Thursday, March 20, 2014

திரு.இராய சொக்கலிங்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்


திரு.இராய சொக்கலிங்கம்


ராய. சொக்கலிங்கம் (1898 அக்டோபர் 30 – 1974 செப்டம்பர் 30 ) என்னும் ராயப்ப செட்டியார் சொக்கலிங்கம் தமிழறிஞர்; கவிஞர்; சமய அறிஞர்; எழுத்தாளர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; காந்தியர். ராய. சொக்கலிங்கம் (ராய.சொ.) சிவகங்கை மாவட்டம் அமராவதிப்புதூரில் ராயப்பச் செட்டியாருக்கும் அழகம்மை ஆச்சிக்கும் மகனாக 1898 அக்டோபர் 30ஆம் நாள் பிறந்தவர்.

ராய. சொக்கலிங்கம் 1938 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று 1941 ஆம் ஆண்டு வரை காரைக்குடி நகரவையின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  ராய. சொக்கலிங்கம் 28 சமய நூல்களையும் 5 கட்டுரைத் தொகுப்புகளையும் 8 கவிதைத் தொகுதிகளையும் 2 ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் 2009-10 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதற்கு ஈடாக ஐந்து லட்சம் ரூபாய் பரிவுத்தொகையாக அவர் மரபுரிமையினருக்கு வழங்கப்பட்டது. (http://ta.wikipedia.org/s/3ck2)


No comments:

Post a Comment