Thursday, March 26, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 2 வது இதழ்வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

 • காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்க கால செய்தியொன்று, புதிதாய் வந்த சட்ட சீர்திருத்தம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாத காரணத்தினால் சட்டசபையைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் புறக்கணிப்பினால் விளையக்கூடிய நன்மை தீமைகளை ஒரு கட்டுரை ஆராய்கிறது.
 • கடைசிபக்கக் கட்டுரை ஒன்றில் மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆலயப்பிரவேசம் பற்றிய விவாதங்களில் "தமிழ்நாடு" பத்திரிக்கையின் வரதராஜுலு நாயுடு  அவர்கள் அதிகம் கண்டிக்கப்பட்டதில், அவர் அதை மறுத்து, உண்மை தெரியாமல் சில  பத்திரிக்கைகள் தவறான கருத்துகளை ஒரு  சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன என்று குறிப்பிட்டு அவ்வாறு  எழுதுவதை நிறுத்தும்படி கண்டனம் தெரிவித்து, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவற்றில் நாடார் குல மித்திரனும் ஒன்று. சாதிச்சண்டைகள்  வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  தமிழ்நாடு பத்திரிகையில் அவர் எழுதிய மறுப்புச் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
 • "நன்மை கடைபிடி" என்ற கட்டுரை   குடியினால் விளையும் தீமைகளைக் கருத்தில் கொண்டு நாடார்களை பனைமரக்கள்  இறக்கும் தொழிலை கைவிட வேண்டுகிறது. மாற்றாக, பதநீர் அல்லது பனைவெல்லம் தொழிலோ அல்லது மாற்றுத் தொழில் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டுகிறது.  சாத்தூரில் கூடிய நாடார்குல ஏழாவது மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தையும்  நினைவுறுத்துகிறது
 • சென்ற இதழில் குறிப்பிடப்பட்ட பொறியாளர் தேவாரம் நாடார் அவர்களைச்  சந்தித்து "நாடார் மேனுபாக்ச்சரிங் கம்பெனி" ஒன்றை இரண்டு லட்சம் செலவில் தொடங்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்டுவது தெரிகிறது.  நாடார் குலத்திற்கு மாற்றுத் தொழில் வழிகாட்ட இந்த முனைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் குல மக்களின் வாழ்வாதாரத்திற்கென பத்திரிக்கை ஆசிரியர் காட்டும் அக்கறை பராட்டிற்குரியதாகக் கருதப்பட வேண்டியதொன்று. இது போன்ற தொழில் தகவல்கள மூன்று நான்கு கட்டுரைகளில் இடம்பெறுகின்றன.
 • சங்கச் செய்திகள்: நாடார்கள் பள்ளிகள் துவக்கினால் நாடார்குல சங்கம் பொருளுதவி செய்ய முடிவு செய்துள்ள தகவலும், மேலும் பல சங்க நடவடிக்கைகளும் வழக்கம் போல கொடுக்கப்பட்டுள்ளன.
 • கவனத்தைக் கவரும் துணுக்குகள் சில: டிசம்பர்  1, 1922 கனத்த மழையினால் வைகையில் வெள்ளம் ஏற்பட்டு மதுரை வெள்ள சேதத்தை அடைந்திருக்கிறது. இதில் உயிர்ச் சேதங்களும் அடங்கும்.
 • மூளையின் நிறைக்கேற்ப புத்திசாலித்தனம் என்று கூறுவார் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களின் மூளை நிறையை பட்டியலிடும் துணுக்கு  ஒன்றில் ஸ்காட்லான்ட் நாட்டினர் 50 அவுன்ஸ் மூளை நிறையுடன் முன்னணியிலும்,  எஸ்கிமோ மக்கள் 44 அவுன்ஸ் நிறை கொண்ட மூளையுடன் கடைசியிலும் உள்ளனர். இந்துக்களின் மூளை நிறை 45  அவுன்ஸ் என்றும் 12 இனத்தவர்கள் இடம் பெற்ற  பட்டியலில் இந்துக்கள்  9 ஆம் இடத்தில் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.  மேலும், கடைசி பக்கத்தின் "உலக விநோதங்கள்" பகுதி மேலும் பல சுவையான தகவல்களைக் கொண்டுள்ளன
 • மகளிர் பற்றிய தகவல்கள்: லண்டனில் மகளிர்  9 பேர் வழக்கறிஞர் தொழிலில் முதன் முதலில் நுழைந்துள்ளனர். சென்னை  சைதாப்பேட்டையில் லக்ஷ்மண அய்யர் என்ற பேராசிரியரின் மனைவி சுப்புலக்ஷ்மியும், சாரங்கபாணி நாயுடு என்ற வணிகரின் மனைவி கிருஷ்ணம்மாளும் முனிசிபல் கமிஷனர்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆளுநர் ஆணையின் படி  பதவியேற்றனர்.
 • தொடர்கள்:  ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது. தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் நான்காம் பாகம் இடம் பெற்றுள்ளது.
 • விளம்பரங்கள்: வழக்கத்தைவிட  விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இந்த இதழில் காணப்படுகின்றன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல்  என்ற நூல்களுக்கும்; தேசானுகூலன்  பத்திரிகை, பத்திரிக்கைக்கனா விளம்பரங்களும் உண்டு.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Tuesday, March 24, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 13


1151 திருநெல்வேலி பகுதி சிறுதெய்வ வழிபாடு
1152 திருத்தலங்கள் வரலாறு
1153 திருத்தலங்கள் வரலாறு
1154 தில்லைத் திருக்கோயில்
1155 திருநள்ளாறு சனீஸ்வ்ர்
1156 திருநறையூர் சித்தநாதசுவாமி கோயில்
1157 திருவெண்காட்டுத் தலபுராணம்
1158 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
1159 திருக்காளத்தி புராணம்
1160 திருமுருகன் பூண்டித்தலவரலாறு
1161 தமிழில் தலபுராணங்கள் Vol - 1
1162 தமிழில் தலபுராணங்கள் Vol - 2
1163 தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள்
1164 மேலச்சிதம்பர ரகசியம்
1165 நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத்திரட்டு
1166 பாவநாசத் தலபுராணம்
1167 தஞ்சை கோயிற் பாடல்கள்
1168 பஞ்சபூதத்தலங்கள்
1169 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
1170 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
1171 மீனாட்சி அம்மன் திருப்புகழ்
1172 சூலக்கல் அருள்மிகு மாரியம்மன், விநாயகர் திருக்கோயில்
1173 திருப்புன்கூர் தலவரலாறு
1174 அண்ணாமலையும் என்னும் நிலையும்
1175 அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோயில் கோவில்பட்டி
1176 இரட்டைமணி மாலை
1177 திருநல்லத் தலவரலாறு
1178 திருநல்லத் தலவரலாறு
1179 கல்லுக்குழி செல்வ விநாயகர்
1180 திருப்பரங்குன்ற தலவரலாறு
1181 அருள்மிகு உமாமஹேஸ்வரர் திருக்கோயில்
1182 அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி கோயில் திருக்குட விழாமலர்
1183 கொளஞ்சியப்பர் அருள்வரலாறு
1184 திருக்கேதீச்சரமாண்மியம்
1185 அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கருகாவூர்

தொடரும்
சுபா

Tuesday, March 17, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் 1 வது இதழ்வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று
1922ம் ஆண்டு டிசம்பர் 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4 - இதழ் 10)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.

இச்சஞ்சிகையின் அன்றைய விலை 2 அணா.

இந்த இதழில்:
 • "தன் சரீரமே தனக்கு உதவி" என்ற ஆசிரம போதினியின் நிருபர் கட்டுரை உடலைப் பேணுவதின் தேவையை வலியுறுத்துகிறது.
 • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் மூன்றாம் பாகம் இடம் பெற்றுள்ளது.
 • லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரையொன்றில் சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் காணப்படும் சுவையான தகவல்கள்  தனிக்கட்டுரையாக  சற்றே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 • ஜெர்மனிக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான போரில் நாட்டிற்கு உதவும் பொருட்டு படையில் சேர வேண்டும் என்ற  கோரிக்கை ஒன்று நாடார் குல மக்கள் முன் வைக்கப்படுகிறது.
 • இங்கிலாந்து அரசின் பிரதம மந்திரிகள் பட்டியலும், அக்கால அமைச்சர்களின் வருமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது
 • கோவையில் நடந்த நாடர்குல தமிழ் மாகாண மாநாட்டில் சாஸ்திரங்களை மாற்ற இயலாது என்று கூறி நாடர்கள் கோவில் செல்வதற்கு தடைகள் கூறிய மேல்குடியினர் எனத் தங்களைக் கருதிக்கொள்வோர் பலரின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டுள்ளன.  தங்களிடம் ஆதரவு எதிர்பார்க்கும் காங்கிரஸ் நாடார்குலத்தின்  கோரிக்கையை நிராகரிப்பதைப் பற்றிய அதிருப்தியும், திரு. வி. க (மிஸ்டர் முதலியார்), ஈ.வெ.ரா ஆகியோரின் தீண்டாமை ஒழிப்பு உரைகள் பயனற்றுப் போனதும் குறிப்பிடப்படுகிறது. காங்கிரசுடன் கொண்ட உறவு பற்றியும், அதன் அரசியல் நடவடிக்கைகள் நாடார்குலத்திற்கு ஆதரவாக இல்லை என்ற கருத்தும் வெவ்வேறு பக்கங்களில், வெவ்வேறு பத்திகளாக, வெவ்வேறு எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் தகவல் நிறைந்த இப்பத்திகள் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு அக்கால சமூகவியலைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
 • வாரத்திரட்டு என்ற செய்திகள் தொகுப்பு, குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன.
 • வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  கைத்தொழில் போதினி  என்ற நூல்களுக்கும் தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை, தேசோபகாரி  பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

Tuesday, March 10, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 21  வெளிவந்த 3 வது இதழ் (மலர் 4 - இதழ் 9).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தில் மூன்றாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில்: 
வீரமாமுனி எழுதிய  ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் மரத்திடை தவழ்ந்த  கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (2 ஆவது பக்கம்)

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையை எழுதுபவர் ஒரு கல்லூரி மாணவன் என்பதாகத் தெரிகிறது. 

இங்கிலாந்தின் தற்கால நிலை என்ற கட்டுரை உலக அரசியலை, இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை, இங்கிலாந்து  ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் கொண்ட உறவை, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் அதன் தாக்கத்தை இரு பத்திகளில் அலசுகிறது.


நாடார் கைத்தொழில் அபிவிருத்தி என்ற கட்டுரை இயந்திரமயமாக்கலால் கைத்தொழில்கள் நசித்துப் போனதுடன், கைத்தொழில் என்றாலே வியப்புடன் பார்க்கப்படும் நிலைமை ஒரு  நூறாண்டுக்கு  முன்னரே இந்தியாவில் ஏற்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறது. பத்துகஜம் நீளத்துணியும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் வகை நெய்யப்படும் சிறப்பு மிக்க "டாக்கா மஸ்லீன்" போன்றவற்றை உருவாக்கிய நெசவுத் தொழில்  புறக்கணிக்கப்பட்டு, ஒரு சிறு குண்டூசியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும்  அளவிற்கு இங்கிலாந்து அரசு இந்திய பொருளாதார  நிலைமையில் மாற்றம் செய்துவிட்டது  சுட்டிக்காட்டப்படுகிறது. இயந்திரங்களால் குறைந்தவிலையில் பொருட்களை தயாரிக்கும் வண்ணம்நிலைமை மாறியதும்,   தொழிற்புரட்சியில் இந்தியா பின்தங்கியதும் இதற்குக் காரணமாகக் காட்டப் படுகிறது.  இலங்கையின் ராஜா தேவாரம் நாடார் என்ற பொறியியல் படித்தவருக்கு உதவி செய்து அவருடன் இணைந்து தொழிசாலைகள் அமைத்து, அதில் 90%  நாடார் குல மக்கள் பங்கு பெற்று தொழில் செய்து, அக்குல மாணவர்களை அயல்நாட்டிற்கு பொறியியல் கல்வி பயிலவும், இந்திய அரசு ஆட்சியின் ICS சிவில் பட்டங்கள் பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,   தென்னாட்டில் நாடார் முயற்சி வடநாட்டின் டாடா போல இருக்க வேண்டும்  என்ற திட்டங்கள் முன்வைக்கப் படுகிறது.  ராஜா தேவாரம் நாடாரின் தொழிற்திறமை பற்றிய தனிக்கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜாஜியின் தலைமையில் சென்னை சட்டசபை நடப்பதும், சென்னை சட்டசபைக்கு திருநெல்வேலிக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் லஞ்ச ஊழல் நடந்ததெனவும்,  டெல்லியில் பூகம்பம், கொழும்புவில் வெள்ளம், பஞ்சாபில் அகாலிகள் தாங்கள் நடத்திய மதப் போராட்டத்தில் வெற்றி, காங்கிரசில் உள்ள பிளவு நேர் செய்யப்பட்டது நாக்பூரில்  காங்கிரஸ் மாநாடு நடந்தது.  ஜான்சியில் கணவரின் மறைவுக்குப் பின்னர் உடன்கட்டை ஏறிய 19  வயது பெண் ...
அந்நாளில் சென்னை மாகாண மக்கட்தொகை விவரம்:
மொத்த மக்கதொகை     42,794,155
இந்துக்கள்                            37,942,191
இஸ்லாமியர்கள்              2,865,235
கிறிஸ்துவர்கள்                 1,390,672
போன்ற  தகவல்கள் இந்த இதழில்  கிடைக்கின்றன.


குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை  ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள்   இடம் பெற்றுள்ளன. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்காக கட்டணம் கட்டுவதில் உதவி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன.
சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்

Saturday, March 7, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 2 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று வெளியிடப்படுவது
1922ம் ஆண்டு நவம்பர் 11  வெளிவந்த 2 வது இதழ் (மலர் 4 - இதழ் 8).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் இரண்டாவது  இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழின் சிறப்பு:  பெரியாருடன் ஒரு நேர் காணல் - அருப்புக்கோட்டை காங்கிரஸ் மாநாட்டிற்காக வந்திருந்த காங்கிரஸ் கட்சியுன் செயலாளரான ஈ. வெ . ரா வுடன் நாடார்குல மக்களின் நேர்காணல்
(இந்த நேர்காணல் கருத்துகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது)

குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள்,  குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற வழக்கமான பகுதிகள் தொடர்கின்றன.

பிரிட்டிஷ் கவர்ன்மெண்டில் மாறுதல் - "நமது"*** மாஜி பிரதம மந்திரி என்று பிரிட்டிஷ் பிரதமர் "லாயிட் ஜார்ஜ்" அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீமைப்பதிரிக்கைகள் பகுதி (6 ஆம்  பக்கத் தகவல் தரும் செய்தி), அக்காலத்திலும் ஆங்கில பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் அதிக விற்பனையாகும் பொழுது தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு இல்லாதிருந்திருப்பது தெரிய வருகிறது.  ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஆசிரியர் தரும் கருத்து இன்றைய தமிழக நூல் விற்பனை நிலையையும் ஒத்திருப்பது, தமிழர்கள் எக்காலத்திலும் படிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்களல்ல என்பதையே காட்டுகிறது.

வழக்கமான ஸ்ரீ கிருஷ்ணலீலை பகுதியும் அதில் கண்ணன் யசோதையால்  கயிற்றால் கட்டப்படும்   கதையும் விவரிக்கப் பட்டுள்ளது (7 ஆவது பக்கம்).

தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதை துவங்கியுள்ளது, ஆனால் ஆசிரியர் யார் என்ற குறிப்பு இல்லை.


விளம்பரங்கள்:
வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் விளம்பரங்கள் காணப்படுகின்றன. 

சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல்,  சங்கீத மஞ்சரி என்ற நூல்களுக்கும் ...
தேசானுகூலன்  பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை , ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளுக்கான விளம்பரங்களும் உண்டு.

பள்ளி இறுதி வகுப்பு /VI பாரம் முடித்த, ஆங்கிலம் படித்துள்ள 23 வயது வேளாளசைவ மணமகனுக்கு "அழகும் சொத்தும்" உள்ள எந்த இனத்தைச் சார்ந்த பெண்ணானாலும் தேவை என்றும், சொத்துள்ளவர்கள் 'மட்டும்' தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


லேகிய  விற்பனை விளபரங்களுமுண்டு, ஊர்க்குருவி லேகிய விளம்பரம்  'வெண்பா' பாடலாகவும்  எழுதப்பட்டுள்ளது.
நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்


*** [தனிப்பட்ட கருத்து...இங்கிலாந்து பிரதமரை நமது பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளதைப் படிப்பது  சுதந்திர இந்தியாவில் பிறந்த வளர்ந்த காரணத்தினால் படிப்தற்கு  வேதனை தருவதாக  இருக்கிறது]

Friday, March 6, 2015

பெரியாரின் குடி அரசு மின்னூல்கள்தமஅ வெளியீடு # 221   
குடி அரசு - 1925-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (அறிமுகம்)   
Kudiy-Arasu- 1925-1 : Periyarin Ezhuthum Paechum  (Preface)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_preface.pdf

தமஅ வெளியீடு # 222   
குடி அரசு - 1925-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 1)   
Kudiy-Arasu- 1925-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  1)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1925_part1.pdf

தமஅ வெளியீடு # 223   
குடி அரசு - 1926-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 2)   
Kudiy-Arasu- 1926-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  2)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-1part2.pdf

தமஅ வெளியீடு # 224   
குடி அரசு - 1926-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 3)   
Kudiy-Arasu- 1926-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  3)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1926-2part3.pdf

தமஅ வெளியீடு # 225   
குடி அரசு - 1927-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 4)   
Kudiy-Arasu- 1927-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  4)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-1part4.pdf

தமஅ வெளியீடு # 226   
குடி அரசு - 1927-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 5)   
Kudiy-Arasu- 1927-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  5)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1927-2part5.pdf

தமஅ வெளியீடு # 227   
குடி அரசு - 1928-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 6)   
Kudiy-Arasu- 1928-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  6)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-1part6.pdf

தமஅ வெளியீடு # 228   
குடி அரசு - 1928-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 7)   
Kudiy-Arasu- 1928-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  7)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1928-2part7.pdf

தமஅ வெளியீடு # 229   
குடி அரசு - 1929-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 8)   
Kudiy-Arasu- 1929-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  8)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-1part8.pdf

தமஅ வெளியீடு # 230   
குடி அரசு - 1929-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 9)   
Kudiy-Arasu- 1929-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  9)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1929-2part9.pdf

தமஅ வெளியீடு # 231   
குடி அரசு - 1930-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 10)   
Kudiy-Arasu- 1930-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  10)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-1part10.pdf

தமஅ வெளியீடு # 232   
குடி அரசு - 1930-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 11)   
Kudiy-Arasu- 1930-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  11)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1930-2part11.pdf

தமஅ வெளியீடு # 233   
குடி அரசு - 1931-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 12)   
Kudiy-Arasu- 1931-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  12)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_part12.pdf

தமஅ வெளியீடு # 234   
குடி அரசு - 1931-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 13)   
Kudiy-Arasu- 1931-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  13)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1931_2part13.pdf

தமஅ வெளியீடு # 235   
குடி அரசு - 1932-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 14)   
Kudiy-Arasu- 1932-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  14)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932_1part14.pdf

தமஅ வெளியீடு # 236   
குடி அரசு - 1932-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 15)   
Kudiy-Arasu- 1932-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  15)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1932-2part15.pdf

தமஅ வெளியீடு # 237   
குடி அரசு - 1933-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 16)   
Kudiy-Arasu- 1933-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  16)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_1part16.pdf

தமஅ வெளியீடு # 238   
குடி அரசு - 1933-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 17)   
Kudiy-Arasu- 1933-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  17)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1933_2part17.pdf

தமஅ வெளியீடு # 239   
குடி அரசு - 1934-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 18)   
Kudiy-Arasu- 1934-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  18)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_1part18.pdf

தமஅ வெளியீடு # 240   
குடி அரசு - 1934-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 19)   
Kudiy-Arasu- 1934-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  19)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1934_2part19.pdf

தமஅ வெளியீடு # 242   
குடி அரசு - 1935-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 21)   
Kudiy-Arasu- 1935-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  21)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1935_2part21.pdf

தமஅ வெளியீடு # 243   
குடி அரசு - 1936-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 22)   
Kudiy-Arasu- 1936-1 : Periyarin Ezhuthum Paechum  (Part  22)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_1part22.pdf

தமஅ வெளியீடு # 244   
குடி அரசு - 1936-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 23)   
Kudiy-Arasu- 1936-2 : Periyarin Ezhuthum Paechum  (Part  23)   
http://www.tamilheritage.org/old/text/ebook/periyar/THF1936_2part23.pdf

Tuesday, March 3, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 1 வது இதழ்

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர்  1 வது இதழ்வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு நவம்பர்  வெளிவந்த 1 வது இதழ் (மலர் 4 - இதழ் 7).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.
இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் முதல் இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழின் உள்ளடக்கம்:
மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),  கற்பகம் என்பவர் எழுதிய "குடும்பமும் நமது கடமையும்" என்ற  மனவளக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீ கிருஷ்ணலீலை, பழமொழிக் களஞ்சியம் என்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

அக்காலச் செய்திகளாகத் தரப்படுவன:
தபால் கட்டண உயர்வின் தாக்கம்,
ஆங்கில அரசின் சட்டங்களும் அபராதங்களும் இந்தியாவின் நெசவுத் தொழிலை அழிப்பது,
மலபார் கலகத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்டவர்கள் தூக்கிலடப்பட்டது,
திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதை துவக்க வேலைகள்,
நாடார்களின் ஆலயப்பிரவேசத்திற்கு காங்கிரஸ் உதவும் என்று கருத்துரைத்தவரை விமர்சித்தல்,
இங்கிலாந்தின் புதிய மந்திரி சபை பதவியேற்பு,
இந்தியர்களின் தினசரி சராசரி வருமானம் 9 பைசா,
மதுரை மாநாட்டில் சோமசுந்தர பாரதி நாடார்களைப் பற்றிய தவறான கருத்தை வெளியிட்டது,
மறைந்தவர் நினைவாக நூல்நிலையம் அமைத்தல்,
போன்ற செய்திகள் குறிப்பிடத்தகன.

தேவை இசையாசிரியை என்ற விளம்பரமும் உண்டு.
"சௌந்தரகாந்தி" (பாண்டியர்களைப் பற்றிய புதினம்), "கைத்தொழில் போதினி", "அமரர் புராணம்" , பெண்முன்நேற்றதிற்காக எழுதப்பட்ட "மனோசுந்தரம்" என்ற  நூல்கள் வெளிவந்துள்ளதை  விளம்பரங்கள் அறிவிக்கின்றன.
  

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன்


திரு.சூ.ஆ.முத்து நாடார்


1919ம் ஆண்டு திரு.சூ.ஆ.முத்து நாடார் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. நாடார் குல மித்திரன் எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச்  செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.தமிழ் மரபு அறக்கட்டளையினால் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ள 
நாடார் குல மித்திரன் இதழ்கள்:

1919 ஆண்டு செப்டம்பர் மாத இதழ் [1:1]
(THF released it on: April 13, 2013)

1919 ஆண்டு அக்டோபர் மாத இதழ் [1:2]
(THF released it on: April 13, 2013)

1919 ஆண்டு நவம்பர் மாத இதழ் [1:3]
(THF released it on: April 13, 2013)

***
1920ம் ஆண்டு ஜனவரி மாத இதழ் [1:5]
(THF released it on: April 22, 2013)

1920ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் [1:6]
(THF released it on: April 25, 2013)

1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் [1:8]
(THF released it on: April 29, 2013)

1920ம் ஆண்டு மே மாத இதழ் [1:9]
(THF released it on: May 4, 2013)

1920ம் ஆண்டு ஜூன்மாத இதழ் [1:10]
(THF released it on: May 11, 2013)

1920ம் ஆண்டு ஜூலை மாத இதழ் [1:11]
(THF released it on: May 18, 2013)

1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாத  இதழ் [1:12]
(THF released it on: June 8, 2013)

***

இக்காலக்கட்டத்தில் ...
நாடார் குல மித்திரன் மாதம் இருமுறை பதிப்புகள் என வெளிவரத் துவங்கியது
பத்திரிக்கையின் தோற்றத்திலும் மாற்றம் நிகழ்ந்தது ...

1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழ் - 1[3:1]
(THF released it on: June 29, 2013)

1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 1[3:3]
(THF released it on: August 26, 2013)

1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 2 [3:4]
(THF released it on: August 28, 2013)

1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழ் - 3 [3:5]
(THF released it on: August 30, 2013)

1921ம் ஆண்டு நவம்பர் மாத இதழ் - 1 [3:6]
(THF released it on: September 2, 2013)

1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ் - 1[3:7]
(THF released it on: September 5, 2013)

1921ம் ஆண்டு டிசம்பர் மாத இதழ் - 2 [3:8]
(THF released it on: September 8, 2013)

***

1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ் - 1[3:9]
(THF released it on: December 12, 2013)

1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் - 1[3:11]
(THF released it on: April 26, 2013)

1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ் - 2 [3:12]
(THF released it on: May 18, 2014)

1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ் - 1 [3:13]
(THF released it on: May 27, 2014)

1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ் - 2 [3:14]
(THF released it on: May 28, 2014)

1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் - 1[3:15]
(THF released it on: May 31, 2014)

1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ் - 2 [3:16]
(THF released it on: September 14, 2014)

1922ம் ஆண்டு மே மாத இதழ் - 1 [3:17]
(THF released it on: November 14, 2014)

1922ம் ஆண்டு மே மாத இதழ் - 2 [3:18]
(THF released it on: November 26, 2014)

1922ம் ஆண்டு ஜூன் மாத இதழ் - 1 [3:19]
(THF released it on: December 10, 2014)

1922ம் ஆண்டு ஜூன் மாத இதழ் - 2 [3:20]
(THF released it on: December 13, 2014)

1922ம் ஆண்டு நவம்பர்  மாத இதழ் - 1 [4:7]
(THF released it on: March 3, 2015)

1922ம் ஆண்டு நவம்பர்  மாத இதழ் - 2 [4:8]
(THF released it on: March 7, 2015)

1922ம் ஆண்டு நவம்பர்  மாத இதழ் - 3 [4:9]
(THF released it on: March 10, 2015)