வணக்கம்.
நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 1 அன்று வெளிவந்த முதலாவது இதழ் (மலர் 4, இதழ் 19) மின்தொகுப்பில் இணைகின்றது.
இந்த இதழில் ...
1 ஆம் பக்கம்:
- பா. பி. இரத்தினபாண்டியர் அவர்கள் எழுதிய 'சௌந்தரகாந்தி' என்ற பாண்டிய வரலாற்றைக் கூறும் வரலாற்று நாவல், நாடார்குல மித்திரன் புத்தகசாலை, மல்லிகா ஆயில் கூந்தல் தைலம், 'ஆநந்தமகிளா நூல்', ஃபோட்டோ படங்கள், மூன்று மாதங்களில் ஆங்கிலம் கற்க 'புதிய இங்லீஷ் சம்பாஷணைப் புத்தகம்', தூத்துக்குடி 'நவீன சுகபோஜன சாலை' உணவு விடுதி ஆகியவற்றிற்கான விளம்பரங்கள்.
2 ஆம் பக்கம்:
- எஸ். வி எம். பாண்டியன் அவர்களின் "வாய்மை" என்ற கட்டுரை வாய்மையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறது.
- ஸர் சதாசிவ ஐயரின் பிரசங்கம்: "சமூக ஊழியமும் தீண்டாமையும்" என்ற கட்டுரை, உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயர் ஆந்திராவில் ஆற்றிய உரையில் தீண்டத்தகாதவர்களை கோயிலில் அனுமதிக்காத செயலைக் கண்டிக்கிறது.
- கொழும்பு ஞா. பா. வேதநாயக நாடார் அவர்களின் "நமது கைத்தொழில் நிலைமை" என்ற கட்டுரை பங்குகள் விற்று மூலதனம் சேர்த்து கூட்டுக் கம்பெனிகள் நடத்தும் அயல்நாட்டு வணிகமுறையை நம்நாட்டினரும் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனையை வழங்குகிறது.
- இலங்கை வர்த்தமானம் பகுதி அங்கு நடக்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும், திருவாங்கூர் வர்த்தமானம் பகுதி நாகர்கோவில் நடப்புகளையும் விவரிக்கிறது.
3 ஆம் பக்கம்:
- 'நாடார் மகாஜனசங்கமும் பிரசாரமும்' பகுதி சங்கத்தின் செயல்பாடுகளைக் குறிப்பிடுகிறது.
- 'காலப்போக்கு' என்ற முருகதாசன் எழுதும் பத்தி அயல்நாட்டுத் துணுக்குகளையும் உள்நாட்டுத் துணுக்குகளையும் கொடுக்கிறது. ஐரோப்பிய செய்திகளுடன், பர்மா இந்தியாவை விட்டுப் பிரியப்போகிறது என்ற கவலையையும், சித்தரஞ்சன் தாஸ் வங்கத்திலும், ராஜகோபாலாச்சாரியார் சென்னையிலும் ஆங்கில அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதையும் கூறுகிறது.
4 ஆம் பக்கம்:
- தலையங்கம் பகுதி, கயாவில் கூடிய அகில இந்திய ஹிந்து மகாசபை மாநாட்டில் பண்டிதர் மதன்மோகன மாளவியா அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்களையும், உரையையும் அறியத்தருகிறது. இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்று கூறினாலும், இந்துக்கள் காலம் காலமாக அயல்நாட்டில் இருந்து உட்புகுந்த பிற மதத்தினரால் துன்புறுத்தப்படுவதாகவும், முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வரவேண்டும் (அந்தக்கால 'ஹோம் கம்மிங்') போன்ற கருத்துகளும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.
- 'குறிப்புகள்' பகுதி அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும், சட்டசபை நடவடிக்கைகளையும் அலசுகிறது.
5 ஆம் பக்கம்:
- "லஞ்சாய நாம:" என்ற பகுதி அக்கால அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் "பாதகாணிக்கை" பெற்றுக்கொண்டு லஞ்சலாவண்யம் தலைவிரித்தாட உடன் போவதையும், ஏழை மக்களை லஞ்சம் காரணமாக வாடுவதையும், இதை எப்படி ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையினர் அறியாமலிருக்கும் விந்தையையும் கண்டு வியக்கிறது. "குலைக்கும் நாய்க்குக் கொஞ்சம் கருப்பட்டி (இக்காலத்தில் பிஸ்கோத்து ?) போட்டால் அது வாலை ஆட்டுவது போல, கொஞ்சம் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தால் மக்கள் குழைந்து குழைந்து பணிவதைக் குறிப்பிடுவது 'பி.டிஆர். மேனிநாதன்' அவர்களின் கட்டுரை (சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழகத்தில் இதே கதிதானா?)
- 'சுதந்திரம்' பகுதி ஆத்ம சுதந்திரம், மத சுதந்திரம், தேச சுதந்திரம், நாடார்கள் சுதந்திரம் ஆகியவற்றை அலசுகிறது.
6 ஆம் பக்கம்:
- 'குலவர்த்தமானம்' பகுதி நாடார்குல நடவடிக்கைகள் பற்றிய செய்தித் துணுக்குகள் பலவற்றைத் தொகுத்தளிக்கிறது.
7 ஆம் பக்கம்:
- "நாம் பூமியில் பிறந்து வந்ததின் வேலை என்ன?" என்ற மனவளக்கட்டுரை இடம் பெறுகிறது. ஆசைகளைத் தவிர்த்து, பந்தபாசங்களை அறுத்து முக்தி பெற அறிவுரை கூறுகிறது. 'சந்திரனை மேகம் மறைப்பது போல மனிதர்களைப் பந்த பாசம் மறைப்பதால்' அவர்கள் வந்த வேலையை மறந்துவிடுகிறார்களாம்.
- நாடார் குலமித்திரனின் கௌரவ மேனேஜர் கருப்பையா பிள்ளைக்கு பர்மா நாடார் சங்கம் வாசித்தளித்த வரவேற்புரையும், நாடார் குல மித்திரனின் 'போஷகப் பிரபுக்கள்' பட்டியலும் இடம் பெறுகிறது.
8 ஆம் பக்கம்:
- இக்கடைசி பக்கம் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டு லேகியம், நாடார் வங்கியின் பங்கு விற்பனை, 'நமது குலத் தொழில் யாது? மற்றும் 'நாடார் மகாஜன சங்கச் சங்கீத மஞ்சரி' என்ற நூல்கள், பெஸ்ட் இந்தியன் பிஸ்கட் ஃபாக்டரி, குற்றால தங்கும் விடுதியின் (உணவு உட்பட வசதி கொண்ட விடுதியின்) விளம்பரம் (இரண்டு மாதம் தங்க ரூபாய் 60, ஒரு வாரத்திற்கு 10 ரூபாய், நாளொன்றுக்கு 1.80 ரூபாய் கட்டணம்), 'விவேகானந்தம்', 'நாடார் நண்பன்' மாதாந்திர தமிழ்ப் பத்திரிக்கைகள் ஆகிய விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.
நன்றி: திலகபாமா மின்னிதழாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

"மாணிக்க முத்து வயிர அணி பூண்டு,எனவே புளியம்பழமும் அதன் ஓடும் போல உலக வாழ்வைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது.
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் நமன் கட்டியே கைப்பிடித்தால்
கானிப்பொன் கூட வரக்காண்வதில்லை நெஞ்சமே"
- நாடார் குலமித்திரனின் கௌரவ மேனேஜர் கருப்பையா பிள்ளைக்கு பர்மா நாடார் சங்கம் வாசித்தளித்த வரவேற்புரையும், நாடார் குல மித்திரனின் 'போஷகப் பிரபுக்கள்' பட்டியலும் இடம் பெறுகிறது.
8 ஆம் பக்கம்:
- இக்கடைசி பக்கம் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டு லேகியம், நாடார் வங்கியின் பங்கு விற்பனை, 'நமது குலத் தொழில் யாது? மற்றும் 'நாடார் மகாஜன சங்கச் சங்கீத மஞ்சரி' என்ற நூல்கள், பெஸ்ட் இந்தியன் பிஸ்கட் ஃபாக்டரி, குற்றால தங்கும் விடுதியின் (உணவு உட்பட வசதி கொண்ட விடுதியின்) விளம்பரம் (இரண்டு மாதம் தங்க ரூபாய் 60, ஒரு வாரத்திற்கு 10 ரூபாய், நாளொன்றுக்கு 1.80 ரூபாய் கட்டணம்), 'விவேகானந்தம்', 'நாடார் நண்பன்' மாதாந்திர தமிழ்ப் பத்திரிக்கைகள் ஆகிய விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.
நன்றி: திலகபாமா மின்னிதழாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்
No comments:
Post a Comment