Thursday, June 25, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 16

254 திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்
1255 தக்ஷிணகைலாசபுராணம் பகுதி - 2 இலங்கை
1256 முத்திநகர் காஞ்சியின் மூர்த்தித்தலம் தீர்த்தங்கள் ஏகாம்பரநாதர் ஆலயமும் சிவகங்கையும்
1257 காசி க்ஷேத்திர மகிமை
1258 பாபநாசத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் தெய்வீக வரலாறு நூல் தஞ்சை மாவட்டம்
1259 அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேசுவரப் பெருமான் திருக்கோயில் வரலாறு
1260 திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள காவிர் - வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1261 மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவ்ர் திருக்கோயில் வரலாறு
1262 இந்து சமய வார வழிபாட்டு மன்ற 28ம் ஆண்டு விழா மலர்
1263 திருவையாறு தென்கயிலாய அற்புதங்கள்
1264 திருப்பனசைப்புராணம்
1265 மட்டக்களப்புச் சைவக்கோயில்கள் கொழும்பு
1266 சிவகாசி நகர் வரலாறு
1267 திருவானைக்காபுராணம் - ஞானஉபதேசப் படலம்
1268 தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள் 32
1269 திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிரமேசுவரப்பெருமான் திருக்கோயில் வரலாறு
1270 காஞ்சியின் கவின்மிகு கோயில்க்ள
1271 திருக்கேதீஸ்வரம் (சிறு குறிப்பு)
1272 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
1273 நவக்கிரகத் திருக்கோயில்கள்
1274 உத்தரமேரூர்
1275 திருப்பெருந்துறை தலவரலாறு
1276 கங்கை கொண்டசோனேச்சமும் கருவூர்த்தேவரும்
1277 திருக்கழுக்குன்றம்
1278 திருக்குடந்தைத் திருமுறைத் தலங்களும் சைவ சமயக் கட்டுரைகளும்
1279 அறையணி நல்லூர் - ஸ்ரீ அதுல்யநாதேச்வரர் திருக்கோயில் (அரகண்ட நல்லூர் மகாகும்பாபிஷேக மலர்)
1280 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)

சுபா

தட்டச்சு செய்து அளித்தவர் திரு அன்பு ஜெயா அவர்கள்

Wednesday, June 17, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4, இதழ் 16)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.


பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிருஷ்ணலீலை" என்ற தொடரில் தமிழ் வார்த்தைகளுக்குப் பஞ்சமோ பஞ்சம்.  இக்கால 'பண்ணி' தமிழ், 'செய்து' தமிழ் போல சென்ற நூற்றாண்டில் இதே காலக்கட்டத்தில் 'கொண்டு' தமிழ் என்றொரு கொடுமை இருந்திருக்கிறது.

"ஸ்ரீ பலராமகேசவ மூர்த்திகள் கோபால பாலவேஷஸ்வரூடர்களாய் சந்தோஷாதிசயமான மனோற்சாகங்களுடன்சகல பந்துக்களால் செய்யப்பட்ட ஸ்துதிகளைப் பெற்றுக்'கொண்டு' அளவிறந்த பசுக்களை சமரட்சணம் பண்ணிக்'கொண்டு' விளையாடிக்'கொண்டி'ருந்தார்கள்"

பரமன்குறிச்சி பாடசாலை கட்டட நிதிக்காக 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பலர் நன்கொடை வழங்கிய விவரம் உள்ளது.

"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஒன்பதாம்  பாகமும், இலங்கை நாடர் சங்க நிகழ்வு பற்றிய செய்தியும் இப்பக்கத்தில் இடம் பிடிக்கின்றன.


பக்கம் 3:
இப்பக்கத்தில்  நாடார்குல "சங்க விஷயங்கள்" பல இடம் பெறுகின்றன.

பக்கம் 4:
இலங்கை நாடார்குல சங்க செய்திகள் இப்பக்கத்தில்  இடம் பெறுகின்றன.

பக்கம் 5:
பத்திரிக்கை ஆசிரியர் முத்து நாடாரின்  பர்மா சுற்றுப்பயணம் பற்றியும், அங்கு நடைபெற்ற விழா, வரவேற்பு போன்ற தகவல்களும்,  செய்திகள், வாசகர் கடிதங்களும் இப்பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 6:
உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் மற்றும் சுவையான தகவல்களுக்காக ஒதுக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள சில தகவல்கள் ...
  • சுவிட்சர்லாந்தில் சீட்டாட்டம் (சூதாட்டம்), பரிசுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிக்கைகளின் தகவலும் அவற்றின் வாசகர்களின் எண்ணிகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் குறைந்தது 7 இலட்சம் முதல் அதிகப்படியாக 18 இலட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் எந்த ஒரு பத்திரிக்கைக்கும் ஒரு இலட்சம் வாசகரகள்  கூடக் கிடையாது
  • உலகின் பல நிலநடுக்கங்களும்  அவற்றில் ஏற்பட்ட  உயிரழப்புகளும் அடங்கிய   தகவல் ஒன்றில், 1737 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தி ஒன்றரை இலட்சம் மக்கள் உயரிழந்ததாகத்  தகவல் இடம் பெற்றுள்ளது.
  • மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, நாடார்குல மக்களை பனை மற்றும் கள் விற்பனை தொழிலைக் கைவிட்டு உழவு, கைத்தொழில் மேற்கொள்ளும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பக்கம் 7:
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றினை கே. கந்தசாமி என்ற கல்லூரி மாணவர் எழுதியிருக்கிறார்.  இது தொடராக வரும் என்ற குறிப்புள்ளது.  திருமங்கலம்,கல்லுப்பட்டி நாடார் வித்யாசாலைக்கு லோயர் செகண்டரி தேரிய ஆசிரியரோ, ஆசிரியையோ தேவை என்றும் குடும்பத்துடன் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  நாடார்குல மக்கள் அளித்த நன்கொடை விவரங்களும் "போஷகப்பிரபுக்கள்" ஆகிய நன்கொடையாளர்கள் பற்றிய தகவலும் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:


Friday, June 5, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 15)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன
(இவை யாவும் சென்ற இதழிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றவையே).

பக்கம் 2:
"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் எட்டாம் பாகமும், "நம்பிக்கை" என்ற மனவளக்கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

விஜயதுரைசாமிக்கிராமணி எழுதிய"குலத்தொழில் யாது?" என்ற (விலை 5 அணா, 64 பக்கம்) நூல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  அதில் நாடார்களின் பூர்வீகத் தொழில் என்ன என்று வேத கால, சங்க கால இலக்கியப் பதிவுகள் காட்டுவதென்ன என்ற ஆய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனவும்; பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதியில் சாணன் = சான்றோன், ஒரு சாதிப்பிரிவு என்று பதிவான விவரம், பிற்பாடு இருபதாம் நூற்றாண்டு அகராதியில் சாணான் = மரமேறி, கள் விற்பவர் என்று குறிப்பிடும்  அளவிற்கு சாதீய எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது என அந்த நூல் விளக்குவதாகவும் தெரிகிறது. அத்துடன் கம்பராமாயணம், சுந்தரகாண்டம், ஊர் தேடும் படலத்தில் 110* செய்யுளின் துவசர் என்பதற்கு  சாணார் என்ற பொருளை உரைநூல் அளிப்பதாகவும், அவ்வாறு முற்கால உரைகளில் இல்லையென்றும், இவ்வாறு இல்லாத பொருளைத் திணிப்பது புராணப் புரட்டு என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110


பக்கம் 3 மற்றும் 4:
நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இப்பக்கங்களில்   பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாநாடு நிகழ்வுகள்,  1921 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் 'மீள்பதிவும்' ஆகியவை  இடம் பெற்றுள்ளன.

பக்கம் 5 மற்றும் 6:
வழக்கமான 'பழமொழித்திரட்டு' பகுதி, நாட்டுநடப்பு விவரங்களை பழமொழிகளுடன் இணைத்து வழங்குகிறது. துணுக்குகள் மற்றும்  சங்கச்செய்திகளும் அறிவிப்புகளும் இப்பங்களிலும் தொடர்கின்றன.

பக்கம் 7
இப்பக்கத்தில்  இடம் பெறுவது உலக நடப்புகள் பற்றிய தகவல்கள், குடும்பத்திற்குப் பொதுவான மருத்துவக் குறிப்புகள் சில, நன்கொடை வழங்கியோர் (போஷகப் பிரபுக்கள்) தகவல்கள், எண்ணெய் வித்து வணிகத்தின் தகவல்கள். 

இந்த இதழில் தலையங்கம் எதுவும்  இடம் பெறவில்லை, அத்துடன், தமிழக, இந்திய அரசியல் செய்திகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக்  குறைவு. வழக்கமான  சில தொடர்களும் இந்த இதழில் இடம் பெறவில்லை.  இதற்குக் காரணம் இதழின் ஆசிரியர் அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் எனவும் கருத வாய்ப்புள்ளது.

குறிப்பு: * இதழ் 112 என்று குறிக்கிறது.

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்