Monday, March 31, 2014

பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




கா.ம.வேங்கடராமையா சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகிலுள்ள காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி பிறந்தார்.

மறைவு 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி. தமிழறிஞர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார் இவர்.

1949 ஆம் ஆண்டில் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார்.  காசி மடம் வெளியீடாக இது வெளி வந்தது.  இதைத் தவிர திருக்குறள் உரைக்கொத்துப் பதிப்புகளும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மூலம் ஜைனர் எழுதிய உரையையும் திருக்குறளுக்காகப் பதிப்பித்தார்.

 http://ta.wikipedia.org/s/dga

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-87.htm

பேரா.கா.ம.வேங்கடராமையா
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. ஆய்வுப் பேழை
02. இலக்கியக் கேணி
03. கல்லெழுத்துக்களில்
04. கல்வெட்டில் தேவார மூவர்
05. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
06. சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்)
07. சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா)
08 சிவ வழிபாடு
09 The Story of Saiva Saints
10 திருக்குறள் சைனர் உரை
11 திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை
12 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்
13 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்-திருமணவிழா மலர்
14 சோழர் கால அரசியல் தலைவர்கள்
15 தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
16 தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
17 A Hand Book of Tamil Nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு
18 தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு

No comments:

Post a Comment