Thursday, April 10, 2014

பேரா.சுந்தரசண்முகனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

பேரா.சுந்தரசண்முகனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்


[நன்றி: விக்கிபீடியா]

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னர் இணைத்து சுந்தர சண்முகனார் ஆனார்.

தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார். [https://ta.wikipedia.org/s/2p5v]


01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.




No comments:

Post a Comment