Sunday, April 10, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 2 & 3

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 2 & 3 வெளியீடு

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 2 & 3
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் இளம்பருவமும் முடிசூட்டுதலும், மெய்க்கீர்த்தி ]

2. முதலாம் குலோத்துங்க சோழன் (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்க சோழன் வரலாறு]

3. பரமோபதேசம்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ சைவ சித்தாந்த உண்மை உணர்த்தும் நூல்களுள் ஒன்றான, திருஞான சம்பந்தரின் பரமோபதேசம் நூல்]

4.  குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

5. முருகன் சிறுவிளையாடல்
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

6. திருத்தக்கதேவர்
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[ திருத்தக்கதேவர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்று கூறுவோர் உண்டு,  சீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற முதல் நூலாகக் கருதியிருந்த காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர் என்பது ஆசிரியர் முடிவு]

7. சிலப்பதிகார நாடகப் பகுதி (தொடர்ச்சி...)
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையில் கவுந்தியடிகளுடன்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment