Tuesday, March 3, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர் 1 வது இதழ்

நாடார் குல மித்திரன் - 1922 - நவம்பர்  1 வது இதழ்



வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு நவம்பர்  வெளிவந்த 1 வது இதழ் (மலர் 4 - இதழ் 7).

மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) நவம்பர்  மாதம் மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.
இன்று 1922 - நவம்பர்  மாதத்தின் முதல் இதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகை மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழின் உள்ளடக்கம்:
மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),  கற்பகம் என்பவர் எழுதிய "குடும்பமும் நமது கடமையும்" என்ற  மனவளக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீ கிருஷ்ணலீலை, பழமொழிக் களஞ்சியம் என்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

அக்காலச் செய்திகளாகத் தரப்படுவன:
தபால் கட்டண உயர்வின் தாக்கம்,
ஆங்கில அரசின் சட்டங்களும் அபராதங்களும் இந்தியாவின் நெசவுத் தொழிலை அழிப்பது,
மலபார் கலகத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்டவர்கள் தூக்கிலடப்பட்டது,
திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப்பாதை துவக்க வேலைகள்,
நாடார்களின் ஆலயப்பிரவேசத்திற்கு காங்கிரஸ் உதவும் என்று கருத்துரைத்தவரை விமர்சித்தல்,
இங்கிலாந்தின் புதிய மந்திரி சபை பதவியேற்பு,
இந்தியர்களின் தினசரி சராசரி வருமானம் 9 பைசா,
மதுரை மாநாட்டில் சோமசுந்தர பாரதி நாடார்களைப் பற்றிய தவறான கருத்தை வெளியிட்டது,
மறைந்தவர் நினைவாக நூல்நிலையம் அமைத்தல்,
போன்ற செய்திகள் குறிப்பிடத்தகன.

தேவை இசையாசிரியை என்ற விளம்பரமும் உண்டு.
"சௌந்தரகாந்தி" (பாண்டியர்களைப் பற்றிய புதினம்), "கைத்தொழில் போதினி", "அமரர் புராணம்" , பெண்முன்நேற்றதிற்காக எழுதப்பட்ட "மனோசுந்தரம்" என்ற  நூல்கள் வெளிவந்துள்ளதை  விளம்பரங்கள் அறிவிக்கின்றன.
  

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment