Sunday, May 1, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 1 & 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 1 & 2

________________________________________________

1.  உலாக்கொண்ட மூன்று சோழ மன்னர்கள்   (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் இரண்டாம் இராசராச சோழன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இரண்டாம் குலோத்துங்கன் செய்த சமயப்பணிகள்,  தில்லையின் செங்கண்மாலை அலைகடலில் கிடத்தியது உட்பட..., இக்கட்டுரை நிறைவு பெற்றது]

2. புது உலகம் புலனான வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[கொலம்பஸ் புதுவுலகம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது தவறான கருத்து, அவருக்கும் முன்னரே சீனர்களும், ஐஸ்லாந்தினரும்  கண்டறிந்த நிலப்பரப்பே அமெரிக்கா, கொலம்பஸின் பயணம் பற்றிய கட்டுரை இது]

3. பொறிகள்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஐம்புலன்கள் பற்றிய அறிவியல் தகவல்களின் தொகுப்பு]

4. மறைமலையடிகளின் மாணிக்க மொழிகள்
இளவழகனார்
[மறைமலையடிகளின் மாணிக்க மொழிகளின் தொகுப்பு, இந்த இதழில் வெளியானவை 97...இது ஒரு தொடர் கட்டுரை]

5. இலவசத் தொழிற்கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[E.R. அங்கப்பா கல்வியைக் குறித்து பலகோணங்களில் எழுதிவரும் கட்டுரைகளின் வரிசையில் ... இலவசத் தொழிற்கல்வியின் இன்றியமையாமை  பற்றியும் வலியுறுத்துகிறார்]

6.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  இந்தப்  பத்தாவது அத்தியாயம், ஒட்டு நோய்களும், தொற்று நோய்களும்  பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

7. உதயணன் காவியம்
வீ. சண்முகம்
[வடமொழி உதயணன் சரிதத்தை  தமிழில்  எழுதியவர் பெயர் தெரியவில்லை, ஓர் ஏட்டுச் சுவடியில் இருந்து எடுத்து பண்டிதர் பண்டாரத்தார் எழுதிக் கொடுத்த 120 விருத்தப்பாக்கள் தமிழ்ப் பொழிலில் பதிப்பிக்கப்படுகிறது]

8.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  இந்தப்  பத்தாவது அத்தியாயத்தின் தொடர்ச்சி, ஒட்டு நோய்களும், தொற்று நோய்களும்  பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]
________________________________________________


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment