வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம் ஆண்டு: (1929-1930) துணர்: 5 மலர்: 9 & 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________
ஐந்தாம் ஆண்டு: 1929 -1930
துணர்: 5 மலர்: 9 & 10
________________________________________________
1. அடம்பும் கடம்பும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சங்க இலக்கியம் காட்டும் அடம்பு என்பது குதிரைக் குளம்படியிலைக் கொடி, horse-hoof creeper, என்று முற்பகுதியில் காட்டப்பட்டது, அடுத்து கடம்பு மரம் அதன் இலை, மலர் ஆகியன பற்றி தமிழிலக்கியங்கள் காட்டுவதென்ன என்று விளக்கப்படுகிறது. வெண்கடம்பு பாலைநிலத்திலும், நீர்க்கடம்பு/செங்கடம்பு மருத நிலத்திலும், மஞ்சள் கடம்பு குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இம்மரம் தேர் செய்யப் பயன்படும்]
2. திருவள்ளுவர் திருக்குறள் (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது ) என இருவகைப்படும். திருக்குறளின் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தா ர் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.இது ஒரு தொடர் கட்டுரை ]
3. காவிரிப்பூம்பட்டினம்
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[தமிழிலக்கியங்கள் காட்டும் பூம்புகார்க் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன, மிகச்சிறிய, தகவல் பல நிறைந்த கட்டுரை]
4. இலவசக் கட்டாயக் கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[நாடு சிறந்தொளிர மக்களனைவருக்கும் கல்வி அவசியம், இலவசக் கல்வியின் அருமையை மக்கள் அறியாமல் புறக்கணிப்பதால், கட்டாயக் கல்வி சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும், தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் நிலை வரவேண்டும்]
5. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, தோல், சுத்தம், சுகாதாரம், முதலுதவி பற்றிய தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும் இடம் பெறுகின்றன ]
6. தமிழ் மொழியும் தமிழ்நாட்டார் வழக்க ஒழுக்கங்களும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['தமிழ் இலக்கணமும் தமிழ்நாட்டின் இல்லறவாழ்க்கை முறையும்' என்று முன்னர் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி, தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. வடமொழி வேதங்கள், குறிப்பாக, இருக்கு வேதத்தின் மொழிபெயர்ப்பு பகுதிகள் காட்டும் ஒழுக்க நெறிகளும், தமிழ் மறைகள் காட்டும் வாழும் முறைகளும் ஒப்பிடப்படுகின்றன]
7. கல்வெட்டுகளால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[கல்வெட்டில் காணப்படும் சில தமிழ்ப் புலவர்கள் பற்றிய அறிமுகம்]
8. திருச்சுழியல் வெண்பா அந்தாதி (தொடர்ச்சி...)
கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]
9. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, நரம்பு மண்டலம் பற்றிய தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும் இடம் பெறுகின்றன ]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
No comments:
Post a Comment