Sunday, December 18, 2016

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 1  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 1

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் - சி. கு. நாராயணசாமி முதலியார்
2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. வடநாடு சென்ற தமிழரசர் காலம் - மா. இராசமாணிக்கம்
5. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
6. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம் -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும்
சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.  இது ஒரு தொடர் கட்டுரை].

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ... இது ஒரு தொடர் கட்டுரை].

3. தில்லையுலா (தொடர்ச்சி ...)
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. வடநாடு சென்ற தமிழரசர் காலம்
மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை].

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[- 13 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப்பொழில் அதன் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூறுகிறது
- 1937 ஆண்டின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது, வரவிருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் குறித்த திட்டங்கள் விவாதத்தில் உள்ளது
- 1937 ஏப்ரல் 6, 7, 8 இல் தஞ்சையில் நடந்த அறிஞர்கள் மாநாட்டில், "காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவரின்" தலைமையில், இந்தியைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கி கற்பிக்க எடுத்த முடிவை கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிர்க்கிறது.    இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 10% என்பதையும் குறிப்பிட்டு, இம்முடிவு தமிழகத்தின்  கல்வி வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி, அரசியல் தலைவரின் பேதைமையையும், தமிழரின் அடிமை மனப்பான்மையையும் கண்டிக்கிறது].

6.   நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[- ஈழகேசரி வாரஇதழ் தமது தமிழ் வளர்சிப்பணியின் மற்றொரு முயற்சியாக வெளியிட்டுள்ள "ஆண்டு மடல்" இதழின் சிறப்பு பாராட்டப்படுகிறது
- சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவாக, ஈழகேசரியின் ஆசிரியர் நா. பொன்னையா அவர்கள்  வெளியிட்டுள்ள "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்" பதிப்பு பாராட்டப்பட்டுள்ளது].

7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்க அமைப்பின் கல்லூரி, மருத்துவசாலை, வெள்ளிவிழா திட்டங்களுக்கு நன்கொடை அளித்தோர்  பெயர், நன்கொடைத் தொகை குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது].
________________________________________________

Thursday, December 1, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 12

வணக்கம்.

துணர்: 12 - மலர்: 12  (1936-1937) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)   துணர்: 12 - மலர்: 12

________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. நன்னனும் பரணரும், (தொடர்ச்சி ...) - ஔவை சு. துரைசாமிப்பிள்ளை.
2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...) - E.R. நரசிம்மஐயங்கார்
3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை
4. கடிமர யானை - சிறு நாடகம் - கு. நா. சுந்தரேசன்
5.  நூல் மதிப்புரை - இதழாசிரியர்
6. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும் (இணைப்பு)
9. நூல்: நெல்லை வருக்கக் கோவை (இணைப்பு)

வாசிக்க இங்கே செல்க!

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...
1. நன்னனும் பரணரும் (தொடர்ச்சி ...)
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
[நன்னன் என்பவன், சேரன் செங்குட்டுவன்  காலத்திற்குச் சற்றே பிற்காலத்தில், சேரநாட்டின் ஒரு  குறுநிலப்பகுதியான கொங்குப் பகுதியை  ஆட்சி செய்த வேளிர் குல மன்னன்.

கட்டுரையின் இப்பகுதியில் நன்னனின் நகரங்களுள் ஒன்றான ஆஅய் பிரம்பு குறித்த அகநானூற்றுப் பாடல் (356), பாழி நகரம் குறித்த அகநானூற்றுப் பாடல்கள் (258, 372), நன்னன் வேந்தர் பலரை வென்று, அவர் மகளிர் கூந்தலை கயிறாகத் திரித்து அருங்கலம் கொணர்ந்ததைக் கூறும் நற்றிணை பாடல் (270), அவன் பெண்கொலை செய்து தீராப்பழியைப் பெற்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (292), படைத்தலைவன் மிஞிலி யின் தந்தையின் கண்களைக் குருடாக்கிய கோசர்களை வென்றதைக் கூறும் குறுந்தொகைப் பாடல் (73), ஆகிய பரணரின் பாடல்கள் வழி நன்னனது வரலாற்றைக் கூறுகிறார் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை].

2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[அரிகேசரி என்னும் கூன்பாண்டியனின் குறிப்பு,  மலைநாடென சேரநாட்டுப் பகுதியைக் குறிக்கும் சொல் பயன்பாடு,  கோவிலில் கல்மதில் அமைப்புகள்  எழுப்பப்பட்ட காலம், தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய குறிப்பு, கிரந்த எழுத்துக்கள் பற்றிய செய்தி, தன்மைப்பெயர்கள் பயன்பாடு, வடமொழிச்சொற்கள் பயின்று வருதல் ஆகிய பற்பல இலக்கியக் குறிப்புகளை எடுத்துக்காட்டி திருவிளையாடல் கதைகள் காலந்தோறும் தோன்றின.  வடமொழியில் தொகுக்கப்பட்ட திருவிளையாடல் நூலும், கல்லாடமும் 11 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களல்ல என்றும், மாணிக்க வாசகர் 9 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவரல்லர் என்றும், கல்லாடம் 6 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கருதுவது தவறு எனவும் விளக்குகிறார் நரசிம்மஐயங்கார்]

3. தில்லையுலா
L. உலகநாத பிள்ளை
[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை  வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள்.  ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை.  வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]

4. கடிமர யானை - சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[இரவலர் அளித்த பரிசில்! (பாடல் 162) என்ற புறநானூற்றுப் பாடலினை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட நாடகம். புலவர்  பெருஞ்சித்திரனார், தனது தகுதிக்கேற்ற பரிசு கொடுக்கத் தவறிய இளவெளிமான் தந்த பரிசிலைப் புறக்கணித்து வள்ளல்  குமணனிடம் சென்று பாடி பரிசில் பெறுகிறார்.  இளவெளிமானின் நாட்டுக்குத் திரும்பி குமணன் தனக்கு வழங்கிய கொடையான யானையை   இளவெளிமானின்  காவல் மரத்தில் (கடிமரம் = காவல் மரம்)  கட்டி அதனைத் தனது பரிசாக  இளவெளிமானுக்கு அளித்து  'நின்ஊர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில்' எனக் கூறி புத்தி புகட்டிய நிகழ்வு  நாடக வடிவெடுத்துள்ளது]

5.  நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட, இராவ் சாகேப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய  'கம்பராமாயணம் - பாலகாண்டம்' உரைநூல் மதிப்புரை பெற்றுள்ளது]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர்  C. R. நமசிவாய முதலியார் படத்திறப்பு விழா நடைபெற்றது. பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தமிழ்ப் புலவர்களை பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை (Lecturer) அழைப்பது போலவே 'சொற்பொழிவாளர்' எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் ஊதியமும் அவர்களுக்கு இணையாக வழங்கப் பட வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஆட்சிக் குழுவினரால் (இலட்சுமணசாமி முதலியார் முன்வைத்த விளக்கத்தினை ஏற்றுக் கொண்டு) நிராகரிக்கப்பட்டது.

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

8. நூல்: சித்தரந்தாதி - மூலமும் உரையும்
ஆசிரியர்: சித்தர்
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 12
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 14
நூல் அறிமுகம்:
இந்த நூல் திருவானைக்காவல் கோயில் நாயகியான அகிலாண்ட அம்மையின் மீது எழுதப்பட்ட தோத்திரப்பாடல்களாக, கலித்துறையால் அமைந்த 22 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சித்தரின் ஊர், மரபு முதலிய வரலாறோ, இப்பாடலுக்கு உரை எழுதியவர் வரலாறோ அறியக்கூடவில்லை. இதனை செம்பரம்பாக்கம் கறுப்ப முதலியார் மகன் ஆறுமுகம் என்பவர் ஏடுகளில் எழுதி வைத்தார் என்ற குறிப்பு மட்டும் கிடைத்துள்ளது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பக்கத்திற்கு 5 வரிகளாக 20 ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு, நூலகத்தின் 129 ஆவது எண் கொண்ட ஓலைச்சுவடியென இடம் பெற்றுள்ளது. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில்  இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

9. நூல்: நெல்லை வருக்கக் கோவை
ஆசிரியர்: அம்பிகாபதி
வெளியீடு: தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வெளியீடு - 11
பதிப்பகம்: கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை
ஆண்டு: 1936
பக்கங்கள்: 20
நூல் அறிமுகம்:
இந்த நூல் "நெல்லைமாலை" என்றும் அழைக்கப்படும். திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள நெல்லைநாதர் இந்த நூலின் பாட்டுடைத் தலைவர். அகப்பொருளில், மொழியின் முதலாம் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொரு காரிகையின் முதலெழுத்தாய் அமையுமாறு தொடுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்டமைந்துள்ளது இதன் சிறப்பு, 98 செய்யுள்களில் கதை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர் பாண்டிய நாட்டின் வீரையில் (வேம்பத்தூரில்) ஒரு வேதியர் குலத்தில் பிறந்தவர் என்பதை இந்நூலின் கடைசிச் செய்யுள் கூறுகிறது.

தஞ்சை சரபோஜி மன்னரின் சரசுவதிமகால் நூலகத்தின் இந்த நூல், பிழை திருத்தப்பட்டு செப்பனிடப்பட்டு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 1936 ஆண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தமிழ்ப் பொழில் இதழில் இது ஒரு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 
________________________________________________

Tuesday, November 15, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 11

வணக்கம்.

துணர்: 12 - மலர்: 11  (1936-1937) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)   துணர்: 12 - மலர்: 11
________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
1. பழைய பாடற்றிரட்டு
2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
3. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
4. ஒரு போலியுரை மறுப்பு
5. நன்னனும் பரணரும்
6. நூல் மதிப்புரை
7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

வாசிக்க இங்கே செல்க!

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. பழைய பாடற்றிரட்டு
L. உலகநாதப் பிள்ளை
[வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட  50  வெண்பா பாடல்களின் திரட்டு.  பாடல்கள் சில  சோழ நாட்டுப் பின்புலம் கொண்டவையாகவும், கடவுளரைக் குறிக்கும் பாடல்களாகவும் உள்ளன. திருச்சியைக் குறித்த பாடல்களும் (31, 32) உள்ளன.

என்னசனி ஞாயிறுபோ யித்திங்கள் வந்துதித்தால்
மின்னியசெவ் வாய்மின் மெலிவளே - உன்னரிய
மன்னுமத னம்புதனால் வாய்த்தவி யாழம் படைத்தாள்
அன்னையெதிர் வெள்ளியா னாள்
[19]
என்ற பாடல் வாரத்தின் கிழமைகளையும் பெண்ணையும் இணைத்த இரட்டுற மொழிதல் பாடல் போன்றுள்ளது (தெரிந்தவர் பொருள் விளக்கம் தருக)]

2.  கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட  கல்லாடம் என்ற கோவை நூலில், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடப்படுகிறது . திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார் நரசிம்மஐயங்கார்.  கட்டுரையின் இப்பகுதியில், மாணிக்க வாசகர் (சம்பந்தர் போன்று) சிவதலங்களை தொகுக்கும் தொகை நூலாகவும்,(சுந்தரர் போன்று)  சிவனடியார்களின் தொகையைக் கூறும் வகையில்  தம் பாடல்களை எழுத முயலவில்லை என்கிறார் கட்டுரை ஆசிரியர். மேலும் மறைமலையடிகள் குறிக்கும் மாணிக்கவாசகர், அவரது திருப்பெருந்துறைக் கோவில்  காலவாராய்ச்சியின் பிழைகளையும் காட்டுகிறார்.]

3. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார் . இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

4. ஒரு போலியுரை மறுப்பு
அ. கந்தசாமி பிள்ளை
[மதுரை தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்" இதழில் வெளியான "திருவள்ளுவர் காலம்" என்ற ஆர். நரசிம்ஹன் எழுதிய கட்டுரையின் மீது மதிப்புரை வழங்குகிறார் அ. கந்தசாமி பிள்ளை.   மணிமேகலையும் திருக்குறளும் என்ற இருநூல்களையும்  ஒப்பிட்டு,  திருவள்ளுவர் காலத்தையும் மணிமேகலையின் காலத்தையும் பிற்படுத்தும் நோக்கத்தில் ஆர். நரசிம்ஹன் வைப்பது ஒரு  விதண்டாவாதம்.  "பொய்யில் புலவன்" என்பது திருத்தொண்டத் தொகையில் வரும் "பொய்யடிமையில்லாத புலவரை" குறிக்கிறது என்றும்;  "தெய்வம் தொழாள்" என்று மணிமேகலையின் 22 ஆம் காதையில் வரும் குறிப்பு திருக்குறளில் வரும் குறளைக் குறிக்கவில்லை.  அது ஏதோ  ஒரு புலவரின் பாடல், கடல்கோளில் அழிந்து போன நூலின் பாடலாகும் என்றும் கூறுவதை மறுக்கிறார் அ. கந்தசாமி பிள்ளை. ஆர். நரசிம்ஹன் அவர்களின் நோக்கம் யாதெனில், தெளிவாகத் தெரியும் சான்றுகளை நடுவுநிலையற்ற நிலைப்பாடு கொண்டு  மறுத்து,  மணிமேகலை, திருக்குறள் ஆகிய இரண்டு நூல்களின் காலத்தையும் பின்தள்ளும் முயற்சி என்று விளக்கியுரைக்கிறார்.]

5. நன்னனும் பரணரும்
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
[நன்னன் என்பவன், சேரன் செங்குட்டுவன்  காலத்திற்குச் சற்றே பிற்காலத்தில், சேரநாட்டின் ஒரு  குறுநிலப்பகுதியான கொங்குப் பகுதியை  ஆட்சி செய்த வேளிர் குல மன்னன். இவன்  மிகுந்த  வீரமும்  கொண்டவன், இவனது வீரப்புகழுக்கு, சிறந்த போர்த்திறம் கொண்டிருந்த இவனது  படைவீரன்  மிஞிலியும் ஒரு காரணம். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேரமன்னனுக்கும் நன்னனுக்கும் வாகைப் பெருந்துறை என்ற இடத்தில் நடந்த  போரின் போது  நன்னனின் நாடும், உயிரும் அவனைவிட்டுப் பிரிந்தது. 

மேலும்  இவன் குறித்த செய்தி; ஆற்றில் மிதந்து வந்த இவனுக்குரிய தோட்டத்து மாங்கனியொன்றை ஒரு பெண் உண்டுவிட்டாள்.  அப்பெண்ணின் தந்தை அதற்கு ஈடாகப் பெருஞ்செல்வம் கொடுப்பதாகக் கூறியும் நன்னன் ஏற்காது அப்பெண்ணைக் கொன்றொழித்தான்.  ஆதலால் 'பெண்கொலை புரிந்த நன்னன்' என்ற தீராப்பழியையும் வரலாற்றில் பெற்றான். தன்னை நாடி வந்த ஒளவையை பரிசில் தராது அவமதித்து அவரது வெறுப்பையும் பெற்றான்.  இவனது வரலாற்றை அறிவதற்கு அகநானூற்றில் பரணர் நன்னன் குறித்து பாடிய   14 பாடல்கள் மூலம் அறியலாம் எனக் கூறி அப்பாடல்களில் இவன் குறித்துக் காணும் செய்திகளைத் தொகுத்தளிக்கிறார்  ஔவை சு. துரைசாமிப்பிள்ளை  அவர்கள். இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் பல அகநானூற்றுப் பாடல்களுக்கு உரை எழுதப்பெறவில்லை எனவும் தெரிகிறது. இது ஒரு தொடர் கட்டுரை. ] 

6.  நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[தெலுங்கு மொழியில் வழங்கும் 'சுமதி சதகம்' என்ற நீதி நூலினை,  "நன்மதிமாலை" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார் ஐ. நடேசபிள்ளை. இந்த அறநூல் தமிழன்பர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது. ]

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
________________________________________________

Thursday, October 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 10

_________________________________________________________

1. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர், 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்  கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை எவ்வாறு புலவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்டது, நக்கீரர் என்ற புனைபெயரில் பாடல்கள் எழுதப்பட்டது, கொங்குதேர் வாழ்க்கை  என்ற பாடல் இக்கதையுடன் இணைக்கப்பட்டது என்பதையும்; பாண்டியன் உக்கிரப்பெருவழுதி குறித்தும் மூர்த்திநாயனார் குறித்தும் கூறும்  புராணக் கதைகள் யாவும் 8 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை எனச்  சான்றுகளுடன் விளக்குகிறார்.  இவற்றை எழுதிய  புலவர் கூறும் "நால்வகை இலக்கணம் நலத்தகு மொழிந்தனை"  என்ற இலக்கணக்குறிப்பானது  பாடல்கள் எழுதப்பட்ட காலத்தை  உறுதி செய்கிறது என்று நிறுவுகிறார் நரசிம்மஐயங்கார் ]

2. நற்றிணை  (தொடர்ச்சி ...)
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்', நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், நற்றிணை குறிக்கும் தாவரங்கள், விலங்குகள் குறித்தும், அவற்றின் பண்பென குறிக்கப்படுபவை குறித்தும் தொகுத்து வழங்குகிறார் ச. தண்டபாணி தேசிகன் ]

3. தமிழ்க் கவிச் சுவை
வி. குமாரசாமி ஐயர்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியில் வசித்த  தமிழ்ப்புலமை வாய்ந்த  தங்கப்புலவர் என்றழைக்கப்பட்ட இஸ்லாமியப் புலவர் ஒருவரைக்  குறித்த உண்மைக் கதை. இவரது புலமை பலரைக் கவர்ந்தது என்றும், மதுரைக்குச் சென்ற ஒரு வண்டிப்பயணத்தில் எவ்வாறு இப்புலவர் இலக்கிய விருந்தளித்து தன்னுடன் பயணம் செய்த பயணிகளை மகிழ்வித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.  

►► கட்டுரையின் இப்பகுதியில், 'இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது' என்பது  குறித்த  ‘‘யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு’’(அகநானூறு - 12) என்ற கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

5. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு
வே. மு. சீனிவாச முதலியார்
[ மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடங்குகிறார் வே. மு. சீனிவாச முதலியார் .  கோகழி என்பது திருக்காழியைக் குறிக்கும், திருப்பெருந்துறையை அல்ல என்றும் மிக விரிவான  பொருள் விளக்கம் தருகிறார்.  இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

6. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை...நாடகம்  தொடர்கிறது ]

7. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தின்  வெளியீடான, திருநெல்வேலியில் வாழ்ந்த  கவிராயர் முத்துசாமிப்பிள்ளை  அவர்கள் இயற்றிய "நாநார்த்ததீபிகை" என்ற நிகண்டிற்கும்;
வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய  திருக்கோவலூர் K. கோதண்டபாணி பிள்ளை இயற்றிய "பங்கயச்செல்வி அல்லது வீரக்காதல்"    என்ற துன்பியல் நாடக நூலிற்கும்;
அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியரான நவநீதக்கிருஷ்ணன் அவர்களால்,  'பேடன் பௌவல்' எழுதிய 'ரோவரிங் டு சக்சஸ்' என்று சாரண இயக்கத்தைக் குறித்த ஆங்கில  நூல்,    தமிழில்  'திரிசாரணீயம்' என்று  மொழியாக்கம்  செய்யப்பட்ட நூலிற்கும் ;
மதிப்புரை வழங்கி  அவற்றைப்  படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, October 12, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 9

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது குறித்த   ‘‘வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்  நெருப்பெனச் சிவந்த’’(அகநானூறு - 11) என்ற ஔவையார் பாடிய பாலைத் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

2. கல்லாட நூலாராய்ச்சி
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் 11 ஆம் நூற்றாண்டு போல கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.]

3. பழைய பாடற்றிரட்டு
L. உலகநாதப்பிள்ளை
[தஞ்சை சரஸ்வதி மகால் சுவடி நூலகத்தில் உள்ள,  பல பாடல்தொகுப்பு  நூல்களில் இருந்து திரட்டப்பட்ட, இதுவரை வெளிவராத பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார் L. உலகநாதப்பிள்ளை]

4. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை]

5. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[நவம்பர் 1936 முதல் கும்பகோணத்தில் இருந்து, சாதி சமயக் கோட்பாடுகளால் நிகழும் சமூக சீர்குலைவை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில்  எளிய தமிழில் வெளியிடப்பட்ட "அறிவுக்கொடி" என்ற சமூகசீர்திருத்த  மாதஇதழ் பாராட்டப்படுகிறது, அதனைப் படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, October 1, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 8

_________________________________________________________

1. கருவிலே வாய்த்த திரு (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[ 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  என்ற பண்பாக, பறவைகள் தங்களுக்கு சிறந்த வகையில் அமைந்த ஐம்புலன்களைக் கொண்டு இடர்களை முன்கூட்டியே அறியும் திறனைக்  கொண்டிருக்கின்றன.  பறவைகள் ஓய்வெடுக்காது  தொலைதூரத்தில் உள்ள இடங்களுக்கு, கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் திசையறியும், காலமறியும் திறனும் இன்றும் ஆய்வாளர்களை வியக்க வைக்கும் வண்ணமே அமைந்துள்ளன  என  ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார்கள்.  பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்கள் அவற்றின் "கருவிலே வாய்த்த திரு" சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. காலவாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ம.வி. இராகவன்
[IV. தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார் ம.வி. இராகவன். நரசிம்மையங்கார்  அவர்களது கட்டுரை  சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றவில்லை எனக்குறிப்பிட்டு, தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைக் கொடுத்து, தக்கச் சான்றுகள் காட்டாத ஆய்வுநெறி, "புற்கயிற்றாற் களிறு பிணிக்க முயல்வதற்கு  ஒப்பாகும்" ,  உண்மையைக் கண்டறிய இயலாவண்ணம் மயக்கம் தரும் என்று சுட்டிக் காட்டுகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது குறித்த   ‘‘வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய, மீன்கண்டன்ன மெல்லரும் பூழ்த்த, முடவுமுதிர் புன்னை’’(அகநா.10) என்ற அம்மூவனார் பாடிய நெய்தல் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

4. எண்ணெய்யும் தண்ணீரும்
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[மொழியிலக்கண நியதியில் ஒன்றாகிய 'பொருள் விரிதல்' நியதி அடிப்படையில், எண்ணெய்யும் (எள் +  நெய்) தண்ணீரும் (தண்  + நீர்) பொதுவாக எல்லா நெய்யையும் (வேப்பெண்ணெய், மண்ணெண்ணெய்);  எல்லா நீரையும் (சுடு தண்ணீர், தேத்தண்ணீர்)  குறிக்கப்படுகின்றது என்று விளக்கும்  சிதம்பரநாதஞ் செட்டியார், தமிழிலக்கியங்களில் இவ்விரு  சொற்களும் பற்பலவிதங்களில் கையாளப்படுவதை எடுத்துக்காட்டி விளக்குகிறார்]

5. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன; 2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்;   3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு; 4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப்  பட்டது;  போன்ற தகவல்களை  தனது ஆராய்ச்சியின் மூலம்  கண்டறிந்து அறிவித்த சதாசிவப் பண்டாரத்தார் தொடர்ந்து ...

5. கொல்லம் ஆண்டின் வரலாறு:  சகஆண்டு, கலியாண்டு என ஆண்டு கணக்கிடும் பழைய  முறை நம்நாட்டில்  முன்னர் வழக்கத்தில் இருந்தது போல; மலையாள மண்ணில் 'கொல்லம் ஆண்டு' எனக் கணக்கிடும் முறையும் இருந்து வந்தது, இன்றும்  அம்முறையைப் பயன்படுத்துபவரும் உண்டு.   இவ்வாறாகக் கொல்லம் ஆண்டு அடிப்படையில் கணக்கிடும் முறை பொது ஆண்டு 825 இல், சேரமான் பெருமான் நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கைலாயம் சென்ற ஆண்டு முதற்கொண்டு துவக்கப்பட்ட ஒரு  கணக்கிடும் முறை எனக் கருதப்பட்டு வந்தது.  கல்வெட்டுகள் தரும் தகவல்கள் அடிப்படையில் செய்யப்பட மறு ஆய்வு வழியாக,  புதிய 'கொல்லம்' நகர் அமைக்கப்பட்டது  முதல்  இவ்வழக்கம் தொடங்கிற்று எனத் தெரிய வருகிறது. பொது ஆண்டு 822 இல் நிகழ்ந்த கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்து 825 இல் புதிய கொல்லம் நகர் உருவானது முதல் 'கொல்லம் ஆண்டு' முறை வழக்கத்திற்கு வந்துள்ளது என  சிதம்பரனார் கொடுத்த  குறிப்பு ஒன்றின்  அடிப்படையில்  தெளிவுபடுத்துகிறார் சதாசிவப் பண்டாரத்தார். சேரமான் பெருமாள் கைலாயம் சென்றது எட்டாம் நூற்றாண்டின் துவக்கம் என்பதால் அது  கல்வெட்டுத் தகவலில் இருந்து மாறுபடுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

6. ஒரு பழைய வழக்கம்: வழக்கத்தில் இருந்த  'மகாராஜராஜஸ்ரீ'என இயற்பெயருக்கு முன்னர் குறிப்பிடும் வழக்கத்தைத் தவிர்த்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் 'திருவாளர்'  என முதலில் எழுதத் தொடங்கி, அதனை வழக்கத்திற்குக் கொண்டு வந்து தமிழ்ப்பண்பாட்டைக் கடைப்பிடிக்கிறது.  இது போன்றே அன்றைய கல்வெட்டுகளில் 'திருவாளன்', 'திருவுடையான்', 'திருவன்' முதலிய சொற்கள் வழக்கத்தில் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்.

7. காயம்: இக்காலத்தில் காயம் என்பது 'பெருங்காயம்' என்பதைக் குறிக்கிறது.  "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்" என்ற குறளுக்கு விளக்கம் தரும்  பரிமேல் அழகர், இனிய சுவையைக் கொடுக்கும் காயங்களைக் கொண்டு சுவையூட்டப்பெற்ற உணவு என்று விளக்கம் அளிக்கிறார். அவர்   "காயங்கள்" எனப்  பன்மையில் குறிப்பிடுகிறார்.  திருச்செந்தூர் கல்வெட்டு  ஒன்று காயங்கள் ஐந்து வகைப்படும் எனவும் அவை; மிளகு, சீரகம், மஞ்சள், சிறுகடுகு, கொத்தமல்லி என்றும் புலப்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறார்   சதாசிவப் பண்டாரத்தார்.

8.பழைய காலத்தில் பெருநகராக இருந்த ஊர் ஒன்றின் கோயில், பிற்காலத்தில் அது சூழ்ந்த இடங்களுடன் தனி ஊராக அறியப்படும் நிலை உருவாகும் என்பதற்கு திருவாடுதுறை ஓர் எடுத்துக்காட்டு.  திருவாடுதுறை என்னும் கோயில் சாத்தனூர் என்ற ஊரில் அமைந்த கோயில் என திருவாடுதுறை  கல்வெட்டு ஒன்று கூறுகிறது.  இக்குறிப்பு  திருவிசைப்பாவில் திருவாடுதுறைப் பதிகத்தின்  பாடலொன்றிலும் காணப்பெறுகிறது. சாத்தனூரும் திருவாடுதுறையும் இன்று தனித்தனி ஊர்களாக அறியப்படுகின்றன. இதற்கு அக்காலச் சோழர் தலைநகர் பழையாறை நகரையும் எடுத்துக்காட்டாகக்  காட்டலாம்; அன்றைய  பழையாறையின் பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம்  ஆலயங்களும் இந்நாளில் தனித்தனி ஊர்களாக அமைந்துள்ளன, பழையாறை இந்நாளில் சிற்றூராக மாறிவிட்டது என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்]

6. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் J.S. பொன்னையா  அவர்கள், தமது ஆராய்ச்சியின் விளைவாக  தாம் அறிந்தவற்றை,   'பொருளாதார நூல்', 'நாணயமாற்று', 'நாணயம்', 'இந்தியாவின் கிராமப்பொருள்நிலை', 'கிராமச் சீரமைப்பு' ஆகிய பொருளியல் நூல்களாக  எளியத் தமிழ் நடையில் எழுதி, அவற்றில்  பொருளாதாரக் கொள்கைகளை விளக்கும் அருஞ்செயலுக்காகப்   பாராட்டப்பட்டுள்ளார். 

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, September 22, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 7

_________________________________________________________

1.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை    'இருமனப் பெண்டிர், பெண்வழிச்சேறல், கள், கவறுகள், இரவு, இரவச்சம்' ஆகியன  நல்வாழ்விற்குத்  தரும் இடர்களைக் குறித்து எழுதினார்.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  வாய்மை, ஈகை, உடல்நலம், பிணி, மருந்து ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருவிளையாடற் புராண வாராய்ச்சி  (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இருவருமே 13 ஆம் நூற்றாண்டினர்  என அவர்கள்  தனது  பாடலில் கையாண்ட  குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூலில் சேக்கிழார் மற்றும் பரஞ்சோதி முனிவர் கருத்துகள் இடம் பெறுவதாகவும் கூறுகிறார்]

3. இயைபு நூல்  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
2. இயன் மாற்றமும் நிறையும்  - என்ற அத்தியாயத்தில்: பொருண்மையும் நிறையும், இயன்மாற்றத்தில் நிறைமாற்றம், நிலவியம், இயன் மாற்றத்திற்குக் காரணம், இயன் மாற்றத்தின் சிறப்பியல்புகள்  ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. கருவிலே வாய்த்த திரு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[மக்களின் செயல்பாடுகள் பலவகை; தாமே திட்டமிட்டு அடுத்தவர் உதவியின்றி செயல்படுத்துதல், அடுத்தவர் உதவியுடன் செயலாற்றல், பிறர் ஏவி வழி காட்டிய பின்னர் முடித்தல் என வகைப்படுத்தலாம்.  தாமே கூர்த்த மதியுடன் திட்டமிட்டு செயல்படுத்திக் காட்டுபவரின் திறமையின் சிறப்பியல்பினை  அவருக்கு அது 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  எனலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களது கருத்து. இக்கருத்தை விளக்க, பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்களைச் சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை ]

5. காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[III. பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார். 
இக்கட்டுரையில் தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்  ம.வி. இராகவன்.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, September 13, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 6

_________________________________________________________

1.  திருவிளையாடற் புராண வாராய்ச்சி
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூல் உவேசா  அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.  இதனை எழுதிய  பெரும் பற்றப்புலியூர் நம்பியார் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 14  ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வாழ்ந்தவர் என்பதைக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். பரஞ்சோதி முனிவர் 16-17ஆம் நூற்றாண்டினர்  என அவர் தனது  பாடலில் கையாண்ட இலக்கணக் குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

2. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'தெரிந்துசெயல்வகை'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. மகாபலிபுரத்தின் பண்டையப் பெயர்
C.M. இராமச்சந்திர செட்டியார்
பல்லவர் ஆட்சிக்கு முன்னர் 'மகாபலிபுரம்' ஏற்பட்டதென்றும், அப்பொழுது அதன்  பெயர் 'தலசயனம்' என்று H. ஹீராஸ்  தனது நூலில் எழுதியுள்ளார்.  பின்னர் மாமல்லன்   நரசிம்மவர்மனுக்கு பிறகு அவ்வூருக்கு  'கடல்மல்லை தலசயனம்' என்று பெயர் ஏற்பட்டது; அதாவது,  'தலசயனம் என்ற பெயர் பெற்ற  கடல் அருகில்  மலை' என்பது ஹீராஸ் அவர்கள் தரும் விளக்கம். இது தவறு.  மல்லை என்பதற்கு மலை என்ற பொருள் கிடையாது. 'கடற்கரையில் உள்ள மலையில் அமைந்துள்ள  தலசயனம் என்னும் கோயில் ' என்பதுதான் அதன் பொருள்.

மேலும் ஊரின் பெயரும் அதனைத் தொடர்ந்து கோயிலின் பெயரும் இணைத்து வழங்கப்படுவதுதான் வழக்கம், 'தஞ்சை ராஜராஜேஸ்வரம்' என்பது போல, 'கச்சி ராஜசிம்மேஸ்வரம்'  என்பது போல அது 'மல்லை தலசயனம்' என்று அமையும் என விளக்குகிறார்  இராமச்சந்திர செட்டியார்.  மேலும், 'மல்லை ஜலசயனம்' என்ற கடல் நீர் அருகிருந்த  ஆலயம் ஒன்றினை  கல்வெட்டுகள்  குறிக்கின்றன. இது நிலத்தில் இருப்பதால் இக்கோயில் 'தலசயனம்' ஆகும். இத்தலசயனம் குறித்து பெரிய திருமொழியில் இரண்டு பதிகங்களைக் காணலாம்.  மாமல்லைக்கு பண்டைய பெயர் இருந்திருந்தாலும், அது தலசயனம் என இருந்திருக்க வாய்ப்பில்லை  என விளக்குகிறார் அவர்.

4.  காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[1936- ஆம் ஆண்டின் திருப்பனந்தாள் தமிழ்ப்பரிசு பெறுபவர் சங்குப்புலவர் அவர்கள்; சென்னை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  'தமிழ்க் கலைச்சொற்கள்  மாநாடு' நிகழ்வு குறித்த தகவல்கள்  இடம் பெறுகின்றன]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, September 2, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 5

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.]

2. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்  (தொடர்ச்சி ...)
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணையாரைத் தொடர்ந்து வரும் இப்பகுதி புகழ்த்துணை நாயன்மார் குறித்த பகுதி;
திருத்தொண்டர் திருவந்தாதியும், பெரியபுராணமும் புகழ்த்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிப்பிடுவது செருவிலிபுத்தூர் என்ற ஊர்தனை.  ஆயினும், கொற்றங்குடி உமாபதிசிவனார் தான் இயற்றிய திருத்தொண்டர் புராண சாரத்தில்  அவ்வூரை 'அழகார் திருப்பத்தூர்' என்று காட்டுகிறார்.  உமாபதிசிவனாரும்  சுந்தரமூர்த்தி நாயனாரும்  இவ்வாறாகக்  குறிப்பிடுவது  அரிசிற்களாப்புத்தூர் பதிகத்தின் அடியொட்டி என்பது புலப்படுகிறது. சம்பந்தரும் தம் பதிகத்தில் இவ்வூரைக்  குறிப்பிடுவார்.

இக்காலத்தில்  செருவிலிபுத்தூர் என்ற ஊர் காணப்பெறவில்லை.   அழகார் திருப்புத்தூர் இந்நாளில் அழகாத்திரிப்புத்தூர் எனவும் அழகாப்புத்தூர் எனவும் திரித்து அழைக்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாயில் செல்லும் பெருவழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது   எனக் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். ]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'சினம் காக்க'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.

தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்' எனத் துவங்கும் 9  ஆம் பாடலுக்கு (பாலை; வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது)  தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
உவேசா அவர்களின் 'புதியதும் பழையதும்',  'கனம் கிருஷ்ணையர்', கோபாலகிருஷ்ண பாரதியார்'  ஆகிய  மூன்று நூல்களும்;
R. V. இராமசுவாமி எழுதிய 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற கட்டுரைத் தொகுதியும்;
ஆ.  மாரிமுத்து அவர்களின் புத்தரின் அறவுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான 'சமயங்களின் சக்கரச் சுழற்சி' என்ற நூலும் பொழிலின் வாசகர்களுக்கு  இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, August 5, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 4

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  இக்கட்டுரை ... தொடரும்]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[5 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, சம்பா வித தாட்டாந்தம், சம்பாவித அந்நுவயங்கள்,  வியோக அந்நுவயங்கள், இருதலைப்பாடு,   போலி இருதலைப்பாடு, தொகுதிப்போலி,  பகுதிப்போலி, கிழமைப்போலி, ஒன்றினை ஒன்று பற்றுதல், மற்றொன்று மறுத்தல், கேள்விப்போலி,  காகதாலிய நியாயம்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. திருவாதவூரார் திருவாய்மொழி  (தொடர்ச்சி ...)
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பெருங்காற்றும், மின்னலும், இடியும்
K. கோவிந்தன்
[மாணவர் யாத்த இந்த சிறு  அறிவியல் கட்டுரை, பெருங்காற்று, மின்னல், இடி  ஆகியவற்றின் தோற்றம், பண்பு ஆகியவற்றை விவரிக்கிறது]

5. ஏமநல்லூர் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[தேவாரத்தில் தமக்கென சிறப்பாக தனிப்பதிகம் பெற்ற சிவதலங்கள்  'பாடல் பெற்ற தலங்கள்' என்றும், பிற பதிகங்களின் பாடல்களில் பொதுவாக வைத்துப் பாடப்பெற்ற தலங்கள் 'வைப்புத் தலங்கள்' எனவும் அறியப்படும்.   காலப்போக்கில் பலவகைக் காரணங்களால் சில ஊர்கள் பெயர் மாற்றம் பெற்று, அவ்வூரின்  இருப்பிடம் அறிய முடியாமல் போனாலும், ஊர்க் கோவில்களில் இருக்கும் பழைய கல்வெட்டுகள் அவ்வூர் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது என்ற தகவலைத் தந்துதவும்.

திருநாவுக்கரசர் பாடல் ஒன்றில் 'ஏமநல்லூர்' என்ற தலம் வைக்கப்பட்டுள்ளது.  அது இக்காலத்தில் கும்பகோணத்தின் அருகில் உள்ள திருப்பனந்தாள் ஊருக்கு அண்மையில் உள்ள 'திரைலோக்கி'  என  அழைக்கப்படும்  ஊராகும் என்பதை, 'ஏமநல்லூராகிய திரைலோக்கி மகாதேவி சதுர்வேதிமங்கலம்' என்ற கல்வெட்டுக் குறிப்பொன்றால் அறிய முடிகிறது.  இது பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர்களில் ஒன்று  என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

6. பெண்ணின் பெருமை
R. மங்கையர்க்கரசி
[ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியான மங்கையர்க்கரசி தஞ்சை விநாயகர் தமிழ்க் கழகத்தின் ஆண்டுவிழாவில் 'பெண்ணின் பெருமை' குறித்து  நிகழ்த்திய சொற்பொழிவு கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் இடம்பெற்றுள்ளது. பெண்கல்வி பறித்து  பிறகு, பெண்கள் ஒடுக்கப்பட்ட பிறகு பாரதம் தனது  பெருமை குன்றியது எனக்குறிப்பிட்டு பெண்ணுரிமைக்கு குரல்  கொடுக்கிறார்]

7. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிக்கப்படும்  தஞ்சாவூர் சோழநாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகர் அன்று.  அவர் பிறந்த ஊரான தஞ்சாவூர் என்பது,  இந்நாளின் தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் வட்டத்தில் அமைந்திருந்த, அந்நாளைய மருகல்நாட்டுத் தஞ்சாவூர் எனக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். இது ஒரு தொடர் கட்டுரை]

8. ஒரு துயரம்
இதழாசிரியர்
திவான்பகதூர் சர். தி. நெ. சிவஞானம் பிள்ளை மறைந்தார்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, August 3, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 3

_________________________________________________________

1.  கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், வழியளவை  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

2. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கிறது.

டான்-யுன்-ஷன்  அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் போர்வெறி மனநிலை, நவீன ஆயுதங்கள் தயாரிக்கும்  போக்கு ஆகியவற்றைப் பற்றிக் கவலை தெரிவிக்கிறார் (இவர் கவலையை உறுதிப்படுத்தும் வகையில் இவர் உரையாற்றிய இரண்டாண்டுகளில் 2 ஆம் உலகப்போர் துவங்கி, அணுஆயுதம் அழிவு வேலையைக் காட்டியது இங்குக் குறிப்பிடத்தக்கது) இக்கட்டுரை நிறைவுறுகிறது]

3. 'பரணர்' மறுப்பின் ஆராய்ச்சி
ஐ. நடேசப்பிள்ளை
[சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதினார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (பார்க்க துணர் 11: மலர் 9).  இக்கட்டுரையில் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ளார் ஐ. நடேசப்பிள்ளை]

4. பண்டைத் தமிழர் மணமுறை
மா. இராசமாணிக்கனார்
[பண்டைத் தமிழர் மணமுறை , தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் உண்டா என்பது குறித்து இலக்கியத்தில் ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் மா. இராசமாணிக்கனார். 1950  களில் தமிழ் இலக்கிய உலகமே  மா. இராசமாணிக்கனார், சிலம்புச் செல்வர் ம பொ சி ஆகிய இருவரின் பின்னணியில் இரண்டுபட்டு எதிரெதிர் அணியில் பண்டைத் தமிழர் மணமுறை குறித்து விவாதித்தனர். பிறகு இந்த விவாதங்கள் நூலாகவும்  வெளியிடப்பட்டன என்பது  தமிழகத்தில் நிகழ்ந்த   ஒரு  சுவையான வரலாற்று நிகழ்வு.  இந்த நிகழ்வுக்கும் முன்னரே 1936இல்  மா. இராசமாணிக்கனார் எழுதிய கட்டுரை இது.  பண்டைத் தமிழர் மணமுறை  குறித்து இக்கட்டுரையில் பல இலக்கியச் சான்றுகளைத் தருகிறார் மா. இராசமாணிக்கனார்]

5. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை, கிபி 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல், 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பிற்காலப் பாண்டியர்களின் வரலாற்றுத் தகவல்களை, அவர்களது  கல்வெட்டுகள், சாசனங்கள் தரும் குறிப்புகளுடன் விளக்குகிறார் சதாசிவப் பண்டாரத்தார்.  இவர்களில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சிறந்த மன்னனாக விளங்கினான் என்றும், சிறந்த தமிழ் அறிஞனாகவும் விளங்கினான் என்றும் கூறுகிறார்.  அதற்கு இம்மன்னன் அவன்  கட்டிய திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன்புறம் இடிந்துள்ள கோபுரச் சுவரில் எழுதி வைத்த  சாசனச் செய்யுள்களைசான்று தருகிறார். (இச்செய்யுள்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் -  மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நூலான "தமிழக ஆவணங்கள்" சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள், மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14  இல் [http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=303&pno=123]படிக்கலாம்). 

அடுத்து,    சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் இளவல் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகாரவர்மன், சடையவர்மன் சீவல்லப பாண்டியன், சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன், நெல்வேலிமாறன், சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (நைடதம் நூல் எழுதிய அரசன்), வரதுங்க ராம பாண்டியன்  ஆகியோர் பற்றிய செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். இப்பாண்டியர்களில்  சிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும், சிவபக்தர்களாகவும், சிவனுக்குக் கோவில் எழுப்பியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. திருவாதவூரார் திருவாய்மொழி
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[அனந்த கிருஷ்ணையங்கார் எழுதிய 'தனிப்பா மஞ்சரி' ஆசிரியர் புலவர் காளமேகம் போன்ற திறமை கொண்ட ஒரு  புலவர் எனக் காட்டுகிறது என்றும்; 
சிவானந்தையர் எழுதிய 'புலியூர்ப் புராணம்' சிறந்த பொருள் நயம், சொல் நயம் கொண்ட பாடல்களைக் கொண்டது எனவும் பாராட்டப்படுகிறது. இந்த நூலை நிறைவு செய்யாமல் சிவானந்தையர் மறைந்துவிட்டாலும், தனது கணவரின் நினைவு மலராக வெளிக்கொணர உதவிய அவரது மனைவியும்  பதிப்பித்த தம்பையாப்பிள்ளையும் பாராட்டப் பட்டுள்ளார்கள்]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, July 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 2

_________________________________________________________

1. வல்வடுகு நான்கு  (தொடர்ச்சி ...)
K.S. சுந்தரம் பிள்ளை
[விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்:     பீஜப்பூர் சுல்தான் உதவியுடன் தஞ்சையை மீட்டத் தஞ்சை நாயக்கர் வாரிசான செங்கமலதாசை, பீஜப்பூர் சுல்தான் மறைவிற்குப்பின்னர் ஆட்சி ஆசை கொண்ட சுல்தானின் பிரதிநிதி தஞ்சை நாயக்கரை விரட்டியடித்துக் கவர்ந்து கொள்கிறார்.  தஞ்சையில் ஏற்பட்ட கலவரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  மராட்டிய மன்னர் சிவாஜி தஞ்சையைக் கைப்பற்ற, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சை  மராட்டியரின் கைகளுக்கு மாறுகிறது என்ற வரலாற்றுத் தகவலும், நாயக்க மன்னர்களது இறைமாட்சி  இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, முதல் நிலை பிரதானம், அந்நுவயக் காட்சியின் ஆதார உரைமொழி, மில்லின் உரைகள், நிலைமாற்றல், மாறுகோணிலை மாற்றம், தொடையலியல், கணித முறைகளை அந்நுவய முறையாகக் காட்டுதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. வாழ் நாள் (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த  கருத்தாக்கங்கள், இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள், செய்திகள், சான்றுகள்   ஆகியவற்றின் தொகுப்பு]

4. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு (தொடர்ச்சி ...)
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை.  தமிழகத்தில் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை]

5. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 17, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 1

_________________________________________________________

1. வாழ் நாள்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த இந்தியக் கருத்தாக்கங்கள், தமிழ் இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள் குறித்த மறுபார்வை ஆகியவற்றின் தொகுப்பு. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை. பண்டைய இலக்கிய, இலக்கண, நிகண்டுகள் 'பாடல்' வடிவில் அமைந்து கல்வியிற் சிறந்தாருக்கே  பயனளிக்கும் வகையில் அமைந்தது.  பாடல்களில் ஆங்காங்கே உரைநடை அமைந்த சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைத் தமிழர் பலகாலமாக அறிந்திருப்பினும், பாக்களையே பெரிதும் போற்றி வளர்க்க முற்பட்டனர்.
மொழி வளர்க்க உதவும் 'இலக்கிய பத்திரிக்கைகள்', சமயம் வளர்க்க உதவும் 'சமயப் பத்திரிக்கைகள்', சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட 'சமுதாய சீர்திருத்தப் பத்திரிக்கைகள்', குறிப்பிட்ட வகுப்பினரின் நலம் காக்க வெளியிடப்படும் 'வகுப்பு முன்னேற்றப் பத்திரிக்கைகள்', இவ்வாறு உயர் நோக்கங்கள் தவிர்த்து பொதுமக்களை மகிழ்விக்க என்னும் 'நகைச்சுவைப் பத்திரிக்கைகள்', நாட்டின் அரசியல் முன்னற்றதைக் கருதும் 'தேசீயப்  பத்திரிக்கைகள்' எனப் பல வகை பத்திரிக்கைகள் தோன்றின.
இந்த ஆறு வகை பத்திரிக்கைகளின் பண்புகளை ஆராய்ந்து,   தமிழகத்தில் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை. இது  ஒரு தொடர் கட்டுரை]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், முதல் நிலைத் துறைகள், முதல், இரண்டாம், மூன்றாம்  நிலைச் சிறப்பு விதிகள்,  அவற்றைப் பற்றியக் குறிப்புரைகள் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பிரம்பில் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[அப்பரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமான பிரம்பில் என்ற ஊரின் வரலாறு இக்கட்டுரையில்  ஆராயப்படுகிறது.  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 'வேளாண் பிரம்பூர்' மற்றும் 'கள்ளப் பிரம்பூர்' என்ற இரு ஊர்கள் அவ்வூர்க் கோவில்  கல்வெட்டுகளில் பிரம்பில்  அழைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், பிரம்பில் எனக் குறிப்பிடும் வேளாண் பிரம்பூர் கல்வெட்டு காலத்தால் முற்பட்டது.  ஆனால் பிரம்பில்  எனக் குறிப்பிடும் கள்ளப் பிரம்பூர் கல்வெட்டு பிற்காலத்தியது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் அவ்வூர் வேறு பெயரில் (ராஜ சுந்தர சதுர்வேதி மங்கலம், என்று ) அழைக்கப்பட்டதாகவும் கோவிலின் காலத்தால்  முந்திய பிற கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.  எனவே, காலத்தால் முந்திய கல்வெட்டில் பிரம்பில் என்ற  குறிப்பு கொண்ட  வேளாண் பிரம்பூர் என்ற ஊரே அப்பர் காலத்தில் பிரம்பில்  அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுகிறார் கட்டுரை ஆசிரியர்.  தென்னிந்தியக் கல்வெட்டு நூல்களில் இடம் பெறாத அவ்வூர்களின் கல்வெட்டுகளையும்,  சோழ நாட்டின் வளநாடு, கூற்றம் போன்ற ஆட்சிப் பிரிவுகள் பற்றியும் இக்கட்டுரை தகவல்கள் பல தருகின்றது]

5. இந்தியாவும் சீனாவும்
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் என பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள்.
அவர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாகத்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜய ராகவ நாயக்கர் ஆகியோர் குறித்தும்;
மதுரை நாயக்கர்களுடன் ஏற்பட்ட பகையால் மதுரை நாயக்கர்கள் போரில் தஞ்சை நாயக்கர்களை வென்று, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சையை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா (மே  13, 1936) குறித்த ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்றாலும் நிர்வாகம் தமிழ்க் கல்விக்கும், தமிழிசைப் புலமைக்கும் ஏற்றம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது; சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி பிரிவின் செப்டெம்பர் 1936 விழா ஏற்பாடு குறித்த தகவல்கள்; இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, July 5, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 12

_________________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1310  ஆம் ஆண்டிற்குப் பிறகு  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது. மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் மைந்தர்களான சடையவர்மன் சுந்தர பாண்டியனும் சடையவர்மன் வீரபாண்டியனும் பதவிக்காகப் போட்டியிட்டதும், சர்ச்சையில் வலுவற்றுப் போன பாண்டிய நாட்டை மாலிக்காபூர் கொள்ளையிட்டதும்  பாண்டிய அரசின் அழிவுக்கு வழி வகுத்தது.  தொடர்ந்து விசயநகர பேரரசின் படையெடுப்பும் நிகழ்ந்தது.  மகமதியர்கள் விரட்டப்பட்டாலும் பாண்டியர்கள் மீண்டும் நல்ல நிலையில் ஆட்சி புரியவில்லை என்பது கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிகிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் தோன்றுகிறார்.  ஆய் அண்டிரனைக் காண விழைந்த விறலி ஒருத்தியை தன்னுடன் அழைத்துச் சென்று அவனைச் சந்திக்க உதவ முன்வருகிறார்; அவர்களுக்கும்  குட்டுவன் கீரனார்,  மருதநாகன், துறையூர் ஓடைக்கிழார் ஆகியோருக்கும் ஆய் அண்டிரன் பரிசுகள் வழங்குகிறார் என்ற  காட்சிகள்   இடம் பெறுகின்றன.  இந்நாடகம் நிறைவுற்றது.  வழக்கம்போல இந்த நாடகமும் கல்லூரி ஆண்டுவிழாவிற்காக சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று, கல்லூரி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்டது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[ - சென்னைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'கலைச்சொற்கள்' என்ற நூல் மேல்நாட்டுக் கலைகளைத் தமிழில் பயில உதவும் என்று பாராட்டப்பட்டுள்ளது.
 - வே. வேங்கடராசலு ரெட்டியார் எழுதி, சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "கபிலர்" என்ற நூலில், பல தலைப்புகளிலும் கோணங்களிலும் கபிலர் குறித்து ஆய்வு செய்த ஆசிரியரின் ஆய்வுத்திறம் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டப்பட்டுள்ளது.
 - ஆறாண்டுகளாகத் தொடர்ந்து அரசியல், சமூகம், தமிழ்மொழி, தமிழர்நாகரிகம் ஆகியவற்றில் பதிவுகளைத்  தாங்கி வெளிவரும் வாரஇதழ் வெளியிட்ட ஈழகேசரி ஆண்டு மடலின் சிறப்பு கண்டு அவ்விதழ்  வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது]

5.  செய்திகள்
  - இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
 - இரங்கற்பா:  கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பேரன்பர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் மறைவு குறித்து எழுதப்பட்ட இரங்கற்பா
 - இணைப்பு:  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் - வெள்ளிவிழா விண்ணப்பம் - 25 ஆண்டுகள் நிறைவையொட்டி சங்கம் முன்னெடுக்கவிருக்கும் பல தமிழ்ப்பணித் திட்டங்கள் கொடுக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்ற மக்களின் செயலுதவியும் பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது.
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, July 4, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 11

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  8  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பூர்வபதக் கள்ளநடை, 5, 6, 7, 8  ஆம் விதிகளின் விளக்கம்,   நிலைகள்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. மக்கள் வாழ்க்கை
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[செயலால் வாழ்கிறோம், ஆண்டினால் அன்று
உள்ளத்தால் வாழ்கிறோம் உயிர்ப்பினால் அன்று
உணர்ச்சியால் வாழ்கிறோம், நாழிகையால் அன்று...உண்டு உடுத்து உறங்குவதோடு வாழ்க்கை முற்றுவதில்லை, மனித இச்சையால் வாழ்க்கை தொடருகிறது. ஒருவரது உணர்ச்சி, சிந்தை, செயல்  ஆகியவற்றால் வாழ்க்கை நோக்கப்படும்  என்று கூறும் வள்ளுவர் கருத்துக்களின்  தொகுப்பு இக்கட்டுரை]

4. காவிரி
K. கோவிந்தன்
[மாணவர் ஒருவரது கட்டுரை.  காவிரியின் துவக்கம் முதல், அது கடலில் கலக்கும் வரை அதன் பாதையை விவரித்து, இலக்கிய மேற்கோள்களுடன் காவிரியின் சிறப்பைக் கூறும் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையை மணந்து கொள்ளும்  காட்சி  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[- O.A. நாராயணசாமி ஐயர் அவர்களின் 'கிராம முன்னேற்றம்' என்ற நூல் கிராம மக்கள் நலத்தினை மேம்படுத்த நல்ல வழிமுறைகளைக் காட்டும் நூல் எனப் பாராட்டப் படுகிறது.
- அ. முத்துச்சாமி பிள்ளை 1843 இல் வெளியிட்ட "வீரமாமுனிவர் சரித்திரமும், பாடல் தொகுதிகள் முதலியனவும்" என்ற நூலின் பிரதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு,  ஆ.பொன்னுசாமி நாடாராலும், த. பொ. கை. அளகிரிசாமி பிள்ளையாலும் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட அந்நூல்  சிறப்புற அமைந்துள்ளதற்குப் பாராட்டுகள் கூறப்பட்டுள்ளது.
- சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி. ஜெ. தாமஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பொருளாதார ஆய்வாளர் பா. நடராசன் தமிழில்  மொழிபெயர்த்து 'வேளாண்மைக்கடன்' என்ற தலைப்பில்  வெளியிட்ட நூல் காலத்தினால் செய்த பேருதவி எனப் பாராட்டப் பட்டுள்ளது.
- சிங்கப்பூர் அன்பு நிலையத்தார் வெளியிட்ட சுவாமி சுத்தானந்த பாரதியாரின் "பைந்தமிழ்ச்சோலை" சிறந்த தமிழ்ப்பணி என்று போற்றப்பட்டுள்ளது.

7.  செய்திகள்
[மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 3, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 10

_________________________________________________________

1.  பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார். 
'கலம் தொடா மகளிர்' குறித்த ஆய்வு செய்வோர், 'ஆகில்கலங்கழீ இயற்றும்' மற்றும்   'தொடுகலம்' குறித்து இக்கட்டுரை கூறும் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருப்பர்.  இப்பகுதியில், பண்டைய நூல்களைப் பிழையின்றிப் பொருள் கொள்ள உதவிடும்  நோக்கில்,   பழைய நூல்களைப் பதிப்பிக்கும் செயல்பற்றி அறிய வேண்டிய செய்திகளைத்தருகிறார். இக்கட்டுரை ... தொடரும்]

2. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; தன்னைக் கொல்ல விரும்பிய மன்னனிடம் இருந்து தப்பிக்க மறைந்து வாழ்ந்த வரருசியார் தக்கதருணத்தில் வெளிப்பட்டு, துன்பத்தில் இருந்த மன்னனுக்கு உதவி செய்து விடுதலை பெறுகிறார். தனது மனைவியுடன் துறவறம் மேற்கொண்டு கானகம் செல்கிறார்.  மன்னனும் அவனது மைந்தனும் இறந்த பிறகு அமைச்சர் சந்திரகுப்தனை அரசனாக்கி, சாணக்கியரைத் தனது அமைச்சர் பதவியில் இருத்திவிட்டு அவரும் துறவறம் மேற்கொள்கிறார்.  இக்கதை நிறைவுற்றது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பத்தளவை,   வழியளவை, மேனாட்டு அந்நுவயம், அந்நுவய விதிகள், ஐயமத்தி, ஈயாமத்தி  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், கொங்கு மன்னன் தனது நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டத்தை  ஒற்றன் மூலம் அறிந்து அமைச்சருடனும் படைத் தலைவனுடனும் ஆய் அண்டிரன் திட்டம் வகுக்கும் காட்சியும், வேட்டைக்குச்  செல்லும் ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையைச் சந்திக்கும் காட்சியும்  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. தமிழ்ச்செய்தி
L. உலகநாத பிள்ளை
[சங்கத்தின் ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்ற L. உலகநாத பிள்ளை  அவர்களின் தலைமையுரை. தமிழ் என்னும் சொல் திராவிடம் > திரமிளம் என்று திரிந்த சொல்லன்று.  தமிழ் மொழியை உருவாக்கியவர் அகத்தியரும் அல்லர். வேத காலம் என ஆய்வு நூல்கள் காட்டும் காலத்திற்கும் முற்பட்டது தமிழ், தமிழ்ச்சங்கங்களின் காலங்கள் என வரையறுக்கப்பட்ட காலங்கள், எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியத்தின் சிறப்பு, அதிலும் அகம் புறம் என்று வகுத்த பொருளதிகாரத்தின் சிறப்பு, சங்க இலக்கியங்களின் சிறப்பு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழின் சிறப்பு எனத் தமிழின் சிறப்புகளை மாணவர்களுக்கு உரைக்கிறார்  உலகநாத பிள்ளை .
இந்தியாவிற்கே வந்து இந்திய மன்னராக முடிசூட்டிக் கொண்ட முதல் ஆங்கில மன்னர், ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் மறைந்தார். அன்னாருக்கு  இரங்கலும், அவருக்குப் பின்னர் மன்னரான எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு வாழ்த்துக்களும் கூறப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 2, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 9

_________________________________________________________

1. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அவர் மனைவி உடன்கட்டை ஏற முயல, துறவி ஒருவரால் அம்முயற்சி  தடுக்கப்படுகிறது]

2. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  7  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு (தொடர்ச்சி ...)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதி; 29 குடைவரை கோவில்களையும் உருவாக்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் 4 காலத் தொகுதிகளில் வகைப்படுத்துகிறது.  கி.மு. 200 களில் துவங்கி கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் குகை அமைக்க உதவியவர்கள், குகையின் சிறப்பு, அவற்றில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்த விளக்கம் தரப்படுகிறது.  இதில் மூன்றாம் தொகுதி குகைகள் 2 ஆம் புலிகேசி காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜந்தா குகைகள் ஓவியத்திற்காகச் சிறப்பு பெற்றவை. அங்கு சுவர்களில் பூசிய சாந்துக்கலவை தயாரிக்கப்பட்ட முறை, நீண்டகாலம் நிலைத்திருக்கும் வண்ணங்கள் உருவாக்கப்பட்ட முறை, ஓவியங்கள் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட விதம், ஓவியங்களில் பிறநாட்டு ஓவியக்கலையின், குறிப்பாக காந்தாரக் கலையின்  தாக்கம், புத்தமதத்தின்  தொன்மக்கதைகள்  எவையெவை அந்த ஓவியங்களில் இடம்பெற்றன போன்ற செய்திகள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன]

4. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்   (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பைப் போற்றுகிறது  இக்கட்டுரை.  கலித்தொகையில் இடம் பெறும் உள்ளுறை உவமங்கள் மற்றும் மெய்ப்பாடுகள் குறித்து முன்னர் இலக்கிய நயம் பாராட்டப் பட்டது.
கட்டுரையின் இப்பகுதியில்; தொல்காப்பிய இலக்கணம் கருப்பொருளை சிறப்பிப்பதாகக் குறிக்கும் "இறைச்சிப் பொருள்" (கருப்பொருட்கு நேயம்) கலித்தொகை செய்யுட்களில் விரவியிருக்கும்  இடங்களை  நச்சினார்க்கினியர் விளக்கும் திறம் குறித்து ஆராய்கிறார் வரத நஞ்சைய பிள்ளை]

5.பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  ஒவ்வொரு நூலாசிரியருக்கும் இவரைப் போல நூல் மதிப்புரை வழங்குபவர் ஒருவர் கிடைத்தால் அது ஒரு பெரும்பேறு என்று போற்றத்தக்க வகையில் அமைந்துள்ள இக்கட்டுரை ... தொடரும்]

6. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. இப்பகுதியில், அண்டிரன் மீது கொங்கு மன்னர் போர் தொடுக்கத் திட்டமிடும் காட்சி இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

7. செய்திகள்
இதழாசிரியர்
[லூதர் பர்பேங்க்* (Luther Burbank)என்ற அமெரிக்க தோட்டக்கலை அறிஞரின் வாழ்க்கை வரலாற்றை  ஒரு நூலாகத் தமிழில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. அந்நூலுக்கு  மதிப்புரை  வழங்கப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கும், மருத்துவ சாலைக்கும்  நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]

-------------------------------------------------------------------------------

லூதர் பர்பேங்க்* குறித்துத்  திரட்டப்பட்ட மேலதிகத் தகவல்:
லூதர் பர்பேங்க்  - https://en.wikipedia.org/wiki/Luther_Burbank
இவர் 'Autobiography of a Yogi' என்ற நூலை எழுதிய புகழ் பெற்ற பரமஹம்ச யோகானந்தரின் நண்பர். யோகி எழுதிய இந்த  நூல் லூதர் பர்பேங்கிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்நூலில்...
Chapter 38 – Luther Burbank, A Saint Amidst the Roses
https://en.wikisource.org/wiki/Autobiography_of_a_Yogi/Chapter_38

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, July 1, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 8

_________________________________________________________

1. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள தொண்டு, பண்டு, பஞ்சு, முற்றும், வடி  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது]

2. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்   (தொடர்ச்சி ...)
சி.கு. நாராயணசாமி முதலியார்
[தொடர் கட்டுரையின் இப்பகுதியில், 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்  முகமதியர்கள் படையெடுப்பினால் கொள்ளையடிக்கப்பட்டுச் சீர்குலைந்தது; இவ்வூரில் இருந்த  720 ஆலயங்களில் எஞ்சியிருப்பவை இக்கோவிலும்,  ஆதிநாதேசுரர், சாந்தீசுரர், மற்றும் பார்சுவநாதேசுரர் ஆலயங்கள் மட்டுமே என்ற தகவலும்;  ஆலயத்தின் சிற்பிகள் குறித்தும்,  மேலைநாட்டுச் சிற்ப அறிஞர் கோவிலின் சிற்பங்கள் குறித்துக் கூறிய கருத்துக்களும்; இக்கோவிலின் சிற்பக்கலையின் சிறப்பிற்குக் காரணம் ஹளபீட் பகுதியின் 'புஷ்பகிரி' என்ற மலையில் கிடைக்கும் "பலபக்கல்கள்" என்ற மாக்கற்களே காரணம் என்ற தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளன]

3. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  அமைச்சர் பதவி ஏற்று நடத்திய செயல்கள் குறிப்பிடப்படுகிறது, கதையின் போக்கு பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போன்று நம்ப  இயலாத புனைவுகள் பல நிரம்பியவை]

4. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியிலும்; கண் நோய்கள் குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. முல்லைத்தேர் - ஒரு சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[பாரி முல்லைக்கு வழங்கிய தேரை, கள்வர் இருவர் கவர முற்படும் செயலை பாரி முறியடிக்கும்  காட்சி]

6. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, கலைமகள் கல்லூரி  ஆண்டுவிழாக்கள்
சிவ. குப்புசாமி
[அக்டோபர் 1935 இல் இருநாட்கள் நடைபெற்ற கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன]

7. செய்திகள்
இதழாசிரியர்
[1935 ஆம் ஆண்டின் திருக்குறள் நாட்குறிப்புக்கு மதிப்புரை  மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர் , வழங்கிய தொகை விவரம் குறிப்பு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, June 30, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 7

_________________________________________________________

1. உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர் (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம அய்யங்கார்
[தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி விவாதத்தை ஒட்டி, நரசிம்ம அய்யங்கார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து விளக்குகிறார்.
இப்பகுதியில்; 'தொல்காப்பிய உரையாசிரியர்களில்' இருவர் 'பேராசிரியர்' எனக்குறிப்பிடப்பட்டனர் என்று கூறுகிறார். மேலும் உரையாசிரியர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்ட பிற புலவர்களின் தகவல்களின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்த காலத்தை 11 - 14 நூற்றாண்டுவரை  காலக்கோட்டில்  (பக்கம் #250  இல்) வழங்குகிறார்  நரசிம்ம அய்யங்கார்]

2. அணி நலன்கள்
அ. சிதம்பரநாதஞ்  செட்டியார்
[பொன்னாலும் மணியாலும் ஆகிய அணிகள் சிறந்த அணிகள் அன்று;  பணிவுடைமை, இன்சொல்லுடைமை, கண்ணோட்டமுடைமை, நாணுடைமை, குணநலமுடைமை, நுண்மாணுழை புலமுடைமை ஆகியவையும், இவைபோன்ற மற்ற  பிற சிறந்த பண்புகளுமே அணிநலன் எனத்தக்கன என்பதையே வள்ளுவம் காட்டுகிறது என்கிறார் சிதம்பரநாதஞ்  செட்டியார்]

3. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  6  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. இயைபு நூல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
1. பொருளின் மாற்றங்கள் - என்ற அத்தியாயத்தில், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அவற்றின் பண்புகள், அவற்றின் நிலைமாற்றம்,  இயன்மாற்றம்,  மூலப்பொருட்கள், கூட்டுப் பொருள்கள்,  பொருட் பண்புகள் அவற்றை அறிய உதவும் ஆய்வகச் சோதனைகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்
சி.கு. நாராயணசாமி முதலியார்
[கண்ணுக்கு விருந்தாகும் கவின்மிகு சிற்பங்கள் நிறைந்த, ஹோய்சள அரசர்கள் தோற்றுவித்த 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்' இருக்கும் இடம்,  திருப்பணி செய்த மன்னன், இறைவனின் பெயர், ஆலய அமைப்பு, கோவிலின் அளவு, மதில், சுவர் ஆகியவை தாங்கி நிற்கும் ஓவியங்கள், மண்டபத் தூண்கள் என விரிவாக விவரிக்கிறார் நாராயணசாமி முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள 'அம்பறாத்தூணி', அகராதியில் கொடுக்கப்படாத  'அம்புறாத்தூணி',  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது.
சொற்களின் பொருள் விளக்கம் தரும் இக்கட்டுரை தொடர்கிறது]

7. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியாரின் அறிவாற்றலின்  காரணமாக  அமைச்சர் பதவி அவரைத் தேடி வருகிறது  என்பது குறிப்பிடப்படுகிறது]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை
இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.