Sunday, April 19, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 14

1186 அருள்மிகு விக்ன விநாயகர் ஆலயம் தியாகராஜநகர்
1187 திரு ஓங்கு திருச்சிராப்பள்ளி, செவ்வந்திப்புராணம்
1188 தில்லைநாயகன் திருநடராஜன் (சிதம்பரம் வரலாறு)
1189 திருப்பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வரலாறு
1190 THIRUKETHEESWARAM
1191 திருகேதீஸ்வரம்
1192 சிவபெருமான் வழிபாடு
1193 கும்பாபிஷேகம்
1194 கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம்
1195 யமபயம் இல்லா திருக்கோடிக்காவல்
1196 திருப்பாலைத்துறை தலவரலாறு
1197 திருப்பாலைத்துறை தலவரலாறு
1198 ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய தரிசனம்
1199 பருத்தியூர் தலவரலாறு
1200 கரவந்தீஸ்வரசுவாமி உடையார்கோயில்
1201 ஆச்சாள்புரம் திருப்பதிகங்கள்
1202 திருநெய்தானம் திருத்தல முழு வரலாறு மற்றும் திருப்பெரும்புலியூர் தலவரலாறு
1203 திருப்புள்ளமங்கை திருத்தல பெருமை
1204 திருமாந்துறை அட்சயநாதசுவாமி தலவரலாறு
1205 திருவாவடுதுறை ஆதீன வரலாறு (Short Notes)
1206 சப்தவிட ஸ்தலவரலாறு
1207 வரலாற்றில் திருவிடைமருதூர்
1208 தவத்திரு சிவசம்புசுவாமிகள் வரலாறு
1209 நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே
1210 அன்பிலாந்துறை, திருமாந்துறை பதிகங்கள்
1211 திருநல்லம் தலவரலாறு
1212 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1213 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1214 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1215 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1216 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1217 சோழபுரம் ஒருவரலாற்றுப் பார்வை
1218 திருவாலங்காடு பதிகம்
1219 காவிரி வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1220 கவின்மிகு கோயில்கள் காஞ்சியில்

Sunday, April 12, 2015

நாடார் குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்வி மற்றும் பெண்கல்வி பற்றிய  புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155) கணக்கெடுப்புப்படி  (ஜனசங்கை) படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்.  மேலும் விரிவான நாடார்குல  மக்கள் பற்றிய புள்ளிவிவரங்களை  இந்தப் பதிவில் காணலாம்.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
இரங்கூன்  வி. ஏ. வேல் ஜோசப் நாடார் என்பவர் பர்மா சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மக்களிடம்  ராமன்  ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால்  என்ன என்ற மனப்பான்மை அதிகம் என்ற கூறி; மது, சாதிபேதம், தீண்டாமை ஒழித்தால் மூன்று மாதங்களில் சுதந்திரம்  வாங்கிவிடலாம் என காந்தி சொன்னார். ஆனால் நம்  மக்களுக்கு அந்த அக்கறையில்லை. சுதந்திரத்திற்காகப் போராடும் காந்தி இப்பொழுது சிறையில் இருக்கிறார் என்ற செய்தி அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்லும் பழமொழித் திரட்டு பகுதியில்  தரப்படுகிறது. 

நாடார்சங்கச் செய்திகள்:
நாடார் சங்கக் கமிட்டிகள் அசட்டையாக வேலை செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.

நாடார் சங்க உறுப்பினர் என்று கூறி பண வசூல் செய்யும் மோசடி ஒன்று நடந்து வருகிறது  என மக்களிடம் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

நன்கொடை அளித்த இலங்கை நாடார்களின் பட்டியலில், இலங்கை முகத்துவாரம்  பகுதி நாடார் உறுப்பினர்கள் எனக் குறிப்பிடும்  தகவல்களின் வாயிலாக  அங்கு வசிக்கும் நாடார்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்களாக இருப்பது தெரிகிறது.

கார்த்திகை விளக்கு விழா நாளை விடுமுறை நாளாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கையும், நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன

நல்ல நினைவாற்றலுக்கும், குயிலைப்போல இனிய குரலைப் பெறவும்   நாட்டு  வைத்தியமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

தொடர்கள்: 
  • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை பலராமர் தேனுகாசுரனைக் கொன்றது விவரிக்கப்படுகிறது.
  • மனனமாலை (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்),
  • நல்லூர் நண்பன் எழுதிய, மனானந்த மஞ்சரி, "வெள்ளியங்கிரி கோர்ட் விசாரணை ...மதம் மாறியகேஸ் கேஸ்" என்ற நாடகத் தொடரில்,  முருகன் வள்ளியிடம் சென்றுவிட்டதால் தெய்வானை  நீதிமன்றம் சென்று ஜீவனாம்ச வழக்கு தொடுப்பதாக ஒரு கற்பனை, அவரது வழக்கறிஞர் விஷ்ணு.  இது ஒரு தொடர் நாடகம், படிக்க சுவையான ஒரு நகைச்சுவை நாடகம்
  • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஆறாம்   பாகம் இடம் பெற்றுள்ளது
விளம்பரங்கள்:
சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும், தேசானுகூலன்  பத்திரிகைக்கான விளம்பரங்களும்,

பிரிட்டிஷ் இராணுவத்தில் பணிபுரிந்த வீரர், 105 ஆங்கிலேய போர் வீர்களுக்குத் தலைவராக இருந்த, போர்களில் வெற்றி பல  கண்டு வீரப்பட்டம் பெற்ற "அசாரியா நாடார்" என்பவரின்  படம் விற்பனைக்கு, விலை  4 அணா. என்ற விளம்பரமும்,

விளம்பரப்பகுதியில் பரமன்குறிச்சி பள்ளிக்கு நன்கொடை  கோரப்படுவதும், தூத்துக்குடியில் விருதுப்பட்டி நாடார் குலத்தவர் நடத்தும் "நவீன சுக போஜன சாலை" (உணவு மற்றும் தங்கும் விடுதி) விளம்பரங்களும் அக்கால நடப்பை விளம்பரம் என்பதன் வழியாக பெறும் வரலாற்றுத் தகவல்களாக அறிய உதவுகின்றன.



நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Sunday, April 5, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1922ம் ஆண்டு டிசம்பர் 21  வெளிவந்த இதழ் (மலர் 4 - இதழ் 12)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

பாரதியார்     "தமிழருக்கு" என்ற தலைப்பில் எழுதிய எழுச்சியூட்டும் கட்டுரை இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இக்கட்டுரையை மின்தமிழின் இந்தப்பதிவில் படிக்கலாம்

'நாடார்களும் கோயிலும்' என்ற தலைப்பில் ஆரணியில் இருந்து வெளிவந்த 'சகோதயம்' என்ற பத்திரிக்கையில் "தேசாபிமானி" என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவர்,  திருப்பூரில் நடந்த நாடார்குல மாநாட்டில் எழுப்பப்பட்ட ஆலய நுழைவு பிரச்சனை, கலந்துரையாடல், வரையப்பட்ட தீர்மானங்கள் என்பவனவற்றை விவரித்து எழுதிய  கட்டுரையை நாடார் குலமித்திரன் பத்திரிக்கை தனது மூன்றாம் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ளது. கோயிலுக்குள் நுழைய காங்கிரஸ் உதவாவிட்டால் நாடார்கள் தாங்களே தங்களுக்கு கோயில் கட்டிக் கொள்ள வேண்டும், அதற்காக "தாயதிகளிடம் ஏற்பட்ட சண்டையால் தகப்பனின் சிரார்த்தத்தைக் கைவிடுவது போல" காங்கிரசைப் புறக்கணிக்கக் கூடாது. நாட்டு நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என அக்கட்டுரையில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

இதை "நயவஞ்சக யோசனை" என்றும் , "போலித் தேசாபிமானம்" என்றும் தனது இதழின் ஐந்து மற்றும் ஆறாம் பக்கங்களில்  மற்றொறு நீண்ட கட்டுரை ஒன்றின்  மூலம் நாடார் குலமித்திரன் பதிலடி கொடுத்திருக்கிறது.  ஆக, அக்காலத்தில் கோயில் நுழைவு என்பது  மிகப் பெரும் பிரச்சனையாக நாடார் குலத்தின்பால் இருந்தது தெரிகிறது. அத்துடன் கட்டுரையாளர்
"தேசாபிமானி" 'தானே கேள்விகள்  கேட்டு தானே பதில்கள்  சொல்லிக் கொண்டிருப்பதையும்' "கொட்டை எழுத்தில்" பதிவிட்டுள்ளது  நாடார் குலமித்திரன்.

சாஸ்திரி ஆஸ்திரேலியா சென்று அங்கு வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை வேண்டும்  என்று போராடமுயன்றபொழுது, ஒரு  நியூசிலாந்துக்காரர் முதலில்
சாஸ்திரி தனது  நாட்டு மக்களிடம் சமத்துவம் கிடைக்க உழைக்கட்டும் என்று  இடித்துரைத்ததையும் சுட்டிக்காட்டி காந்கிரசின் மெத்தனத்தை தேசாபிமானி புரிந்து கொள்ளட்டும்  என்று சூடான மறுமொழியும் அளித்திருக்கிறது.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
  • சட்டசபையும் நாடார்களும் பகுதியில்  சௌந்தர பாண்டிய நாடாருக்கு  சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுக்கப்படுகிறது.
  • திலகரின் சுயராஜ்ய  நிதி நிர்வாகத்தின் சீர்கேட்டை ஓழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்  வைக்கப்பட்டுள்ளது.
  • அன்றைய நாடார்குல மக்கள் தொகை 10 இலட்சம், ஆனால் நாடார் குல சங்கத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • மாசிலாமணி நாடாரின் "நாலடியார்" நூலுக்கும் "நமது குலத் தொழில் யாது" என்ற விஜயதுரைசாமி கிராமணி எழுதிய நூலுக்கும் மதிப்புரை என்ற பெயரில் நூலறிமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அந்நூல்களின்  விலை முறையே எட்டணா, மற்றும்  ஆறணா. 

தொடர்கள்: 
  • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை கன்றுகளைக் கவர்ந்தது விவரிக்கப்படுகிறது.
  • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஐந்தாம்  பாகம் இடம் பெற்றுள்ளது.
  • மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்) என்ற தொடரும் உண்டு.
  • சில இதழ்களில் அவ்வப்பொழுது தோன்றும் "பழமொழித் திரட்டு" என்ற பகுதி இவ்விதழிலும் உண்டு. இப்பகுதி  வழக்கம் போல அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்கிறது. "அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பந்தியில் இருந்தால் என்ன, கடைப்பந்தியில் இருந்தால் என்ன", "சுவர்க்கத்திற்குப் போகிற பொது கக்கத்தில் மூட்டை", "பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா"  "பெயர் பொன்னப்பன்தான் கையில் காசுகூடக் கிடையாது", பொன்னாபரணத்தைகாட்டிலும் புகழாபரணம் பெரிது" ஆகியவை இம்முறை வெளிவந்திருக்கும் பழமொழிகள்.  இப்பகுதியும் பொன்மொழி ஆர்வலர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆர்வமூட்டும் ஒரு பகுதி.  பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா என்ற பழமொழி கலால்  வருமானம் வருகிறது என்பதற்காக மதுக்கடைகளை அனுமதிப்பதா?  ***அமெரிக்காவே மதுவை ஒழித்துவிட்டது, இந்திய அரசாங்கமும் மதுவைத் தடை செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. 

விளம்பரங்கள்:
  • வழக்கம் போல முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் விளம்பரப்பக்கங்களாக உள்ளன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும்;
  • தேசானுகூலன்  பத்திரிகை, ** தத்துவ இஸ்லாம், தேசோபகாரி  பத்திரிக்கைக்கான விளம்பரங்களும் உண்டு.

*** Prohibition in the United States was a nationwide constitutional ban on the sale, production, importation, and transportation of alcoholic beverages that remained in place from 1920 to 1933 (from wiki)

** 1919ம் ஆண்டில் "தத்துவ இஸ்லாம்" என்ற பெயரில் வெளிவந்த இந்த இதழ் சனவரி 1923 இல் "தாருல் இஸ்லாம்" என பெயர் மாற்றப்பட்டுள்ளது. (from wiki)

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:தமிழ் மரபு நூலகத்தில்