Tuesday, January 12, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - ஏப்ரல் மாதத்தின் 1 வது இதழ்



வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வழக்கமாக மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று வெளியீடுகளாக வெளிவரும். 1923ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இதழ்கள், வழக்கத்திற்கு மாறாக ... 1 மற்றும் 21 ஆம் தேதிகளில் இரு முறையாக வெளிவந்தன. 22 ஆம் இதழ் 1 ஆம் தேதியிலும், 23&24 இதழ்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 21 ஆம் தேதியும் வெளிவந்தன.
இனி இதழ்களின் பதிவுகள் பற்றியத் தகவல்கள்...

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று வெளிவந்த முதல் இதழ்
(மலர் 4, இதழ் 22)

மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- ஸ்ரீ கிருஷ்ணலீலை (வீரமாமுனி எழுதுகிறார்)
- மனதுக்குத் திருப்தியான வாழ்க்கை மத்திம வாழ்க்கை (கட்டுரை)
- இலங்கை வர்த்தமானம்

3 ஆம் பக்கம்:
- புதிய போஷகப்பிரபுக்களின் தகவல்கள்
- சட்டசபை தேர்தலும் நமது கடமையும் (கட்டுரை தொடர்கிறது)

4 ஆம் பக்கம்:
- நடைபெறவிருக்கும் பங்குனித் திருவிழாவினால் அலுவலக விடுமுறை காரணமாக அடுத்த இதழ் குறித்த காலத்தில் வராது என்ற அறிவிப்பு
- சங்க நடவடிக்கை குறிப்புகள், ஆசிரியரின் வெளிநாட்டுப் பயணச் செய்திகளின் தொகுப்பு

5 ஆம் பக்கம்:
- ஜார்ஜ் மன்னர் தம் காலத்தை எங்ஙனம் செலவழிக்கிறார்
- வொய்.ஏ. அஸ்ரிய நாடார் என்ற பிரிட்ஷ் பட்டாளத்தின் மாவீரர் சென்னையில் புதிய பதவி ஏற்கிறார்
- ஐரோப்பாவின் நிலைமை போன்ற
தகவல்கள் இடம் பெற்றுள்ளன

6 ஆம் பக்கம்:
கடிதங்கள், குட்டிக்கதைகள் திரட்டு, தமிழகச் செய்திகள் திரட்டு, நாடார் சங்க செய்தித் திரட்டு

7 ஆம் பக்கம்:
- ஈகை (கட்டுரை தொடர்கிறது)
- சிந்தனை மொழிகள் (கட்டுரை)
- கிருஷிகக் களஞ்சியம்
- வியாபாரக் குறிப்புக்கள்
- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

8 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

விசேஷ அனுபந்தம் என்ற சிறப்பு இணைப்பு பக்கங்கள்
இணைப்பு பக்கம் A:
- ஆசிரியரின் இரங்கூன் பயணக் கட்டுரை - "பிரயாணத்தில் கண்ட காட்சி - இரங்கூன்"

இணைப்பு பக்கம் B:
- சட்டசபை - உப்பு வரி
- நமது கிழச்சிங்கம் - ஸ்ரீமான் ஸ்ரீ விஜய துரைசுவாமி கிராமணி பற்றிய கட்டுரை
- பர்மா வர்த்தமானம்

இணைப்பு பக்கம் C:
- பலதிரட்டு - ஐரோப்பிய செய்திகள்
- சென்னை சட்டசபைக் குறிப்புக்கள் - ஒதுக்கி வைக்கப்பட்ட இனங்களின் முக்கிய புள்ளி விவரங்கள்

இணைப்பு பக்கம் D:
- பொதுவர்த்தமானம் (உள்நாட்டு, வெளிநாட்டு செய்தித் துணுக்குகள்)


நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Monday, January 11, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 3 வது இதழ்


வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 21 அன்று வெளிவந்த மூன்றாவது இதழ்
(மலர் 4, இதழ் 21)

மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- ஸ்ரீ கிருஷ்ணலீலை (வீரமாமுனி எழுதுகிறார்)

- ரேடியோ டெலிபோன் (என்ற கட்டுரை அப்பொழுது புதிய கண்டுபிடிப்பாக - பரவிவரும் தொலைக்காட்சி பற்றி விளக்க முற்படுகிறது) 

- சுதந்திரக் கோட்டை (நாடார்களின் மத்திய காலம் பற்றிய கட்டுரை)

3 ஆம் பக்கம்:
- சட்டசபை தேர்தலும் நமது கடமையும்

- மித்திரன் அபிமானிகளுக்கோர் விண்ணப்பம், மகாஜன சங்கத்தார் நியமித்த கமிட்டி போன்ற சங்கத்தின் தகவல்கள்

4 ஆம் பக்கம்:
- மதுவிலக்கைக் கொண்டு வருமாறு அரசிற்குக் கோரிக்கை !!!!!! - தலையங்கம்

- சங்க நடவடிக்கை குறிப்புகள்

5 ஆம் பக்கம்:
- தீண்டாமைக்குத் தீர்மானமா? என்ற பகுதி பிப்ரவரி 19, 1923 அன்று மகாராஷ்டிரத்தில் சங்கராச்சாரியார் தலைமையில் கூடிய குழு எங்கெங்கு தீண்டாமை இருக்கலாம், எங்கெங்கு கூடாது எனத் தீர்மானம் கொண்டுவர முயன்றதை, தீண்டாமை என்பது என்னவென்றே புரியாத அசட்டுத் தீர்மானம் என விமர்சிக்கிறது. கோவில்கள், பரிசுத்த தளங்கள், கிணறுகள் ஆக்கிய இடங்களைத் தவிர(?) தீண்டாமை கூடாது என்பதே அத்தீர்மானம் கூறுவது.

- நாடார் மகாஜன சங்கக் கவுன்சில் ஸ்பெஷல் மீட்டிங்கு, பத்திரிக்கை ஆசிரியர் நாடு திரும்பிய தகவலும் பயணம் பற்றிய விவரிப்பும் கொண்ட கட்டுரை

6 ஆம் பக்கம்:
- செய்தித் திரட்டு நாடார் சங்க செய்திகளையும்

- பொது வர்த்தமானம் உலக நடப்புகளையும் தருகிறது

7 ஆம் பக்கம்:
- ஈகை (கட்டுரை)

- வர்த்தகம் (கட்டுரை)

- இலங்கை சங்க வர்த்தமானங்கள்

- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

முதல் பக்க விளம்பரங்கள்:
- சௌந்தரகாந்தி - நாவல்
- ஆங்கிலம் உரையாடல் கற்றுக் கொடுக்கும் நூல்
- கூந்தல் தைலம், மகாசந்தானாதி தைலம்
- பல் மருத்துவர்
- புதிய உணவகம்


நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Friday, January 8, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 2 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 11 அன்று வெளிவந்த முதலாவது இதழ் 
(மலர் 4, இதழ் 20)
மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன் தொடர் நிறைவுற்றது
சுபம்..சுபம்..சுபம்...

- நாம் எங்ஙனம் கைத்தொழிலை விரிவு செய்யக் கூடும்

- வாய்ப்பேச்சு (பினாங்கின் "தேசானுகூலன்" பத்திரிக்கையின் தலையங்கம்)

3 ஆம் பக்கம்:
- விருதுப்பட்டி வருஷப்பூர்த்திக் கொண்டாட்டம்

- கடிதங்கள்

- காலப்போக்கு (இந்திய சுதந்திரம் பெறுவது பற்றிய நாட்டுநடப்பு செய்திகள்)

- செய்தித் திரட்டு (தமிழக செய்தித் துணுக்குகள்)

4 ஆம் பக்கம்:
- வருகை (இதழின் ஆசிரியர் அயல்நாட்டுச் சுற்றுப்பயணம் முடித்துத் திரும்புகிறார்)

- நாடார் பாங்கு (தலையங்கம் - மிகப் பெரிய கட்டுரை பங்கு சந்தைத் தகவல்களும் உள்ளன)

5 ஆம் பக்கம்:
- குறிப்புக்கள் (சட்டசபை தேர்தலும் நமது கடமையும்)

- நாடார் மகாஜன சங்கக் கவுன்சில் மீட்டிங்கு மதுரை (மினிட்ஸ் ஆஃப் த மீட்டிங்)

6 ஆம் பக்கம்:
- சங்க விஷயங்கள் (செய்தித் தொகுப்பு)

- சட்டசபை குறிப்புகள் (இந்திய கவர்ன்மெண்ட் நிதிநிலை)

- இந்திய தேசத்தவர்கள் (கட்டுரை)

7 ஆம் பக்கம்:
- இலங்கை, பர்மா நாட்டார் சங்க வர்த்தமானங்கள்

- சுகாதாரக் குறிப்புகள் (அழகுக் குறிப்புக்கள் போன்ற தகவல்கள்)

- துண்டு துணுக்குகள் (பெரும்பாலும் கருத்தைக் கவரும் சில புள்ளிவிவரத் தகவல்கள்)

- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

முதல் பக்க விளம்பரங்கள்:

- சௌந்தரகாந்தி - நாவல்
- ஆங்கிலம் உரையாடல் கற்றுக் கொடுக்கும் நூல்
- கூந்தல் தைலம், மகாசந்தானாதி தைலம்
- பல் மருத்துவர்
- புதிய உணவகம்




நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்