Thursday, April 10, 2014

கவியரசு, முடியரசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

மூத்த கவிஞர்களுள் ஒருவரான கவியரசு முடியரசன் அக்டோபர் 7 ஆம் தேதி 1920 ஆம் வருஷம் பிறந்தார்.  1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மறைந்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுப்பராயலு--சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர் துரைராசு என்னும் தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். பாவேந்தருக்கு மிகவும் நெருங்க்யவர். இவர் கவிதைகள் இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

http://ta.wikipedia.org/s/kdi

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-92.htm


கவியரசு முடியரசன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

  கவிதைத் தொகுதிகள்

01. முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி)
02. முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
03. முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்)
04. காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு)
05. காவியப் பாவை (நான்காம் பதிப்பு)
06. கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)
07. கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)
08. பாடுங்குயில்
09. நெஞ்சு பொறுக்கவில்லையே
10. மனிதனைத் தேடுகிறேன்
11. தமிழ் முழக்கம்
12. நெஞ்சிற் பூத்தவை
13. ஞாயிறும் திங்களும்
14. வள்ளுவர் கோட்டம்
15. புதியதொரு விதி செய்வோம்
16. தாய்மொழி காப்போம்
17. முடியரசன் தமிழ் வழிபாடு
  காப்பியங்கள்
18. பூங்கொடி
19. வீரகாவியம்
20. ஊன்றுகோல்
  கதைகள்
21. எக்கோவின் காதல்
  கட்டுரைகள்
22. எப்படி வளரும் தமிழ்
23. சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்
  கடித இலக்கியம்
24. கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்
(அன்புள்ள பாண்டியனுக்கு, இளவரசனுக்கு)

No comments:

Post a Comment