Thursday, April 10, 2014

ராஜம் கிருஷ்ணனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



மூத்த பெண் எழுத்தாளரான இவர் பிறந்தது 1925 ஆம் ஆண்டு.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்.  இளம் வயதில் திருமணம் ஆன இவர் தன் கணவரின் உதவியோடு பல புத்தகங்களைப் படித்துத் தன் அறிவை வளர்த்துக் கொண்டு தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.  சமூக அவலங்களைக் குறித்து எழுதுவதில் திறமை வாய்ந்தவர்.  அந்தக் களத்திற்கே சென்று நேரடியாகக் கண்டறிந்து எழுதுவதில் வல்லவர்.  கணவர் இறந்து போனதும் வறுமையால் வாடிய இவரை சென்னையிலுள்ள விஸ்ராந்தி  ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் சேர்த்ததன் மூலம் அங்கே இருந்து வருகிறார். பற்பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் முதுமைக்காலத்தில் தனிமையில் வாடுகிறார்.

http://ta.wikipedia.org/s/u46

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-72.htm


ராஜம் கிருஷ்ணன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

 கூட்டுக் குஞ்சுகள்
வனதேவியின் மைந்தர்கள்
உத்தரகாண்டம்
மாறி மாறி பின்னும்
மலர்கள்
பாதையில் பதித்த அடிகள்
உயிர் விளையும் நிலங்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
பெண் விடுதலை
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
காலந்தோறும் பெண்மை
கரிப்பு மணிகள்
வளைக்கரம்
ஊசியும் உணர்வும்
வேருக்கு நீர்
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
இடிபாடுகள்
அலை வாய்க்கரையில்
சத்திய தரிசனம்
கூடுகள்
அவள்
முள்ளும் மலர்ந்தது
குறிஞ்சித் தேன்
சுழலில் மிதக்கும் தீபங்கள்

No comments:

Post a Comment