Thursday, April 10, 2014

டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு  அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1911 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும்] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.

சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.

சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் [https://ta.wikipedia.org/s/1rr].


மின்னூல்கள் 


எழுதியுள்ள நூல்கள்

எண்ண அலைகள். முருகன் & கம்பெனி.
நான் கண்ட சோவியத் ஒன்றியம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
சோவியத் மக்களோடு. வானதி பதிப்பகம் 1973
வள்ளுவர் வாய்மொழி. வானதி பதிப்பகம். 1973
நஞ்சு உண்டவர். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம். 1979
நினைவில் நிற்பவைகள். வானதி பதிப்பகம். 1982
நினைவு அலைகள் 1,2,3. வானதி பதிப்பகம் 1983
லெனின் வாழ்கிறார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009
பெரியாரும் சமதர்மமும்.
சிங்காரவேலரும் பகுத்தறிவும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புதிய ஜெர்மனியில். வானதி பதிப்பகம்
சாக்ரடீஸ்.
வள்ளுவன் வரிசை 1-13 நூல்கள் முருகன் அண்ட் கம்பெனி, 1959.
அடித்தா? அணைத்தா?, நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு , 1958; இலவசப் பதிப்பு.
பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள யோசனைகள், தாமரை 1992,
தியாகச் செம்மல் நால்வர், தாமரை,1992,
மேதை மேகநாதன், வானதி பதிப்பகம், 1973
சோவியத் மக்களோடு, வானதி பதிப்பகம்
பிரிட்டனில், வானதி பதிப்பகம், 1975
வாழ்விக்க வந்த பாரதி, வானதி பதிப்பகம்
ஊருக்கு நல்லது, சுந்தரவடிவேலு, வானதி பதிப்பகம்
உதிரிப்பூ, கலைக்கதிர் வெளியீடு, கோவை; 1959
பூவும் கனியும், கலைக்கதிர் வெளியீடு, கோவை
சிந்தனை மலர்கள், கலைக்கதிர் வெளியீடு, கோவை
அங்கும் இங்கும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
எல்லோரும் வாழ்வோம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலக்கியம் கொழிக்கும் சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சோவியத் கல்விமுறை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
பயன்மிகு பத்தாண்டுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்ட் கோ, சென்னை;
பெரியாரும் சமதர்மமும், புதுவாழ்வு பதிப்பகம்,
இந்திய சோவியத் தோழமை, இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம், சென்னை;
சுதந்திரம் காப்போம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை;
உலகத் தமிழ், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை;
கல்வி வள்ளல் காமராசர், எமரால்ட் பப்ளிகேஷன்ஸ்,‌ சென்னை;
முதியோர் கல்வி முதல்நூல்; முதியோர் கல்வி இயக்ககம், சென்னை;
எல்லோரும் படிப்போம், தாகூர் கல்வி நிலையம்;
தலைவருள் மாணிக்கம், தமிழ் நூல்நிலையம், சென்னை;
வையம் வாழ்க,
துலா முழுக்கு,
சுந்தர வடிவேலனாரின் மந்திர மணி மொழிகள்: ஆண்டு விழா 20-1-1961. 
அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி மாணவ-ஆசிரியர் சங்கம். 1961

1 comment:

  1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-34.htm

    ReplyDelete