Thursday, April 21, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)


11. மதுரைக்காஞ்சி   ஆராய்ச்சி  (தொடர்ச்சி...)
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[மதுரை நகரின் சிறப்பு, இது ஒரு தொடர் கட்டுரை]

12. தமிழகத்துப் பண்டைத்தமிழ் மக்களும், தனித்தமிழ் மொழியும்   (தொடர்ச்சி...)
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[பண்டைய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் தமிழர் வாழ்வு முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை]

13. கிறித்துவர் கிழமைகளும் மாதங்களும்   (தொடர்ச்சி...)
-- இ. மு.  சுப்பிரமணிய பிள்ளை
[முன்னர் வெளியான மாதங்கள் கட்டுரையின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்  - கிறித்துவர் நாட்கணக்கைப் பின்பற்றும் முறை, கதிரவனை அடிப்படையாகக் கொண்டு காலக் கணக்கிடும் முறை  குறித்த வரலாற்றுப் பார்வைகள் ]

14. எனது காதலர்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[தோழி, தலைவி இடையே செய்யுள் வடிவில் நிகழும் உரையாடல் ]

15.  இன்ப வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் சிக்கறுக்கும் வழி
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[சொல்லாதே, அஞ்சாதே, கன்றாதே (never fret), தவறாதே, மாற்றாதே, தட்டாதே, வெகுளாதே ஆகிய அறிவுரைகளைப் பெறும் மாணவன் ஒருவன்]

16. ஏழை மக்களை எவ்வழி உயர்த்தலாம்?
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[பொருளியல் வகையில் எவ்வாறு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்ற சிந்தனைகள்]

17. பதி பசு பாசம்
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[இம்முறை K. சோமசுந்தரம் பிள்ளை செய்யுள்களை எடுத்து வழங்குகிறார்]

18.  திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

19. பிரிவுரை
--ம. பெ.
[திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரித் தமிழாசிரியரும், தமிழ்ச் சங்கத்தின் திருச்சி கிளையின்  அமைச்சருமான இராம. நடேசப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தியும்  இரங்கற்பாவும்

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment