வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு: (1933-1934) துணர்: 9 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

ஒன்பதாம் ஆண்டு: (1933-1934)
துணர்: 9 - மலர்: 5
_________________________________________________________
1. புறநானூற்றாராய்ச்சிக் குறிப்புக்கள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[P.S. சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் எழுதிய "A Critical Study of Purananuru" என்னும் "புறநானூற்றாராய்ச்சி" என்ற சிறுநூலினை ஆய்வு செய்த பின்னர், அதில் தாம் கொண்ட மாற்றுக் கருத்துக்களை 'புறநானூற்றாராய்ச்சிக் குறிப்புக்கள்' என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்கிறார் வேங்கடாசலம் பிள்ளை அவர்கள். இக்கட்டுரையில் புறநானூற்றுப் பாடல் எண்: 4 க்கு , சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் எழுதிய ஆய்வுரையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்]
2. ஒரு திருக்குறட்பாக் குறிப்பு (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
["ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி" என்ற குறளுக்காக 'ஐம்புலன்கள்' மீதும், 'அவாவறுத்தல்' மீதும் கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் கொடுக்கப்படும் விளக்கம் இக்கட்டுரையுடன் நிறைவுற்றது]
3. தம்பிரான்றோழர் தேவாரம் (தொடர்ச்சி...)
அ. சிதம்பரனார்
[இ. மு. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதே தலைப்பில் முன்னர் வெளியிட்ட (துணர் - 9) கட்டுரையில் ... வேட்டுவ வடிவம் கொண்டு பன்றியைத் தொடர்ந்து கொன்று, அர்ச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதம் நல்கினார் சிவபெருமான்; இதனை உடனிருந்து கண்டவர் சுந்தரர் எனக் குறிப்பிட்டார்.
அருச்சுனனுக்கு சிவபெருமான் அருள் செய்யும்பொழுது தம்பிரான் தோழர் உடனிருந்தார் என்பது பிழையான கருத்து என்றும், பார்த்தனுக்காக ஒருமுறையும், தனக்காக ஒருமுறையும் என சிவன் வேட்டுவ வடிவம் கொண்டதாகத்தான் சுந்தரர் கூறுகிறார். காட்டில் வழிதவறிய சுந்தரனாருக்கு வேட்டுவ வடிவம் கொண்டு சிவன் வந்து வழிகாட்டி அவரை துடிசைக்கு அழைத்துச் சென்றார் என்பது புராணம். வரலாற்று அடிப்படையில் அர்ச்சுனன் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் உள்ள இடைவெளி 2800 ஆண்டுகள், எனவே சுந்தரர் சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை சுட்டிக்காட்டி விளக்குகிறார் சிதம்பரனார்.]
4. முதுகண்ணும் தலைக்கோலும்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஆங்கிலத்தில் "Guardian" என்றும், வடமொழியில் "போஷகர்" என்றும் குறிப்பிடப் படும் சொற்களுக்கு இணையான பொருள் கொண்ட தமிழ்ச் சொல் "முதுகண்". இச்சொல், தமது உற்றார் உறவினர்களை ஆதரித்து செழுங்கிளை தாங்கும் முதியவரை குறிக்க பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
அரங்கில் ஆடும் நாட்டியக் கலைஞர்களுக்கு அரசர் வழங்கும் விருது "தலைக்கோல்" என்பதாகும். விருது பெரும் நாட்டியமங்கை 'தலைக்கோலி' என்று அறியப்படுவார்.
"முதுகண்", "தலைக்கோல்" ஆகிய சொற்களைப் பற்றிய கல்வெட்டுத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தொடர் கட்டுரை]
5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[கீழ்காணும் நான்கு நூல்களுக்கும் மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது
"பரணர்" - நூலை எழுதியவர் V. வேங்கடராசலு ரெட்டியார்; இது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிடும் தமிழாராய்ச்சி நூல் வெளியீடுகளில் ஒன்று
"சுலோசனை" - நூலை எழுதியவர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்; இது முதற்பதிப்பினைத் தொடர்ந்து விரைவில் வெளியான இரண்டாம் பதிப்பு, மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையாரின் ஆதரவில் உருவான நூல்
"பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார்", மற்றும் "ஜோன் வரலாறு" - இந்நூல்களை எழுதியவர் நீலாம்பிகை அம்மையார்; இவை சைவசித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழக வெளியீடுகள்]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment