்கூர் வேள் மகள் நங்கையைக் கரிகால் வளவன் திருமணம் புரியும் காட்சியுடன் இத்தொடர் நாடகம் நிறைவுறுகிறது. இந்த நாடகம் கரந்தைத் தமிழ்ச்  சங்கக் கல்லூரியின் ஆண்டு விழாவில் மாணவர்களால் நடித்துக் காட்டப்பட்டது]

6. நாகை. திரு. தண்டபாணி தேசிகர் 'சங்கர நமசிவாயர் உரை பொருந்துமாறு' என்னும் உரைபற்றிய திருமுகம்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பொழிலின் ஆசிரியருக்கு ஓர் கடிதம்; நாகை. திரு. தண்டபாணி தேசிகர் 'சங்கர நமசிவாயர் உரை பொருந்துமாறு' என்ற கட்டுரைக்கு மறுப்பெழுதி திசை திருப்புவோரை கருத்தில் கொள்ளாமல், கட்டுரை ஆசிரியர் விரைவில் கட்டுரையை முடிக்குமாறு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் (இவர் முன்னர் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரை கட்டுரை திசை மாறுதல் குறித்தும்  இது போன்ற வேண்டுகோள் மடல் எழுதியவர் என்பதும் நினைவிருக்கலாம் - http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1932-1933-8-7.html)]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... பத்தாவது பிழை குறித்த விளக்கம் ... கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

8. தமிழ்ச் செய்திகள் பகுதி
இதழாசிரியர்
உ.வே. சா. அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது  என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
'இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்' என்ற குறள் நெறிப்படி செயலாற்றும் உ.வே. சா.  அவர்களுக்குப் பாராட்டும் வழங்கப்பட்டுள்ளது.

9. மதிப்புரை
["ஈழ கேசரி" என்ற பெயரில்  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் வாரஇதழின் தமிழ்ப்பணி குறித்துப் பாராட்டுரை;
சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் காவியத்தை உரைநடைவடிவ நாடகமாக எழுதிய பச்சையப்பன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ம. சண்முகசுந்தர முதலியார் அவர்களின் நூலுக்குப் பாராட்டுரை;
அபிமன்யு என்ற தலைப்பில் வெங்களத்தூர் சாமிநாதசர்மா அவர்கள் எழுதிய நாடக  நூலில் அளவுக்குமீறிய வடமொழி சொற்களின் கலப்பால் அந்நூல் பொலிவிழந்துள்ளது என்றக் கருத்துரை;
சைவ எல்லப்ப நாவலர் அவர்களின் 'திருவருணைக்கலம்பகம்' என்ற நூலையும், அதற்கு நா. இராமலிங்கம் பிள்ளை எழுதிய விளக்க உரையையும்  நாலாகப் பதிப்பித்தளித்த  காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை அவர்களுக்கு நன்றியுரையும் வழங்கப்பட்டுள்ளது]

10. கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின் ஆண்டுவிழா, கல்லூரியின் 18 ஆண்டின் அறிக்கை
சிவ. குப்புசாமி
[கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்வுகள்;  கல்லூரியின் செயல்கள் பற்றிய ஆண்டறிக்கை; அந்த ஆண்டில்  கல்லூரிக்கு வருகை தந்த சென்னை மாநில அரசியல் அமைச்சர்கள் போன்ற தகவல்கள் இப்பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, June 22, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 11

_________________________________________________________

1. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை -  இருபத்துநான்காம் ஆண்டுவிழா
இதழாசிரியர்
[1935 ஆண்டு பிப்ரவரியில் இரு நாட்கள் நடந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்  இருபத்துநான்காம் ஆண்டுவிழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சிக் குழுத்தலைவர் ரா. இராகவையங்கார் தலைமை ஏற்றார்.  விழாத் தலைவர் மீது R. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டது. தலைவரின் உரையைத்தொடர்ந்து S. சோமசுந்தரபாரதியார், T.P. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நீ. கந்தசாமிப் பிள்ளை, J.M. சோமசுந்தரம் பிள்ளை, திரு.வி.க., பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆகிய தமிழ்ப் பெரியோர்களும் உரையாற்றியுள்ளார்கள்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை -  இருபத்துநான்காம் ஆண்டுவிழா
சர்க்கரை இராமசாமிப்புலவன்
[இராமசாமிப்புலவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெரியோர்களை வாழ்த்திப் பாடிய பாடல்]

3. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரசோழிய உரையாசிரியர் வாழ்ந்த  காலத்தைக் கணிக்கும் கட்டுரையின் இப்பகுதியில்; வீரசோழிய உரையில் குறிப்பிடப்படும் மாந்தர்களின்/மன்னர்களின் காலத்திற்கு பிற்பாடு இவ்வுரை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இலக்கிய, கல்வெட்டு சான்றுகள் மூலம் நூலில் இடம்பெற்றோரின் காலங்கள் ஆராயப்படுகிறது. வீரசோழிய உரை எழுதப்பட்ட காலம் 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது கட்டுரை ஆசிரியரின் முடிவு]

4. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் சிந்தாமணி, நாலடியார்,  பொருண்மொழி, கந்தபுராணம், திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளைச் சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  தொடர்கிறது]

5. சாத்தனார் கோயில்கள் - கல்வெட்டால் அறிந்த உயரிய செய்தி
வை. சுந்தரேச வாண்டையார்
[தமிழ்மக்கள் தொன்றுதொட்டு வணங்கும்  தெய்வம் சாத்தனார். இக்காலத்தில், ஐயன், ஐயனார் என்ற பெயருடன் வழங்கப்படும் சாத்தனார் கோவில் உள்ள இடங்களான காப்பியக்குடி, பிடவூர் ஆகிய இடங்களைப் பற்றி ஆராய்கிறார் சுந்தரேச வாண்டையார்.

சிலப்பதிகாரத்தில் சாத்தனாருக்கு கோவில் அமைத்துவழிபடும் செய்தியைத் தரும் தொன்மக் கதை ஒன்று உள்ளது. அதில் மாயக்குழந்தையாகத் தோற்றம் கொண்டு சாத்தனார் வளர்ந்தது (வரந் தருகாதை 83 ஆம் வரி) 'காப்பியத் தொல்குடி' என்ற ஊர்  எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வூர் இக்கால சீர்காழிக்கருகில் உள்ளது, அங்கு சாத்தனார் கோவில் இன்றும் உள்ளது.

மற்றொரு செய்தி, திருத்தொண்டர் புராணத்தின்  வெள்ளானைச் சருக்கத்தில் காணப்படுகிறது. இங்கு 'திருப்பிடவூர்' என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் திருச்சியின் அருகில் பிச்சாண்டார் கோவிலில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புறநானூற்றின் 395 ஆம் பாடலின் பாட்டுடைத்தலைவன் பெயர் சாத்தன் என்ற குறிப்பும் காணப்படுகிறது. அப்பாடலின் 19-21 வரிகளில், 'சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்' என்று கூறப்படுகிறது. இவ்வூர்க் கோவிலின் தெய்வமான சாத்தனின்  பெயரே பாட்டுடைத் தலைவனுக்கும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உ.வே.சா. தனது குறிப்பில் எழுதியுள்ளார். இவ்வூர் 'திருப்பட்டூர்' என வழங்கப்படுகிறது. கல்வெட்டுகள் இந்த ஊரை பிடவூர், நாட்டுப் பிடவூர் எனக் குறிப்பிடுகின்றன. இங்கும் ஐயனார் கோவில் உள்ளது. அதனால், புறநானூற்றுப் பாடல் மற்றும் பெரியபுராணம் கூறும் பிடவூர் இவ்வூராகவே இருக்கலாம் என்பது சுந்தரேச வாண்டையார் அவர்களின் கருத்து.

6. திருக்குறணுதலிய நெறிமுறை - Basic principles of Morality as expounded in Thirukkural
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை, உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் ஒழுக்கம் மட்டுமே. நல்லொழுக்கச் செயல்கள்  உயர்வையும், தீயொழுக்கச் செயல்கள் தாழ்மையையும் தரும் என்பது குறள் தரும் கருத்து. எக்குடியில் பிறந்தாலும் , எத்தொழில் செய்தாலும் ஒழுக்கமுடையவர் மட்டுமே உயர்ந்தவர். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல், ஒழுக்கமுடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பதை வள்ளுவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நல்லொழுக்கங்கள் யாவை, அறங்கள் யாவை என்பதைப் பல குறள்கள் விளக்குகின்றன என்கிறார் சோமசுந்தரம் பிள்ளை. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழக மன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், வெண்ணிக் குயத்தியார் தோன்றுகிறார். இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

8. தமிழ்ச் செய்திகள் பகுதி
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடை நல்கியவர்களுக்கு நன்றி கூறப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, June 21, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 10

_________________________________________________________

1. விரையாக்கலியும் விடேல்விடுகும்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருப்புறம்பியம் சிவன் கோவில்  கல்வெட்டுகள் மூன்றில்  " விரையாக்கலி" என்ற ஒரு சொல்  காணப்படுகிறது. இக்கல்வெட்டுகளில், முதலாம் இராசராச சோழன் காலத்தியக் கல்வெட்டு "விரையாக்கலி என்னும் நிறைகோல்" என கோவிலில் இருந்த நிறைகோலையும்;   முதலாம் இராசராசேந்திரன் காலத்தியக் கல்வெட்டு "விரையாக்கலிப் பெருந்தெரு" என திருப்புறம்பியத்தில் அந்நாளில் இருந்த தெரு ஒன்றையும்;    மூன்றாவது கல்வெட்டு குலோத்துங்கச் சோழன் (முதலாம் குலோத்துங்கன் அல்லன், இவன்  தவிர்த்த மற்ற இரு குலோத்துங்கன்களில் எவரோ ஒருவர்)  காலத்தியக் கல்வெட்டு "திருவாணை திருவிரையாக்கலி" என சிவபெருமானது ஆணை என்ற பொருளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டினத்துப் பிள்ளையார் வழங்கிய நான்மணி மாலையில் உள்ள ஒரு பாடலிலும் விரையாக்கலி என்பது "இறைவனின் ஆணை" என்ற பொருளில் வருவதால்  "விரையாக்கலி என்பது கடவுளின் ஆணை" என்பதைக் குறிக்கிறது என்று உறுதிப்படக் கூறுகிறார் சதாசிவப் பண்டாரத்தார். அடுத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் பொருட்டு மூன்று  கல்வெட்டுகளின் செய்தியும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

தெள்ளாறு எறிந்த (மூன்றாம்) நந்திவர்மன் (கி.பி. 830-854) என்ற பல்லவ மன்னனைக் குறிக்கும் "விடேல்விடுகு" என்ற   சொல் "விடேல்விடுகே" என நந்திக் கலம்பம் பாடலிலும்; "நந்தி விடேல்விடுகு", "வீரஞ்செல்லும் விடேல்விடுகு" என்று மேலும் இரு பாடல்களிலும் குறிப்பிடப்படுகிறது. இப்பெயரில்  சதுர்வேதி மங்கலம், தலைவன் ஒருவனுக்குப் பட்டம் ஆகியவையும் பல்லவ மன்னன்  காலத்தில் கொடுக்கப்பட்டதாகக்  கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. காஞ்சி பரமேச்சுர விண்ணகரக் கல்வெட்டின் செய்தி ஒன்று, விடேல்விடுகு என்பது "பல்லவ மன்னனின் ஆணை" என்ற பொருளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டு முதலாம் நந்திவர்மன் (கி.பி. 717-779) காலத்தியக் கல்வெட்டு  என்றும் சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார்.

2. ஆந்தை என்னும் தொகை விரியுமாறு  (தொடர்ச்சி ...)
ஆ. சிவசுப்பிரமணியன்
["ஆந்தையைப் பற்றிய ஐயம்" என்று "செந்தமிழ்" பத்திரிக்கையில்  வெளியான கட்டுரைக்கு; "ஆதனாகிய தந்தையை உடையவன் அல்லது ஆதனைத் தந்தையாக உடையவன்" என அன்மொழித் தொகையால் பொருள் கொள்ளுவதே பொருந்தும் என விளக்கம் அளிக்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.  மேலும் விரிவாக; சாத்தந்தை, எந்தை, பூந்தை, எயினந்தை, கீரந்தை மனைவி, கீரன்றாய், கொற்றங்கொற்றன், நம்பிமகன், நங்கைகணவன், கொற்றந்தை எனப் பல பெயர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம்  சூத்திரங்களைக்  ( 347-350) கொண்டும் பொருள் கொள்ளும் முறையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். இத்தொடர் கட்டுரை நிறைவுற்றது]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதியில், வகுத்தற்றாட்டாந்தம், புணர்த்தற்றாட்டாந்தம்,  கூட்டுத்தாட்டாந்தம், பிரிநிலைத்தாட்டாந்தம், தாட்டாந்தத்தின் உள்ளுறை, பொருள்விரியுள்ளுறை மதம், குணவிரியுள்ளுறை மதம், உரிநிலையுள்ளுறை மதம், பயனிலையுள்ளுறை மதம், அப்பியாசம் ஆகிய கருத்தாக்கங்கள் விளக்கப்படுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள மாந்தர் என்ற  சொல்லின்  பொருள் விளக்கம் இக்கட்டுரையிலும் தொடர்கிறது]

5. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரராசேந்திரன் என்ற வீரசோழன் (ஆட்சிக்காலம் கி.பி. 1062-1070) காலத்தவராகிய புத்தமித்திரனார் எழுதிய நூல் வீரசோழியம்.  வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை வழங்கினார்.  பெருந்தேவனார் காலம் பற்றி வழங்கும் பல  கருத்துக்கள் பிழையானவை  எனக் கருதி  மறு ஆய்வு செய்கிறார் நரசிம்ம ஐயங்கார்.
போற்றுவாரின்றி மறக்கப்பட்டு இருந்த வீரசோழியத்திற்கு உரை எழுதி கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பெருந்தேவனார். பெருந்தேவனார் உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட நூல்கள் யாவும் காலத்தால் பெருந்தேவனாருக்கும் முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில், கண்டனலங்காரம், தண்டியலங்காரமும் அதன்  உரையும், வீரசோழியம் உரை ஆகியவை காலக்கோட்டில் முதல், இடை, கடை என வரிசைப்படுத்துகிறார் இக்கட்டுரை ஆசிரியர். கண்டனலங்காரம்  குறிப்பிடும் மன்னன் இரண்டாம் இராசராச சோழன்  (கிபி 1146-1163 ஆட்சிக்காலம்) என்பது இவரது முடிபு. 
கட்டுரையின் இப்பகுதியில்;  தண்டியலங்காரத்தின் சிறப்புப் பாயிரம் இந்நூலின் ஆசிரியர் தண்டியார் என்றும் தண்டியாரின்  தந்தை அம்பிகாபதி என்றும் உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார். அத்துடன் அம்பிகாபதி  நாடகத் தொழில் புரிந்த கூத்தர் என்பதும் தெரிகிறது.  12- ஆம் நூற்றாண்டில் ஆலி நாட்டுப் பகுதியைச் சேர்ந்த "ஓட்டக்கூத்தர்" மற்றும் காவிரி நாட்டுப்  பகுதியைச் சேர்ந்த "அம்பிகாபதிக் கூத்தர்" என இரு கூத்தர் புலவர்கள் இரண்டாம் இராசராசன் அவைப்புலவர்களாக இருந்துள்ளனர். புலவர் அம்பிகாபதிக் கூத்தர் ஐந்திலக்கணநூல் எழுதியவர், அவரது மகன் தண்டியார் தண்டியலங்காரவுரை எழுதியவர். தண்டியலங்காரமும் அதன் உரையும்  12- ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
தக்காயபரணியை  எழுதியவர் ஒட்டக்கூத்தர் அல்லர், ஒட்டக்கூத்தர் எழுதினார் என   உறுதிப்படுத்தும் தகவலும்  இல்லை.  தக்காயபரணியை  எழுதியவர் அம்பிகாபதிக் கூத்தர் என்று கூறி அதற்கான சான்றுகளையும் கொடுக்கிறார் நரசிம்ம ஐயங்கார். அம்பிகாபதி "கவிச்சக்கரவர்த்தி கூத்தர்" எனவும், ஒட்டக்கூத்தர் "கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர்" எனவும் வழங்கப்பட்டிருக்கலாம் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. இந்த ஆய்வுக் கட்டுரை தொடர்கிறது]

6. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், கரிகால் வளவன் முதியவர் வடிவுதாங்கி, முதியோர் இருவரின் வழக்கினை முடிக்கிறார். இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, June 20, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 9

_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதியில், தாட்டந்தங்களின் மாறுகோள், உடன் கருதல், இடமாற்றல், வெதிரேகித்தல், வெதிரேகித்திடமாற்றல், கவிழ்த்தல் ஆகிய கருத்தாக்கங்கள் விளக்கப்படுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

2. தம்பிரான்றோழர் தேவாரம்  (தொடர்ச்சி ...)
இ. மு. சுப்ரமணிய பிள்ளை
[தம்பிரான் தோழர் சுந்தரர் வழங்கிய  தேவாரப்  பாடல்கள் குறித்த இக்கட்டுரையில், நஞ்சு என்ற தலைப்பின் கீழ், மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு அமுதம் பெறும் பொருட்டு பாற்கடலைக் கடைந்தபொழுது, வாசுகி ஆலால நஞ்சினை உமிழ்ந்த கதைப்பகுதி இடம்பெறுகிறது.  சிவன் அந்த ஆலால நஞ்சினைக்  கொணர்ந்து தரும்படி சுந்தரருக்கு  கட்டளையிட, சிவனிடம் நஞ்சை சேர்ப்பித்தார்  சுந்தரர். இக்காரணத்தால் 'ஆலால சுந்தரர்' எனவும்  அழைக்கப்பட்டார். அந்த நஞ்சை உண்டு திருநீலகண்டன் ஆனார் சிவன். இந்த தொன்மக்கதையை சுந்தரர் தமது தேவாரப்பாடல்களில் குறிப்பிட்ட இடங்களை சுப்ரமணிய பிள்ளை  இக்கட்டுரையில் தொகுத்து வழங்குகிறார். இக்கட்டுரை  தொடர்கிறது]

3. இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலியின் ஒரு செய்யுளைத் தழுவி எழுதிய பாடல்
செ. சின்னத்தம்பி
[தாகூரின் கீதாஞ்சலி கவிதை ஒன்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது]

4. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளை சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  தொடர்கிறது]

5. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. நாடகத்தின் இப்பகுதியில், உறையூர் சிறையில்  இருந்து தப்பிய கரிகால் வளவனுக்கு முடிசூட்டப்படுகிறது]

7. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரராசேந்திரன் என்ற வீரசோழன் (ஆட்சிக்காலம் கி.பி. 1062-1070)காலத்தவராகிய புத்தமித்திரனார் எழுதிய நூல் வீரசோழியம்.  வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை வழங்கினார்.  பெருந்தேவனார் காலம் பற்றி வழங்கும் பல  கருத்துக்கள் பிழையானவை  எனக் கருதி  மறு ஆய்வு செய்கிறார் நரசிம்ம ஐயங்கார். போற்றுவாரின்றி மறக்கப்பட்டு இருந்த வீரசோழியத்திற்கு உரை எழுதி கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பெருந்தேவனார். பெருந்தேவனார் உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட நூல்கள் யாவும் காலத்தால் பெருந்தேவனாருக்கும் முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில், கண்டனலங்காரம், தண்டியலங்காரமும் அதன்  உரையும், வீரசோழியம் உரை ஆகியவை காலக்கோட்டில் முதல், இடை, கடை என வரிசைப்படுத்துகிறார் இக்கட்டுரை ஆசிரியர். கண்டனலங்காரம்  குறிப்பிடும் மன்னன் இரண்டாம் இராசராச சோழன்  (கிபி 1146-1163 ஆட்சிக்காலம்) என்பது இவரது முடிபு.  இக்கட்டுரை தொடர்கிறது]

8.  சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள;  மன்று, மாந்தர் ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது. இக்கட்டுரை தொடர்கிறது]

9. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[இந்திய மொழிகளைக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் நிலை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுடன்  ஒப்பிடப்பட்டு அவர்கள் சரிவர மதிக்கப்படுவதில்லை, சம அளவில் ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்று கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.  ஆசிரியப்பயிற்சிக்கான தக்க சான்றுகளும், பாடம் கற்பிக்கும் தகுதிக்கான பட்டங்களும் பெற்றிருந்தாலும் மொழியாசிரியர்கள், குறிப்பாகத் தமிழாசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்களுடன் ஒப்பிடப்படும்பொழுது மிகக்குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் ஊதியத்தை மேலும் குறைக்கும் முயற்சியையும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.  பல்கலைக்கழக அளவிலேயே மொழியாசிரியர்களுக்கு மதிப்பில்லாதபொழுது சட்டசபையிலும் அதே நிலை இருப்பதில் வியப்பில்லை. இது மொழி ஆசிரியர்களை இழிவுப் படுத்தும் நடவடிக்கை என  என்று வருத்தமும் கண்டனமும் பதிவு செய்யப் பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 19, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 8

_________________________________________________________

1. அகநானூற்று உரை
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பொருளீட்டும் வண்ணம் பிரிந்து பாலை வழியே தனித்துச் சென்ற தலைவன் தன்னையும் அழைத்துச் சென்றிருந்தால், தலைவனும் தனியே இரவைக் கழிக்கத் தேவையிருந்திருக்காது, தானும்  அழுது தவித்துப் புலம்பத் தேவையிருந்திருக்காது என்று தலைவி தனது மனக்குறையைத் தோழியிடம் சொல்வதாக,  "வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்"  எனத் துவங்கும்  ஔவை பாடிய  அகநானூற்றுப் பாடல் (11)  குறித்து இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

2. ஆந்தை என்னும் தொகை விரியுமாறு
ஆ. சிவசுப்பிரமணியன்
["ஆந்தையைப் பற்றிய ஐயம்" என்று "செந்தமிழ்" பத்திரிக்கையில்  வெளியான கட்டுரைக்கு; "ஆதனாகிய தந்தையை உடையவன் அல்லது ஆதனைத் தந்தையாக உடையவன்" என அன்மொழித் தொகையால் பொருள் கொள்ளுவதே பொருந்தும் என விளக்கம் அளிக்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.  மேலும் விரிவாக; சாத்தந்தை, எந்தை, பூந்தை, எயினந்தை, கீரந்தை மனைவி, கீரன்றாய், கொற்றங்கொற்றன், நம்பிமகன், நங்கை கணவன், கொற்றந்தை எனப் பல பெயர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம்  சூத்திரங்களைக்  ( 347-350) கொண்டும் பொருள் கொள்ளும் முறையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை] 

3. தமிழகத்து உழவின் நலமும்  வாணிகத்தின் சிறப்பும்  (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[அக்காலத் தமிழர்கள் சர்க்கரை மற்றும் உப்பு வியாபாரங்களில்   ஈடுபட்டிருந்தது; கடியலூர் உருத்திரங்கண்ணனார்  எழுதிய சங்ககாலத்துத் தமிழ் நூல்களான   பட்டினப்பாலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தமிழர்களின் கடல் வணிகச் சிறப்பைக் கூறும் செய்திகள்; பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (79-84)  'பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பு' என பெருவழிகளில் காவல் செய்த வில் வீரர் படையின்  பராமரிப்பிற்காகச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தமை; தமிழர்கள் பாலை  வழி வணிகச் செலவிற்காக ஒட்டகம் பயன்படுத்தியதாக தொல்காப்பியம் காட்டும்  (மரபியல் சூத்திரம் 18) குறிப்பு,  தமிழக மன்னர்கள் வாணிகத்தைப் போற்றி அது சிறக்க உதவிகள்  செய்தது; சிறந்த வணிகர்களுக்கு "எட்டி" என்ற பட்டமும், "பொற்பூ" விருதினையும் அளித்துச்  சிறப்பித்தது; உலகின் பல இன மக்களும் வணிகத்திற்காகத் தமிழகம் வந்ததற்கான இலக்கியச் சான்றுகள்; தமிழக மன்னர்கள் மாற்றார் வணிக  மரக்கலங்களை தமிழகக் கடல் பகுதிகளில் செல்ல விடாது கட்டுப்படுத்தி வணிகத்தில்  ஆதிக்கம் செய்தது  என பண்டையத் தமிழர்களின் வணிகச் சிறப்பிற்கு தமிழிலக்கியச் சான்றுகள் கொடுக்கிறார் சோமசுந்தரம் பிள்ளை.  இக்கட்டுரை நிறைவுற்றது]

4. தம்பிரான்றோழர் தேவாரம்  (தொடர்ச்சி ...)
இ. மு. சுப்ரமணிய பிள்ளை
[தம்பிரான் தோழர் சுந்தரர் தனது தேவாரப்  பாடல்களில் திருமாலையும், நான்முகனையும் பற்றி குறிப்பிடும் பகுதிகளையும், மாலவனும் நான்முகனும் சிவனின் அடிமுடி காண  முயற்சி செய்து அடைந்த தோல்வி குறித்த  தொன்மக் கதை  இடம்பெறும்  பகுதிகளையும் கட்டுரையின் இப்பகுதியில் தொகுத்தளிக்கிறார்  சுப்ரமணிய பிள்ளை. இக்கட்டுரை  தொடர்கிறது]

5.  கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, தாட்டந்தங்களின் பொருள் நிலை, தன்மை, ஈதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. நாடகத்தின் இப்பகுதியில், உறையூர் சிறையில் இருந்து கரிகாலனை அவனது மாமா இரும்பிடத்தலையார் தப்புவிக்கும் காட்சி இடம் பெறுகிறது. சிறையில் கரிகாலன் "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனத் தொடங்கும் பிற்கால அப்பர்  வழங்கிய ஐந்தாம் திருமுறை பாடலைப் பாடுகிறார்!   இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, June 18, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 7

_________________________________________________________

1.  மண்ணியல் சிறுதேர்   (தொடர்ச்சி ...)
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
['மிருச்சகடிக' என்னும் வடமொழி நூலை, "மண்ணியல் சிறுதேர்" என்ற பாட்டிடை உரைநடை நூலாக பண்டிதமணி கதிரேசன் செட்டியார்  தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.  கட்டுரையின் இப்பகுதியில், அந்நூலில் காணப்படும் நகைச்சுவைப் பகுதிகளின் நயத்தைப் பாராட்டிய பின்னர், நூலின் இலக்கிய நயத்தை "ஒப்புவழியுவத்தல்"  முறையில் பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், திருக்குறள், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு இலக்கியநயம்  பாராட்டுகிறார் சிதம்பரநாதஞ் செட்டியார்.  இக்கட்டுரை நிறைவுற்றது]

2. "செயப்படு பொருளைச் செய்தது போல" என்னும் சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரை பொருந்துமாறு    (தொடர்ச்சி ...)
ச. தண்டபாணி தேசிகர்
['செயப்படு பொருளைச் செய்தது போல' என்னும் சூத்திரம் பற்றி இலக்கணநூல் உரையாசிரியர்களின் விளக்கங்கள் ஒப்புநோக்கப்படும்  இக்கட்டுரை, தொடர்கிறது]

3. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்   (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை; தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமங்கள் குறித்து  இலக்கிய நயம் பாராட்டிய பிறகு,  கட்டுரையின் இப்பகுதியில், கலித்தொகை செய்யுட்களில் அமைந்திருக்கும் "மெய்ப்பாடுகள்" பற்றி நச்சினார்க்கினியர் விளக்கும் திறம் குறித்து ஆராய்கிறார் வரத நஞ்சைய பிள்ளை. இக்கட்டுரை எண்வகை மெய்ப்பாடுகள் குறித்து நல்லதொரு விளக்கம் தரும் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரை... தொடர்கிறது]

4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

5. சோழன் கரிகால் வளவன் - நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது, இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, June 17, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 6

_________________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்  (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

2. நன்னெறி
வீ. குமாரசாமி ஐயர்
[தொன்று தொட்டு தமிழ்ப்புலவர்கள் நன்னெறி அறிவுறுத்துவதில் கவனம் செலுத்தினர்.  மன்னனுக்குக் கூறப்படும் அறிவுரை நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்கும் என்பது அறிந்து மன்னன் என்றாலும் துணிந்து வசைபாடியும் அறிவுரை கூறத் தயங்கியதில்லை. இவர்கள் பாடல்கள் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை போன்ற இலக்கியங்களின்  வழியாகக் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளாமை, நன்றி மறவாமை  போன்ற அறங்களை மக்களிடம் பரப்பியது. 'கற்பனைக் களஞ்சியம்' என்று புகழப்பட்ட சிவப்பிரகாச அடிகளின் 'நன்னெறி' நூல் எளிய உவமைகளைக் கொண்டு, யாவரும் அறிந்த உடல் உறுப்புகளின் இயல்பாட்டை உவமையாகக் காட்டியே நன்னெறிகளை அறிவுறுத்தும் பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது என்று தமிழின் நன்னெறிப் பாடல்களின் வரலாற்றையும், சிவப்பிரகாச அடிகளின் நன்னெறிப்  பாடல்களில் காணும் உவமைச் சிறப்பினையும் விளக்குகிறார் வீ. குமாரசாமி ஐயர்]

3. ஏர் என்னும் வைப்புத்தலம்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[கும்பகோணத்திற்கு அருகே வடக்கில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ள 'ஏராரம்' அல்லது 'ஏராவரம்' என்ற ஊர் பண்டைய சோழநாட்டின் பேரூரில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கருதும் சதாசிவப் பண்டாரத்தார், அவ்வூரின் தென்மேற்கு மூலையில், மிக மிகப் பாழடைந்த நிலையில் உள்ள ஒரு கோவில் சிவன் கோவில் தோற்றத்தில் உள்ளது என்றும், அதில் தாம் படித்த கல்வெட்டில் "இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழ மங்கலம்" என்ற சொற்றொடரைக் கொண்டு இலக்கிய ஆய்வுகள் செய்கிறார். கல்வெட்டு விக்கிரம சோழன் (கி.பி. 1120-1136) காலக் கல்வெட்டு என்றும், அப்பர் பாடிய தேவாரப் பாடலில் இடம் பெற்ற "இன்னம்பர் ஏர் இடவை"   என்ற தலம் இது என்றும் கூறுகிறார். மேலும்,  சம்பந்தர் மற்றும் சுந்தரர் இத்தலத்தைப் பாடிய பாடல்கள் இல்லை, அவர்களும் பாடி அந்தப் பாடல்கள் அழிந்துபட்டு நமக்குக் கிடைக்காமல் போயிருக்கக்கூடும் என்றும் ஐயுறுகிறார்.  மேலும் இந்த ஊர் அக்காலத்தில் இன்னம்பூர் நாட்டில் "ஏர்" என்ற பெயருடனும், பின்னர் மன்னரால் 'மும்முடிச் சோழ மங்கலம்' எனப் பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும், காலப்போக்கில் 'ஏர்' என்ற பெயர் மருவி இக்காலத்தில் ஏரகரம் (ஏராரம்) என்ற சிற்றூராக மாறியது என்றும் கூறுகிறார். தேவாரப் பாடல் பெற்ற இந்த ஊர் அக்கால ஏர் என்ற ஊர் என்பதற்குச் சான்றாக, இராஜராஜேச்சுரம் மற்றும் தஞ்சைக் கல்வெட்டுத் தகவலையும் வழங்கியுள்ளார்.  ராஜராஜ சோழனின் ஆட்சிக்  காலத்தில் இந்த ஊர் மும்மடி சோழமங்கலம் என வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார் சதாசிவப் பண்டாரத்தார்]

4. நமது வரலாறுகளும் கல்வெட்டாதாரமும்
அ. கந்தசாமிப் பிள்ளை
[தமிழகத்தின் இலக்கியம் கூறும் தொன்மக் கதைகளுக்கு தக்கச் சான்றுகளும் கிடைக்கும் நிலைமையும் உள்ளது என்று கூறும் கந்தசாமிப் பிள்ளை, சேக்கிழார் பற்றி வழங்கும் தொன்மக் கதை வழி அதனைச் சுட்டிக் காட்டுகிறார்.  சேக்கிழார்  தொண்டை நாட்டின் குன்றத்தூரைச் சேர்ந்தவர், முன்னொரு காலத்தில் சோழ அரசனால் அங்குக் குடியேற்றப்பட்ட 'சேக்கிழார்' என்ற குடியைச் சேர்ந்தவர் என்றும்; கல்வியிற் சிறந்தவராக இருந்ததால் சோழனின் அமைச்சராகப் பணியாற்றும் தகுதி பெற்றதுடன், "உத்தமச்சோழப் பல்லவராயர்" என்ற பட்டதையும் பெற்றார் என்றும்; சோழ நாட்டின் திருநாகேச்சுவரம் இறைவனின்  மீது பற்று மிகக்கொண்டவராக இருந்ததால் தனது குன்றத்தூரில் கோவில் ஒன்று எடுப்பித்து அதற்கு 'திருநாகேச்சுவரம்'  என்ற பெயரிட்டு கொடைகள் வழங்கினார் என்றும் உமாபதி சிவம் வழங்கிய சேக்கிழார் நாயனார் புராணத்தின் மூலம் அறிகிறோம். இவ்வரலாற்றுச் செய்தி  உண்மையே என்பதைக் குன்றத்தூரில்  உள்ள திருநாகேச்சுவரம் கோவில் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன என்று கூறி அதற்கான ஆதாரங்களை இக்கட்டுரையில்  குறிப்பிடுகிறார் கந்தசாமிப் பிள்ளை]

5. மண்ணியல் சிறுதேர்
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[சூத்திரகன் என்னும் வடமொழிவாணர் எழுதிய வடமொழி நாடக நூலான 'மிருச்சகடிக' என்னும் நூல், "மண்ணியல் சிறுதேர்" என்ற பாட்டிடை உரைநடை நூலாக பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால்  மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.  இந்நூல் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் வெளியீடு.  இந்நூலைப்பற்றி தமிழறிஞர்கள் அளித்த பாராட்டுகளையும், பாரதியார் வழங்கிய நாடகத்தின் கதைச்சுருக்கத்தினையும் வழங்கிய பின்னர் நூலின் இலக்கிய நலம் பாராட்டுகிறார் சிதம்பரநாதஞ் செட்டியார்.  இக்கட்டுரை தொடரும்]

6. "செயப்படு பொருளைச் செய்தது போல" என்னும் சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரை பொருந்துமாறு
ச. தண்டபாணி தேசிகர்
['செயப்படு பொருளைச் செய்தது போல' என்னும் சூத்திரம் பற்றி இலக்கணநூல் உரையாசிரியர்களின் விளக்கம் இக்கட்டுரையில் ஒப்புநோக்கப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, June 16, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 5

_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I  (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்:  மாறுபட்ட பொருள் தரும் எதிர்ப்பதங்கள்; அளவை நூலில் சிலேடை மற்றும்  இரட்டுற மொழிதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்,  எவற்றையும் அதைக் குறிக்கும் தனிப்பெயர் கொண்டு குறிப்பிட வேண்டும், பொருள் விரியும் பதங்கள், குணம் விரியாத பதங்கள், சிந்தனை நியமங்கள், நிலையியல் நியமம், மறுதலை நியமம் ஆகிய கருதலளவைக் கல்விக் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகளுடன் இந்த  அதிகாரத்தில் விளக்கப்படுகின்றன]

2. தம்பிரான் தோழர் தேவாரம்   (தொடர்ச்சி ...)
அ. சிதம்பரனார்
[இ. மு. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதே தலைப்பில் முன்னர் வெளியிட்ட (துணர் - 9) கட்டுரையில் ...  வேட்டுவ வடிவம் கொண்டு பன்றியைத் தொடர்ந்து கொன்று, அர்ச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதம் நல்கினார் சிவபெருமான்; இதனை உடனிருந்து கண்டவர் சுந்தரர் எனக் குறிப்பிட்டார்.
வரலாற்று அடிப்படையில் அர்ச்சுனன் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் உள்ள இடைவெளி 2800 ஆண்டுகள், எனவே சுந்தரர் சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையெனச் சுட்டிக்காட்டி மறுத்தார்  சிதம்பரனார்.
அதற்கு, தனது முற்பிறவியின் பழைய நினைவுகளைத்தான்  சுந்தரர் பாடினார் என்பது ஒரு தொன்மம், பாடலின்படி அது சரியே  என சுப்பிரமணியபிள்ளை மறு விளக்கமளித்தார்.
சரித்திர ஆராய்ச்சி என்ற கோணத்தில் நாயன்மார் புராணக் கதைகளை  அணுக விரும்பினால் பெரிய புராணத்தை  மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.   பிறர் எழுதிய கதைகள் தேவார நிகழ்ச்சிகளைச்  சொன்னாலும் அவை சரித்திர ஒழுங்கு, கால ஒழுங்கு அற்றவை என்றும்; சுந்தரர் கொங்கு நாட்டிற்குப் பயணம் செய்தது மூன்று முறை எனவும்  சிதம்பரனார்  தனது கோணத்தை விளக்குகிறார். மேலும், சூரபதுமன் காலம் 78,000 B.C.  என்றொரு தகவலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது]

3. இலக்கணமும் இலக்கியமும்
சுவாமி ஞானப்பிரகாசர்
[இக்கட்டுரை; முன்னர்  துணர்: 10 - மலர்: 2 இதழில்  ஞா. தேவநேயப்பாவாணர் அவர்கள்,  தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் காட்டப்படும்  ஒற்றுமையைக் குறிப்பிட்டு,  அதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் வடமொழி லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இக்குறிப்பை மேலும் மிக விரிவாக விளக்க விரும்பிய சுவாமி ஞானப்பிரகாசர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்]

4. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில்  கதிரியக்கம் பற்றித் தொடர்கிறார், சுடரியமும் சுடரிப் பொருள்களும், சுடரிய மாற்றம் (Radio-activity) குறித்து விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்  (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

6. ஒரு பெருமகிழ்ச்சி (தமிழ்ச் செய்திகள் பகுதி)
இதழாசிரியர்
வழக்கறிஞரும், சென்னை சட்டசபை உறுப்பினரும், கரத்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினருமான A.T. பன்னீர்செல்வம்  அவர்கள் சென்னை மாநில அரசின் "அகமந்திர நாயகர்" (Home-Member to the Government of Madras) பதவி பெற்றதற்கு , தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டு விழா நடத்தி  (ஜூலை 1934) பாராட்டு  தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்களும் இடம் பெறுகின்றன]

7. மதிப்புரை
இதழாசிரியர்
['பாரவி' என்ற வடமொழிப்புலவர் இயற்றிய "கிராதார்ச்சுனீயம்" என்ற பெருங்காப்பியத்தை, யாழ்ப்பாணப் பேராசிரியர் வை. இராமசாமி சர்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலுக்கும்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்ட  திருவள்ளுவர் நாட்குறிப்புக்கும்,
"தேசாபிமானி"  பத்திரிக்கையின் தலைவர் தா. பொ. மாசிலாமணிப் பிள்ளை வெளியிட்ட "மங்கைக்கோர் மதியுரை"  என்ற நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, June 15, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 4

_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்: சிந்தனை வேறு அதனை வெளிப்படுத்தும் மொழிகள் வேறு, சிந்தனையை வெளிப்படுத்த உதவிய ஒலி மொழியானது. யூகம் என்பது சிந்தனையின் அடிப்படை அளவு. யூகம் சொற்களால் வெளிப்படுத்தப்படுகிறது. அச்சொற்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்று விளக்கும்  இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

2. பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை
மி. பொ. இராமநாதஞ் செட்டியார்
[பாடிப் பரிசில்  பெற விரும்பிய ஒரு பொருநனை, மற்றொரு பொருநன் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்ட சங்கப்பாடலின்  இலக்கியம் நயம் பாராட்டுகிறார் இராமநாதஞ் செட்டியார்.  பொருநர் ஏர்க்களம், போர்க்களம், பரணி பாடுபவர் எனப் பலவகையினர்.  இப்பொருநன் போர்க்களம் பாடுவதையும், தடாரிப்பறை வாசிப்பதையும் பழக்கமாகக் கொண்டவன் என்பதைப் பாட்டின் 70-73 வரிகள் காட்டுகின்றன. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை] 

3. தேம்பாவணி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[வீரமாமுனிவர் இசைநூலுணர்வு கொண்டிருப்பதை தேம்பாவணி வெளிப்படுத்துகிறது.  உலகிற்கு நீதி கூறும் வகையில் தேம்பாவணியில் பல பாடல்கள் அமைந்துள்ளன.  இவரது பாடல்களில் உவமையழகு சிறந்து விளங்குகிறது.  சீவகசிந்தாமணி  போன்று காப்பிய நடையில் அமையப்பெற்ற சமய நூலான தேம்பாவணியின் பாடல்களின் சிறப்பால், வீரமாமுனிவருக்கு தமிழ்ப் புலவர்கள் வரிசையில் சிறந்த இடம் உண்டு என கால்டுவெல் பாராட்டியுள்ளார்.  தமிழ் கற்பாருக்கு சிறந்த விருந்தாக அமைவது தேம்பாவணி எனக் கட்டுரையை நிறைவு செய்துள்ளார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

4. சிலசொற்களின் பொருள்
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள; அட்டை, சொன்றி, நாக்கு, வெற்றிலை, தெற்றென, ஊசல் ஆகிய  சொற்களின்  பொருள் மறு ஆய்வு செய்யப்படுகிறது. சொற்களில் "ந்த, த்த" என்பவை "ஞ்ச, ச்ச" என்று திரிவது விளக்கப்படுகிறது]

5. நற்றிணை
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறும் ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார், நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

தொடர்ந்து  நற்றிணை  காட்டும் மக்கள் இயல்பு, பாடல்களில் அக்காலத்தில் மக்களிடம்  சாதிப்பிரிவினை, தீண்டாமை ஆகியன இல்லாதிருத்தலைக் காட்டுவது, மக்களின் உணவு, உடை, வசித்த இல்லங்களின் அமைப்பு, பழக்க வழக்கங்கள், அக்கால மக்கள் கூடும் மன்றங்கள் தகவல் வழங்கும் மையங்களாக இருந்தது, அவர்கள் கடவுளை வணங்கிய  முறை, அவர்கள் விளையாடிய பலவகை விளையாட்டுக்கள், நிலத்தின் இயற்கை ஆகியவற்றை விரிவாக ஆராயும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - புலவர் மாநாடு 
கா. நமச்சிவாய முதலியார்
[புலவர் மாநாட்டைத் திறந்து வைக்க இசைவு தந்து தமது திறப்புரையை அனுப்பி வைத்த நமச்சிவாய முதலியார் அவர்களால், விழாவில் பங்கு பெற இயலாமல் போனது. அவர் விழாவில் வழங்கவிருந்த உரை தமிழ்ப்பொழிலில் இடம் பெறுகிறது.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், செய்யுள் நடைக்கும் உரைநடைக்கும் தெளிவான வேறுபாட்டுடன் எழுதுதல் தேவை ஆகியவற்றைக் குறித்த தமது கருத்துக்களை நமச்சிவாய முதலியார்  இவ்வுரையில் வழங்குகிறார்]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[அரசுப்பணியில் இருந்து பணிஓய்வு பெற்ற பின்னரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டாக மருத்துவ உதவி வழங்கிய மருந்துவினைஞர் (Compounder) ம. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் உடல்நலம் குன்றி மறைந்தார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, June 14, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 3

_________________________________________________________

1. தமிழகத்து உழவின் நலமும்  வாணிகத்தின் சிறப்பும்
K. சோமசுந்தரம் பிள்ளை
[நீர் மேலாண்மையிலும், வேளாண்மையை வளப்படுத்துவதில்   தமிழக மன்னர்கள் காட்டிய ஊக்கம்,  புலவர்கள் உழவினைச் சிறப்பித்துப் பாடியது; அக்காலத் தமிழர்கள் கடல் கடந்த அளவிலும் பருத்தி  ஆடை, முத்துக்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது ஆகியன குறித்து இலக்கிய மேற்கோள்கள் துணை கொண்டு விளக்கப்படும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில் அணுக்களைப் பகுத்தல், கதிரியக்கம் பற்றியும் விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தேம்பாவணி  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[ தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பெண்களை, அவர்களின் பண்புகளை, பெண்மையைக் குறித்து தமது பாடல்களில் கையாண்ட விதம் இப்பகுதியில் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டு இலக்கியங்கள் பெண்களின் அங்கங்களை விவரிப்பதில் காட்டிய அக்கறையை வீரமாமுனிவர் பின்பற்றவில்லை, அவரது 830 செய்யுட்களிலும் இரு இடங்களில் மட்டுமே "முலைவல்லார்"  (23-84) எனக் குறிப்பிடுவது தவிர்த்து வேறெங்கும் பெண்களின் அங்கங்களை வர்ணிக்கும் முறை ஏதும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும், தமிழ் இலக்கிய மரபு வழியில்  மற்றப் பாடல்கள் தமிழ் மணம் கமழும் வகையில் அமைந்துள்ளன. அவரது இயற்கை வர்ணனைகள் தமிழிலக்கியங்களை ஒத்திருக்கிறது என்கிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை.  இக்கட்டுரை தொடர்கிறது ]

4. நகைச்சுவையும் புலவர்களும்
S. இராமச்சந்திரன்
[பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களும், கவிராயர்களும், அவர்களது புரவலர்களான மன்னர்களும், மடாதிபதிகளும் இரட்டுரமொழிந்து, சிலேடையாகப் பேசி பாராட்டு பெற்றதையும்; கேட்பவரை அவர்கள் தமது அறிவுக் கூர்மையாலும், சொல் நயத்தாலும் மகிழவைத்ததையும் குறிப்பிடும்  16 நிகழ்வுகளை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது]

5. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - தலைமைப் பேருரை
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[ஜூன் 10, 11 1934 இல், திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டிற்குத் தலைமையேற்ற த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நிகழ்த்திய தலைமைப் பேருரை. இக்காலத்திலும் தமிழ் வளர்ச்சிக்காக முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களும் உமாமகேசுவரம் பிள்ளை உரையில் இடம் பெறுகின்றன; எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழிக்கொலைக்கு உடன் போவதைத் தவிர்ப்பது, தமிழ் வழி கற்பிப்பதை ஆதரிப்பது, தமிழ்வழி கற்பிப்பதற்கு உதவும் வகையில் பிறதுறைசார்ந்த கல்வியின்  கலைச்சொற்களை உருவாக்கி/தமிழ்ப்படுத்தி நூல்கள் பல உருவாக்குவது, அந்த நூல்கள் எழுதுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தக்க ஊக்கத்தொகை அளிப்பது, தமிழ் மாநாடுகள் என்ற முறையில் கூட்டங்கள் கூட்டி, கூட்டங்களில் தீர்மானங்கள் உருவாக்கி பின்னர்  தமிழ் வளர்ச்சிக்காக அதனைச் செயல்படுத்தாமல் விடுவது, கல்லூரியில் தமிழ் வகுப்புகளை அதிகரிப்பது என இன்றளவும் விவாதத்திற்கு உள்ளாகும் கருத்துக்கள் இடம் பெற்ற உரையை நிகழ்த்தியுள்ளார் ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, June 13, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 2

_________________________________________________________

1. தேம்பாவணி
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[தேம்பாவணி மற்றும் தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பற்றிய அறிமுகத்தில் தொடக்கி; திருத்தக்கதேவர், கம்பர் ஆகியோரின் அடிதொட்டு வீரமாமுனிவர் அப்புலவர்கள்  வழியில் கையாண்ட கருத்துக்கள் ஆகியவற்றை விளக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2.  திருந்திய கையெழுத்துக்கள்  (தொடர்ச்சி...)
வீ. உலகவூழியன்
[திருந்திய கையெழுத்தை மாணவர் எழுதிட  ஆசிரியர் அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.  திருத்தமுறாக் கையெழுத்து படிப்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தும். பலநாள் படித்ததைத் திருத்தமுற தேர்வில் எழுதாத ஒரு  விடைத்தாள் சலிப்புற்றிருக்கும் ஒரு  மதிப்பீடு செய்பவரை அடைந்தால், குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.  திருந்திய எழுத்துக்கள் பற்றி காந்தியடிகள்  அறிவுறுத்திய கருத்துக்களை எடுத்துரைத்து, திருந்திய கையெழுத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும்   இக்கட்டுரை... நிறைவுற்றது]

3. பொருளின் அமைப்பு
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளி பற்றிய இயற்பியல் கட்டுரைகளை எழுதிய அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  பொருள்  வகைகள் (திட, திரவ, வாயு), அவற்றின் பண்புகள், மூலப்பொருட்கள் மற்றும் கூட்டுப் பொருட்கள், பொருட்கூறுகள் (அணுக்கட்டமைப்பு) ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. 'இலக்கியம்' 'இலக்கணம்'
ஞா. தேவநேயப்பாவாணர்
[மொழிகளின் பரவலால், பலமொழிகளுக்குப் பொதுவாய் அமைந்திடும் சொற்கள்; தமிழில் இருந்து பிற மொழிகளில் மருவியிருக்கக்கூடிய சொற்கள் எனத் தமது மொழிநூலில் அகராதி முறையிலும், கலைமுறையிலும் வெளியிட்டவற்றைப் பொழிலின் வழியே பகிர்ந்து கொள்கிறார். தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் உள்ள  ஒற்றுமையைக் காட்டுகிறார்.  தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை. வடமொழியில் இருந்து அனைத்து மொழிகளும் கடன்பெறும் என்றும், ஆனால் வடமொழி தனித்தியங்கும் எனக் கருதுவது  ஒரு தவறான கொள்கை என்கிறார்]

5. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை]

6. திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டின் அறிக்கை
 - ஜூன் 10, 11 1934 நடந்த இந்த விழா அறிக்கை, மாநாட்டில் கொண்டுவரப்பட்ட பத்துக்கும் மேலான  தீர்மானங்களைப் பட்டியலிடுகிறது.

[குறிப்பு: இந்த மாநாட்டில் தி. இலக்குமணப் பிள்ளை தமது மாணவர்களுடன்  இசையரங்கு நடத்தினார்.  அதற்குத் தலைமையேற்ற மறைமலையடிகள் அவர்கள், தி. இலக்குமணப் பிள்ளை அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" என்ற பட்டமளிக்க வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" பட்டமளிக்கப்பட்டு  மாநாட்டு விழாவில் பாராட்டப்பட்டார்.
விழாவில் பாடப்பட்ட பாடல் , வரவேற்புத் தலைவர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்  நிகழ்த்திய வரவேற்புரை ஆகியவை பற்றிய   நிகழ்ச்சித் தொகுப்பு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, June 12, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 1

_________________________________________________________

1. தமிழ்ப்பொழில் புத்தாண்டு வாழ்த்து
கா. பொ. இரத்தினம்
[நேரிசை ஆசிரியப்பாவில் தமிழ்ப் பொழிலுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. பழந்தமிழ்ப் பாவலருங் காவலரும்
கா. பொ. இரத்தினம்
[யாழ்ப்பாணம் வேலணையூரைச் சேர்ந்த பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள், காரைநகர் இளைஞர் ஐக்கிய சங்க இரண்டாம் ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.  தமிழ் மொழியில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப் பட்டியலிட்டு, வேறு எம்மொழியிலாவது இவ்வளவு அதிகமாகப்  பெண்புலவர் இருந்துள்ளனரா?  என வியக்கிறார். பல பழந்தமிழ் நாடக நூல்கள் கிடைக்காமல் போய்விட்டன, தமிழில் எழுதப்பட்ட வானநூல், இசைநூல், சோதிட நூல்கள் பலவும் அழிந்துவிட்டன  என வருந்துகிறார். தமிழ்ப்புலவர்களின் பண்புகளையும், அவர்களது இலக்கியத் திறனையும் விவரிக்கும் கா. பொ. இரத்தினம்  அவர்களின் இந்த சொற்பொழிவுக் கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

3. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும் (தொடர்ச்சி...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தில், சிபியின் வழித்தோன்றலான சோழனும், தனது  முன்னோர் போன்றே  பிறருக்காக வாழும் பண்புடன் பாரதப் போரில் அசுவத்தாமனால் தாக்கப்பட்டாலும்  அவனது  படைகளை  கொன்று குவித்தான்;  அப்போர் வன்மைக்காகப் பாராட்டப்பட்டான்; பாடி வீட்டில் அசுவத்தாமன் அனைவரையும் கொன்ற பொழுது சோழன் அவனுடன் போரிட்டு இறந்தான் என்பது போன்ற  செய்திகள் இடம்பெறுவதைக் காட்டும்  ம. வி. இராகவன் அவர்களின் இக்கட்டுரை நிறைவுற்றது]

4. தருக்க விளக்க வினாவிடை
சித. நாராயணசாமிகள்
[நூல்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுக தருக்கப் பயிற்சி தேவை, தருக்க நூல்களின் கடின மொழியில் அமைந்துவிடுவதால், பல தருக்க நூல்களைப் பயின்று அவற்றை  அனைவரும் அறிந்து கொள்ள உதவும் நோக்கில் வினா-விடை வடிவில் எளிமையாக தான் எழுதிவரும் நூலின் பகுதியை பொழிலின் அன்பர்களுக்காகப் பொழிலின் வழி பகிர்ந்து கொள்கிறார் சித. நாராயணசாமிகள்.  தருக்கம் என்றால் என்ன ? என்ற அடிப்படையில் துவங்கி  வினா-விடை வகையில் தருக்கக் கலை விளக்கப்படுகிறது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

6. திருந்திய கையெழுத்துக்கள்
வீ. உலகவூழியன்
['திருத்தம்' என்னும் சொல்  இயற்கை அழகைப் புலப்படுத்தாது, அது செயற்கை அழகினையே புலப்படுத்தும். பனையோலை எழுத்துக்கள் திருத்தமின்றி இருந்த காரணத்தால் நூல்களில் வழுக்கள் மிகுந்தன, இதனால் நேர்ந்த குறைபாடுகளின்  காரணமாக "எழுதினான் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழி உருவாகியது.  எழுதுவது எளிமை பெற்ற இக்காலத்தில் திருத்தமுற எழுதுதல் தேவை.  கடுஞ்சொற்கள் கேட்க இனிமை  தராதது போலவே, திருத்தமற்ற வகையில் எழுதிய பதிவு  கருத்துச்  செறிவைக் கொண்டிருந்தாலும் காண்பவர் விரும்பும் வண்ணம்  அமைந்திராது என்றக் கருத்தைக் கூறும்   இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]
    
7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
கரந்தைத் தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசரின் திருவிழாவைக்  கொண்டாடியது; 
மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கம், பண்டிதமணியால் துவக்கப்பட்ட சங்கமாகும். இச்சங்கம் தனது வெள்ளிவிழாவை உ.வே. சா. தலைமையில் கொண்டாடியது.
சென்னைப்பல்கலைக்கழகம், திராவிட மொழிகளில் எழுதப்படும் சிறந்த அறிவியல் நூலுக்கு ரூபாய் 750  பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அறிவியல் அறிஞரும், தமிழறிஞரும் இணைந்து எழுதும் நூல்களும் பரிசுக்கான  தகுதி பெறுபவையே எனக்குறிப்பிடும் இச்செய்தி பரிசுத் தொகையின் அளவு ஊக்கமளிப்பதாக இல்லை என்றக் கருத்தைப் பதிவு செய்கிறது.

8. மதிப்புரை
இதழாசிரியர்
[கோவைத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் "கொங்குமலர்" என்ற மாத இதழ் சிறந்த அறிஞர்கள்  எழுதும் அருமையான கட்டுரைகளைத் தாங்கி வெளிவருவதைக் குறிப்பிட்டு, அனைவரும் படித்துப் பயனுற பரிந்துரைக்கப்படுகிறது]

 ... இந்த இதழின் முன் அட்டையில், இசைத் தமிழ்ச்செல்வர் திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) ,  திருவனந்தபுரம் அவர்களின் படம் வெளியிடப்பட்டுள்ளது.  எனினும் அவர் பற்றியக் குறிப்புகள் ஏதும் கட்டுரைகளில் காணப்படவில்லை...