Tuesday, April 12, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 6, 7, & 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 6, 7, & 8 வெளியீடு

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 6, 7, & 8
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. சுந்தரமூர்த்திகளதுகாலம்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[சுந்தரமூர்த்தி நாயன்மார் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுவோர் உண்டு, 7ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,  8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்பது கட்டுரையாசிரியரின் முடிவு]

2. புத்த நிர்வாண காலம்
-- இ.மு.சுப்ரமணிய பிள்ளை
[1924 ஆம் ஆண்டு அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு, கி.மு. 493 புத்த நிர்வாண காலம்]

3. சிலப்பதிகார காலம்
-- இ.மு.சுப்ரமணிய பிள்ளை
[இதுவும் 1924 ஆம் ஆண்டு அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு, மதுரை எரியுண்டது கி.பி. 144 இல், கண்ணகிக்கு கோயில் கட்டியது கி.பி. 149 இல்]

4. திருவருள் இயல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[இறைவனின் திருவருள் பெற்ற சிவங்கண்டான்]

5. செங்கீரைப்பருவம்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் செங்கீரைப் பருவம், பல பிள்ளைத்தமிழ் நூல் கொண்டு விளக்கப்படுகிறது]

6. பண்டைத் தமிழரின் சமயம்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[பண்டைய  இலக்கியங்களிலேயே ஆரியக் கலப்பிற்கு அறிகுறியாகப் பல  புராணக்கதைகள் காணப்படுகின்றன,  தமிழர்கள் 'ஒரு பற்றுக்கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவங்கடந்த தனிப்பொருள்' எனப்படும் கடவுளை அருவ வணக்கமாகவே வணங்கினர்-"கொடிநிலை(கதிரவன்) கந்தழி(பற்றற்ற தனிப்பொருள்)  வள்ளி(நிலவு) யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலென மூன்றுங் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே-- எனத் தொல்காப்பியம் கூறுகிறது]

7. ஐயவினாத்தொடர்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[வற்றல் ஒரு மரமாகாதா? பரசிராமர் காலத்து கேரளம் எது?]

8. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[பண்டைத் தமிழரின் சமயம் பற்றி தமிழிலக்கியம் காட்டுவது  கூறுதல், முல்லைநில வீரன் கருப்பண்ணன் திருமால் ஆனான், முருகு என்ற முழுமுதல் கடவுளை வணங்கிய இளைய வீரன் சேயோன் முருகனானான், வேந்தன் என்ற பெயர் கைவிடப்பட்டு இந்திரன் ஏற்றுக்கொள்ளப்பட்டது, வருணன் நெய்தல் நில வீரன் , இவர்கள் யாவரும் தமிழ் நில வீரர்கள், தமிழரின் குலதெய்வங்கள் தமிழ் வீரர்கள். ]

9. பண்டைத் தமிழர் அரசியல் நிலை
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற தமிழ் அரசர்களின் ஆட்சி முறை அமைப்புகள் பற்றி]

10. புகழ்
--V. சண்முகம் செட்டியார்
[புகழ் பெரும் வழிகள்: நற்குணம், நன்னடத்தை, பிறரை நல்வழிப்படுத்துதல், திருக்குறள் அதிகாரங்கள் கொண்டு விளக்கம்]

11. உடல் இயலும் உடல் நல வழியும்
--?? பெயர் கிடைக்கவில்லை
 [அறிவியல் பாடங்களுக்கான கலைச் சொற்கள் தேவை பற்றிய கட்டுரை, பல உயிரியல் கலைச்சொற்கள் காணக் கிடைக்கின்றன]

12. திருச்சுழியல் வெண்பா அந்தாதி
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment