திரு விந்தனின் இயற்பெயர் கோவிந்தன் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்த இவர் செப்டெம்பர் 22 ஆம் தேதி 1916 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி மறைந்தார். ஆரம்பத்தில் இவர் தந்தையோடு சேர்ந்து கருமான் வேலையே செய்து வந்தார். இரவுப் பள்ளியில் படித்த இவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. சென்னையில் ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றிய இவர் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு மாத இதழில் அச்சுக்கோப்பவராகச் சேர்ந்தார். இதன் பின்னர் ஆனந்த விகடன் புத்தகம் அச்சுக்கோக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தான் தம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். பின்னர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடங்கிய கல்கி இதழில் அச்சுக்கோர்ப்பவராகச் சேர்ந்த இவரின் திறமையைப் பார்த்து கல்கி அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி, துணை ஆசிரியராகவும் சேர்த்துக் கொண்டார். இவருக்கு விந்தன் என்னும் புனைப்பெயரைச் சூட்டியது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.
http://ta.wikipedia.org/s/wx
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-3.htm
திரு.விந்தன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. அன்பு அலறுகிறது
02. இலக்கியப்பீடம் 2005
03. காதலும் கல்யாணமும்
04. கண் திறக்குமா?
05. எம்.கே.டி.பாகவதர் கதை
06. மனிதன் இதழ் தொகுப்பு
07. மனிதன் மாறவில்லை
08. மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
09. நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச்
சிந்தனைகள்
10. ஓ, மனிதா
11. ஒரே உரிமை
12. பாலும் பாவையும்
13. பசிகோவிந்தம்
14. பெரியார் அறிவுச் சுவடி
15. சுயம்வரம்
16. திரையுலகில் விந்தன்
17. வேலை நிறுத்தம் ஏன்?
18. விந்தன் இலக்கியத் தடம்
19. இந்திய இலக்கியச் சிற்பிகள்
20. விந்தன் கதைகள் - 1
21. விந்தன் கதைகள் -2
22. விந்தன் கட்டுரைகள்
23. விந்தன் குட்டிக் கதைகள்
No comments:
Post a Comment