Wednesday, April 9, 2014

புலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

புலவர் குலாம் காதிறு நாவலர் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்









குலாம் காதிறு அவர்கள் பாவலர், பத்திரிகையாளர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார்.

புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர். இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர்.

குலாம் காதிர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார். பன்னிரெண்டாவது வயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால், மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். ஆங்கில நாவலாசிரியர் ஜி.டபிள்யு.எம்.ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். [நன்றி: இந்து http://tamil.thehindu.com/general/literature/article5816608.ece]





























No comments:

Post a Comment