வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு: (1935-1936) துணர்: 11 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பதினோறாம் ஆண்டு: (1935-1936)
துணர்: 11 - மலர்: 2
_________________________________________________________
1. பொருளின் அமைப்பு (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[இயற்பியல் மற்றும் வேதியியல் பதிவுகளைத் தமிழ்ப்பொழிலில் தொடர்ந்து எழுதிவருகிறார் தமிழறிஞர் அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார். பொருளின் அமைப்பு என்ற தலைப்பில் அவர் வழங்கும் தொடர்கட்டுரையின் இப்பகுதியில், கூட்டுப் பொருள்கள், பொருட் பண்புகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை நிறைவுறுகிறது]
2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
V.S. குழந்தைசாமி
[பண்டைக் காலத்து முல்லை நிலத்து வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து முல்லைக்கலி, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் கூறுகின்றன. 'நல்லினத்தாயார்', 'இருந்குடியாயர்' என்று கூறப்படும் யாதவக் குடியின் மகளிருக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்யும் முறையாக, அப்பெண்ணின் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரனுக்கே மணமுடித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்று குறிப்பிடுகிறார் கட்டுரை ஆசிரியர். தொடர்ந்து ஏறுதழுவும் நிகழ்வினை விளக்குகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]
3. தஞ்சை ஸ்ரீபிரகதீசுவரர் - பெருவுடையார்கோயில் என்ற பெரிய கோயில்
ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை
[தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு, கோவிலின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக இக்கட்டுரையில் விளக்குகிறார்; கட்டுரையின் இப்பகுதியில், கோவிலில் நடக்கும் விழாக்கள், விழாக்களின் கலைநிகழ்ச்சிகள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இடம் பெறுகின்றன. இக்கட்டுரை நிறைவுற்றது]
4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும் (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். அத்துடன், நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின் தொல்காப்பிய உரையை ஆதரித்து நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார். அதற்கான மறுப்பின் தொடர்ச்சி ...]
5. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம் அதிகாரம்: கட்டுரையின் இப்பகுதி, பயனிலை விகற்பங்களும் வகுத்தல் முறைகளும், வரை விலக்கணம், பண்பு, கிழமை/உரிமை, இனம், வேற்றுமை, வரைவிலக்கணமும் விரித்துரைத்தலும், வரைவிலக்கண ஆராய்ச்சி ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]
6. சகுந்தலை கதை
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை! உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு. இக்கட்டுரை தொடர்கிறது]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment