Thursday, April 14, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)  வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் இரண்டாம் பகுதியின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

8. மணிமேகலை
-- இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
[மணிமேகலை பாத்திரங்களின் குணநலம், இலக்கியநயம் பாராட்டல்]

9. ஓவியமும் தமிழரும்
-- மு. வே. மா. உலகவூழியர்
[ஓவியம் கைத்தொழில் எல்லாவற்றிற்கும் தாயாகும் என்றும் அதனை விளக்கும் முயற்சி, ஓவியக்கலையில் சிறப்புற்றிருந்த தமிழர் அதனை மறந்தனர், தமிழர் ஓவியக்கலைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியர்]

10. ஒரு கல்வெட்டு
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[திருவெஞ்சமாக் கூடலூர் கோயில் கல்வெட்டுத் தகவல்கள்]

11. உயிர்ப்பண்புகளும் வீட்டு வாயில்களும்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[அறிவும், சிந்தனையும், அதன் இயக்கங்களும்... அறிவு, விழைவு, செயல் ஆகிய பண்புகள் பற்றிய விளக்கங்கள்]

12. தமிழக நிலைமையும் தமிழர் கடமையும்
-- S. சோமசுந்தர பாரதியார்
[அயல்நாட்டு வணிகத்தில் சிறப்புற்று விளங்கிய தமிழகத்தின் தமிழர் இன்று பிழைப்புக்காக அயல்நாடு செல்லும் நிலை,  மொழியை மறந்து ஆங்கிலத்தில் மயங்கி நிற்கும் தமிழர்...பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்ற அன்றைய தமிழர்களின் இன்றைய வழித்தோன்றல்கள் காட்டும் சாதிவெறி மனப்பாங்கு, ... இன்றும் இது உண்மை என்று கூறும் அளவிற்கு நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையைப்  பற்றிய கட்டுரை]

13. முருகன் சிறுவிளையாடல் (தொடர்ச்சி...)
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

14. புகழேந்தி - ஒட்டக்கூத்தர்
-- எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக் கல்லூரி மாணவர் நடிப்பதற்காகக் காலநிலையை ஒட்டி எழுதப்பெற்ற சிறு நாடகமொன்று] 

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment