வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு: (1934-1935) துணர்: 10 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பத்தாம் ஆண்டு: (1934-1935)
துணர்: 10 - மலர்: 7
_________________________________________________________
1. மண்ணியல் சிறுதேர் (தொடர்ச்சி ...)
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
['மிருச்சகடிக' என்னும் வடமொழி நூலை, "மண்ணியல் சிறுதேர்" என்ற பாட்டிடை உரைநடை நூலாக பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். கட்டுரையின் இப்பகுதியில், அந்நூலில் காணப்படும் நகைச்சுவைப் பகுதிகளின் நயத்தைப் பாராட்டிய பின்னர், நூலின் இலக்கிய நயத்தை "ஒப்புவழியுவத்தல்" முறையில் பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், திருக்குறள், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு இலக்கியநயம் பாராட்டுகிறார் சிதம்பரநாதஞ் செட்டியார். இக்கட்டுரை நிறைவுற்றது]
2. "செயப்படு பொருளைச் செய்தது போல" என்னும் சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரை பொருந்துமாறு (தொடர்ச்சி ...)
ச. தண்டபாணி தேசிகர்
['செயப்படு பொருளைச் செய்தது போல' என்னும் சூத்திரம் பற்றி இலக்கணநூல் உரையாசிரியர்களின் விளக்கங்கள் ஒப்புநோக்கப்படும் இக்கட்டுரை, தொடர்கிறது]
3. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும் கலித்தொகையின் சிறப்பு கூறும் கட்டுரை; தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமங்கள் குறித்து இலக்கிய நயம் பாராட்டிய பிறகு, கட்டுரையின் இப்பகுதியில், கலித்தொகை செய்யுட்களில் அமைந்திருக்கும் "மெய்ப்பாடுகள்" பற்றி நச்சினார்க்கினியர் விளக்கும் திறம் குறித்து ஆராய்கிறார் வரத நஞ்சைய பிள்ளை. இக்கட்டுரை எண்வகை மெய்ப்பாடுகள் குறித்து நல்லதொரு விளக்கம் தரும் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரை... தொடர்கிறது]
4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும் (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். அத்துடன், நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின் தொல்காப்பிய உரையை ஆதரித்து நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார். அதற்கான மறுப்பின் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]
5. சோழன் கரிகால் வளவன் - நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின் வாழ்க்கை வரலாறு நாடக வடிவில் வழங்கப்படுகிறது, இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment