Saturday, April 2, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 11 & 12 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 11 & 12
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. இளவேனிற் காலத்து இன்பமாலை
-- இதழாசிரியர்
[இளவேனில் மாலை இன்பம் குறித்து இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்]

2. ஒரு பெரும் மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[உமா - செல்வம் ஆகியோருக்குத் தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தில் பாராட்டு, மற்றும் உருவத் திறப்புவிழா எடுத்தமைக் குறித்து மகிழ்ச்சி ]

3. சர். சிவஞானமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும்
-- திராவிடன்
[சர். சிவஞானம் கொடுத்த விளக்கம்]

4. தமிழர் வீரம்
-- சா. சிதம்பரன்
[தமிழர்களின் உண்மையான வீரம் என்பது என்ன? கட்டுரையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இதழாசிரியர் மாற்றம் செய்யாது வெளியிட்ட இலக்கியத் தொடர் கட்டுரைத் தொடர்]

5. தமிழக வரலாறு  (தொடர்ச்சி ...)
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[குமரி கண்டம் குறிப்பு, மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஐவகை நிலங்களும் வாழ்வும்] 

6. சிறுமறை (குட்டிக்குறள்)
--சுகவனம் சிவப்பிரகாசன்
[தமிழ் பயிலும் மாணவருக்குப் பாடத்தில் திருக்குறள் இல்லாநிலைக்கு வருத்தம், இரண்டடிக் குறளை ஓரடியில் சொல்லும் ஒரு முயற்சி; 'கசடறக் கற்றுத் தகநிற்பதழகு" ]

7.  கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- மு. இராகவையங்கார் 
[மு. இராகவையங்கார்  அவர்கள் ஆசிரியருக்குக் கூறும் தன்னிலை விளக்க மடல்]

8. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர் -- முடிவுறுகிறது]

9. ஒரு குறட்பா
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
["நத்தம்போற் கேடு உளதாகும் சாக்காடும்" புகழ் அதிகாரத்துத் திருக்குறளுக்கு விளக்கம்]

10. வள்ளுவர் கலித்துறை
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பில் செய்யுள்கள்]

11. ஒரு விண்ணப்பம்
-- கந்தசாமியார்
[விலங்குகளை வதைக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது]

12. மத்தியகாலச் சோழர் வரலாறு  (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[சோழ அரசர் பரம்பரை பற்றிய கட்டுரைத் தொடர் வரிசையின் தொடர்ச்சி ... இக்கட்டுரையில் விஜயாலயச் சோழன் முதற்கொண்ட சோழ வரலாறு]

13. சங்க நிகழ்ச்சி
-- உமா. பஞ்சாபகேசன்
[நிகழ்ந்த சங்கப் பொதுக்கூட்டங்கள் பற்றிய சிறு குறிப்புகள் (விழாக்கள் மாலை 27 1/2 நாழிகைக்குத் தொடங்கின (?) ;  புகழ் பெற்ற தமிழறிஞர்களின் உரைகள் இடம் பெற்றுள்ளன;  கல்லூரி நிகழ்ச்சிகள்]

14. மாணவர் பக்கங்கள் - நிலாப்பாடம்
-- ?? கட்டுரை ஆசிரியர் கொடுக்கப்பெறவில்லை
[ஆசிரியர் மாணவர் உரையாட முறையில், இலக்கியங்களில் காணப்பெறும் வானியல் செய்திகள் கொடுக்கப்படுகின்றன]

15. கடிகாரம் வருமுன் கால அளவு
-- இதழாசிரியர்
[பண்டையக்காலக் காலக் கணக்கிடும் முறை படங்களுடன் விளக்கம்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment