Thursday, April 28, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 7 & 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 7 & 8

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**


இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 7 & 8

________________________________________________

1. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி, கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. தமிழர் கடமை
S. இராமச்சந்திரன்
[கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவரான கட்டுரையாசிரியர், தமிழின் நிலை, குறிப்பாக முத்தமிழின் நிலையும் சீரழிந்தது வருகிறது.  தமிழரோ ஆர்வமும் அக்கறையுமின்றி இருக்கின்றனர். இதில் நம்மை ஆளும் அயலாரான  ஆங்கிலேயரும் கூட தமிழ் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை, தமிழரே தமிழில் ஆர்வம் குறைந்தவராக இருக்கிறார்கள் என்றும், எவ்வெவ்வகையில் மாற்றம் கொண்டு வந்தால் தமிழ் மறுமலர்ச்சியடையும் என்ற தனது கருத்துகளை 20 கருத்துக்களாகப் பட்டியலிட்டு தமிழர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்]

 3. குரங்கெறிவிளங்காய்
அ. கந்தசாமிப் பிள்ளை
[ஆசிரியர், ஆசிரியர் என்னும் தகுதி அற்றோர், மாணவர், மாணவரென்னும் தகுதி இல்லாதோர் பண்புகளை , தொல்காப்பியத்திற்கு இலக்கணம் எழுதும்பொழுது விவரிக்கும் இளம்பூரணார் மாணவரென்னும் தகுதி அற்றோரை குரங்கெறிவிளங்காய் என்பார்.  குரங்கெறிவிளங்காய் பற்றி இக்கட்டுரை ஆசிரியர் தாமறிந்ததை விளக்குகிறார். குரங்கை விளங்காயை பறித்து வீச வைக்கும் நோக்கில்  கல்லெறிந்து, பதிலுக்குக் குரங்கு பறித்து வீசும் விளங்காயை எடுத்துக் கொள்ளல் போல தமக்கு வேண்டிய அறிவைச் சூழ்ச்சியால்  பெறும்  வகை கொண்டவர், குரங்கெறிவிளங்காய் பண்பு கொண்ட மாணவர், இவர் மாணவர்க்கான தகுதியற்றவர் ]

4. திருமலை வெண்பா
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[புறத்திரட்டாசிரியர் எடுத்தாண்ட  நூல்களுள் ஒன்று  பதினொன்றாம் நூற்றாண்டின் திருமலை வெண்பா, இது அழிந்து கிடைக்காமல் போன நூல்களுள் ஒன்று.  எனவே திருமலை வெண்பாவில் கிடைத்த 26 பாடல்களைத் திரட்டி தமிழ்ப்பொழிலில் வெளியிடும் முயற்சி  இது. திருக்குறளின் அதிகாரங்கள் தலைப்பில் பாடல்கள் காணப்படுகின்றன]

5. திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டுக்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன் ஆகியோரது கல்வெட்டுகளில் காணும் தகவல்]

6. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை. இருக்கு, சாமம், ஆறங்கம் என்னும் சொற்கள் குறிப்பன எவை?  இது ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ் இலக்கணமும் தமிழ்நாட்டின் இல்லறவாழ்க்கை முறையும்
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[நூறாண்டுகளுக்கு முன்னரே  சமஸ்கிரதம் பேச்சு வழக்கில் இல்லை என்பது ஆசிரியர் தரும் தகவல். தமிழில் தோன்றிய நூல்கள் யாவும் சமஸ்கிரதத்தில் இருந்து வந்தவை  என்போருக்கு ஆசிரியர் விளக்கமளிக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

8.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    செரிமான உறுப்புகளும் அவற்றின் வேலைகளும் பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள்... தொடர்கிறது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

9. செந்நீர்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[குருதி - உடலில் உயிரை இருத்த உதவுவதால் இருத்தம் என்று, அம் விகுதி சேர்க்கப்பட்ட தொழிற்பெயர் ஆகுபெயரானது. இருத்தும் >>> இரத்தம் என்பது தமிழ்ச்சொல், வடமொழிச் சொல்லன்று, இது ஒரு தொடர் கட்டுரை]

10. இரங்கல்
R. வேங்கடாசலம் பிள்ளை
[ கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், திருச்சி கிளையின் அமைச்சர் திரு. இராம. நடேசபிள்ளை மறைவிற்கு இரங்கல் செய்தி]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment