Wednesday, April 20, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)


1. நமது பொழில்
-- R. வேங்கடாசலம் பிள்ளை   (இதழாசிரியர்)
[நான்காண்டுகள் நிறைவுறுகிறது ... உதவியவர்களுக்கு நன்றி நவிலலும், பாராட்டும், எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்களும், தெளிந்த நடையில், தனித்தமிழில் பிறரைக் குறை கூறாவண்ணம் எழுதுக என்ற வேண்டுகோள்]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன் மீது பிள்ளைத்தமிழ், தாலப்பருவம், சப்பாணிப்பருவம் ]

3. சுவாமிநாதம் (தொடர்ச்சி...)
--இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[213 செய்யுட்களைக் கொண்ட, கல்லிடையூர் சாமிகவிராசர் இயற்றிய நூல் தமிழ்பொழிலில் வெளியிடப்படுகிறது ]

4. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
-- சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, தவிர்க்க வேண்டிய உணவுகள், உணவுவகை, ஊட்டச்சத்து பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள்]

5. பதி பசு பாசப் பனுவல் - தத்துவ விளக்கம் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[பதிவிகாரம், பசுவிகாரம்  - செய்யுள்]

6. தன்னலப்பாட்டு  (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[நொண்டிச்சிந்து பாடல்]

7. புறநாட்டுப் பொருள்கள்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[அயல்நாட்டில் இருந்து வந்த பொருட்கள்; வெற்றிலை, சர்க்கரை, மிளகாய் போன்ற 8 பொருட்கள்  பற்றிய தகவல்கள்]

8. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்துப் பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...களப்பிரர் கால பாண்டியநாடு, இடைக்காலப் பாண்டியர்கள், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

9.  தமிழ்நாட்டுப் பெண்பாற் புலவர்கள்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மாணவர் பக்கங்கள்: கழார்க் கீரனெயிற்றியார் பற்றிய விளக்கம்]

10. முப்பாலிற்கண்ட மூவகை உதவிகள்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[வள்ளுவனாரை இலக்கிய நயம் பாராட்டல்]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment