வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 5 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 5
________________________________________________
1. பேராசிரியர் உரைக்குறிப்பு (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர்
[தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ... ]
2. சீத்தலைச் சாத்தனார்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[சீத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர், பெயர் விளக்கம்]
3. நற்றாயும், செவிலித்தாயும்
-- இதழாசிரியர்
[நாடகம்: நற்றாய் = நமது தாய்நாடு, செவிலித்தாய் = ஆங்கிலக் கல்லூரி]
4. திருக்குறளுறை ஆராய்ச்சி
-- கந்தசாமியார்
[கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் - உரை]
5. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம்
[தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய தேவையை முன்வைக்கும் கட்டுரை]
6. மாணவர் விடைகள்
-- இதழாசிரியர்
[புதிர் வினாக்கள் தொகுப்பு]; மு------ன்:- தூக்கம் விளைவிக்கும் அறிய மருந்து, பண்டிதர்களிடம் விளையின்றிக் கிடைப்பது ...போன்றவை]
7. நூலாராய்ச்சி
-- சா. சிதம்பரன்
[நூலாய்வு செய்வோருக்குத் தேவையான பண்புகள்; ஆராய்ந்தெழுதும் அரும்பொருள்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தக்க எளிய மொழியில் எழுதுதல் சாலவும் நன்று ]
8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இராஜராஜ சோழனின் கல்வெட்டுத் தகவல்கள்]
9. மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை
--வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், சன்மார்க்க சபைத் தலைவர்
[உ. வே. சா. தலைமையில் நடந்த விழா பற்றிய செய்தி, இவ்விழாவில் மு. கதிரேசன் செட்டியார் 'பண்டிதமணி' பட்டமும், ரா. இராகவையங்கார் 'மகாவித்வான்' பட்டமும் பெற்றனர் ]
10. நமது மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[பட்டமளிப்பு விழாவிற்குப் பாராட்டுகள்]
11. தமிழ்ப் பொழில் வாழ்த்து
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[செய்யுள்]
12. நக்கீரர் - ஒரு நாடகம் (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
No comments:
Post a Comment