Saturday, April 9, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர்: 3 மலர்: 1

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர்: 3 மலர்: 1 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர்: 3      மலர்: 1
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை


________________________________________________
 பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
(இந்த ஆண்டில் இதழாசிரியர்களுள் ஒருவரான நீ. கந்தசாமிப்பிள்ளை
அவர்களுக்குப் பதில் திரு. L. உலகநாத பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்)
________________________________________________

1. இராசராசன்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[விஜயாலயச் சோழன் தொடங்கி, மத்தியக் காலச் சோழர் வரலாறு, செப்பேடுகள், கல்வெட்டுகள் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன]

2. இன்பப்பேறு
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[இலக்கியங்களில் எவையெவை இன்பம் என்று கூறப்படுகின்றது என்பதன் தொகுப்பு]

3. சிந்தாமணியின் நந்தாவொளிகள்
--மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர் 
[சீவக சிந்தாமணி உரை]

4. வெஞ்சமாக் கூடலூர்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுச் சிவதலம்]

5. வாசுகியம்மையார்
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், வள்ளுவரின் வாழ்க்கைத் துணைவியாரின் கதை-கற்புக்கரசியின் மாண்பு எவையெனக் காட்டும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment