Sunday, April 12, 2015

நாடார் குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்வி மற்றும் பெண்கல்வி பற்றிய  புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155) கணக்கெடுப்புப்படி  (ஜனசங்கை) படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்.  மேலும் விரிவான நாடார்குல  மக்கள் பற்றிய புள்ளிவிவரங்களை  இந்தப் பதிவில் காணலாம்.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
இரங்கூன்  வி. ஏ. வேல் ஜோசப் நாடார் என்பவர் பர்மா சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மக்களிடம்  ராமன்  ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால்  என்ன என்ற மனப்பான்மை அதிகம் என்ற கூறி; மது, சாதிபேதம், தீண்டாமை ஒழித்தால் மூன்று மாதங்களில் சுதந்திரம்  வாங்கிவிடலாம் என காந்தி சொன்னார். ஆனால் நம்  மக்களுக்கு அந்த அக்கறையில்லை. சுதந்திரத்திற்காகப் போராடும் காந்தி இப்பொழுது சிறையில் இருக்கிறார் என்ற செய்தி அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்லும் பழமொழித் திரட்டு பகுதியில்  தரப்படுகிறது. 

நாடார்சங்கச் செய்திகள்:
நாடார் சங்கக் கமிட்டிகள் அசட்டையாக வேலை செய்வது கண்டிக்கப்பட்டுள்ளது.

நாடார் சங்க உறுப்பினர் என்று கூறி பண வசூல் செய்யும் மோசடி ஒன்று நடந்து வருகிறது  என மக்களிடம் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

நன்கொடை அளித்த இலங்கை நாடார்களின் பட்டியலில், இலங்கை முகத்துவாரம்  பகுதி நாடார் உறுப்பினர்கள் எனக் குறிப்பிடும்  தகவல்களின் வாயிலாக  அங்கு வசிக்கும் நாடார்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்களாக இருப்பது தெரிகிறது.

கார்த்திகை விளக்கு விழா நாளை விடுமுறை நாளாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கையும், நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன

நல்ல நினைவாற்றலுக்கும், குயிலைப்போல இனிய குரலைப் பெறவும்   நாட்டு  வைத்தியமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

தொடர்கள்: 
  • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை பலராமர் தேனுகாசுரனைக் கொன்றது விவரிக்கப்படுகிறது.
  • மனனமாலை (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்),
  • நல்லூர் நண்பன் எழுதிய, மனானந்த மஞ்சரி, "வெள்ளியங்கிரி கோர்ட் விசாரணை ...மதம் மாறியகேஸ் கேஸ்" என்ற நாடகத் தொடரில்,  முருகன் வள்ளியிடம் சென்றுவிட்டதால் தெய்வானை  நீதிமன்றம் சென்று ஜீவனாம்ச வழக்கு தொடுப்பதாக ஒரு கற்பனை, அவரது வழக்கறிஞர் விஷ்ணு.  இது ஒரு தொடர் நாடகம், படிக்க சுவையான ஒரு நகைச்சுவை நாடகம்
  • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஆறாம்   பாகம் இடம் பெற்றுள்ளது
விளம்பரங்கள்:
சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும், தேசானுகூலன்  பத்திரிகைக்கான விளம்பரங்களும்,

பிரிட்டிஷ் இராணுவத்தில் பணிபுரிந்த வீரர், 105 ஆங்கிலேய போர் வீர்களுக்குத் தலைவராக இருந்த, போர்களில் வெற்றி பல  கண்டு வீரப்பட்டம் பெற்ற "அசாரியா நாடார்" என்பவரின்  படம் விற்பனைக்கு, விலை  4 அணா. என்ற விளம்பரமும்,

விளம்பரப்பகுதியில் பரமன்குறிச்சி பள்ளிக்கு நன்கொடை  கோரப்படுவதும், தூத்துக்குடியில் விருதுப்பட்டி நாடார் குலத்தவர் நடத்தும் "நவீன சுக போஜன சாலை" (உணவு மற்றும் தங்கும் விடுதி) விளம்பரங்களும் அக்கால நடப்பை விளம்பரம் என்பதன் வழியாக பெறும் வரலாற்றுத் தகவல்களாக அறிய உதவுகின்றன.நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

No comments:

Post a Comment