வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927 --- துணர்: 2 மலர்: 1 & 2 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 1 & 2
________________________________________________
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________
அறிவிப்பு: ஒரு துயரம்
--ஆர். வேங்கடாசலம் பிள்ளை (இதழாசிரியர்)
[சங்கத்தலைவர்களின் மூத்த முகனும், சங்கத்தின் தொண்டருமாகிய 16 வயது மாணவர் செல்வன் பஞ்சாபகேசனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தல்]
1. கூவலாமை (தொடர்ச்சி...)
-- நீ. கந்தசாமி பிள்ளை (இதழாசிரியர்)
[மொழி வளர்ச்சி பற்றிய விளக்கம்]
2. மழவர் வரலாறு (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[மழவர் வரலாறு பற்றிய கட்டுரை]
3. நத்தம்போற்கேடு என்னுங் குறளுறை (தொடர்ச்சி...)
-- T.N. அப்பனையங்கார்
[நத்தம்போற்கேடு குறள் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரைவிளக்கம் பற்றி விவாதங்கள்]
4. உலகவரலாறு (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் கூறும் உலக வரலாறு பற்றியத் தொகுப்பு]
5. தஞ்சையரசர்
-- குப்புசாமி ராசு
[சோழர் வடநாட்டில் இருந்து வந்தவர் என்ற கருத்து]
6. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
[ஒன்பது பற்றி மொழி விளக்கம்]
7. கரந்ததைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி நிகழ்சிகள்
-- நா. விசுவநாதன்
[நிகழ்சிகள் பற்றியத் தொகுப்பு]
8. கற்புடைய மகள் கண்ணகி (தொடர்ச்சி...)
-- பண்டிதர் எல். உலகநாத பிள்ளை
[ கண்ணகி பற்றிய தொடர் கட்டுரை]
9. நத்தம்போற்கேடு என்னுங் குறளுறை ஆராய்ச்சி (தொடர்ச்சி...)
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[T.N. அப்பனையங்கார் கருத்துகளின் அடிதொட்டு நத்தம்போற்கேடு குறள் உரைவிளக்க மறுவாதங்கள்]
10. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]
11. மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள் (தொடர்ச்சி...)
-- தமிழ்ப்பண்டிதர் சோமசுந்தர தேசிகர்
[கல்வெட்டுத் தகவல்களுடன் மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள்]
அறிவிப்பு: மற்றொரு துயரம்
--ஆர். வேங்கடாசலம் பிள்ளை (இதழாசிரியர்)
[T.N. குருமூர்த்திப்பிள்ளை அவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தல்]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
No comments:
Post a Comment