Friday, April 1, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 10


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 10 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 10
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- இதழாசிரியர்
[ தமிழ்ப் பல்கலைக்கழகம்  அமைப்பதன் தேவையை வலியுறுத்தும் தலையங்கம்]

2. தமிழ்ப் புலவருக்கு மாநிலவளாக அறிவு
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[தமிழறிஞர்களுக்கு புவியியல் அறிவு (மாநிலவளாக அறிவு) இன்றியமையாதது.  அது இல்லாததற்குச் சான்று புகழேந்தியாரின் நளவெண்பாவில்  நிடத நாட்டில் இருந்து அயோத்தி செல்லும் பொழுது வழியில் கடல் இடைப்பட்டதாக வரும்  குறிப்பு ... போன்ற விளக்கங்கள் ]

3. ஆளுடைய நம்பிகள் திருப்பாட்டு
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[பெரிய புராணம் காடும் சுந்தரர் பற்றிய கட்டுரை]

4. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

5. தமிழ்த்தாய் வாழ்த்து
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்]

6. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- அ. கோபாலையர்
[முன்னர் வெளிவந்த மு. இராகவையங்கார்  அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி விமர்சனக் கருத்துகளுக்கு   அ. கோபாலையர் விளக்கம் கூறுகிறார். இதழாசிரியரின், கூற்றுப்படி, இது ஒரு பொருட்போர்]

7. புகழுடம்பு பெற்றவர்
-- சாமி. சிதம்பரன்
[தமிழ்ப் புலவர்களின் சிறப்பு]

8. ஓரி
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இலக்கியத்தில் வல்வில் ஓரி குறிப்புகள்] 

9. இந்தியத்தாய் தன் மக்கட்கு உரைப்பது
-- T.V. இரத்தினசாமி
[சந்தப்பாடல்]

10. சங்ககாலத்துச் சோழ அரசர் பரம்பரை (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகன்
[உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்]

11. நமது பொழில்
-- இதழாசிரியர்
[இதுவரை பொழிலில் கட்டுரை எழுதி வந்தவர்களைப் புலவர் குழுவில் பங்கு பெற்றுத் தொடர்ந்து எழுத அழைப்பு வைக்கப்படுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment