ஏப்ரல் மாதம் 17 ஆம் நால் 1917 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தன் வாழ்நாளைத் தமிழுக்காகவே செலவு செய்த அரும்பெரும் அறிஞர்களில் ஒருவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் மறைந்த இவர் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மேல சிவபுரியில் நகரத்தார் குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார்-தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை என்றாலும் மாணிக்கம் என அழைக்கப்பட்டதால் அதுவே இவர் பெயராக நிலைபெற்றது. சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்த இவருக்கு வட்டிக்கடை வேலையில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஏனெனில் முதலாளி சொல்லச் சொன்ன பொய்யை இவரால் கூறமுடியவில்லை. பின்னர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் அவர்களின் தொடர்பால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.
http://ta.wikipedia.org/s/vlm
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-58.htm
டாக்டர் வ.சுப.மாணிக்கம்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. இலக்கியச் சாறு
02. ஏழிளந்தமிழ் (உரை)
03. கம்பர்
04. தமிழ்க்காதல்
05. திருக்குறள் தெளிவுரை
06. வள்ளுவம் (ஆராய்ச்சி)
07. ஆய்வுக் கோவை
No comments:
Post a Comment